Post has attachment
4Fun India - पाइये ज्यादा फॉलोअर्स और रुपये. http://4funindia.com/u/4779210

Post has attachment


*லிங்க கிளிக் பண்ணி 4fun ஆப் டவுன்லோடு பண்ணுங்க

* phone நம்பர் அல்லது மெயில் முகவரி பயன்படுத்தி ஆப் ஓபன் பண்ணுங்க உங்களுக்கு 50 ரூபாய் உடனே கிடைக்கும்.

* இந்த ஆப் மூலம் தினமும் ஒரு வீடியோ ஷேர் பண்ணா 1 ரூபாய் கிடைக்கும் .
நீங்க வீடியோ போட வேண்டிய அ வசியம் இல்லை மத்தவங்க வீடியோ ஷேர் பண்ணாலும் போதும் தினம் 6 முறை ஷேர் செய்தால் 6 ரூபாய் கிடைக்கும் ரொம்ப ஈசி .

* அது மட்டும் இல்ல நீங்க போட்ட வீடியோ லிங்க எடுத்து மத்தவங்க இந்த ஆப் டவுன்லோடு பண்ணா 7 ரூபாய் கிடைக்கும்.

*200 ரூபாய் வந்த உடனே paytm க்கு மாத்தி உங்க போனுக்கு ரீசார்ஜ் பண்ணிக்கலாம்.

(use refrele link get RS. 50 FREE)

லிங்க் 👇👇👇( கிளிக் டவுன்லோட் )

http://4funindia.com/u/1522019

Post has shared content
பூரான் கடிக்கு – இயற்கை மருத்துவம்!

குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கும் போதோ அல்ல ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபட்டு இருக்கும் போதும் பூரான் கடித்து விட்டால் குழந்தைகளுக்கு அழதான் தெரியுமே தவிர அவர்களை கடித்தது என்ன என்று சொல்ல தெரியாது.. ஆனால் பெற்றோர்களே உங்கள் செல்ல குழந்தையை கடித்தது பூரான் என்று மிக சுலபமாக கண்டுபிடிக்க முடியும்….பூரான் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். அதை வைத்தே அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.

பொதுவாக பூரான் கடித்தால் உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறிந்துக்கொள்ள முடியும்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்.. குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம்.

வீட்டு மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் – கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
Photo

Post has attachment

Post has attachment
Photo

Post has shared content
முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள்:

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
Photo

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Photo
Wait while more posts are being loaded