Post has shared content
அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று:

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு!

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை.
- சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)

சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.

குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம்.
எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் ஒருவர்.

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது.
மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.
அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள்.
சமூகத்துடனான பழக்கமும் ஐக்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.

படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன.
ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக்கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.

அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்).
அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தாயின் கருவறை தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும்போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு அங்கே போடப்படுகிறது.

அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.

படிப்பு, விளையாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான்!

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது திருக்குமரன் கிரியேட்டர்ஸ் http://thirukkumarancreators.blogspot.com இந்த வெப்சைட்டை பார்க்கவும், அல்லது கூகுலில் பின்தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903 அல்லது SURESH webvision youtube chennel பார்க்கவும்.
பதிவிட்டவருக்கு நன்றி!
Photo

Post has shared content
படித்ததில் பிடித்தது
#உன் வாழ்வுக்கு அர்த்தம் வேண்டும் பெண்ணே♥

♥உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவனின் பிரிவினால்

ஊமையாய் அழுகிறது உன் இதயம்

உடைந்த உள்ளத்தை தேற்ற வழி இன்றி

திக்குமுக்காடி தவிக்குது நினைவுகளில்

அள்ளிக் கொடுத்த அன்பினால் வந்த தவறின் நிமித்தம்

விழிகளும் கண்ணீரை சொறிகின்றன

ஒவ்வொரு விடியலும் இனி ஏக்கத்துடனே கரைய

தன்னையே வாட்டி வதைப்பததினால் தான் என்ன பயன் ?

இன்று உன் நெஞ்சம் வருந்தினாலும்

நாளை நீ தேரத்தான் வேண்டும்

வஞ்சி உன்னை அவன் வஞ்சித்து செல்ல

வருந்தி நோவது மட்டும் நீ தனியனாக ஏன் ?

பெண்ணே நீ ஒன்றும் விட்டில் பூச்சி அல்ல

அன்பை கொடுத்தற்காக தண்டனை பெறுவதற்கு

இளகிய இதயம் கொண்டவள் என்ற காரணத்தால்

இரக்கமில்லாமல் உன் இதயத்தை நோகடிப்பதற்கும்

இரணியனா அவன் ?

மீண்டும் மீண்டும் கீறி கிழிப்பதற்கும்

பெண்ணே,

இன்றைய சோகம் நாளை நிச்சயம் மாறிவிடும்

இழந்த உன் சிரிப்பு நாளை மீண்டும் தொற்றிக் கொள்ளும்

இருண்ட உன் வாழ்வு நாளை மீண்டும் மலர்ந்து விடும்

இயலாமையில் நீ வாடுவதை இன்றோடு விட்டு விடு பெண்ணே

இயன்றதை செய்ய மட்டும் துணிந்து விடு

நாளை மீண்டும் விடியல் தோன்றும்

நம்பிக்கை உன்னுடன் கை கோர்க்கும்

நல்லவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள் இவ்வுலகில்

நாடி தேடி வருவர் அதையும் நீ பார்ப்பாய் மிக விரைவில்

உனக்காக நீ வாழாவிடினும் பெண்மணியே

உன் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் வேண்டும்

அதையேனும் மட்டும் நீ உணர்ந்துகொள்

 மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது திருக்குமரன் கிரியேட்டர்ஸ் http://thirukkumarancreators.blogspot.com இந்த வெப்சைட்டை பார்க்கவும், அல்லது கூகுலில் பின்தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903 அல்லது SURESH webvision youtube chennel பார்க்கவும்.
Photo

Post has attachment
I fall in love all over again...
Photo

Post has shared content
திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை !

பெயர்:
உ.சகாயம்

பிறப்பு:
பெருஞ்சுணை கிராமம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉

பெற்றோர்:
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.

அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗
அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗

தொழில்:
சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்

மிகவும் பிடித்த வாசகம்:

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து
உயர உயரப் பற… வானம் வசப்படும்

அடிக்கடி கேட்ட வாசகம்:
1.உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….
2.இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...

நீண்டகால சாதனை:
23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..

கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.

மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்

மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼

சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼

பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼

கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼

நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,
கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,
தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼

நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது

உச்சகட்ட சாதனை:
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.

நண்பர்கள்:
அரசியலில் யாருமில்லை.

எதிரிகள்:
கட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.

சமீபத்து எதிரிகள்:
அழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.

ஆறுதல்:
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.
அவ்வப்போது நீதிமன்றம்.

பலம்:
நேர்மை

பலவீனம்:
ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.

லட்சியம்:
ஊழல் இல்லா இந்தியா

கிராமப்புற ஏழைகளுக்காக
அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.

இதுவரை அறிந்த உண்மைகள்:
நேர்மை நிச்சயம் வெல்லும்,
சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.

இதுவரை புரியாதது:
அடுத்த பதவியும் இடமும்

விரும்புவது:
தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி❗

விரும்பாதது:
முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை ?

நண்பர்களே..!

நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.

சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை,
நம் குழந்தைகளுக்கு
முன்மாதிரியாக அறியத்தருவோம்.

ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.

எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம்

இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை
கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான்

சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது திருக்குமரன் கிரியேட்டர்ஸ் http://thirukkumarancreators.blogspot.com இந்த வெப்சைட்டை பார்க்கவும், அல்லது கூகுலில் பின்தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903 அல்லது SURESH webvision youtube chennel பார்க்கவும்.
- உங்களில் ஒருவன்.-
Photo

Post has attachment
I'm yours forever...
Photo

Post has shared content
கன்டிப்பில்
தாயாகவும்,
கருணையில்
கடவுளாகவும்,
காதலில்
மனைவியாகவும்,
துன்பத்தில்
தோழியாகவும்,
மகிழ்ச்சியில்
மகளாகவும்,
போதனையில்
பாட்டியாகவும்,
அறிவுறையில்
ஆசிரியையாகவும்,
என்றுமே நம்மோடு
வரும் பென்மையை
இன்று மட்டுமல்ல
என்றும்
போற்றுவோம்.
ரா.சுரேஷ்பெருமாள்சாமி
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள
https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது இந்த http://sureshperumalsamy.blogspot.com வெப்சைட்டை பார்க்கவும். அல்லது google+ சில் பின் தொடர
https://plus.google.com/communities/103171647634355261679 இதை கிளிக் செய்யவும்.
Photo

Post has shared content
படித்ததில் பிடித்தது
என் காதலியின் திருமணம் எதிரே நடந்து
கொண்டிருக்கிறது😞😒

எவனோ ஒருவன் போல் நான்
அமர்ந்து கொண்டிருக்கிறேன்😞

தாடி வளர்க்கும் வயதும் இல்லை😣
போடி என்று
சொல்ல மனமும் இல்லை😘🙁

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்
அவரோடு
நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்😓😔

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள்
அவர் ஏதோ
காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு
கொண்டிருக்கிறாள்😥😖
அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல்
இருக்கும் நெற்றியில்
நெற்றிச்சுட்டி😘😒

நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில்
மருதாணி போட்டிருக்கிறாள்😞😘

அதன் வாசம் இங்கு
வரை வீசுகிறது😏

அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை
அணிந்திருக்கிறாள்😐😑
அடிக்கடி என்னையும்
பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல😪

யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை
கோர்த்து நடந்தவள்
இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை
சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்😰😞

ஏமாந்தவன் எதிரிலே இருக்க
இன்னொருவனுடன் உனக்கு திருமணம்😏😣

இதற்கு நான் சாட்சியா என்று அக்னி
கொழுந்துவிட்டு எரிகிறது

அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன்
இருக்கிறான் பாசத்தோடு😘😖

உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்
ஊமையாக இருக்கிறேன்😷😓

அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன்
வெகுண்டெழுந்து வருகிறது அழுகை😪😢

அதை கை
குட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன் 😞😖

வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை
எடுத்துக்கொண்டேன் 😘😣

மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை
குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் 😪😓

நானும்
அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற
எண்ணத்தோடு😪🙏

அவள் என்னை பார்க்கிறாள்
இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற
எண்ணத்தில் 😣😓😞

அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய்
நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்😓😢😣

நடிக்க
தெரியாத நான் வேடிக்கை பார்த்து
கொண்டிருக்கின்றேன்😞😣😖

எல்லாம் முடிந்து விட்டது என்று அவள்
எண்ணலாம் 😞😠

ஆனால் இதுதான் ஆரம்பம் என்று
அவளுக்கு தெரியாது 😃😠

அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது
என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன் 😣😓

என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு
கட்டிய காதல் கோபுரம்😭😥

சித்தெரும்பை விட
சிறியதாக சிதறி போனது 😢😣😕😒

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள
https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது இந்த http://sureshperumalsamy.blogspot.com வெப்சைட்டை பார்க்கவும். அல்லது google+ சில் பின் தொடர
https://plus.google.com/communities/103171647634355261679 இதை கிளிக் செய்யவும்.
Photo

Post has shared content
My silents another name is pain

Post has shared content

Post has shared content
Wait while more posts are being loaded