Post has attachment

Post has attachment

www.kaniyam.com/release-18

வணக்கம்.

'கணியம்' இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

கணியம் வாசகர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.இலங்கையில் கணியம் அச்சு வடிவில் வெளியிடப்படுகிறது. "கம்ப்யூட்டர் டுடே"
இதழின் அனுராஜ் சிவரஜா அவர்களின் முயற்சியில் மாதமிருமுறை இதழாக
வெளிவருகிறது.கணியம் இதழுக்கு கட்டுரைகள் எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய
செய்தியின் மூலம் நன்றிகளை தெரிவிக்கிறேன்.கணியம் இதழுக்கு இன்னும் பல எழுத்தாளர்கள் தேவை. புது எழுத்தாளர்களை
உருவாக்க உங்கள் உதவிகள் தேவை
கணினி நுட்ப கட்டுரைகளை எழுத ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தலாமா?தமிழில் வீடியோ பாடங்கள் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. ஒரு பத்து பேர்
வாரம் ஒரு வீடியோ என தயாரித்தாலும் ஓர் ஆண்டில் லினக்ஸில் உள்ள
பெரும்பான்மையான மென்பொருட்களுக்கு வீடியோ பாடங்கள்  தயாரித்து விட
முடியும். ஆர்வம் உள்ளோர் எனக்கு எழுதவும்.

இந்த இதழை கிண்டில், ஐபேட் , டேப்லட் போன்ற மின் புத்தக கருவிகளிலும்
படிக்கும் வகையில் 6" pdf, epub , azw ஆகிய வடிவங்களிலும் அளிக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை
யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட
வேண்டும்.நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.comபொருளடக்கம்    இலங்கையில் கணியம் - அச்சு வடிவில்
    கொலாப்நெட் சப்வெர்சன் எட்ஜ் - நிறுவுதல்
    Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு
    எளிய செய்முறையில் C – பாகம் 7
    லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution)
    பைதான் - 11
    FreeBSD - ஒரு அறிமுகம்
    மக்களை லினக்ஸ் நோக்கி கவரும் முனிச் நகர குழு
    K3b - உபுண்டு லினக்ஸில் CD/DVD யில் எழுதும் மென்பொருள்
    உபுண்டுவை நிறுவியபின் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்
    விண்ணைத் தாண்டிய லினக்ஸ்
    எளிய GNU/Linux commands
    நீங்களும் பங்களிக்கலாமே
    ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
    கணியம் வெளியீட்டு விவரம்
    கணியம் பற்றி

வலை பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு
கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில்,
பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android,
iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள்
support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள்
அமையும்.

இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.

எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை
மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
"Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
உறுதியையும் அளிக்கிறோம்.

http://creativecommons.org/licenses/

கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/


நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

e-mail : mailto:freetamilebooksteam@gmail.com


FB : https://www.facebook.com/FreeTamilEbooks

G +: https://plus.google.com/communities/108817760492177970948

நன்றி.

ஸ்ரீனி

Post has attachment

கணினி மொழிகள் கற்றுக் கொள்ள அருமையான இரண்டு தளங்கள்.
http://www.codecademy.com/ மற்றும் http://www.learnstreet.com/

எந்த எந்த ஆன்ட்ராய்டு மொபைலில் (மாடல்கள்) தமிழ் சப்போர்ட் இருக்கிறது ? நான் தீவிரமா போன் வாங்குறதுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்.  ;)
Wait while more posts are being loaded