Post has shared content
காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்

ஏன் மக்கள் வாக்குரிமையை விற்கிறார்கள்? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? வெறுமே மக்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு, வாருங்கள் ஆராயலாம்!

#ஆர்_கே_நகர் #இடைத்தேர்தல் #RKnagar #byelection

Post has attachment

Post has shared content

Post has shared content

அன்பை உண்…!!

1.
பூக்கள் மலர்ந்தன
ஆம்! ஓசை இல்லை
மனத்துக்குள் மலர்ந்த காதல்.
2.
அழகில் மூழ்கு
அன்பை உண்
உன்னை உணர்வாய் நீ.
3.
உறவுக்குப் பெயர் வைத்தோம்
உணவுக்குப் பெயர் வைத்தோம்
உண்மைக்கு.
4.
நீரின்றித்
தாமரை மலருமா?
அட! மலைமேல் கற்றாழை.
5.
ஒற்றைத் தலையில்
எத்தனை உச்சி வகிடுகள்!
அழகே! தென்னங்கீற்றுகள்.
6.
சுவையான உணவின்றிச்
செத்துவிட்டது நாக்கு
இன்னும் முடியவில்லை சீரியல்.
7.
குளிரில் குளிப்பதற்காக
ஆடையை அவிழ்க்கும் அழகிகள்
இலையுதிர் கால மரங்கள்.
*
நன்றி : அ.விஜயன் – ” எல்லாமே பூக்கள் தான் ” – என்ற ஹைக்கூ தொகுப்பிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.
*

Post has attachment

Post has attachment

Haiku – Tamil / English.
*
ஊருக்கு அழகு சேர்க்கிறது
ஊற்று நீர் பாய்ந்து
மலை சரிவின் கீழ் நீரோடை.
*
Adding to the beauty of the city,
Spring water flowing
Stream under the mountain slope.
N.G.Thuraivan.
*

செய்திகள் என்ன சொல்லுது?

1.
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர்கள். – சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்.
சு.சுவாமி நீங்க கூட அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர் என்று அரசியல் வட்டாரங்களே பேசிக்கிறாங்க..
2.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? – திருமாவளவன் பதில்.
தேர்தல் நேரத்திலே வைகோவும் , கேப்டனும் நடந்திகிட்டதைப் பார்த்தும் இன்னுமா அவங்ககோட சேரணுமுன்னு நினைக்கிறீங்க. தொல்.
3.
வெங்காயம் விலை 5 பைசா! விரக்தியடைந்த விவசாயி.
ஐந்து பைசா, பத்து பைசா, 25 பைசா எல்லாம் காலாவதியாகி விட்டதே. ஐம்பது பைசாவுக்கு கூடவா விவசாயிடம் வாங்கக் கூடாது.

தொகுப்பு ; ந.க.துறைவன்.

செய்திகள் என்ன சொல்லுது?

1.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 58 கிலோ ,.ப்ரிஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்க்ஷி மாலிக் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வெண்கலம் பதக்கம் வாங்கியதற்கே இந்த அமர்க்களம் என்றால் தங்கம். வென்று இருந்தால் எப்படி கொண்டாடியிருப்பார்கள். இந்தியாவிலே தங்கம் விலையேறி போனதால் மக்களுக்கே தங்கம் கிடைக்க மாட்டேங்கிறதாலே, ரியோ ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் இன்னும் கிடைக்கலே போல இருக்கு.
2.
தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தருவதற்கு மறுத்து, நதியின் குறக்கே அணைகள் கட்டி, காவிரியில் கர்நாடகம், முல்லைப் பெரியாரில் கேரளம், பாலாற்றில் ஆந்திரம் என்று செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தையே சுற்றி வளைத்து பாலைவனமாக்கி விடுவார்கள் போல இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது? அப்படியென்றால் இப்பிரச்சினைக்கு ஏன் தீர்வு காண முடியவில்லை. எல்லாமே அரசியல் உள்நோக்கம் தானே?
*
3. .
ஆந்திராவில் ‘ செடி வங்கி ‘ தொடங்க முடிவு.
பாராட்டுக்குரிய செய்தி. இந்த செடி வங்கி தமிழ்நாட்டில் தொடங்கினா அதுக்கு என்ன பேரு வைப்பாங்க.
தொகுப்பு ; ந.க.து்றைவன்.
*
Wait while more posts are being loaded