இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நூல்: ஹதிஸ் ஸஹீஹுல் புகாரி : 6989

அரபு வசந்தம் என்று முஸ்லிம்களை கொன்றழித்த வஹ்ஹாபிகள் .இன்னும் சில போலி சாட்டுகளுடன் எமன் நாடு.

இறைவனின் அஸ்மாக்களுடைய ஸூறத்தே சர்வ உலகும் என்பதை நாம் ஊன்றி உணர வேண்டும்.

ஒஸ்தாது நாயகமே துணை.
* * * * * ஏகத்துவம் * * * * * * *

ஏகமாக்கல் என்பது என்ன?

தொடர் 13. ..

முதலில் எமது பகுத்தறிவையே நாம் பயன்படுத்துவோம்.

இன்று உலகில் வாழ்பவர்களும் இதற்கு முன் வாழ்ந்து அழிந்து போனவர்களும் இனிமேல் பிறந்து வாழ வேண்டியவர்களும் எம் தந்தை ஆதம் (அலை) அவர்களில் இருந்தே தோண்றிவர்கள்,தோண்றப்போகிறவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆதம் (அலை) அவர்களை நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ,யாரோ ஒர் ஆணும் பெண்ணும் சேர்ந்து சில பிள்ளைகளைப் பெற்று அதன் பின் அப்பிள்ளைகள் ஒன்றோடொன்று சேர்ந்து பல பிள்ளைகளை பெற்று இப்படியே காலகிரமத்தில் பெருகி இப்போதிருக்கிற நாம் தோண்றியிருக்கிறோம்.

இனிமேல் எம்மில் இருந்து தோண்றப்போகிறவர்கள் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் நம்மிலிருந்து இனிமேல் பலகோடாகோடி மனிதர்கள் வெளியாகப் போகிறார்கள் என்பது உண்மையே .இனிமேல் பிறந்து வரவேண்டியர்களின் எவ்விதமான தன்மைகளும் இப்போது நமக்குத் தெரியாவிட்டாலும் இப்போது அவர்கள் எம்மோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.இதேபோல நாம் பிறந்து வெளியாவதற்கு முன் ஆதம் (அலை) அவர்களோடுதான் இருந்திருப்போம் என்பது உண்மை.

இல்லாதது ஒன்று வராது (இருப்பதாகாது) இருப்பது இல்லாததாகாது .அதாவது இருப்பது மாறுபாடனையலாமேயன்றி இல்லாதது இருப்பதாகாது. இந்தத் தத்துவத்தின்படி நாம் சூட்சும நிலையிருந்து இப்போது பௌதீக நிலைக்கு வந்துள்ளோம்.பௌதீக நிலையிருந்து விடுபட்டால் முன்போல் சூட்சும நிலையைப்
பெறுவோம்.எனவே உடல் (மண் தண்ணீராய்) மாறுபாடடைந்தாலும் நான் என்றுணரும் நாம் இருக்கத்தான் போகிறோம்.
ஈமானின் உண்மையை நீ அறிவாயா?
பக்கம் 238.

தொடரும்....

செய்ஹுல் முப்லிஹீன் எம். எஸ். எம் அப்துல்லாஹ் ( றஹ் ).

மனித உருவில் மிருகம்!

குழந்தை பிறப்பதற்கு முன்பு தாயிடம் பால்கொடுத்தவனை
நம்பமறந்தான் பிறந்து வந்ததும்!

கடலையும் பிழந்து வழிவிடுமாறு இறைவன் பணித்தான்!
கடலில்மூழ்கி முத்தைத் தேடினான்!

புலன்களின் மயக்கத்தில் புத்தியை இழந்தான் பாவம் சுமந்து
நம்பிக்கை கொண்டேன் என்கின்றான்!

ஆத்மாவான அவனை அறியாமல், இறைவனை தேடும்
இவனா மனிதன்? அறியாத மிருகம்!

இல்லை! இல்லை! இறைவன் படைப்பில் இவன்தான்
அனைத்தையும்விட தாழ்ந்தவன்!!

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்றவுடன் அல்லாவை நிராகரிப்ப்பவர்களை எதிர்த்து போர் புரிவது என்று பெரும்பாலான மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.

ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும்.

மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல்

அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல்

இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல்

இதேபோல் எல்லா வகையான தீமைகளையும் எதிர்த்து மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும்தான் ஜிஹாத் எனப்படும்.

மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பது மட்டும் அல்ல மனதை நல்வழியில் ஈடுபடுத்தும் விடா முயற்சியும் ஜிகாத் ஆகும்.

இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, இஸ்லாத்தின் கடமைகளைச் செய்வது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது, அவ்வழியில் நேரிடும் கஷ்டங்களைவும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு மனதைப் பழக்குவது ஆகிய அனைத்தும் ஜிஹாத் ஆகும்.

thanks

anpudan islam

கழுகு ஒன்று மரத்தின் மேல் அமர்ந்தபடி தன்னுடைய பெருமைகளை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

எத்தனை கூரிய நகங்கள் எனக்கு?
எந்தக் கடினமான தோலையும் கிழித்து விடுவேனே!
எத்தனை கூர்மையான பார்வை எனக்கு.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டு இருந்தாலும் தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு சிறிய எறும்பைக் கூட என்னால் காண முடியுமே!
எத்தனை வலிமையானவை என் சிறகுகள்.
அவற்றைக் கொண்டு வானத்தைத் தொட்டபடி உலகின் எந்த மூலைக்கும் விரைந்து பறப்பேனே!
என்றபடியெல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

தரையில் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனையும் அலட்சியமாகப் பார்த்து, கேலியாக சிரித்தது.

அப்போது
அந்த வழியாக யானை ஒன்று நடந்து வந்தது.
யானையைப் பார்த்ததும் அதன் கேலிச் சிரிப்பு அதிகமாயிற்று.
யானைக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமான, கண்களால் கழுகை ஏறிட்டது.

கழுகு சொன்னது,
"தரைவாழ் உயிர்களிலேயே நீ தான் பெரிய மிருகம்னும் , பலசாலின்னும் சொல்றாங்க. ஆனாலும் என்னை மாதிரி பறக்க முடியாதே!
தரையிலேயே பிறந்து, தரையிலேயே வளந்து , தரையிலேயே சாகப்போற. உனக்கு எதுக்கு இந்த பலசாலிங்குற பட்டம் ?

உயரத்தில் பறந்து திரியும் நான்தான் உண்மையிலேயே உயர்வான ஜீவன் என்றது.

யானை அமைதியாய் பதிலளித்தது ,
நான் தரையில் திரிந்த போதும் என் கண்ணகள் வானத்தை (பரலோகத்தை) நோக்கியபடிதான் நான் பிளிறுவேன்.

நீயோ உயர்ந்த வானத்தில் சஞ்சரித்தாலும் உன் கண்கள் (பூமியில்) குப்பையில் கிடக்கும் அழுகிப்போன பிணத்தைத்தானே தேடுகின்றன?

நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதிலல்ல ,

நாம் எதன் மேல் "நோக்கமாய்" இருக்கிறோம் என்பதில்தான் "உயர்வு" இருக்கிறது " என்றது.

நான் என்ற ஆணவம்..... நம்மை கீழே தள்ளிவிடும் .
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

அறுபது ஆண்டு காலம் நம்மைச் சுமக்கின்ற இந்த உடம்பின் உருவாக்கத்தையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் படைப்பு பற்றியும் படைத்தவன் பற்றியும் எப்படி நமக்குப் புரியும். நம் சிறு மூளைக்கு எட்டுவதெல்லாம் நம் செயல்கள் பற்றிய பிரமிப்பும், ஆணவமும், பெருமிதமும் மட்டுமே. நம் பெருமூளை விரிவடைந்து நம் பார்வை விசாலமானால் மட்டுமே படைத்தல் பற்றியும் படைத்தவன் பற்றியும் மெதுமெதுவாகப் புரிய வரும் அப்படி புரியும் பொழுது நமக்கெல்லாம் மூலம் அந்த ஆதிமூலம் என்ற உண்மை விளங்கும்.

இறைவன் படைப்பில் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை பின் ஏன் இந்த ஆட்டம் என்று மனம் இடைவிடாது சிந்தித்து கொண்டே இருக்க கர்வம் அடிபட்டுப்போகும். துறவு என்பது பொருள்களை துறந்து செல்வதல்ல அகந்தையை அழிப்பதே உண்மையான துறவு என்று பட்டினத்தார் வகுத்த பாதையை நோக்கி நம் எண்ணங்களைச் செலுத்துவோம் அமைதியை நோக்கிப் பயணிப்போம்.

Post has attachment
அபிப்பிராய பேதங்களில் இருந்து மிக மிக முக்கியமான இரெண்டு உண்மைகள் நமக்கு தென்படுகின்றன அதாவது #இயங்கும்_பொருட்கள்_விரைவாகவோ_காலதாமதமாகவோ_செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும். அதேபோல் #சரியானது_என்றாலும்_பிழையானது_என்றாலும்_செயல்படுவதற்கு_ஒரு_குறிக்கோள்_அல்லது_ஒரு_நோக்கம்_இருக்கவேண்டும் என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத இரண்டாவது உண்மையாகும். இப்போது நாம் அறிந்து கொண்ட இவ்வுண்மையை (இன்னமல் அஹ்மாலூபின் நிய்யத்தி) செயல்கள் யாவும் நோக்கத்தை பொறுத்தவை என்று எமது இமாமான குரானும் ஹதீஸும் விபரம் தருகின்றன.
[ஈமானின் உண்மையை நீ அறிவாயா? PDF பக்கம் –02]

#வாசக_நெஞ்சங்களே
என்னை நீங்கள் அன்னியவனாக அணுகவேண்டாம் ஏனெனில் இதிலுள்ள உண்மைகளை உணரமுடியாமல் போய்விடலாம். உங்களை அண்டியவனாகவும் அணுக வேண்டாம் அப்போதும் உண்மைகளை உணரும் வாய்ப்புக் குறைந்துவிடும். எனவே நடுநிலையாக நீங்களே உங்களுக்கு நீதிபதியாக இருந்து தீர்ப்புக்கட்டுங்கள்.

---- செய்ஹுல் முப்லிஹீன் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் (றஹ்)

இந்த நூலினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள நாடவும்==>
(01) www.facebook.com/groups/emanin.unmayay.nee.arivaya/files/
(02) www.mufliheen.org/Book

Post has attachment
#பதிவு_09

இத்தரீக்காவின் தொலைநோக்கு யாதெனில், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடான கலிமத்துத்தையிபா (ஆத்மீகஞானம் வீசும் பரிசுத்த சொல்) என்றழைக்கப்படுகின்ற “லாயிலாஹ இல்லல்லாஹ்வினது உண்மைக் கருத்தான, “அல்லாஹ் (கடவுள்) தவிர இலாஹு (படைப்பினங்கள்) கிடையாது” என்பதனை தெளிவுபடுத்துவதாகும். அல்லாஹ் (கடவுள்) என்ற சொல், காலத்தையும் இடத்தையும் தாண்டியதும் முடிவற்றதுமான மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியைக் குறிப்பிடுகின்றது. என்றென்றும் நிலைபேறாக இருக்கும் இந்த சக்தியை அடைந்துகொள்வதற்காகவே படைப்பினங்கள் உள்ளனவே தவிர, அந்த சக்தியிலும் வேறாயிருக்கவல்ல. கலிமாவின் இந்த உண்மைக் கருத்து, புனித அல் குர்ஆன் மற்றும் அல் ஹதீஸ் (இறைத்தூதரின் வழிகாட்டல்கள்) என்பவற்றின் அடிப்படையில்,இத்தரீக்காவின் ஆத்மீகத் தலைவரினால் பல்வேறு வெளியீடுகளிலும் அவர்களினால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட 181 ஆத்மீகப் பாடல்களிலும் சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பாடல்களையும் வெளியீடுகளையும் இணையத்தள முகவரி www.mufliheen.org இலிருந்தும் வாட் சப் இலக்கமான +94 72 603 9131 மூலமும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

Post has attachment
"அலையும் உள்ளப் போக்கிலே"
***********வாசல் 87************

Whatsapp :
+94 72 603 9131

Twitter :
www.twitter.com/santhiyinvasal

Facebook :
www.facebook.com/santhiyinvasal

Youtube :
www.youtube.com/channel/UCR1Q7bwmLQFEPQU_fMZdAbw

Google Plus :
https://plus.google.com/u/0/109419344315219867252

E-Mail :
santhiyinvasal@gmail.com

Instagram :
www.instagram.com/santhiyin_vasal

Visit our Webside :
www.mufliheen.org

"ஈமானின் உண்மையை நீ அறிவாயா?"
www.facebook.com/emanin.unmayay.nee.arivaya

"பகுத்தறிவின் நீதிமன்றம்"
www.facebook.com/pakutharivin.neethi.mandram

"ஏகத்துவப் பாடல்கள் "
www.facebook.com/yekathuvap.paadalkal

"திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம் 01"
www.facebook.com/thiru.quran.theerpu.part.01

"திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம் 02"
www.facebook.com/thiru.quran.theerpu.part.02

"திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம் 03"
www.facebook.com/thiru.quran.theerpu.part.03

"ஏகத்துவம் பற்றி அல்குர்ஆன்"
www.facebook.com/yekathuvam.patri.al.quran

"பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி பாகம் 01"
www.facebook.com/bithathuku.unmayin.savukadi.part.01

"பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி பாகம் 02"
www.facebook.com/bithathuku.unmayin.savukadi.part.02
Wait while more posts are being loaded