Post has shared content
முன்குறிப்பு: பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக அமர்த்தி வரலாறு படைத்துள்ளது #கேரளம். ஆனால், இதற்கு முன்னோடியாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டமே இயற்றிய #தமிழ்நாடு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி, பார்ப்பனரல்லாதோரின் கோயில் பூசை உரிமைகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் ‘தமிழ்க் காப்புக் கழக’த் தலைவரும் ஆட்சித் தமிழறிஞருமான திருவள்ளுவன் இலக்குவனார் ஐயா அவர்கள் நடத்திய ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் ஐயா அவர்களால் பாராட்டப் பெற்றதும் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் 30.01.2016 அன்று வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கப்பட்டதுமான சிறுவன் என் ஆய்வுக் கட்டுரையை இந்த நேரத்தில் உலகத் #தமிழ் நெஞ்சங்களின் மேலான பார்வைக்கு விருந்தாக்க விழைகிறேன்!

கடவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?...

#கடவுள் மீது அன்பு (பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் #கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான் உரிமை! மனச்சான்றுள்ள மனிதர் யாராவது இதை ஏற்க முடியுமா? ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான #மக்கள் இதை மனமுவந்து ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்து - வழிபட்டு வருகிறார்கள். ஆம்! பார்ப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை பார்ப்பனரல்லாதவர்களிலேயே பெரும்பான்மை மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. “கோயில் பூசாரி போன்ற புனிதமான வேலைகளில் #பார்ப்பனர்கள் இருப்பதே சரி” என்பதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து.

இது சரியா? #தமிழர்கள் கடவுளைப் பூசிக்கக்கூடாதா? அப்படிப் பூசிப்பது சமய நம்பிக்கைகளுக்கோ வேறு ஏதேனும் நெறிமுறைகளுக்கோ எதிரானதா? இது பற்றி #சமயம் - #சட்டம் - #வரலாறு - #குமுகம் (சமூகம்) - #இறையியல் என எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசுவதே இக்கட்டுரையின் மைய நோக்கம். கூடவே,

#தமிழர்கள்_இந்துக்களா ?...

#தமிழர் சமயத்துக்கும் #இந்து சமயத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?...

கோயில் பூசை முறைகளை உருவாக்கியவர்கள் தமிழர்களா பார்ப்பனர்களா?...

உலகில் எங்குமே இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தெய்வச் சிலைகளுக்குத் துணியாலான ஆடை ஏன்?...

தமிழர்களின் சாவுச் சடங்குகளுக்கும் கோயில் பூசைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

தமிழர் இல்லங்களில் உள்ள #நடுவீடு என்பது என்ன?...

தமிழர்களின் #நடுகல் வழிபாட்டு முறைக்கும் நடுவீட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

இது போன்ற பல்லாண்டுக் காலக் கேள்விகள் அனைத்துக்குமான திடுக்கிடும் விடைகளையும் காணலாம் வாருங்கள்!...

Post has shared content
ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! - 2017 (காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் ஒரு மறுவெளியீடு)

நண்பர்களே! நேற்று (14.08.2017) இரவு பாரதியார் என் கனவில் வந்தார். "மகனே! நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!’ என்று பாடியவன் நான். இதோ, விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நேரத்தில் அதே பாடலை இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றபடி மாற்றி எழுத விரும்புகிறேன்" என்றார்.

"ஆகா! சொல்லுங்கள் தெய்வமே! நான் எழுதி வெளியிடுகிறேன்" என்றேன்.

அப்படி பாரதியார் சொல்லச் சொல்ல நான் எழுதியதுதான் கீழே நீங்கள் படிக்கப் போகும் ‘சுதந்திரப் பள்ளு-2017’. ஆக, இதன் காப்புரிமை பொறுப்பு எல்லாம் முழுக்க முழுக்க பாரதியாருக்கே! படித்துப் பாருங்கள்!

#விடுதலை #விடுதலைத்_திருநாள் #IndependenceDay #IndependenceDay2017 #India_at71 #71stIndependenceDay

Post has shared content

Post has shared content

Post has shared content
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? - http://agasivapputhamizh.blogspot.com/2017/06/whether-beef-ban-is-against-for-muslims-or-brahmins.html

இறைச்சி அரசியலால் பார்ப்பனர்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தும் #பாஜக., அடிக்க நினைக்கும் மூன்று மாங்காய்களும்!

Post has shared content
தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்! - http://agasivapputhamizh.blogspot.com/2017/05/tamil-genocide-eighth-memorial-and-chance-for-justice.html

Post has shared content
#நீட் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளும் மாநிலச் சிந்தனையின் அடிப்படையிலானவையா? எனில், தேசியப் பார்வையில் மட்டும் நீட் சரியானதாகத் தென்படுகிறதா? இதோ ஓர் அலசல்! - http://agasivapputhamizh.blogspot.com/2017/05/neet-national-wide-view.html
#NEET #NEET_Atrocities

Post has shared content
நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவதெல்லாம் ஒரே ஓர் அறிக்கைதான்! #SaveFarmers

Post has attachment
PLESE SHARE IT- -AROUND THE WORLD-360 DEGREE  images.ARULAKAM WORDPRESS.COm 
Welcome to The WORLD Tour. Here you can see the main attractions of WORLD-click here--http://arulakam.wordpress.com/jaffna-360/

hi
Wait while more posts are being loaded