Post has attachment
அவள் அழகில் ரோஜா
எளிதில் கொள்ளை கொண்டாள்
எங்கள் மனதை ....

அவள் இதழ்கள்
சற்று முன் துளிர்த்த
ரோஜாவின் மொட்டுக்கள் ...

அவள் அணிந்த உடைகள்
ரோஜா மேல்
பனித்துளிகள் ....

அவள் பார்வை
கூத்தும் முட்கள் ......

அவள் என் தேவதை ரோஜா
நான் அவளை தரிசிக்கும் ராஜா ...
Photo

Post has attachment
தினமென் கனவில் வந்து
இளம் பெண் அழகை இரசிக்கும்
காதற் கண்ணா...!
என் அருகில் வாட மன்னா!

நேருக்கு நேர் வந்து
என் கண் முன்னே நின்று
என்னோடு இணைந்து
நீ உறவாடுவது எந்நாள்?

கார்கால மழை வெள்ளம் போல்
கண்டபடி அலைந்து திரியுதே - என் நெஞ்சம்!
கடல் உன்னிடம் வந்து
நான் சேர்ந்தால்தானே - இன்பம்!

வெல்லக்கட்டி என்னுடம்பை
எறும்பாய் நீ தேடி வந்து
மெல்ல மெல்ல மென்று
உண்டாலென்ன முழுவது இன்று!


என்னை - நீ
தின்பதற்கு வருவாய - எறும்பே?!
உன்னுடன் கலந்து - தினம்
இருக்கவே விரும்புகிறேன்...!

இராணி தேனீ சொல்லும் செயலை
தவறாமல் செய்து முடிப்பதுதானே
இந்த வேலைக்கார தேனீ..!

புத்தம் புது தம்பதிக்கு
எந்த நாளும் சிவராத்திரிதானே...
இல்லையா - இளம் மயிலே?
இன்பம்தானே - இளமையிலே...!

இப்ப எதற்கு வெட்கம்?
நெறுங்கி வாயே - என் பக்கம்!

வெட்கத்தை போக்குமா ஒரு முத்தம்...
எந்நாளும் தேவை என்பதற்காக
சேமித்து வைக்கிறாயோ - மிச்சம்?!
நித்தம் நித்தம் தொட்டு விட வேண்டாமா- உச்சம்?
இன்னும் எதற்கு வெளிச்சம்...!
Photo

Post has attachment
அவள் அழகை பற்றி
அறிந்து தானோ நிலவு கூட
வெட்கத்தில் பகலில்
வெளி வராது இரவில்
வருகிறது கள்ளத்தனமாய்
அவள் அழகை ரசிக்க !

அவளின் கருமேக கூந்தலை கண்ட
ஆதவனும் ஒரு கணம்
ஏமாந்து போய் ஓடி ஒளிகிறான்
ஏமாளி அவன் இருள்
வந்ததோ என் எண்ணி !

கருவிழி உளி கொண்டு
கரும்பறை என் மனம் அதை
காதல் சிலையாய் வடித்த
காதல் சிற்பி அவள்

ஏழு வண்ணம் கொண்டிராத
அழகு கரு வண்ணம் கொண்ட
வானவில்லின் வளைவு அவள்
புருவம்
வார்த்தை இல்லை இனி
தமிழில் அவள் தேகம் கொண்ட
வளைவு நெளிவுகள்
வனப்பை வர்ணிக்க எனக்கு !

மை வைத்து ஆணை மயக்கும்
மாந்திரிகம் நம்பவில்லை என்
மனம் மை கொண்டு என்னை
மயக்கும் அவள் கரு இமையை
காணும் முன் !

இரக்கம் கொண்டு பல
உலகழகி போட்டிகளை
உதறி தள்ளினாள் இல்லை என்றால்
பறிபோய் இருக்கும்
பல உலக அழகிகளின்
பட்டங்கள் இவளால் !
Photo

Post has attachment
என்
மனங்கொண்ட
அந்த
பாவையின்
பார்வையில்
கல்மனம்
கொண்டவனே
தலையாட்டி
பொம்மையாகி
விடும்போது
காதல்மனம்
கொண்ட
நான்
என்ன
செய்வேன்?
Photo

Post has attachment
இரசிப்பதற்குதான் அழகு................. மண்ணில் விளைந்த
பொன்னை அணிந்து
அழகு சேர்க்கும் - பெண்ணே!

உன்னை ஒருவன்
இரசிக்காதிருந்தால்...
அவனுக்கில்லை - கண்ணே!

இளம் கவிஞன் - எனக்காய் ...
விளைந்து நிற்கும் செந்தமிழை...
விலை மகள் என்பதா?

ஐயகோ!

இதயம் மட்டும் இருந்தால் உனக்கு
போதுமா மனிதா?

அதில் கொஞ்சம்
இரக்கம் இல்லையென்றால்...
மனிதனாக முடியாது - உன்னால்...!

உன் கண்ணுக்கு தெரியும்
பெண்கள் எல்லாம்
விலைமகள் என்றால்...

உன் அக்காவும், தங்கையும்...
மற்றவன் கண்ணுக்கு
எப்படி தெரிவாள்?

ஈன்ற தாயை உனக்கு
மதிக்க தெரியாத போது...

நீதான் இன்னும்
வாழலாமா இங்கு?

பெண்ணை
இரசிப்பதில் ஒன்றும் தவறில்லை நண்பா...!

இரசித்த பெண்ணையெல்லாம்...
ருசிக்க நினைப்பது தவறுதான்...!

விருப்பமின்றி - ஒரு பெண்ணை
கனவில் நினைப்பது கூட பாவம்தான்!
Photo

Post has attachment
கயவன் பெண் உருவமுள்ள மரப்பாவையைக் கண்டு இரசித்து
கவிதை வடித்தான் கவிஞன்...

பாழாய்ப் போன பட்டமரத்தை பாவையாக்கியவன்
தட்சுக் கலைஞன்...

இளம் பாவையின் தத்துரூபம் கண்டு
உயிருள்ள பெண்னென நினைத்து வியந்து
பட்டாடை நெய்து கொண்டு வந்து
அணிவித்து அழகுப்பார்த்தான்... தந்தை

அச்சம் மடம் நாணம் கொண்டப் பெண்ணாய்...
எனை மாற்றியமைத்தவன் இளைஞன்...

என் முழு அழகையும் அடைய நினைத்தான்
ஓர் காமுகன்...
ஆதலால்... என்னைத் தூக்கிச் சென்று...
கதறக் கதற கற்பழித்தான்...

அவனை யாரென்று கேட்டால்
மனிதன் என்கிறான்...!
Photo

Post has attachment
யான் நோக்கும்
இரு நோக்கு
அறியாது - நீ இருந்தால்...

காதல் பிணி அறியாத
குழந்தைதான் - நீ!

நீ மட்டும் காண
மலர்ந்த இந்த மலரை....

தினம் பார்த்து இரசிக்காமல்
இருப்பதேன் - உன் கண் ?

மன(ண)ம் இருந்தும்
மயங்காமல் இருப்பது - ஏன்?

மாற்றன் தோட்டத்து மல்லி அல்ல -நான்..!

குச்சுக் கட்டி
தள்ளி வைத்து
பாதுகாப்பதேன்?

நான் இன்று
பெரிய மனிசியாய்
ஆனதினால்தானே...

(ஆசை) இல்லையா...
என்னிளம் தாய் மாமனே?
என் மீது உனக்கு!
Photo

Post has attachment
கண்ணே கண்மணியே
சின்ன சின்ன விழியால்
சுற்றும் முற்றும் காணும்
அழகை என்ன வென்பேன்!

உன்னை கழிவு பொருளாய்
தாய் கைவிட்ட தேனோ?
மழலை செல்வம் ஈன்றெடுக்கும்
பாக்கியம் இல்லாதவர்
எத்தனை பேரோ?

அவர்களுக்கு போய் சேர்ந்தால்
இப்பிறப்பின் பயனை
பெறுவாயோ...
Photo

Post has attachment
நிலவு ஒரு பெண்ணாகி
நீந்துகின்ற அழகோ

வான்முகில்கள் கோலமிட்டு
வரைந்த இமையோ

விண்மீன்கள் பூக்களாய்
தெறிக்கும் குழலோ

வளர்பிறை போன்ற
வண்ண விழியோ

வானவில் காற்றுடன்
அசைந்தாடும் விரலோ

முல்லைக்கொடி இடையுடன்
அழகு நடையோ

மொத்தத்தில்
பாண்டியனின் மீனாக விழி கொண்டு
சோழன் புலியாக மானத்தை பேணியும்
சேரனின் வில்லாக பார்வையால் துளைப்பவள்
Photo

Post has attachment
அவளின்பார்வை:
பார்த்தலே பார்வை போகும்
பருவங்கள் குறையும்
பல ஜென்மம் வாழ்ந்த வாழ்க்கை
போல் இருக்கும் அவளின் பார்வை
சத்தம் இன்றி யுத்தம் செய்வாள்
காதல் மொத்தம்
கவி பேசும் கண்கள்
புன்னகைக்கும் புருவங்கள்
இன்னிசைக்கும் இமைகள்
இறுதியில் தொலைத்தேன் என் காதலை
Photo
Wait while more posts are being loaded