Post has attachment

Post has attachment
Photo

Post has attachment

இயற்றலும் ஈட்டலும்...
மும்மாரி பொழிந்ததா முப்போகம் விளைந்ததா 
அரசவைக்கு ஏன் இந்த கவலை ?!!
தனி வாரியம் அமைத்து மக்கள் நலம் காப்போம் 
தன்னிலை மறந்தார்க் கொரு துயரில்லை , துன்பமில்லை 
புதுமை புகுத்துவோம் விற்பனை பெருக்குவோம்
மகளிர்கொரு மது வகை 
மழலையின் தாய் பாலிற்கும் மாற்றுவகை   
பதின்ம வயதினர்க்கு பாதி விலை
தொன்ம வயதினர்க்கு அதுவுமில்லை  
இயலாதோர்க்கு இல்லம் தேடியும் 
விலங்கினத்தை விட்டுவிடாத விற்பனை தான் நம் இலக்கு
ஆன்லைனை புகுத்துவோம் தடைகளை களைவோம் 
அதிகம் குடிப்பவனை தியாகி என கொள்வோம் 
வாரிசுகளுக்கு வரிச்சலுகை  
பணியிடை இறப்போர்க்கு மணிமண்டபம்
இவன் சாமான்யன் அல்ல இவனொரு புரட்சியாளன் 
தன்னலம் கருதாது தன் மக்கள் நலம் கருதாது 
பொதுநலமே பெரிதென வாழ்பவன் 
இவன் கண்ட சமத்துவம் பெரியாரின் கனவு 
இவன் பேணும் பொதுவுடைமை மார்க்சின் லட்சியம் 
உயர்த்து நூறுநாள் திட்டத்தை இருமடங்காய் உயர்த்து  
உயர்த்து அவன் கூலியை குறைவில்லாமல் உயர்த்து 
அவன் இல்லத்தை இலக்காக்கு 
தாலி அறுத்தவளுக்கு மிக்சி கிரைண்டர்    
தகப்பன் இழந்தவனுக்கோ மடிக்கணினி
உயர்த்து மென்மேலும் உயர்த்து
அவன் வாழ்க்கை தரத்தை அல்ல 
நம் விற்பனை இலக்கை
 

விட்டில் பூச்சி.
உயிருறுக்கி உனைவார்த்தும் – என்
இணைச்சாயல் தான் இருந்தாய் 
உதிரம் சுண்ட பால் சுரத்தும் – அவன்
மது வாசம் மயங்கி போனாய்

நீ - மரணத்தை முத்தமிட்டால் 
மூன்று மாதத்தில் ஒய்ந்திருப்பேன்
மதுவிற்கு மண்டியிட்டாய் 
மூன்று தலைமுறைக்கும் கேடிழைத்தாய்

நீதி செய்யும் அரசவைக்கு
வீதியெங்கும் டாஸ்மாக்காம் 
விளக்கிச்சொல்ல  நாதியில்லை
விளக்கொளியில் விட்டில் பூச்சி.
Wait while more posts are being loaded