Post has attachment
நேற்றைய வாசகசாலையின் கதையாடல் நிகழ்வு பனுவல் புத்தக நிகழ்வு இனிதே நிறைவடைந்தது :)
Photo

Post has attachment
வாசகசாலை வழங்கும்
'கதையாடல்' 25 -ஆம் நிகழ்வு, இன்று மாலை பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்...!

2014 - ல் வாசகசாலை துவங்கப்பட்டு மாதம் ஒரு புத்தகம் பற்றிய கூட்டம் மற்றும் முழுநாள் நிகழ்வுகள் உள்ளிட்ட விஷயங்கள் நடத்தி வந்தாலும், 'கதையாடல்' என்னும் வடிவம் முதன்முதலாக வாசகசாலை முன்னெடுத்த ஒரு exclusive வடிவம். அதன் வடிவம் மற்றும் கூட்டம் நடத்தப்படும் விதம் எங்களுக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

முதலில் சிற்றிதழ்கள் மற்றும் இடைநிலை இலக்கிய இதழ்களில் வெளிவரும் அனைத்துக் கதைகளையும் பற்றிய உரையாடல் என்பது முதலாண்டு முடிவில், எழுத்தாளர் Jeeva Karikalan அவர்களின் ஆலோசனைப்படி இதழுக்கு ஒரு கதை + இணைய இதழ்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பது என்பதாக மாற்றம் கண்டது.

அதேபோல் கடந்த மாதம் நடந்த இரண்டாம் ஆண்டு விழாவில் எழுத்தாளர் Shylapathy Narasimhan அவர்கள் சொன்ன ஒரு ஆலோசனை அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளது. என்ன என்பது சஸ்பென்ஸ்! நிகழ்வில் சொல்லுவோம். :-)

முக்கியமாக வாசகசாலையின் பயணம் துவங்கிய பனுவல் புத்தக நிலையத்திலேயே, அதன் ஒரு முக்கியமான தொடர் நிகழ்வின் 25 ஆவது நிகழ்வும் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு..!

இம்முறை ஜூலை மாத அச்சு & இணைய இதழ்களில் இருந்து நாம் உரையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-

அச்சு இதழ்கள்

காலச்சுவடு
கலாமோகனின் "இடையில்"

உயிர் எழுத்து
எஸ்.ஜெயஸ்ரீயின் "தொடு திரை"

இணைய இதழ்கள்

சொல்வனம்
கே.ஜே.அசோக்குமாரின் "புரியாதவர்கள்":
https://solvanam.com/2018/07/புரியாதவர்கள்/

மலைகள்.காம்
வண்ணதாசனின் "சீரங்கம்":
http://malaigal.com/சீரங்கம்-சிறுகதை-வண்ணத/

பதாகை
ராம் முரளியின் "இரட்டை உயிர்": https://padhaakai.com/2018/07/10/twin-life/

இந்த நிகழ்வுக்கு நண்பர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவரையும் #வாசகசாலை அன்புடன் இருகரம் கூப்பி வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!
Photo

Post has attachment
வரும் ஞாயிற்றுக்கிழமை( 12/08/18) நடக்கயிருந்த வாசகசாலை வேலூர் மாதாந்திர தொடர் நிகழ்வு, (19/08/18)ஞாயிறுக்கிழமை அன்று மாற்றப்படுகிறது.
நன்றி.
Photo

Post has attachment
கலைஞர் மு.கருணாநிதி..!

தமிழும் அரசியலும் 'கருணாநிதி' எனும் நாணயத்தின் இருபக்கங்கள்.
இசையும் கலையும் செழித்து மணம் கமிழ்ந்து பெருமை பெற்ற தஞ்சை மண்ணிலிருந்து உதயமான தமிழின் ஒப்பற்ற இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதுகோலின் வீரிய ஆற்றலை முழுமையாக உணர்ந்து இலக்கிய மற்றும் கலைப் படைப்புகளை தமிழுக்கு வழங்கிய மிக முக்கிய மூத்த எழுத்தாளர் ஆவார். தனது 15வது வயதில் ’மாணவ நேசன்" எனும் கையெழுத்து ஏடு மூலமாகத் தன்னை எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுப்படுத்திக்கொண்டவர். வாழ்க்கையின் போக்கில் அவரின் எழுத்து நடை திராவிட இயக்க இலக்கிய அடையாளத்திற்கு பெரும் வலு சேர்த்தது. இதழியல், சிறுகதை, புதினம், கவிதை, தன் வரலாறு, நாடகம், திரைப்படம், சொற்பொழிவு எனப் பலவகையாக இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் ஈடுபாடு காட்டி சாதித்தவர் .

தந்தை பெரியாரின் வழி பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புதல், மூடநம்பிக்கைகளை ஒழித்தல், சாதியை ஒழித்தல் , ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குதல் என திராவிட இயக்கம் சார்ந்து படைப்புகளை எழுதினாலும்.. இதன் மைய உணர்வாக தமிழுணர்வை வளர்த்தல், குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பிய பூங்கா போன்ற நூல்களை எழுதியதன் மூலம் இலக்கிய ஆர்வத்தை உருவாக்கல், தமிழ்ப் பண்பாட்டை மீட்டல், ஆரியப்பண்பாட்டை அகற்றல் முதலானவை இருந்தன.

கலைஞர் கருணாநிதியின் படைப்புலகில் சிறுகதைப் பரப்பு என்பது மட்டும் வாசகர்களின் பரவலான மதிப்பீட்டுக்கு வராதவையாகவே இருக்கிறது. "கிழவன் கனவு' கலைஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பாக 1945 இல் வெளிவந்தது. நாடும் நாகமும் (1953), தாய்மை (1956) கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் (1971) ஆகியவை முறையே அடுத்தடுத்து வந்தவை.சிறுகதைகளில்
கடவுள் மறுப்பைப் பேசும் 'கண்ணடக்கம்', கடித வடிவச் சிறுகதை'நரியூர் நந்தியப்பன்', புராண எதிர்ப்பைப் பேசும் 'நளாயினி', மத நல்லிணக்கம் வலியுறுத்தும் 'அணில் குஞ்சு' இந்தி எதிர்ப்புக்கு காலகட்டத்தை விவரிக்கும் 'சந்தனக் கிண்ணம்' ஆகியவை மிக முக்கியமான சிறுகதைகளாகும்.

புதினங்கள் வகையில் சமூகப் புதினங்களாக..புதையல் (1960), வான்கோழி (1978), வெள்ளிக்கிழமை (1961),
ஓ ஹென்றி எழுதிய 'கடைசி இலை' என்னும் கதையைத் தழுவி கலைஞர் எழுதிய 'ஒரு மரம் பூத்தது'. (1979), சுருள் மலை (1961), விழுப்புரம் சாதிக் கலவரத்தை மையமாக்கி எழுந்த புதினம் 'ஒரே ரத்தம்'. (1980) ஆகியவை தமிழர்களால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை.

சரித்திர புதினங்களாக ரோமாபுரிப் பாண்டியன் (1974), பொன்னர் சங்கர் (1986), தென்பாண்டிச் சிங்கம் (1989), பாயும் புலி பண்டார வன்னியன் (1991)
மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' புதினத்தைத் தழுவிக் கலைஞர் கவிதை நடையில் உருவாக்கிய 'தாய் காவியம்' ஆகிய படைப்புகளில் கலைஞரின் மொழி நடை என்பது இலக்கிய ஆய்வுக்கும் உதவுதாக அமைந்திருக்கிறது.

கலையுலகம் என்றளவில் நாடகத் துறையில் தனது வீரியமிக்க பங்களிப்பை எழுத்தாக வழங்கி இருக்கிறார்.இதில் பழனியப்பன்,
சிலப்பதிகாரம் ,மணிமகுடம் ,ஒரே ரத்தம் ,தூக்கு மேடை,உதயசூரியன் . போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

அதே போல,
வெற்றிகரமான சினிமா கதை வசனகர்த்தாவாகவும் வலம் வந்தவர் திரு.மு.கருணாநிதி. ராஜகுமாரி, பராசக்தி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மனோகரா, பூம்புகார், புதுமைபித்தன் எனப் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் மூலம் தனது கூர்மையான எழுத்துத் திறனால் தமிழ் திரைப்பட உலகில் இலக்கிய நடையைப் பெருமளவில் புகுத்திய அளவிலும்.. வசனங்களாலேயே இலக்கியத்தைப் படைத்த ஆளுமையாகவும் சினிமா உலகின் திருப்புமுனையாகத் திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி...

இவ்வாறு இலக்கியம் மற்றும் கலை உலகில் முன்னோடியாக விளங்கிய கலைஞரின் மற்றொரு இலக்கியச் சேவையாக வாசிப்பு சார்ந்த அமைப்பு என்றளவில் 'வாசகசாலை' மிக நெருக்கமாகவும் பெருமையாகவும் கருதுவது சென்னை கோட்டூர்புரத்தில் பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி அவர் அமைத்த ஆசியாவின் முதன்மையான பெரிய நூலகங்களில் ஒன்றான 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' ஆகும்.வாசிப்பதற்கு போதுமான நூல்களும்.. வசதியும்.. அமைதியும் இல்லாத எண்ணற்ற வாசகர்களுக்கு குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்த நூலகம் இது.பிரம்மாண்டமான ஏழு மாடிகளுடன் கூடிய நூலகம்.....முற்றிலும் குளிரூட்டப்பட்ட கட்டிடத்தில் அடிப்படை வசதிகளுடன் அனைத்து விதமான இலக்கிய நூல்களையும் வாசகர்கள் வாசித்துப் பயன் அடைந்து வருவதையும் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகளை வாராவாரம் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் நடத்திவருவதையும் மிகப்பெரும் பேறாகக் கருதுகிறோம்.

வாசிப்பு, எழுத்து, கலை , இலக்கியம் என தளர்ந்த வயதிலும் தளராது உழைத்த கலைஞர் மு.கருணாநிதி எனும் மாபெரும் இலக்கிய ஆளுமையை இன்று இழந்து இருக்கும் இத்தருணத்தில் 'வாசகசாலை' இவ்விழப்பை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமான மாபெரும் இழப்பாகக் கருதுகிறது.அவரை இழந்து வாடும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் மற்றும் இம்மேதையின் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளுக்கும் 'வாசகசாலை' தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் கலைஞர் அவர்களின் உயிர் மூச்சான 'தமிழ் வெல்லும்' என்ற வார்த்தைகளை தாத்தனின் விரல் பற்றி நடக்கும் பேரன் பேத்திகளாக இறுகப் பற்றிக் கொண்டு தொடர்ந்து நடப்போம் என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை தமிழுக்கும் தமிழர்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த தமிழ் மூப்பனுக்கு வாசகசாலை யின் வீர வணக்கங்கள்...

'தமிழ் வெல்லும்...!'
Photo

Post has attachment
வாசகசாலையின் பல்வேறு பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள ஏதாவதொரு வகையில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விருப்பமுள்ள நண்பர்கள், கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழு இணைப்பைப் பயன்படுத்தி இதற்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட 'வாசகசாலை' க்கான குழுவில் இணையலாம்.நன்றி. https://chat.whatsapp.com/7Pa0n6mWSUY6YGnkhnNMbX

Post has attachment
திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் 'யாவரும் பதிப்பகம்' (கடை எண் - 19) மற்றும் தமிழ்த் தேசம்' பதிப்பகம் (கடை எண் - 61,62) ஆகிய இடங்களில் #வாசகசாலை யின் அனைத்து நூல்களும் கிடைக்கும்.
Photo
Wait while more posts are being loaded