12/12/2012 அமைந்து இருப்பதால் அடுத்த வருடம் ரஜினி ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருக்கும் என்றும் அதற்கு அவர் கண்ணாடியை தூக்கி போட்டு பிடிப்பதற்கு பழகியது போல மந்திரிகளை தூக்கி எறிந்து பழகவேண்டும் என்றும் பால சோதிடர் தெரிவித்தார்


இதற்கிடையே கண்ணை மூடி கொண்டு கண்ணில் மண்ணை அள்ளி போட்டு கண்ண மூடிட்டு செய்கிற வேலையை செந்திலிடம் இருந்து கற்று கொள்ளவும்

ஆல் இன் ஆல் அழகுராஜாவிடம் இருந்து சைக்கிள் கடை பற்றி தெரிந்து கொள்ளவும் செல்லும் ரஜினியிடம் நமது நிருபர் பேட்டி கேட்ட போது

“கண்ணா நம்ம கையில ஏதும் இல்லை அந்த ஆண்டவன் சொல்றான் அருணாசலம் முடிக்கிறான் “என நிருபருக்கு
வீபூதி பூசி விட்டபடியால்
கிருத்துவரான அந்த நிருபர் வேலையை ராஜினாமா செய்துள்ளார்

ஆட்சி அதிகாரம் இல்லாமலேயே மக்களை மிரளவைக்க தன்னால் முடியும் என ரஜினி சவால் விட்டு தற்போது வீட்டில் தனியாக வைத்திருக்கும் பாரில் உக்கார்ந்து குண்டலினி யோகா செய்ய பயிற்சி எடுத்து வருகிறார் ஆனால் குவார்டர் உள்ளே போனதும் குண்டலினி மேலே வருவது இயற்கை என்பதால் குண்டலினியை தரைக்கு கிழே அனுப்ப முயற்சி செய்வதாக தகவல்கள் கூறுகின்றன

மேலும் ரஜினி பிறந்த நாளை பற்றி கமெண்ட் அடித்துள்ள கவுண்டமணி இவனுகதான் உலகத்தில அவசியமா பிறந்தாங்களா நாமெல்லாம் வேஸ்டா என கேட்டு வெறுப்பேத்தி உள்ளார்

இதை கேள்வி பட்டு கட்டவுட்டுக்கு பால் வூத்தி பழகப்பட்ட ரசிகர்கள் ரஜினியை பற்றி கமெண்ட் அடித்த கவுண்டரின் கட்டவுட்டுக்கு சாணி அடித்து கைதாகினர் என தெரிவிக்கிறார் நிருபர்

ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால் நாளை முதல் பால் விலை உயரும் என எதிர்பார்ப்பு நீடிக்கிறது

நாளை சந்திக்கலாம்
Wait while more posts are being loaded