Post has attachment
மறந்து போன பல கதைகளை 
மீண்டும் நினைவூட்ட முயற்சிக்கையில் 
மனதில் சிதறிப் போன சிலவற்றை மாட்டுமே 
காட்சிப் படுத்த முடிகிறது, தன் பிள்ளைகளுக்காக 
பல பெற்றோரால், இன்றைய நவீன வாழ்க்கையில்..!
Photo

Post has attachment
பொய்யிணை சில நேரம் 
சரளமாய் அள்ளிவிட அதனை 
அவளாகவே அறிந்து கொண்டு 
கோபத்தைக் காண்பிக்கையில்,
சிறிதாய் ஒரு புன்னகை செய்து 
அவளது கோபத்தை தணிக்கையில்
என்னிடம் அவள் கொண்ட உரிமையினை 
அளந்து பார்க்கவும் ஆசை கொண்டது மனம்...!
Photo

Post has attachment
அம்மாவின் புடவையும் 
அறைக் கதவுகளும் 
பலரது வெட்கங்களை இன்றும் 
மறைத்துக் கொண்டிருக்கிறது 
மகிழ்ச்சியின் வெளிப்பாடக நம் மனதில்.
Photo

Post has attachment
எதனால் புன்னகைக்கிறான் அவன்?

தனிமைப்படும் பொழுதுகள் எல்லாம் 
நினைத்துப் பார்க்கத் தூண்டுகிறது, 
அவளுடனான அழகிய நினைவுகளை.

மறைத்துக் கொண்டு சிரிக்கிறான் 
மற்றவர் பார்வையில் உணராதபடி....!
Photo

Post has attachment
செல்லாக் காசுகள் எப்பொழுது 
விலை ஏறப்பெறுகிறது என்றேன். 
அது கிடைப்பதர்க்கு அறிய 
பொருளாகும் பொழுது என்றார், முதியவர்...!
Photo

Post has attachment
பூமித் தாயவள் முத்தமிடுகிறாள் 
ஒரு முறையாவது பெற்றுக்கொள் 
சிலிர்க்கும் உடலில் மழைத்துளிகளாக..!
Photo

Post has attachment
என்றோ இறைவன் படைத்த 
அழகிய நகரமாம் பூமி, இன்று மட்டும் 
அவனுக்கு நரகமாம் காரணம் என்னவென்றால் 
காதலில் தோல்வி என்கிறான் பிதற்றியபடி........!
Photo

Post has attachment
செல்வங்களை 
குவித்துக் கொண்டவன் 
மனிதத்தை பாகுபடுத்தினான் 
வறுமைக் கோட்டை வரைந்து...!
Photo

Post has attachment
பாவையின் பார்வையின் கணைகள் 
பல முறை கொன்றதடி என் கண்ணியத்தை.
இருந்தாலும் காத்திட்டேன்...!.

உரிமையாகும் முன் 
எப்பொருளின் மீதும் 
சொந்தம் கொண்டாடுவது 
தவறென்று மொழிந்த, தாய் மொழி கேட்டு....!
Photo

Post has attachment
நகர்ப் புறங்களில் 
தாய்மையின் பாசத்தை விலை பேசினர் 
வாடகைத் தாய் எனும் பெயரில்.
Photo
Wait while more posts are being loaded