Post has attachment
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ஆகஸ்ட் 24

நித்தியக்கடன் : அதிகாலை எழுந்திருந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்யவும், அந்த நாள் இனிய நாள்

இன்றைய நல் சிந்தனை

எதுவுமே என்னுடையது இல்லையென்றால்...

எது தான் என்னுடையது........???

எது பிறப்பிலும், இறப்பிலும் உன்னுடன் வருகிறதோ அதுவே உன்னுடையது

எதையெல்லாம் என்னுடையது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமோ

அதுவெல்லாம் உன்னுடையது அல்ல

ஆனால் எது உண்மையில் எனதோ

அதைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாத அவல நிலையே மாயை

எது என்னுடையது என்று கண்டுபிடிக்கும்

அணுகுமுறை தான் ஆன்மீகம்

இன்றைய சாதகம் : இன்று வியாழன் காலை கண்ணாடி பயிற்சி, துரிய தவம். மாலை ஆக்கினை தவம்.

இன்றைய பண்பு பயிற்சி ஆகஸ்ட் 24

வாழ்க்கை துணைவரை போற்றும் உயர் பண்பை வளர்த்துக் கொள்வோம்.

வாழ்க்கையிலே மேம்பாடாக, நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும், மனைவியைக் கணவனுமே. கணவன் மனைவி நட்பில் வலிவு பெறாதவர்கள் வாழ்வு குறையுடையதாகவே கருத வேண்டும். எனவே ஒவ்வொருவரும் கணவன் மனைவி உறவை உயிருக்கு மேலாக மதித்து போற்ற வேண்டும்.

- நாளை தொடரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்க வளமுடன்.
Photo

Post has attachment
Daily A Noble Thought - August 24
Succeeded over Time
We have born in mankind in the world. The society of people, make, nurture and made us to live. The services by many innumerable saints, who may be at present or might have disappeared now, are making us to live prosperously by their services as wealth, as spiritual light, as political system. Each one of us who are benefited from these, should do welfare to society by possible extent.
For the individual man who has short life time of birth-growth-live-end, only the society give welfare, long life, broad limit. Each man as he enjoys the goodness in it, should benefit by preserving the benefits of such society.
Objects, Grace & Political system are the bulwarks protecting human. The services by man to economy, spirituality, political system for its growth, his effort and action, are the fountain of pleasure benefiting the life to millions of people, for long time. By such knowledge, by such actions, an individual is hailed unforgettable in the minds of people in the world.
- Vethathiri Maharishi
www.facebook.com/sky4peace

Photo

Post has attachment
வாழ்க்கை மலர்கள்: 24

காலத்தை வென்றவன்

உலகிலே மனித குலத்தில் நாம் பிறந்து விட்டோம். நம்மை மனித சமுதாயம் உருவாக்கி வளர்த்து வாழ வைத்து வருகின்றது. மறைந்து போன, இன்றிருக்கும் கோடிக்கணக்கான சிந்தனையாளர்கள், உழைப்பாளிகள், அருட்செல்வர்கள் செய்த தொண்டுகள் நமது வாழ்வில் பொருள் வளமாக, அருள் ஒளியாக, ஆட்சி அமைப்பாக அமைந்து, நம்மைச் சிறப்போடு வாழவைக்கின்றன. இவற்றால் பயன் பெற்று வாழும் நாம் ஒவ்வொருவரும் மனித சமுதாயத்திற்கு இயன்ற வரை நலம் புரிய வேண்டும்.

பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிந்து கொண்டேயிருக்கும் குறுகிய ஆயுட்காலத்தையுடைய தனி மனிதனுக்கு நல்வாழ்வை அளித்துக் காப்பது நீண்ட ஆயுளையும் விரிந்த எல்லையுமுடைய மனித சமுதாயமே. அதில் அமைந்த நன்மைகளை எல்லாம் துய்த்து இன்புறும் ஒவ்வொரு தனி மனிதனும், அந்தச் சமுதாயத்தின் நலம் காத்துத் தான் நலம் பெற வேண்டும்.

பொருளும், அருளும், ஆட்சியும் மனிதனைக் காக்கும் அரண்கள். பொருள்துறைக்கும், அருள்துறைக்கும், ஆட்சித் துறைக்கும் ஒரு மனிதன் ஆற்றும் தொண்டு அவை சிறப்புற்று ஓங்க, தனி மனிதன் எடுக்கும் முயற்சியும் செயலும் கோடானு கோடி மக்களுக்கு நீண்ட காலத்திற்கு, வாழ்வில் வளம் தரும் ஊற்றாகும். அத்தகைய அறிவால், செயலால் ஒரு தனி மனிதன் உலக மக்கள் உள்ளத்தில் காலத்தால் மறக்க முடியாத நீங்கா நினைவைப் பெறுகிறான்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
Photo

Post has attachment
Photo

Post has attachment
20.8
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி, “முப்பூ” என்றால் என்ன?
✅ பதில்: உடலை கல்பமாக்க (உறுதியாக்க) சித்த வைத்திய முறையில் மூன்று விதமான உப்புக்களை சித்தர்கள் கண்டார்கள். அதற்கு முப்பூ என்று பெயர். அந்த முப்பூவைச் சரியாக எடுத்து முடித்துக் கொண்டால் மரணமே வராது என்று சொல்லக் கூடியது. அது சரியான முறையில் தயாரிக்கப்படும் பொழுது தாமிரத்தில் உள்ள களிம்பை எடுத்து விட்டு பொன்னாகக் கூட மாற்றக் கூடிய வல்லமை பெற்றது. அதை (Alchemy) இரசவாதம் என்றார்கள். இந்த மூன்றும் “பொன்னிறமான பூமியில் ஒன்று, கண்ணிறமான பூமியில் ஒன்று, கடலில் ஒன்று, மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்றும்” உள்ளது. ஒரு சில இடங்களில், பூமியில் பூப்பது பூநாதம் எனும் பூநீர். ஒரு குறிப்பிட்ட காலங்களில் மல்லிகைப் பூ போல பூத்து வரும். அதை தண்ணீரில் கரைத்துக் காய்ச்சினால் உப்பாகி விடும். கடலின் பூப்பது கடல் நுரை, மின்னலில் பூப்பது காளான். இதை வைத்து சில முறைகளில் சித்தர்கள் செய்ததைச் சாப்பிட்டால் உடலிலிருந்து உயிர் பிரியாது. அதுதான் முப்பூ. இதை (Philosopher’s Stone) என்பார்கள். அதை மேல் நாட்டில் “வாலண்டின்” என்ற ஒரு அறிஞர் செய்துள்ளார். நம் நாட்டில் சித்தர்கள் எல்லோரும் இதை அறிந்திருந்தனர்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
Photo

Post has attachment
21.8
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி, ராமா என்ற பெயரை வாயால் சொன்னால் மன அமைதி கிடைக்கும், நமக்கும் நமது குடும்பத்திற்கும் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்களே? உண்மையா?
✅ பதில்: இதே போன்ற கேள்வியை அமெரிக்காவில் மன இயல் தத்துவ பேராசிரியர்களிடம் கேட்டார்கள். இந்தியாவில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லியே பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிக ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்களே, எவ்வாறு என்று.
அவர்கள் பரிசோதனைக்காக நான்கு அன்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் Heart Beat, Pulse, B.P. அனைத்தையும் குறித்துக் கொண்டார்கள். மேலும், “கொக்கோ கோலா” என்ற வார்த்தையைக் கொடுத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து உச்சரிக்க வைத்தார்கள். அதன் பிறகு அவர்களை பரிசோதிக்கும் பொழுது அவர்களுடைய Heart Beat, Pulse, B.P. அனைத்தும் குறைந்து இருந்தது. அவ்வாறு வார்த்தையை உச்சரித்து வரும்பொழுது பல நல்ல விளைவுகள் தோன்றியதாகக் கூறினார்கள்.
உச்சரிக்கும் வார்த்தையில் மக்களுக்கு இறை நம்பிக்கையும் சேர்ந்துள்ள போது பயன் அதிகமாகவே இருக்கும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
Photo

Post has attachment
22.8
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி, மனித அறிவில் தோன்றும் குறைபாடுகள் யாது?
✅ பதில்: மனிதன் நான்கு விதக் குறைபாடுகளால் துன்பமடைகிறான்; அமைதியிழந்து அல்லலுறுகிறான். அவையாவன;
1. கடவுளைத் தேடிக்கொண்டேயிருந்தும் காணமுடியாத குறை
2. வறுமை என்னும் பற்றாக்குறை.
3. விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலட்சியம் செய்தோ, அவமதித்தோ, செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4. மனிதனின் சிறப்பு அறியாமல் பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.
இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடொன்று இணைந்து விட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல்..... வழிகாணாமல்...... மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும், பிறரை வருத்தியும் வாழ்கிறான்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
வாழ்க்கை மலர்கள்: ஆகஸ்ட் 23

பாவமும், புண்ணியமும்

நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் “புண்ணியம்” என்றும், தீமையான விளைவாக இருந்தால் “பாவம்” என்றும் கூறுகிறோம்.

பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பாவம் எது? புண்ணியம் எது? என்று சிந்திக்க வேண்டும்.

புண்ணியம் எது?

எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.

பாவம் எது?

ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும் பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
Photo
Wait while more posts are being loaded