Post has attachment
🥀👉👉👉கோபம் எனும்
கொடிய நோய்👉👉👉
🥀
🌸உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.

🐾ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் 🐾

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

❃ நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது

❃ நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது

❃ நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது

❃ எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து கழுதை என்று திட்டும்போது நாம் குரங்கு என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

🐾கோபம் தன்னையே அழித்து விடும்:🐾

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து பாராட்டி உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாக இருப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்

❃ வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

❃ திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

❃ தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

❃ மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

❃ முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது .கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

❃ கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

❃ இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

❃ மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
🌺ஓம் ஈஸ்வர மந்திரம்🌺

ஓம் மணிமந்த்ர சரோ சரணம்..!

ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்..!

ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்..!

ஓம் ஜீவதோமணம் ஜோதியே சரணம்..!

ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்..!

ஓம் ஓம் ஓம் ஓம் வீங்கார பதியே நமஹ;

ஓம் ஓங்கார பதியே நமஹ;

ஓம் ஐம்பத நாயகனே நமஹ;

ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;

ஓம் ஜக நாயகனே நமஹ;

ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;

ஓம் கண ரட்ச்சகனே நமஹ;

ஓம் மூலாதார வித்தகனே நமஹ;

ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;

ஓம் ஒய்யார காரகனே நமஹ;

ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;

ஓம் பஞ்ச பரம பக காரகனே நமஹ;

ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;

ஓம் கனக மூல ரட்ச்சகனே நமஹ;

ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;

ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;

ஓம்! ஓம்! ஓம்! ஓம்! நதவதன பூத்தம்
ஓம் சந்தோ நமோ பூமதனம்;

ஓம் கைங்கர்யம் போம் பூம் புவர்சுக;
ஓம் நித்தோம் காருபுதம் மைதவம்;

ஓம் பூரணம் புனிதம் பூமயோகம்;
துத்தம் துத்தம் துத்தம்!!!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🍁ஓம் நமசிவாய 🍁
Photo

Post has attachment
🌼மாரியம்மன் பாடல் 🌼

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
பொன்வளமும் கலைமணமும் பொலிய நின்று

பொங்குதிரு மங்கலமாம் மூதூர் தன்னில்

மன்னுயிர்க்கும் கண்கண்ட தெய்வமாகி

வழிவழியே ஆற்றலருள் வழங்கும் எங்கள்

அன்புருவாம் ஆதிபராசக்தியான

அன்னையவள் ஒப்பில்சீர் பத்ரகாளி

இன்புருவாம் மாரியம்மன் எழில்பார்பாத

இருபோதும் எப்போதும் இறைஞ்சுவோமே.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

🌟 இன்றைய சிந்தனை 🌟

🌼கற்ற அறிவையும் பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

🌼செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

🌼உடல் வலிமையுடையவன் வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

🌼பாவம் என்பது ஒன்று உண்டு என்றால் அது நான் பலமானவன் மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

🌼இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

🌼ஓரு சக மனிதனை பற்றி அவன் இல்லாதபோது விமர்சனம் செய்யும் தைரியம்
அவனை பார்த்ததும் நமட்டு சிரிப்பாக மாறி விடுகிறது...

🥀ஓம் நமசிவாய ...
Photo

Post has attachment
🙏🙏##நல்லூரின் கந்தனின் அழகு##🙏🙏
🙏🙏இரவில் எடுக்கப்பட்ட காட்சி🙏🙏
Photo

Post has attachment
நண்பரின் பதிவிலிருந்து.....
தேரின் மீதிலே வலம் வருகின்றான் அலங்கார #நல்லூர் கந்தன்: 🙏🙏💐
காண வந்த கண்கள் கோடி !! 😍
PhotoPhotoPhoto
20/08/2017
3 Photos - View album

Post has attachment
காவேரி புஷ்கரம்
================
இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது.

இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர் 12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஸ்கரம் ஆகும்.... அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர் 24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஸ்கரமாகவும் கொண்டப்படுகிறது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:–
-----------------------------------------------------------
தலைக்காவேரி (Talakaveri) - (கர்நாடகா)

பாகமண்டலா ( Bhagamandala) - (கர்நாடகா)

குஷால் நகர் (Kushalnagar)(கர்நாடகா)

ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) -(கர்நாடகா)

கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) - (கர்நாடகா)

மாண்டியா (Mandya) - (கர்நாடகா)

ஷிவனசமுத்திரா (Shivanasamudra) -(கர்நாடகா)

பன்னூர் (Bannur) -(கர்நாடகா)

திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) - (கர்நாடகா)

தலக்காடு (Talakadu)

முடுகுத்தூர் (Mudukuthore) - (கர்நாடகா)

கனகபுர் (Kanakapur) - (கர்நாடகா)

--------

தமிழ்நாட்டில்

மேட்டூர் (Mettur) - ( தமிழ்நாடு )

பவானி (Bhavani)

பள்ளிப்பாளையம்- ஈரோடு

கொடுமுடி

பரமத்தி வேலூர்

ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி

திருவையாறு

தஞ்சாவூர்

சுவாமிமலை

கும்பகோணம்

மயிலாடுதுறை

பூம்புகார்

மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில்
காவேரி புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்....
Photo

Post has attachment
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதாலோ/கேட்பதாலோ ஏற்படும் நன்மைகள்


மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான்.

குந்திதேவி கர்ணனை "மகனே!" என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள்.
கர்ணனுடைய மனைவியும் அவன் உடல் மேல் விழுந்து கதறுகிறாள்.
இவர்களோடு

இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.
அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து,

இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள் என்றார்.

தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது.
காரணம்-
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது.

தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.
பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:
"இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும்.
அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள்.

அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது.

குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள்.
படித்தவன் சூதும் வாதும் செய்வான்.

மழை பொழியாது;

நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்.

கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்;

மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள்.

அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...!!"
''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.

"அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ,

நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதை விட, உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்'' என்று சொன்னார்.
அப்போது புறப்பட்டவைதான் "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்...!"

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பது தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை.

பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா..? என்று நாம் வியப்படையலாம்.

சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு, சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழைக்கும் போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன?
இந்த ஆயிரம் பெயர்களைச் சொல்லி, பகவானை வேண்டினால், கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதி தேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து,

""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம்.

ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.
ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான்.

ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'- இப்படி மூன்று முறை சொன்னால் போதும்.

சஹஸ்ரநாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதி தேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம்.

மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா?
அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், சொல்லலாம்.

முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

வீட்டில் ஒலிக்கசெய்தால்,,

தீய சக்திகள் வீட்டில் அண்டாது. வியாதிகள் அணுகாது.
வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும்.

நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ரநாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம்.
மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார்கள்.

இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.

இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்

பலருடைய வாழ்விலும் இப்படிக் கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன.

"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக !!
Photo

Post has attachment
பட்டினத்தார் பாடல்கள்

#பாடல் : 1

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் - கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி !


#பொருள் :
எம்பெருமான் ஈசன் குடிகொண்டிருக்கும் திருவொற்றியூர் தெருவில் நடப்பவர்களின் பாதம் பட்ட மண்ணே ஒன்பது துவாரங்களை கொண்ட உடம்பென்னும் புண்ணிற்கு இடும் அருமருந்து என நான் அறிந்து கொண்டேன் .

################################


#பாடல் : 2

எத்தனை ஊர்? எத்தனை வீடுஎத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ?


#பொருள் :
பிறந்த பிறவிகளில் , எத்தனை ஊரில் பிறந்தேனோ , எத்தனை வீடுகளில் குடியிருந்தேனோ , எத்தனை தாயாரோ , எத்தனை பெற்றவர்கள் எனக்கு பெயர் வைத்து அழைத்த போது என்ன வென்று கேட்டேனோ , இவ்வாறு என்னை சுழல வைத்து களைப்படைய வைப்பதுதான் ஏகம்ப நாதனே உனது திருவிளையாடலோ , இறைவா இப்பிறவி பிணியை ஒழித்து என்னை உனது திருவடிகளில் சேர்த்து இளைப்பாறுதல் தர மாட்டாயா.


திருச்சிற்றம்பலம்
Photo

Post has attachment
வணக்கங்கள் நண்பர்களே!!!🙏🙏🙏
நாளை பிரதோச விரதம்...👦👦👦🌹🌹
தமிழ் பஞ்சாங்கத்தில்....03/08/2017🍂🍂🍂
ஆங்கில தேதியில்..19/08/2017🌾🌾🌾
நாளை நல்ல நாளாக அமையட்டும்....🌸🌸🌸
Photo

Post has attachment
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமும்
நூற்றாண்டு புகழும் தூற்றாத மனமும்
பெற்று நாங்கள் நலமுடன்வாழ தாயே
நீயே அருள்புரிவாய் அம்மா...!!!

ஓம் சக்தியே போற்றி போற்றி போற்றி...!!!

வாழ்க வளமுடன்...!!!
Photo

Post has attachment
Wait while more posts are being loaded