Post is pinned.Post has attachment
வாருங்கள் தோழா இனி அரசியல் இளைஞர் கையில்.. ஒன்றினைவோம் வென்றெடுப்போம்... இனி இளைஞர்கள் அரசியல் களத்தில் இறங்கி விட்டார் என்று... 
Photo

Post has attachment
ஒரு சப்பாத்தி உருண்டை அளவு. கால் பங்கு காய்ந்த மாட்டு சாணம், மூன்று பங்கு செம்மண். தேவையான நீர் ஊற்றி கலந்து ஒரு சிறிய பந்து போல் உருட்டி கொள்ள வேண்டும். அதற்குள் வேப்பங்கொட்டை அல்லது புளியங்கொட்டை நுழைத்து மூடிவிட வேண்டும். இரண்டு நாட்கள் காய வேண்டும். பிறகு அவற்றை உங்கள் விருப்பம் போல் தரிசு நிலங்கள் அல்லது வேறு பகுதிகளில் தூக்கி எறிய வேண்டும். மழை வரும் பொழுது அவை தானாக வளர ஆரம்பித்து விடும். வேப்பமரம் மற்றும் புளியமரம் வறட்சி தாங்க கூடியது.
Photo

Post has attachment
⚖ உண்மை ⚖


🗣 மாட்டு கறிக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன சம்பந்தம்?

🗣 இந்தியாவில் 95% முஸ்லீம்கள் மாட்டு கறி வியாபாரம் செய்வதும் இல்லை , 90% முஸ்லீம்கள் மாட்டு கறியை தங்களின் பிரதான உணவாக உட்கொள்வதும் கிடையாது

🗣 எதற்காக மாட்டு கறிக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் முடிச்சு போடுறாங்க ?

🗣 மாட்டு கறி தடை சட்டம் , மாடு விற்பனை தடை சட்டம் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான சட்டமும் அல்ல ..

🗣 அந்த சட்டத்தால் அதிகமாக பாதிக்க படப்போவது நிச்சயமாக மாடு எருதுகளை நம்பி வாழும் விவசாயிகளும் , ஏழை இந்தியர்கள் மட்டுமே...


☆҉‿➹⁀☆҉🍃🌸🍃 ☆҉‿➹⁀☆҉

​👉🏿​​​ மறந்துவிடுவது மக்கள் இயல்பு​​​❗​

​👉🏿 ​​​நினைவு படுத்துவது நம் கடமை❗​​​​

​​👉🏻 சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......​​

​⚖ ​உண்மை​ ⚖​
Photo

Post has attachment
1) கறந்த பசும்பாலை அருந்துங்கள் பாக்கெட் பால் ஒழியும். (நோயுடன்)

2) உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

3) நம் நாட்டில் தயாராகும் தரமான பொருட்களை ஊக்கப்படுத்துங்கள். அந்நிய நாட்டு கொள்ளையர்கள் காணாமல் போவார்கள்.

4) நம் வீட்டு ஏரி ,குளம், பம்ப் தண்ணீரை எடுத்து பயன்படுத்துங்கள். இளநீர்,மோர், நன்னாரி, கூழ் குடியுங்கள்.
காணாது போகும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள் நோய்களுடன்..

5) ஞாயிற்றுக்கிழமை என்றால் புலால் என்பதை விடுத்து முன்னோர்களை போல விசேசங்களுக்கு மட்டும் சாப்பிடுங்கள். பிராய்லர் காணாது போகும் முடிந்தவரை இடம் உள்ளவர்கள் நாட்டு கோழி வளருங்கள்.

6) கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்.

7)ஒரு சீமை கருவேலத்தை வேரொடு சாயுங்கள் வறட்சி குறையும்.

8)நீர் நிலைகளில் குப்பைகளையும் வீட்டு கழிவுகளையும் கலக்காதீர்கள். நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கும்.

9) இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். வளரும் தலைமுறைகளேனும் நோயின்றி வாழட்டும்.

10) போதைப் பொருட்கள்,மது பயன்படுத்துவதை தவிருங்கள். உடல் வலிமையும்,மன உறுதியும் உண்டாகும்.

11) அன்னிய நாகரீகம் வேண்டாம். நமது பண்பாடே உயர்வானது.

முயன்றால் முடியாதது ஏதுமில்லை...
👍👍
Tnyouthparty 
Photo

Post has attachment
ஏரியை அழித்து

கல்லூரி கட்டியாச்சு

குளத்தை அழிச்சு

கம்பெனி கட்டியாச்சு

வயக்காட்டை அழிச்சு

வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்

மக்களாகிய நம்மீது தானே தவிர

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு

நீர்வளத்தை

மணல்வளத்தை

காடுகளை

அழித்தபோது வேடிக்கை

பார்த்தது யாரு

உன்னால் இன்று

நெஞ்சை நிமிர்த்தி

நம்ம அரசியல்வாதியிடம்

நம்ம பிரச்சனையை

சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??

முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்

காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!

முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை

காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை

குளமேதும் வெட்டவில்லை

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது

ஆனால்

விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை

தமிழக அரசே..

தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க

மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா ....??

வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது

இன்று

மாறுங்கள் மண்னின் மைந்தர்களே ..

தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!

சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும் .

வேதனையுடன்
உங்களில்ஒருவன்... Tnyouthparty 
Photo

Post has attachment

Post has attachment
I salute our Army 
Photo

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded