Post has shared content
பொதுவாக நான் காதல் கவிதைகள் எழுதுவதில்லை. காரணம் எனக்கு காதலும் சரி, காதல் கவிதைகளும் சரி கைவராதவை. அரசியல் அளவில் என் மாவட்டத்தில் தைரியம் உள்ளவனாக அறியப்பட்டாலும் எந்தப் பெண்ணாவது என்னைக் காதலித்தால் அவள்தான் வந்து என்னிடம் முதலில் சொல்ல வேண்டும் என்ற அளவிற்கு பெரும் தைரியசாலி நான் :)

அண்ணன்   +மணி ஜி. யின் அன்பு வேண்டுகோளை ஏற்று ஒரு காதல் கவிதையை காலம்போன கடைசியில் முயற்சித்து இருக்கிறேன் :)))

--


ஜென்மங்களும்,யுகங்களும்
கடந்து வந்த
ஒரு முத்தம் எழுப்பிய
மெல்லிய சப்தத்தில்
கண் விழித்தது
என் காதல்!

உன்னை நோக்கி
பயணம் செய்யும்
படகின் பாய்மரமாய்
நானும்
அலைக்கழிக்கும்
அலையாய்
நீயும்
மெதுவாக பின்னோக்கி
அதே ஜென்மங்களையும்
யுகங்களையும் அடைகிறோம்!

மெல்லக் கொல்லும்
விஷமென்று
யார் சொன்னது
மொத்தமாக் கொல்லும்
இந்தக் காதலை?

Post has shared content

Post has attachment

Post has attachment
Photo

Post has attachment

Post has attachment
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded