Post has shared content
Chennai Police burst Black Balloons with 'MODI GO BACK' Slogan Video | #CauveryIssue #modi #modigoback

Post has attachment

TNSTC MEDIA

பதிவு : 18/3/2018

கால அட்டவணைப்படி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது இலவச பஸ்-பாஸ் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் முதியோர் இலவச டிக்கெட்,
50 சதவீத கல்லூரி பயண அட்டை என போக்குவரத்து கட்டணத்தை முடக்கி இருப்பதாகவே தகவல்
தருகிறது.

மேலும் பல சலுகை திட்டங்கள் போக்குவரத்து கழகத்துக்கு வரவேண்டிய வருமானம் முடக்கிப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மக்கள் நலனுக்காக அமல்படுத்தப்பட்டது. எனவே அந்த திட்டங்களை பின்வாங்காமல் செயல்படுத்த வேண்டும்.

எனவே அந்தவகையில் தேவையற்ற வழித்தடங்களில் அதிகளவில் செல்லும் பஸ்களின் சேவையை குறைத்திட முடிவு செய்து, அதற்கேற்றவாறு கால அட்டவணை தயாரிக்க
வேண்டும்.

தனியார் பஸ் நிறுவன வளர்ச்சி காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சுமார் 5 லட்சம் பயணிகள் வருகையை அரசு பஸ்கள் இழந்திருக்கிறது.

இதை சரிசெய்யவும், பள்ளி-கல்லூரிகள், அலுவலகம் செல்வோரின் நேரத்திற்கேற்றவாறு திட்டமிட்டு பஸ்களின் சேவை அமைக்கப்பட
வேண்டும்.

இவண்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 19/3/2018

டிக்கெட் விலை ஏற்றமும்..!

15 வருட கால தமிழக
அரசியலும்..!

என்ன தான் அரசு லாபம் இல்லாத..!
அல்லது கூட்டம் இல்லாத வழி தடங்களிலும் பேருந்தை இயக்கினாலும் கூட ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நிச்சயம் அதிகளவில் லாபம் கிடைக்க தான் செய்கிறது..!

ஆனால்
லாபம் வராமல் இருப்பதற்கு அதில் பணி புரிபவர்களின் அக்கறை இன்மையே காரணம் என கூறுவது முட்டள்தனம்..!

எப்படி வேலை செய்தாலும் சம்பளம் உண்டு என்பதால் அதிகாரிகள் முன்னேற்றத்துக்கான எந்த முயற்சியையும் எடுப்பதில்லை என்பது தான் உண்மை...!

ஒரு சிலர் நியாயமாக நடந்து கொள்ளலாம் ஆனால் அவர்கள் வெகு சிலரே!

ஏதாவது ஒரு தனியார் பேருந்து முதலாளியை தங்கள் தடத்தை விட்டுக்கொடுக்கக் கூறுங்கள் பார்ப்போமே!

ஒருத்தர் கூட விட்டுத் தர மாட்டார்கள்.

லாஜிக்காக யோசியுங்கள் இத்தனை வருடமாக பேருந்துக் கட்டணம் உயர்த்தவில்லை அதனால் அரசு நஷ்டத்தை சமாளிக்கிறது.

ஆனால் தனியார் சமாளிப்பார்களா..? சமாளித்து இருக்கிறார்களே..!

டீசல் விலை உயர்ந்தும் பேருந்துக் கட்டணம் உயராமல் இருந்தும் அவர்கள் இவ்வளவு வருடமும் தங்கள் தடத்தை விட்டுத்தராமல் சமாளிக்கிறார்கள் என்றால் லாபம் உள்ளது என்று தானே அர்த்தம்.

இத்தனை வருடமும் ஏற்றாமல் சமாளிக்க முடிகிறது என்றால் ஏற்றி இருந்தால் அவர்கள் எவ்வளவு லாபம் இது வரை பார்த்து இருப்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

அப்படி என்றால் தவறு யார் பக்கம் நஷ்டக்கணக்கு காட்டுவது யார்..?

தனியார் பேருந்துத் தடத்தில் உள்ள பேருந்துகளுக்கு ஒரு மேனேஜர் இருப்பார் கலெக்சன் குறைவு என்றால் ஓட்டுனர் நடத்துனர்களிடம் விசாரணை நடைபெறும் அதோடு லாபம் குறைவு என்றால் மேனேஜருக்கு முதலாளியிடம் இருந்து திட்டு விழும்.

பேருந்துக்கட்டணம் அதிகரிக்க முக்கியக்காரணமாக கூறப்படுவது உதிரிப்பாகங்களுக்கு (வாங்குவது மற்றும் மாற்றம் செய்வது) ஆகும் செலவு மற்றும் நிர்வாகச் செலவுகள் (ஊழியர் சம்பளம், புதிய பேருந்துகள் வாங்குவது etc etc… ) ஆகியவற்றால் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது ஆகும்.

கால மாற்றத்தில் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் ஆனால் விலை உயர்வை உயர்த்தும் முன் அரசு எந்தெந்த வழிகளில் இதை தவிர்க்க முடியும் என்பதை ஆராய வேண்டும்.

பின் எதுவுமே முடியாத நிலையில் தான் விலை உயர்வை அறிவிக்க வேண்டும் அதுவே ஒரு திறமையான அரசாங்கம் ஆகும்.

ஆனால் தற்போது மட்டுமல்ல கடந்த
15 வருட கால தமிழக அரசியல்
திமுக ஆட்சியிலும் நடந்தது என்ன என்பதை ஓரளவு இது பற்றி அறிந்தவர்கள் என்ன நடக்கிறது,
என்ன நடந்து கொண்டு இருந்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பிரிவிலும் வாங்கும் லஞ்சம், புதிய பொருளை வாங்கும் இடத்தில் பழைய பொருளை அதிக விலை கொடுத்து சரி செய்வது, பராமரிப்பு இன்மை, தேவையற்ற இடங்களில் அதிக ஊழியர்கள், தேவையான இடங்களில் குறைவான ஊழியர்கள்.

புதிய பேருந்தை வாங்கி அதை சரிவர பராமரிக்காமை, அதிகாரிகளின் மெத்தனம், பொறுப்பற்றத் தன்மை என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இதைப்போல பிரச்சனைகளைக் களைந்தால் மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது போல விலையேற்றம் எல்லாம் 100 % நிச்சயம் பிரச்சனையைத் தீர்க்காது.

அதிகாரிகளும்,
அரசும் செய்யும் தவறுக்கு தொழிலாளர்கள் எதற்கு சிரமப்பட வேண்டும்?

அதே போல விலையேற்றமும் சீராக இருக்க வேண்டும் ஜெ எப்படி ஒரே சமயத்தில் இவ்வளவு விலையை ஏற்றியது தவறோ அதே போல கலைஞர் ஏற்றாமல் இருந்ததும் தவறு.

விலையேற்றம் என்பது ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும் மேற்கூறிய நிர்வாக சீர்கேடுகள் இருக்கும் வரையில்.

எவ்வளவு நாள் இதைப்போல தவறுகளை வைத்துக்கொண்டு விலையேற்றத்தை தவிர்க்க முடியும்? கலைஞரே தற்போது ஆட்சியில் இருந்து இருந்தாலும் கட்டண உயர்வு என்பது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாது தான்.

இதனால் தான் இதை சமாளிக்க அப்போதே விரைவு, சொகுசு என்று பேருந்துகளை விட்டு மறைமுகக் கட்டண உயர்வை வசூலித்தார்கள்.

உடனடி அமுல்..!

பேருந்துக் கட்டணத்தை விட கடுப்பைக் கிளப்பியது உடனடியாக அமுலாக்கப்பட்டது தான். இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் சராசரி மக்களின் பிரச்சனைகளை
எடப்பாடி அரசு சுத்தமாகப் புரிந்து கொள்ளாதவர் என்று. இதுவே சிறந்த உதாரணம்.


இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 17/3/2018

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கவேண்டும்.

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை உரிய கணக்கில் சேர்க்கவேண்டும் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசிடம் கடந்த 2016 அக்டோபர் முதல்  அனைத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால்
சமீபத்தில் நடந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக அரசு
ரூ.1250 கோடி நிதி வழங்கியது. அதன் பிறகு நிர்வாகச் செலவிற்காக தொழிலாளர்கள் பணம் ரூ.600 கோடி உரிய கணக்கில் குறிப்பிட்ட
அளவே செலுத்தப்பட்டுள்ளது.

கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இது சம்பந்தமாக எவ்வித உத்தரவாதமும் கொடுக்க அரசோ,
கழக அதிகாரிகளோ கண்டுகொள்ளாவே
இல்லை..!

அதேபோல்
தொழிலாளர்களின் முக்கியமான கோரிக்கைகளான 01.04.2003 க்குப் பின் பணிநியமனம் செய்யப்பட்ட
65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் அனைத்தும் மறுக்கப்பட்டதாகி
விட்டது

கடந்த காலங்களில் தினக்கூலி ஊதியம், மிகைநேர ஊதியம் சம்பந்தமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் அமலாக்க மறுத்து வருகிறது அரசு.

இந்த  தொழிலாளர்களுக்கு பழைய பென்சன் பொருந்தாது.
பி.எப், கிராஜூட்டி பொருந்தாது என்று மறுக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பி.எப், கிராஜூட்டி இல்லை என்று மறுப்பது சட்ட விரோதம்..!

எனவே இந்த இரண்டு பிரச்சனைகளில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற  பிரதான கோரிக்கையும் இந்த அரசு கண்டுகொள்ளுவதாகவில்லை..!

இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 16/3/2018

போக்குவரத்துக் கழகங்களில் 500 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு
எப்பொழுது..?

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஒரு போக்குவரத்துக் கழகத்தில் 60 பணியிடங்கள் என்ற வீதத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 500 பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்பப்படாமலுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  தாக்கல் செய்யப்பட்ட கருணை
அடிப்படையிலான
வேலை வாய்ப்பு நிரப்பப்படாமலிருப்பது
சந்தேகத்தை ஏற்படுத்தி
வருகிறது..!

இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 14/3/2018

1986ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக்கழ கங்களில் பணிக்கு சேரும் தொழிலாளர்கள், ஓராண்டில் 240 நாட்கள் தொடர்ச்சி யாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இவ்வொப்பந்தத் திற்கு புறம்பாக கடந்த
காலம் முதல் ரிசர்வ் என்ற பெயரில் தொழிலாளர்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.

இத்தொழிலாளர்கள்
3 ஆண்டு 4 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த நிலையிலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. இவர்களுக்கு
ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப் படுவதில்லை.

ஒவ்வொரு நாளும்
ரூ.400 க்கு மேல் குறைத்து வழங்கி தொழிலாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.
அனைத்து ரிசர்வ் தொழி லாளர்களையும் பணி நிரந் தரம் செய்ய வேண்டும்.

ஒப்பந்தப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கமும் தொடர்ச்சியாக
அரசுக்கு கோரிக்கை எழுப்பி வருகிறன.

கடந்த 9-5-2012ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை சம்பந்தமாக விதி
110ன் கீழ் மறைந்த முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் நீண்ட காலம் ரிசர்வ் தொழிலாளர்களாக பணிபுரியும் 4511 ஓட்டுநர்களையும்,
4558 நடத்துநர்களையும்,
88 தொழில்நுட்ப பணியாளர்களையும் சேர்த்து மொத்தம்
9157 தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்புக்கு பின்பும் இத்தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
குறிப்பிட்ட அளவே தொழிலாளிகள் நிரந்தரம் செய்யப்பட்டனர்.

மறைந்த முதலமைச்சர் அறிவித்த
அடிப்படையில் அனைத்து ரிசர்வ் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசையும், போக்கு வரத்துக் கழக நிர்வாகங்களையும் SDTU தொழிற்சங்கம்
கேட்டுக் கொள்கிறது.

இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 12/3/2018

தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார் துறைக்கு
தாரைவார்க்கும் மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பை சட்டத்தை கண்டித்து நடைபெறும்
மாபெரும் பேரணியில்
பங்குகேற்று ஆதரவு
அளிப்போம்..!

புதிய சாலை பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தால் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும்.

பொதுத்துறையான அரசு போக்குவரத்து துறை சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.

நாளை நடைபெறும்13.03.2018 அன்று காலை சரியாக 09.00 மணியளவில்
சென்னை பல்லவன் இல்லம் முன்பிருந்து துவங்கவுள்ள மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மாபெரும் பேரணியில்
நடைபெறுகிறது.

சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெறும் பேரணியிலும் அதை தொடர்ந்து தமிழக முதல்வர், போக்குவரத்து அமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தப் பிறகு நடைபெறும் கருத்தரங்கிலும் நாம் அனைவரும் பெருந்திரளாக கலந்துக் கொள்வோம்.

இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 10/3/2018

ஓய்வு தேவை...!
ஓய்வு தேவை....!

அன்பார்ந்த அரசு போக்குக்வரத்து கழக தொழிலாளர் தோழர்களே....!

SDTU
தொழிற்சங்கத்தின்
அன்பார்ந்த வேண்டுக்கேள்...!

நாம் உண்டு மகிழ்ந்து வாழ்வு வளம்பெற மனைவி மக்களுடன் இவ்வுலகில் வாழ்வது ஏதற்கு...?

டவுல் டூட்டி, முன்று டூட்டி என தூக்கமின்மையாலும், உடல் சேர்வாலும்
உழைப்பது ஏதற்கு...!

மதிப்பில்லா தன் உயிரை இழப்பதற்குக்காக...?

சிந்தியுங்கள்
தோழர்களே...!

உதராணத்திற்கு
'சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, திருச்சி அருகே, எதிரே வந்த அரசு பேருந்தும் நேர் எதிரே மோதியதில் ஒன்பது பேர் பலி, 15 பேர் படுகாயம்.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் இருவரும் மரணம் என ஒரு செய்தி
நமது வீட்டிற்கு சென்றால் ....?

உயிருடன் இந்த கட்டுரை படித்துக்கொண்டிக்கும் உங்கள் மனநிலை என்னவாகும்...?

அடுத்து டவுல் டூட்டி,
முன்று டூட்டி பார்க்க விரும்புவீர்களா..?
அல்லது
ஓய்வு தேவை என்பீர்களா..!

சிந்தியுங்கள்
தோழர்களே...!

ஓட்டுநர்களின் கவனக்குறைவு
தான் விபத்துக்கான முக்கியக் காரணம் எனச் சொல்லுவது
படு முட்டாள் தனமானது இதை அவ்வளவு எளிமையாகச்
சொல்ல முடியாது
தோழர்களே...!

'அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு உரிய ஓய்வு கொடுக்கப்படாததே விபத்துக்கான காரணம்’ என, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் மற்றும்
பொது மக்கள் சொல்லும் கருத்து மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த
மன அழுத்தத்தில் வாழ்ந்து வருக்கின்றனர்.

அதற்கு காரணம், தாங்க முடியாத பணிச்சுமை, ஓய்வே இல்லாமல் பல மணி நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுவது

முன்னர், இரண்டு ஓட்டுநர்கள் மாறி மாறி ஓட்டிய நெடுந்தூரப் பேருந்துகளை, இப்போது ஒரே ஓட்டுநர் ஓட்ட வேண்டிய கட்டயாத்திற்து நிர்வாகம் தள்ளியுள்ளது.

சில பேருந்துகளில் நடத்துனரின் பணியையும்,
ஓட்டுநரே கவனிக்க வேண்டியிருக்கிறது. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழாக் காலங்களில் இந்த நெருக்கடி இன்னும் அதிகரிக்கிறது.

வேறு எந்த அரசுத் துறையிலாவது
இவ்வளவு பணிச்சுமை
உண்டா..?

போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, பயணிகளின் உயிருடன் குடித்துவிடும் என்பதை அரசும், நிர்வாகமும் அறிந்துயிருந்தும்,
10 ரூபாய் சொர்ப்ப காசுக்காக பொது மக்கள் உயிருடன் விளையாடுகிறது.

இதல் பலிகடா ஆவது என்னமே போக்குவரத்து
ஊழியர் தான்..!

அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு, சலுகை அல்ல அது அவர்களின் உரிமை.

அவர்களின்
வேலைக்கான அத்தியாவசியத் தேவையும்கூட ஆனால், நடைமுறை யதார்த்தம் என்ன?
ஓய்வு மறுக்கப்படுவது மட்டும் அல்ல...
தரமற்ற பேருந்துகளை இயக்கவும் கட்டாயப்படுத்தப்
படுகின்றனர் ஓட்டுனர்கள்..!

விபத்துக்கான அடிப்படைக் காரணம் என்ன..!

பேருந்து பராமரிப்புயின்மை

பராமரிப்புயின்மைக்கு காரணம் அதிகாரிகள் உதிரி பாகங்கள் வாங்கி தருவதுமில்லை அப்படி வாங்கி தந்தாலும் தரமற்ற மோசடி உதிரி பாகங்கள் மற்றும் ஊழலுமே காரணம்..!

சாலையில் ஓடுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாத பேருந்துகளை இயக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்துவது.

இதற்கு மேலும் ஓட்டுனர்களே மனரீதியாக அதிகாரிகள் டார்ச்ர் செய்வது
ஒரு லிட்டர் டீசலுக்கு இத்தனை கி.மீ ஓட்டியே ஆக வேண்டும்’ எனவும் இலக்கு நிர்ணயிப்பது.

'மிகவும் பழைய, இயங்குதிறன் குறைந்த, பல வகைகளில் பழுதடைந்த பேருந்தை எப்படி இத்தனை திறனுடன் இயக்க முடியும்?’ என்ற ஓட்டுநர்களின் எதிர்ப்புக்குரலைக் கண்டுகொள்வதே இல்லை.

ஏதேனும் பிரச்னை வந்துவிட்டால் மட்டும் ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் பலிகடா ஆக்கிவிடுகிறர்கள்.

இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் அரசுப் பேருந்துகளில்தான் பயணிக்கின்றனர். பெரும்பான்மை மக்களின் வாகனமாக பேருந்துதான் இருக்கிறது. அவற்றை நவீனப்படுத்தும் முயற்சிகளை அரசு முடுக்கிவிட வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, அவற்றின் தரத்தை மேம்படுத்துவது தான் அனைத்து பிரச்னைக்கு
சால சிறந்தது..!

இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169

TNSTC MEDIA

பதிவு : 8/3/2018


பெண்ணின் பெருமை உணர்வோம் - இன்று சர்வதேச மகளிர் தினம்..!

அரசு போக்குவரத்து துறையில் பணிபுரியும்
அனைத்து சகோதரிகளுக்கும்
இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின
நல்வாழ்த்துகள்..!

உடலுறுதி கொண்ட ஆணைவிட ..!

மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவர்..!

தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள்..!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான்..!

தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க
மகிழ்ச்சி..!

அரசு போக்குவரத்து துறையில் பணிபுரியும்
அனைத்து சகோதரிகளுக்கும்
இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின
நல்வாழ்த்துகள்..!


இங்ஙணம்

அ.காதர் இப்ராஹிம்
TNSTC MEDIA
9171513169
Wait while more posts are being loaded