Post has attachment
வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள் ஏன் ஏற்படுகிறது?

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு வானத்திலும் - பூமியிலும் பல அடையாளங்கள் தோன்றும் இவையெல்லாம் அவர் வருகையை முன்பு அறிவிக்கும் அடையாளங்கள்.

1. வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
- லூக்கா 21 :11

2. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும், பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும், சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
- லூக்கா 21 :25

3. அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
-அப். நடபடிகள் 2: 19 & யோவேல் 2: 30

4. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
-அப். நடபடிகள் 2:20 & யோவேல் 2: 31

தானியேல் 6: 27 ல் கர்த்தர் இவைகளை செய்கிறவர் என சொல்லப்பட்டுள்ளது. வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்..
சமீப காலங்களில் வானத்திலே தேவ தூதர்களையும் சந்திரன் இரத்த சிவப்பானதையும், உலகில் பல நாடுகளில் எக்காளச்சத்தங்களையும் பலர் பார்த்ததையும் கேட்டதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். சிவப்பு நிற வானம் இரத்த சிவப்பு சந்திரன் அடையாளங்களில் சிவப்பு அபாயகரம் என்பதை அறிவீர்கள். இது நல்ல அடையாளம் அல்ல.

இந்த அடையாளங்களைப்பற்றி அடியேனுக்கு ஆவியானவர் மே மாதம் 14ந் தேதி 2012 அன்று இதை உறுதிப்படுத்தினார், இது நான் சோதோம் கொமாரா என்ற வார்த்தையை வேதத்தில் படிக்கறப்ப என் வாயில் வைத்த தீர்க்கதரிசன வார்த்தை:
2017ல் வானத்தில் அடையாளம் உண்டாகும். அது காணவும் கேட்கவும் முடியும். தாழ்ந்து போகிற ஜனங்களே! வேசித்தனத்தில் அழிந்து வாழ்கிற ஜனங்களே! ஜாக்கிரதையாய் இருங்கள். என்னிடத்தில் உண்மையாய் இருங்கள். கர்த்தர் இதை உங்களிடத்தில் அறிவிக்கிறார்.

அந்திகிறிஸ்து இந்த உலகை 7 வருடம் அரசாளுவன். முதல் மூன்றரை வருடங்கள் நல்லவனைப்போல் காண்பிப்பான். பின் பாதி மூன்றரை வருடம் உபத்திரவங்களாக இருக்கும்.

அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
-மத்தேயு 24: 9

வெ.விஷேசம் (6:12) புத்தகத்திலே ஆறாம் முத்திரை உடைக்கப்படும்போது,
பூமி மிகவும் அதிர்ந்தது, சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று.' என கடைசி கால உலகத்தின் மிகப்பயங்கர அடையாளம் சொல்லப்படுகிறது. இவைகள் நடைபெறுவதற்க்கு முன் இப்போது நடைபெறும் அடையாளங்களே முன்மாதிரிகளும் இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம் எனவும் அறிவிக்கின்றன.

மாரநாதா கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்.
Photo

Post has shared content
புதிய பிறப்பு தீர்க்கதரிசன மாநாடு

ஏன்ஜல் டி. வி.யில்
நேரலை ஒளிபரப்பை காணத்தவறவிடாதீர்கள்!
21 - 23 செப்டம்பர் 2017 முகநூலில் - யூ டியூப்பிலும் காணலாம்_ (facebook.com/AngelTVsss) (youtube.com/AngelTVsss).

முதல் முறையாக பல மொழிகளில் (மொழிபெயர்ப்பு) உலகமெங்கும் நேரலையில் ஒளிபரப்பாகிறது!_
- English - Tamil. - Chinese- French- Russian- German- Portugese- Spanish - Arabic
இந்த பருவத்தில் புதிய பிறப்பிற்க்கு ஆயத்தப்படுங்கள்.
Don't miss the live telecast of the NEW BIRTH PROPHETIC CONFERENCE from the 21st - 23rd of September.

The messages will be available in the following translations:
- English
- Tamil
- Chinese
- French
- Russian
- German
- Portugese
- Spanish
- Arabic

The live stream will also be available on our Facebook page (facebook.com/AngelTVsss) and YouTube channel (youtube.com/AngelTVsss).

Be prepared for the new birthing in this season!
Photo

Post has attachment

Post has attachment
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
லூக்கா 4:18

Post has attachment
ஆவியின் வரங்கள்

II இராஜாக்கள் 2: 9
எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.

இங்கே எலியா செய்த அற்புதங்கள்/அடையாளங்கள் மற்றும் ஆவியானவர் பேசி வழிநடத்துதல் என்னும் விசேஷமான தேவனுடைய சக்தியை "ஆவியின் வரம்" என்று எலிசா குறிப்பிடுகிறான். இங்குதான் முதலாவதாக ஆவியின் வரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது._

[A] "ஆவியின் வரங்கள்" என்பதற்கு கிரேக்க மொழியில் χαρίσματα (Charismata = gift) என்று அழைக்கப்படுகின்றது.
1 கொரி 12: 4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே.
12:4 Διαιρέσεις δὲ χαρισμάτων εἰσίν τὸ δὲ αὐτὸ πνεῦμα

[B] ஆனால் வரம் என்று வாசிக்கும்போது கிரேக்க மொழியில் δωρεά (dōrea =bestowal, bestowment, donation) என்று சொல்லப்படுகின்றது.
(அப் 2:38 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
2:38 Πέτρος δὲ ἔφη πρὸς αὐτούς Μετανοήσατε καὶ βαπτισθήτω ἕκαστος ὑμῶν ἐπὶ τῷ ὀνόματι Ἰησοῦ Χριστοῦ εἰς ἄφεσιν ἁμαρτιῶν καὶ λήψεσθε τὴν δωρεὰν τοῦ ἁγίου πνεύματος )

தமிழில் ஒருமை, பன்மையில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிரேக்க மொழியில்தான் இந்த நிருபங்களை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 கொரி 12ம் அதிகாரத்தில் ஆவியின் வரங்கள் ஒன்பது.

I கொரிந்தியர் 12:8-11 எப்படியெனில்,
1. ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்,
2. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
3. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்,
4. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
5. வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும்,
6. வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும்,
7. வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும்,
8. வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும்,
9. வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

I கொரிந்தியர் 14:12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

மேலே கூறப்பட்டவை (தேவனுடைய) ஆவியின் வரங்கள் (Charisma)ஆகும்.

▪ஆவியின் வரங்களை விரும்புங்கள்.

▪ ஆவியின் வரங்களை வேண்டாம் என்று சொல்லாமல் இருங்கள்.
▪ ஆவியின் வரங்களை புறக்கணிக்காமல் இருங்கள்.
▪ஆவியின் வரங்களை பெற வாஞ்சையாய் இருங்கள்.
▪முக்கியமான ஆவியின் வரங்களை நாடுங்கள்.

ரோமர் 11 : 29
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
Photo

Post has attachment
இன்றைய தீர்க்கதரிசனம் செப்டம்பர் 20, 2017 - புதன்கிழமை
- தீர்க்கதரிசி. வின்சென்ட் செல்வகுமார்

ஆடுகளை குறிவைக்கும் பொல்லாத ஆவிகள்

தீர்க்கதரிசனம்: 

என் தரிசனத்தில், வானத்திலுள்ள ஏராளமான வெட்டுக்கிளிகளைப் பார்த்தேன், ஒவ்வொன்றும் அதன் திசையில் பறக்கத்தொடங்கின. 

வெட்டுக்கிளிகளின் கூட்டம், விவசாய நிலங்களில் பறந்து செல்வதற்குப் பதிலாக, பசுமையான மேய்ச்சல் மற்றும் புல்வெளிகளோடு பறந்து செல்ல வேண்டியிருந்தது. நான் பார்த்த மந்தையில் செம்மறி ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளும் இருந்தன. தேளின் கொடுக்குகளைப்போன்ற கொடுக்குகள் வெட்டுக்கிளிகளின் பின்னங்கால்களுக்கிடையே இருந்தன. அவைகளின் பின்னங்கால்களிலுள்ள கொடுக்குகளோடு வெட்டுக்கிளிகள் மந்தையின்மேல் விழுந்து செம்மறி ஆடுகளை துன்புறுத்தியது. அந்த நேரத்தில் ஆடுகள் தன்னுடைய சரியான அளவிலுள்ள அமைப்பை இழந்து விட்டது, ஒன்றை எதிர்த்து மன்றொன்று மோதிக்கொண்டது. சில மந்தைகள் நிலைகெட்டு தாங்கள் விரும்பின எல்லா திசைகளிலும் புத்தித்தடுமாற்றம் ஆனதுபோல ஓடி விட்டன. இந்த வெட்டுக்கிளிகளின் கொடுக்குகளின் காரணமாக தங்கள் கருவிலே சுமந்திருக்கும் இளம் குட்டிகளுக்கான செம்மறியாடுகளின் பால் விஷமாகி விட்டது.  அந்தப்பாலை குடித்த இளம் ஆட்டுக்குட்டிகள் மயக்கம அடைந்து விழுந்து தன்னுணர்வுயில்லாத நிலைக்கு ஆனார்கள்.

தேவனின் பிரசன்னத்தில் தரிசனத்தின் அர்த்தத்தை அறிய நான் காத்திருந்தபோது, கர்த்தர் என்னோடு பேசிச்சொன்னது,  நீ பார்த்த பசுமையான மேய்ச்சல், புல்வெளிகளில் பறந்த கருப்புநிற வெட்டுக்கிளிகள் பொல்லாத ஆவிகள் மற்றும் ஏமாற்றும் போதனைகள். இந்த பொல்லாத ஆவிகள் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை வசப்படுத்தவும், பொல்லாத போதனைகளால் மந்தையை சிதைக்கவும், அநீதியான கூலிகளால் ஆடுகளை காத்துக்கொண்ட ஊழியக்காரர்களின் கண்களை குருடாக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். 

ஜனங்கள் தங்கள் விசுவாசத்தை திருப்பி தங்கள் இருயங்களை தேவனின் ஒரே பேரான குமாரனை மாத்திரம் பின்பற்ற வேண்டுமென்று அனுப்பப்பட்ட இவர்கள்தான் பொல்லாத ஆவிகளை பின்பற்றுகிறார்கள். பழங்காலங்களில் இந்த ஆவிகள்  Neith, Thoath, Saaw, Seshath என அழைக்கப்பட்டன.
இவை உயர் ஸ்தலங்களில் ஆன்மீக துன்மார்க்கம் என்றும் அழைக்கப்படும். 

மந்தையின் கண்களைப் பின்தொடரும் உயர்ந்த ஸ்தலங்களின் பொல்லாத ஆவிகளின் போதனைகளால் ஆடுகள் சிதறிப்போகாமல், பொல்லாத ஆவிகளின் கிரியைகள் தேவாலயங்களில் ஊடுருவவிடாமல், அவைகள் மக்களைத் தொட்டு மக்களுக்கு பைத்தியம் பிடிக்கும் ஒரு நிலை வராமலிருக்கவும், 
கர்த்தரையும் அவரது விசுவாசத்தையும் பின்பற்றாதபடி அவர்களைத் திருப்பி விடாமலிருக்கவும் ஜெபியுங்கள். 

ஜெப வேண்டுகோள்கள்.

i. இந்த பொல்லாத ஆவிகளின் தந்திரங்களிலிருந்து சபைகளும் தேவ ஜனங்களும் தப்பித்துக்கொள்ள ஜெபியுங்கள். 

ii. தேவ ஜனங்களுக்கு பகுத்தறியும் ஆவியை கர்த்தர் அருள வேண்டுமென்று ஜெபியுங்கள். அதன்மூலம் தேவ ஜனங்கள் ஏமாற்றும் போதனைகளை புரிந்துக்கொள்ளவும் அதனால் தேவகுமாரனின் விசுவாசத்திலிருந்து தப்பான வழியில் திருப்ப முடியாதபடி செய்யவும் ஜெபியுங்கள். 

iii. பொல்லாத ஆவிகளின் திட்டங்களை கர்த்தர் கவிழ்க்கவும் அழிக்கவும் வேண்டி ஜெபியுங்கள்.

iv. பணத்திற்க்காக ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களும் பாஸ்டர்களும் அவர்களின் வழியிலிருந்து மனந்திரும்ப வேண்டி ஜெபியுங்கள். 

இந்த ஊழியக்காரர்களும் இவர்களை ஆதரிப்பவர்களுமே வெட்டுக்கிளிகளின் பிரதான இலக்காகும். 

v. கர்த்தர் வெளிப்படுத்திய பொல்லாத ஆவிகளின் பெயர் ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைத்து அவைகளின் கிரியைகள் எல்லாம் சேர்ந்து அழிந்துபோக ஜெபியுங்கள். 

Photo

Post has attachment
தற்போதைய செய்தி! 19/20- 09- 2017 மெக்சிகோ நிலநடுக்கம்!! 200 பேர் பலி !! அதிகமாக வாய்ப்பு! கட்டிடங்கள் விழுந்தது! வாகனங்கள் அழிவு!!
PhotoPhotoVideo
20/09/2017
3 Photos - View album

Post has attachment
இன்றைய தீர்க்கதரிசனம் 
செப்டம்பர் 19,  2017 - செவ்வாய்க்கிழமை  
- தீர்க்கதரிசி. வின்சென்ட் செல்வகுமார் 

தேவனின் கடுமையான கோபம் விரிவடையும்

தீர்க்கதரிசனம்

நான் தேவனின் தரிசனத்தை கூர்ந்து நோக்கும்போது, இதோ நான் முதலில் கேட்ட பீடத்தின் சத்தம் என்னோடு பேசி  சொல்லியது, " கேள், இது 
தேவ கோப அக்கினி, பூமியின் நான்கு திசைகளிலும் கலசம் சுழலும், அது தேவனின் கரத்திலுள்ள சித்தத்தை செய்து முடிக்கும்".

இதோ இது மழைக்காடுகளையும் பனி உறைந்த மலைகளையும்
விட்டு வைக்காது. பெரிய மலைகளின் காடுகளையும் நிலப்பகுதியின் காடுகளையும்கூட விட்டு வைக்காது. நெருப்பை அணைக்க மழைகூட காத்திருக்கும்.

மனுஷன் கரங்களின் வேலைகள் போதுமானதாகயிருக்காது. 
விழுங்கக்கூடிய சிங்கத்தின் வாய் போல, பசியெடுத்த வயிறைப்போல தனக்கு முன்நேரிடுவைகளை விழுங்கிவிடும். அந்த நெருப்பு கட்டிடங்களைத்தொடும் வாகனங்களை திண்ணுவிடும். 

இது மனிதர்களின் போர் ஆயுதங்களை முழுதாய் விழுங்கிவிடும். அது கொட்டகைகளைத்தொடும்;
கோபுரங்களை விட்டு வைக்காது. அது விஞ்ஞான மையங்களுக்கு பரவும். நரகத்தின் தீப்பிழம்பானது கர்த்தரால் நியமிக்கப்பட்ட எல்லா இடங்களையும் விழுங்கிவிடும்.  
பொருட்கள். கட்டிடங்கள், மரங்கள், உயிர்கள் மற்றும் மனுஷர்கள் நெருப்பின் கொள்ளைப்பொருட்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்". 
மேலும் குரல் தாமதித்துச்சொன்னது, நெருப்பால் நெருப்பை தணிக்க முடியுமா?.  நான் பதில் சொன்னேன்,  "கர்த்தர் மாத்திரமே அறிவார்". அந்த நேரத்தில் குரல் என்னிடத்தில் பேசி சொன்னது, 

"நெருப்பு நெருப்பை தணிக்கும்; 
தேவனின் ஊழியக்காரனே நெருப்பு மற்றும் அக்கினி ஜுவாலை.

குரல் மேலும் சொன்னது,
தேவனுக்காக போராடுபவன், நெருப்பை தணிக்கும் ஊழியக்காரன் வல்லமையாய்  எழும்பினால் அது நல்லாதாயிருக்கும்". 
     (தரிசன நாள் 24- 08- 2012) 

விளக்க உரை:

வரும் நாட்களில் தோன்றப்போகும் அபாயங்கள்ப்பற்றி இந்த தரிசனம் பேசுகிறது. அந்த அழிவுகள் எல்லாம் வேறொன்றுமில்லை தேவ கோபத்தின் விளைவுகளே. மனித குலம் தேவனுக்கு எதிராக பாவம் செய்து, தேவனின் கிருபையை மறந்து, அவர்கள் வாழ்க்கையில் அலட்சியமாக இருக்கும்போதுதான் 
இந்த விதமான தேவ கோபங்கள் கர்த்தரிடமிருந்து புறப்பட்டு வருகிறது. சபைகள் தேவனை மறந்து, ஊழியக்காரர்கள் தேவனை கைவிட்டு பாவம் நிறைந்த வாழ்க்கை வாழும்போது அந்த தேவ கோபத்தின் கலசங்கள் பூமியின் மேலே ஊற்றப்படும். நெருப்பினால் உண்டாகும் அழிவுகள் மிகவும் முக்கியமான இடங்களாக கருதப்படும் விஞ்ஞான, ராணுவ மையங்களில் மற்றும் வேறு இடங்களில் ஊற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. நெருப்பினால் அழிவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக,   தேவ நியாப்படி அக்கினி ஜுவாலைப்போன்ற உண்மையான விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் எழும்ப வேண்டும். பரிசுத்த அக்கினியின் ஜுவாலை மாத்திரமே நெருப்பை தணிக்கும்.

ஜெப வேண்டுகோள்கள்

i. வரும் நாட்களில் தோன்றும் நெருப்பின் அழிவுகளிலிருந்து உலகம் காக்கப்பட ஜெபியுங்கள். முக்கியமான இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அழிவுகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.


Ii. தேவ கோபத்தின் விளைவாக அக்கினி நியமிக்கப்பட்டுள்ளது.
நாடுகள் மற்றும் சபைகள் புரிந்துகொள்ளவும், இருதயத்தைப் பெற்று அது அவற்றை உணர செய்யவும், அந்த வழிகளிலிருந்து விலகி நிற்க செய்யவும் ஜெபியுங்கள்.

Iii. தேவ ஊழியக்காரர்கள் தேவ சித்தத்தை செய்யவும் ஜெப வீரர்கள் பாரத்தோடு ஜெபத்தை ஏறெடுக்கவும் அவர்கள் எழும்பி அக்கினியை அவிக்கவும் ஜெபியுங்கள்.

iv. விஞ்ஞான மையங்கள், தொழில் மற்றும் வணிக மண்டலங்கள், ராணுவ முகாம்கள், இதைப்போன்ற ஜனங்கள் ஒட்டுமொத்தமாக கூடுமிடங்கள் என மிக முக்கியமான இடங்களை குறித்துக்கொண்டு அவைகளுக்காக உருக்கமாக ஜெபியுங்கள். 

V. உன் தேசத்தின் உயர்ந்த கட்டிடம் கோபுரங்களை குறித்து அவைகளுக்கு ஜெபியுங்கள். உங்கள் வாகனங்களுக்காகவும், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளின் பயணத்திற்க்காகவும் ஜெபியுங்கள். 

Photo

Post has attachment
This baby wants Jesus to come
இந்த குழந்தை "இயேசு வர வேண்டும்" என்கிறான்

Post has attachment
இன்றைய தீர்க்கதரிசனம் செப்டம்பர் 18, 2017 - திங்கட்கிழமை
- தீர்க்கதரிசி. வின்சென்ட் செல்வகுமார் 

பெரும் இயற்கை பேரழிவுகள் 

தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது

கர்த்தர் இப்படிச்சொல்லுகிறார்,   உயிர்களை மிகவேகமாக வீசியடிக்க பொல்லாத நாட்கள் தேசத்தை விழுங்கும். அது மழை, காற்று மூலம் வரும். பனி மூலமும் தீ மூலமும் வரும். அது பெருவெள்ளம் மூலம் வரும். அது புகை மூலம் வரும்.  பூமியின் அஸ்திபாரங்கள் அசைக்கப்டுவாதால்கூட வரும். 
மனுஷர் கைவேலைகளினால் விழுங்குகிறது, என்னைத் தேடுகிறவன் இல்லை. என்னிடத்தில் வழக்காடுகிறவனும் இல்லை.
கடல்களால் கடும் ஆபத்துகள்  நேருடுகிறபோதிலும் வலிமைமிக்க கர்ஜனை மற்றும் அலைகள் கரையோரங்களை உடைத்து தீவுகளுக்கும் தேசங்களுக்கும் வருத்தத்தை கொண்டுவரும்.
கப்பல்கள் மற்றும் தண்ணீரை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்களை வீழ்த்துவதற்கு கடல்கள் விரைகின்றன,  கரையோரங்களை தண்ணீர் விழுங்கிவிடும், அதன் குடிநீரை விழுங்கிவிடும், உலர்த்தப்பட்ட வலைகள் கிழிக்கப்படும், கட்டப்பட்டிருக்கும் கப்பல்கள் மூழ்கிவிடும், என் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க யாரும் இல்லை. 

என் தீர்க்கதரிசிகள் குருடர்கள்; 

என் மேய்ப்பர்கள் பெருந்தீனிக்காரர்கள்; நான் எழுப்பிய ஜாமக்காரன் தூக்கத்தை விரும்புகிறவன்; மதில்களின்மேல் நிற்கும் காவல்காரன் பலவீனமானவன்; என் ஊழியக்காரர்கள் பணத்தை விரும்புகிறவர்கள்; தங்கள் சொத்துகளை பெருக்க சந்தைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் அவர்கள் ஒன்றாக கூடி என் வார்த்தைகளை வியாபாரமாக்கினார்கள்.
அவர்கள் ஜனங்களை கூடச்செய்து என் வல்லமைகளை பேரம் பேசினார்கள். 
அவர்கள் தங்கள் கண்ணீரை ஜனங்களுக்கு வெளிப்படுத்தி அதன் கைம்மாறுகளை சேர்த்துக் கொண்டனர். அவர்கள் களஞ்சியம் நிரம்பி வழிகிறது. என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவன் ஒருவனுமில்லை, அதைக்குறித்து அக்கறையுள்ளவன் ஒருவனுமில்லை.

இது எனக்கு வருத்தமளிக்கிறது அல்லவா?


விளக்க உரை: 

2012ம் வருஷத்திலிருந்து கர்த்தர் முன்னறிவித்த தேவ வார்த்தைகள் நிறைவேறி வருகிறதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். குறிப்பாக இந்த வருடத்தில் பெரியளவில் உலகத்தில் நடந்த பேரழிவுகளுக்கு சாட்சிகளாயிருக்கிறோம். அமெரிக்க தேசம் தொடர்ச்சியாக சிக்கிய சூறாவளி புயல், ஹாங்காங் தேசத்தில் சூறாவளி புயல் அதன் கொடூரமான பெரிய அழிவுகள், சரித்திரத்தில் மறக்கமுடியாத சம்பவங்களாகி விட்டது. அதே போல இந்தமாதிரி இந்தியாவில்கூட இதேவகையான பெருமழைகளுக்கும் பேரழிவுகளுக்கும் நாம் சாட்சிகளாயிருக்கிறோம். 
ஏனெனில் இந்த அழிவுகள் ஏற்கனவே தேவனால் முன்னறிவிக்கப்பட்டுள்ளன.
நாம் ஜெபம் செய்தால் அடக்கி வைத்திருக்கலாம். ஆனால் அவைகள் பெருகக்காரணம் இரக்கமற்ற 
ஊழியக்காரர்களினாலும் ஜனங்களின் பலனில்லாத ஜெபங்களினாலுமே 
என்கிறார் துக்கமடைந்த கர்த்தர். 

ஜெப வேண்டுகோள்

1. உலகத்திலுள் தேசங்களில் இயற்கையான அழிவுகள் அதிகமாகமலும் கர்த்தர் அழிவுகளை தடை செய்யவும் ஜெபியுங்கள்.

2. அமெரிக்கா மற்றும் சீனாவில் சூறாவளி புயல்களால் நிகழ்ந்த பாதிப்புகள் இயல்பு நிலைக்கு வர ஜெபியுங்கள்.

3. இரக்கமற்ற தீர்க்கதரிசிகளும் ஊழியக்காரர்களும் மனந்திரும்ப ஜெபியுங்கள். உண்மையான            தேவ ஜனங்கள் கவனக்குறைவுள்ள மனப்பாங்கிலிருந்து உருமாறி அவர்கள் ஜெபிக்கிற வீரர்களாக எழும்ப ஜெபியுங்கள். 

4. தேவனின் துக்கத்தின் ஆவியை ஜனங்கள் உணர்ந்துக்கொள்ள அவருடைய சுமையை அறிந்துக்கொள்ள, அவர்கள் உண்மையான ஜெப வீரர்களாகவும், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவும் தேவனுக்கும் ஜனங்களுக்குமிடையே ஜெபத்தில் நிற்கவும் ஜெபியுங்கள்.  

5. பேரழிவுகள் இனி மறுபடியும் தேசங்களில் நேரிடாதபடி தேவனிடத்தில் பரிந்து பேசுங்கள்.   இந்த பேரழிவுகளில் துன்பம் அனுபவித்த மக்களுக்காக ஜெபியுங்கள்.

Photo
Wait while more posts are being loaded