Post has attachment

ராணுவம் போருக்கு தயாராக இல்லை, அஜீத் தோவல்

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய தீவிரவாத தடுப்பு கருத்தரங்கில் கூறும் போது, இந்திய ராணுவம் போருக்கு தயாராக இல்லை என்றும் அதற்கு சரியான திட்டமிடல் இல்லாததும், அரசின் தவறான கொள்கைகளுமே காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார், அதற்கு ஆதாரமாக அவர் பல கருத்துக்களையும் முன்வைத்தார்.

Post has attachment
வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க ஸ்வீடன் திட்டம்

ஸ்வீடன் நாட்டின் அரசு நிறுவனமான சாப் இந்தியாவின் தனியார் நிறுவனமான கல்யாணி குழுமத்துடன் கூட்டு சேர்ந்து கைகளில் ஏந்தி செல்லும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Post has attachment
பாதுகாப்பிற்காக அரை ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கியது அமெரிக்கா

இந்த வருட பட்ஜெட்டில் சுமார் $583 பில்லியன் அளவு பணத்தை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது அமெரிக்கா. இது அந்த நாட்டு வருமானத்தில் சுமார் 1.7% ஆகும். இதில் ஆராய்ச்சிக்கு மட்டுமே சுமார் $71 பில்லியன் அளவு பணத்தை ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவின் மொத்த ராணுவ பட்ஜெட்டை விட அதிகம்.

Post has attachment
ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து Mi 17 ஹெலிகாப்டர்களையும் டெலிவரி செய்தது ரஷ்யா

இந்திய விமானப்படை சுமார் 151 நடுத்தர ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. இதை மூன்று தவணைகளாக வாங்கியது. தற்போது ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து ஹெலிகாப்டர்களையும் ரஷ்யா டெலிவரி செய்துள்ளதால், கூடுதலாக இன்னும் சுமார் 48 ஹெலிகாப்டர்களை வாங்க முடிவெடுத்துள்ளது.

Post has attachment
கண்காணிப்பை அதிகரிக்க பறக்கும் ராடர்களை வாங்குகிறது விமானப்படை

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஊடுருவலைத் தடுக்கவும், வான் பரப்பு கண்காணிப்பை அதிகப்படுத்தவும் சுமார் எட்டு அதி நவீன ஏரோஸ்டட்-Aerostat எனப்படும் பறக்கும் ராடர்களை வாங்க விமானப் படை முடிவெடுத்துள்ளது. இந்த ராடர்கள் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களில் சுமார் 1000 முதல் 15000 அடி உயரத்தில் பறக்க விடப்பட்டு, மேலிருந்து கீழாக வான் பரப்பையும் நிலப் பரப்பையும் கண்காணிக்கும்.

Post has attachment
தென் சீனக் கடலின் செயற்கைத் தீவுக்கு போர் கப்பலை அனுப்பியது அமெரிக்கா

தென் சீனக் கடல் பகுதியில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் உள்ள மேடான பகுதியில் அதிகமான மணலைக் கொட்டி அதை தனி தீவாக மாற்றி அதை சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா, இதை அருகே உள்ள நாடுகள் முதல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

Post has attachment
நான்காவது அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு தயாராகிறது DRDO

அணு ஆயுதங்களோடு கண்டம் தாண்டி தாக்கும் தொலை தூர அக்னி 5 ரக ஏவுகணையை நான்காவது முறையாக சோதனை செய்து பார்க்க DRDO தயாராகி வருகிறது. ஒரிசாவிலுள்ள அப்துல் கலாம் ஏவுகணை சோதனை நிலையத்திலிருந்து இந்த மாத இறுதியில் சோதனை செய்யவுள்ளது DRDO. அக்னி 5 ஏவுகணையின் தாக்கும் தூரம் சுமார் 5000 கிலோமீட்டருக்கும் மேல் ஆகும்.

Post has attachment
திருத்தி வடிவமைக்கப்பட்ட 106 தேஜஸ் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விமானப்படையில் உள்ள பழைய ரஷ்ய தயாரிப்பான MiG 27 மற்றும் MiG 21 விமானங்களை நீக்கி விட்டு, புதியதாக திருத்தி வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும், சுமார் 106 தேஜாஸ் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிகின்றது.

Post has attachment

கப்பல் படையின் புதிய போர் கப்பல்களை கட்ட எஃகு வழங்குகிறது செயில்

மத்திய அரசின் உருக்கு நிறுவனமான செயில், கப்பல் படைக்கு புதிய போர்கப்பல்களைக் கட்ட எஃகு இரும்பை வழங்குகிறது, முதன் முறையாக கப்பல் கட்ட இந்திய எஃகை செயில் நிறுவனம் கப்பல் படைக்கு கொடுக்கவுள்ளது, இதற்கு முன்பு ரஷ்யாவிலிருந்தே எஃகு வாங்கப்பட்டு கப்பல்கள் கட்டப்பட்டன.

Post has attachment
வடகொரியாவின் ஏவுகணையை சுட்டு வீழ்த்த படைகளுக்கு ஜப்பான் உத்தரவு

ஜப்பான் அரசு தனது ராணுவத்திற்கு வட கொரியாவிலிருந்து வீசப்படும் ஏவுகணையை வானிலேயே சுட்டு வீழ்த்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. வட கொரியா ஒரு தொலை தூர ஏவுகணையை சோதனை செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன,
Wait while more posts are being loaded