Post has attachment
இன்சுலின் செடி

08/03/2016 · by Info · in மூலிகைகள்
மூலிகையின் பெயர் – இன்சுலின் செடி.
தாவரப்பெயர் – costus pictus
தாவர குடும்பம்– Costaceae
பயன்தரும் பாகம் – இலை

வளரியல்பு – இந்தச் செடி வளமான ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியது. இந்தத் தாவரம் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இதுபற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரியிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் nursery உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக்காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப்பெருக்கம் செய்ய 3 கணுக்களை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும்.

இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.

மருத்துவப் பயன்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் costus pictus என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்துவரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் “இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், செயற்கை முறையிலும்தான் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ் பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது” என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study.

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது. ANTI Diabetic herb.

பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயனடைவார்கள்.
Photo

கருணைக்கிழங்கு‬ – மூலநோயைக் குணப்படுத்தும்

உணவு, மூலிகைகள்
“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

கருணைக் கிழங்கில் காரும் கருணை / பிடிகருணை, காராக் கருணை/ சாதாரண கருணை / சேனைக்கிழங்கு என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. ஜீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க, இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்வார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது. இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை விட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை.

இதன் சுவை காரணமாக, சூடான வீர்யமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் இரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். கிழங்குகளில் இது சுலபமாக ஜீரணமாவதும் கபத்தையோ வயிற்றில் வாயுக் கட்டையோ செய்யாமலிருப்பதுடன் வாயு கபக் கட்டுகளைப் போக்குவதுமாகும்.

ருசி, பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது, மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையையும், தடையையும் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். “வன சூரணாதி’ என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

கருணைக்கிழங்கு லேகியம் செய்முறை
கருணைக்கிழங்கு – 1/2 கிலோ (வேகவைத்து தோலுரித்து மசித்து வைக்கவும்)
நல்லெண்ணைய் – 100 ml
சுக்குப்பொடி – 1/4 தேக்கரண்டி
வெல்லம் – 1/4 கிலோ
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு மசித்த கிழங்கை போட்டு 3 நிமிடம் நன்கு வதக்கி பின் சுக்குப்பொடி, வெல்லம் சேர்த்து நன்கு கிளறி கைவிடாமல் கிளறி எண்ணைய் மேலே மிதக்கும் வரை சமைத்து இறக்கி ஆறவைத்து காற்று புகாமல் ஜாடியில் போட்டு வைக்கவும். கருணைக்கிழங்கு லேகியம் ரெடி.

கருணைக்கிழங்கு பொரியல்
கருணைக்கிழங்கை நன்கு தோல் சீவி மண் வாசனைபோக கழுவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்த

மூலிகை சைவ ஆம்லெட் பவுடர்மூலிகை வளர்ப்போர் சங்கம்
மூலிகை சைவ ஆம்லெட் பவுடர் முட்டையில்லாமல் தானியவகைகளாலும், மூலிகை பவுடர்கள் கலந்தும் தயாரிக்கப்பட்டது. உடல் நலனுக்குரியது, மலச்சிக்கல் நீங்கும், வாயுக் கோளாறுகளை நீக்கும். இரத்தம் சுத்தமடையும். ஜீரண சக்தியை தூண்டும். சளி தொந்தரவுகளைப் போக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சுவை உடையது.

கலந்துள்ள பொருட்கள்
முளைகட்டிய தானியங்கள், கம்பு, சோளம், ராகி, தினை, எள், கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப் பயிர், பீன்ஸ், மக்காச்சோளம், சோம்பு, முருங்கை, தூதுவளை, இந்துப்பு.

மூலிகைகள்
துளசி, வில்வம், சுக்கு, ஆவரை, வல்லாரை, கருஞ்சீரகம், சீரகம், வெண்தாமரை, தான்றிக்காய்.

தயாரிப்பு முறை
மூன்று தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும், ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி உடன் சேர்க்க வேண்டும். மிளகுத்தூள் அல்லது மிளகாய் துண்டுகள் தேவையான அளவு சேர்க்கவும். சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பசைபோல பக்குவத்தில் கரண்டி மூலம் நன்கு அடித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை சூடுபடுத்தி 1 தேக்கரண்டி எண்ணெயை விட்டு கலக்கிய ஆம்லெட்டை பக்குவமாக இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். இதோ அமுதத்தை மிஞ்சும் சுவையான ஆம்லெட் ரெடி! உண்டு மகிழுங்கள்!!

இதேபோன்று இந்த பேஸ்டை சைவ முட்டைப் பொரியல், தோசை, ரோஸ்ட், சப்பாத்தி, பரோட்டா, சைவ முட்டைக் குருமா, சாம்பார், பலவகை சட்னிகளுடனும் சேர்த்து தயாரித்து உண்டு மகிழுங்கள்.

LAB REPORT
1. Moisture – 4 %
2. Carbohydrate – 72 %
3. Protein – 10 %
4. Fat – 3.93 %
5. Calclum (mg/100g)- 206.45
6. Iron (mg/100g) -8.88

Post has attachment
நம்பிக்கையிழந்தவர்களுக்கு நம்பிக்கை தரும் மலர் மருந்துகள்!

22/03/2016 · by Info · in மூலிகைகள்

larch flower
வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை அச்சாணி கழன்று விட்டால் விபத்தும், விபரீதமும், தோல்வியும் நடந்தே தீரும். நம்மிடையே உள்ள நம்பிக்கையை தொலைத்து விட்டால் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவே பொருள்.

நம்பிக்கை நம்மை விட்டு நழுவும் போது புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, முயற்சி,வெற்றி எல்லாமே விலகி ஓடுகிறது. இருள் சூழ்கிறது, வாழ்க்கை சுமையாகிறது. நம்பிக்கைவாதிகளுக்கு ஒரே பாதைதான் உண்டு; அது வெற்றிப் பாதை. நம்பிக்கை இல்லாதோருக்கு ஆயிரம் பாதைகள் இருக்கும். கற்களும் முட்களும் காணப்படும் பாதைகள்; இலக்கு இல்லாத பாதைகள் அந்த பாதைகளில் பயணிப்போர் எங்கோ ஓர் பள்ளத்தில் விழ நேரிடலாம்; தற்கொலைக்கு தள்ளப்படலாம்; பிறரிடமிருந்து தனிமைப்பட்டு தவிக்க நேரிடலாம்.

இந் நிலையில் மலர் மருந்துகள் மனிதனின் மனத்தில் நம்பிக்கை உணர்வு ஊட்டுகின்றன. இம்மருந்துகள் உள்ளத்திற்கு வலிமை சேர்க்கின்றன, பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சுகின்றன, விழுந்து கிடக்கும் மனிதனை எழுந்து நிற்கச் செய்கின்றன.

மலர் மருத்துவம் மருத்துவ உலகின் மகத்தான கண்டுபிடிப்பு. டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த ஹோமியோபதி மருத்துவமும், டாக்டர் எட்வர்ட் பேட்ச் கண்டுபிடித்த மலர் மருத்துவமும் மட்டுமே மனித மனங்களை முழுமையாக ஆய்வு செய்து மருந்தளித்து குணப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட நபரின் வார்த்தைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்து உரிய மலர் மருந்துகள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்போது அவரது வாழ்வில் மாற்றமும் மலர்ச்சியும் ஏற்படுகிறது.

எது செய்தாலும் தோல்வி உறுதி என்று எதிர்மறையான முடிவோடு, கால நேரத்தை வீணாக்கி, முன்னேற்றத்தை கெடுத்துக் கொள்பவர்கள் பலருண்டு. இத்தகையவர்கள் நம்பிக்கையின்மையை போக்கி நம்பிக்கையூட்டவும், தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவும் லார்ச் larch எனும் மலர் மருந்து பயன்படுகிறது.


oak flower
சிலர் நம்பிக்கையுடன் செயல்களில் இறங்குவார்கள். முயற்சிப்பார்கள். கடுமையாக உழைப்பார்கள். எதிர்பார்த்த பலன் கிட்டவில்லையெனில் மனம் தளர்ந்து போவார்கள். அவ நம்பிக்கைக்கு ஆளாவார்கள். இருப்பினும் மீண்டும் முயற்சிப்பார்கள் ஆனாலும் வெற்றி விலகி விலகிச் செல்லும். கடினமாக உழைத்தும் வெற்றி கிட்டாததால் மனமும் உடலும் களைப்படைவார்கள். இவர்களின் உடல், உள்ளப் பிரச்சனைகளை தீர்க்கவும் வெற்றி கிட்டவும் ஓக் oak எனும் மலர் மருந்து பெரிதும் பயன்படும்.

சிலர் தம் திறமை மீதும், தமது சொந்த முடிவுகள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. எப்போதும் மற்றவர்களின் ஆலோசனைகளை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அதில் நஷ்டமேற்பட்ட பின்னரும் கூட எது சரியானது என்று சுயமான முடிவுக்கு வர மாட்டார்கள், ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளும்போது, வேறு ஒரு நண்பர் மற்றொரு மருத்துவரை குறிப்பிட்டால் உடனே அவரிடம் சிகிச்சைக்குச் செல்வார். இதனால் முழு குணம் ஏற்படாமல் சிரமப்படுவார், நம்பிக்கையோடு சுய முடிவு மேற்கொண்டு செயல் பட மாட்டார். பிறரது சொற்படி, ஆலோசனைப்படி இயங்கும் இத்தகையவர்களின் பலவீனமான, தன்னம்பிக்கையற்ற மன நிலையை மாற்றியமைக்க செராட்டோ என்ற மலர் மருந்து மிகவும் பயன்படும்.

சிலர் தங்களின் நாட்பட்ட நோய்களுக்காகப் பல்வேறு சிகிச்சைகள் செய்தும் குணமாகாமல் நம்பிக்கை இழந்திருப்பார்கள் இனி குணமாக வாய்ப்பே இல்லை,எந்த மருத்துவரையும் எந்த மருந்தையும் நம்பிப் பயனே இல்லை என்று அவ நம்பிக்கையில் முடங்கிப் போவார்கள். ஆழமாய் ஊடுருவி நிற்கும் இவர்களது அவ நம்பிக்கை அவர்களின் உடல் நோய்களை வளர்க்கும், புதிய நோய்களை தோற்றுவிக்கும். இத்தகைய அவ நம்பிக்கையாளர்களுக்கு கோர்ஸ் என்ற மலர் மருந்து பேருதவி புரியும்.

சிலர் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை மட்டுமே பார்ப்பார்கள். தோல்விகளால் துவண்டு மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாவார்கள். துன்பக் கடலில் நீந்தும் இவர்களுக்கு தோணியாக உதவும் மலர் மருந்து ஜென்ஸியன். சிலர் எப்போதும் கவலையுடன் காணப்படுவார்கள். அவர்களின் கவலைக்கு காரணம் இருக்காது. நிகழ் காலத்தில் சோகம் சூழ்ந்து, எதிர்காலமே இருளாகத் தெரிந்து இவர்களை நம்பிக்கையற்றவர்களாய் ஆக்கிவிடும். பிறருடன் பழக இயலாது, இவர்களது மனோபாரத்தை இறக்கி வைக்க மஸ்டர்டு என்ற மலர் மருந்து துணைபுரியும்.

மகாகவி பாரதிக்கு அமைந்தது வறுமையான வாழ்க்கை. ஆட்சியாளர்கள் கொடுத்த தொந்தரவுகளும் கொஞ்சமில்லை. கடன் சுமையும், பட்டிணியும், அரசின் கெடுபிடிகளும் பாரதியின் மன உறுதியை நம்பிக்கையை குலைக்க முடியவில்லை எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் இன்று புதிதாய் பிறந்தோம் என்றும் பாடினான். அவனது ஆழமுள்ள அர்த்தமுள்ள தொலைநோக்கு பார்வை கொண்ட நம்பிக்கையால் ஆனந்த சுதந்திரம் அடைந
Photo

சமையலில் பயன்படும் மசாலா,வாசனைப் பொருட்கள்

28/06/2015 · by Info · in மூலிகைகள்
முதலில் தமிழ்ப் பெயரும் (இலங்கை / இந்திய தமிழ் பேச்சு வழக்குகளில்), அடுத்ததாக ஆங்கிலப் பெயரும், அடைப்புக் குறிகளினுள் இந்திப் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

விதைகளும், பழங்களும் – Seeds and Fruits
கடுகு – Mustard seeds (Rai / Sarson)
சின்னச்சீரகம் / சீரகம் – Cumin seed (Jeera)
பெருஞ்சீரகம் / சோம்பு – Fennel seed (Saunf/Sanchal)
வெந்தயம் – Fenugreek seeds (Methi)
கொத்தமல்லி / தனியா – Coriander seeds (Dhaniya)
மிளகு – Black Pepper Corns / Pepper (Mirchi)
ஏலம் / ஏலக்காய் – Cardamom / Green Cardamom (Elaichi)
கறுப்பு ஏலக்காய் – Black Cardamom (Kali Elaichi)
ஓமம் – Carom seeds / Bishop’s Weed seeds (Ajwain)
கருஞ்சீரகம் – Black Cumin seed
தமிழில் கருஞ்சீரகம் எனும் பொதுப் பெயரால் இரண்டு முற்றிலும் வேறுபட்ட தாவரங்களின் விதைகள் அழைக்கப்படுகின்றன. அவையாவன: Nigella sativa மற்றும் Bunium persicum (Syah Jeera).
சாதிக்காய் – Nutmeg (Jaiphal)
சாதிப்பூ – Mace (Javitri)
உண்மையில் இதுவொரு பூவல்ல, மாறாக பழத்தினுள் சாதிக்காய் விதையைச் சூழ்ந்திருக்கும் உறைபோன்ற மெல்லிய பகுதியே சாதிப்பூ என அழைக்கப்படுகின்றது.
எள் – Sesame seeds (Til)
கசகசா – Poppy seeds (Khus Khus)
அன்னாசி மொக்கு / மகம்பூ – Star anise (Chakra phool)
செத்தல் மிளகாய் – Dried Chilli / Red chili pepper (Lal Mirchi)
பச்சை மிளகாய் – Green chili pepper (Hari Mirch)
சாம்பார் மிளகாய் – Sambar Chilli
புளி / பழப்புளி – Tamarind (Imli)
எலுமிச்சை / தேசிக்காய் – Lime (Nimbu)
கொறுக்காய்ப்புளி – Malabar tamarind / Brindall berry (Kudampuli)
நெல்லிக்காய் / முழுநெல்லிக்காய் – Indian gooseberry (Amla)
கடுக்காய் – Terminalia chebula (Harad / hime)
மாதுளம் விதை – Pomegranate seed (Anardana)
சீமைச் சோம்பு – Caraway Seed (Siya zira)
கண்டந்திப்பிலி – Long pepper (Pippali)
வால்மிளகு – Cubeb
அசம்டவோமன் – Celery seed (Ajmud)

பூக்களும் மொட்டுக்களும் – Flowers and Buds
கிராம்பு / லவங்கம் – Clove (Lavang) – உலர்ந்த மொட்டுகள்.
குங்குமப்பூ – Saffron (Kesar) – சூல்முடிகள்.

பட்டைகளும் வேர்களும் கிழங்குகளும் – Barks, Roots and Rhizomes
கறுவா / இலவங்கப்பட்டை / பட்டை – Cinnamon (Dalchini)
இஞ்சி – Ginger (Adrak)
வோ்க்கம்பு / வோ்க்கொம்பு / சுக்கு – Dried ginger (Sonth)
மஞ்சள் – Turmeric (Haldi)
வசம்பு – Sweet Flag
அதிமதுரம் – Licorice (Jethimadh, Valmi)

பிசின்களும் பாசிகளும் – Resins and Lichens
பெருங்காயம் – Asafoetida (Hing)
கல்பாசி – lichen (Pathar Ka Phool)

இலை வகைகள் – Leaves
கருவேப்பிலை – Curry leaf / Sweet neem leaf (Kadipatta)
கொத்தமல்லி கீரை – Coriander leaf (Dhaniya)
வெந்தய கீரை – Fenugreek leaf (Kasoori Methi leaves)
புதினா இலை – Mint leaf (Pudina)
Bay leaf (Tej Patta)

பூண்டு வகைகள் – Bulbs
உள்ளி / வெள்ளைப் பூண்டு / பூண்டு – Garlic (Lahsun)
சின்ன வெங்காயம் / ஈருள்ளி (கன்னடம்) – Baby Onion, Red Onion, Shallot
சின்ன வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் வகைகள்: வல்லாரை 60, வல்லாரை 90, வேதாளம், யாழ்ப்பாண உள்ளூர் வகை.
பெரிய வெங்காயம் / பம்பாய் வெங்காயம் – Big onions, Red/purple Onion
பெரிய வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.

பருப்பு வகைகள் – Nut Varieties
முந்திரி – Cashew nut
பாதாம் – Almond
வேர்க்கடலை / நிலக்கடலை / கச்சான் / மணிலாக்கொட்டை / மல்லாக்கொட்டை- Peanuts

தூள் வகைகள் – Powder Varieties
வறுத்த கறித்தூள் – Roasted Curry powder (Sri Lankan)
கறித்தூள் – Curry powder
மிளகாய்த் தூள் – Chilli powder
குடை மிளகாய்த்தூள் – Paprika powder
மாங்காய்த்தூள் – Sour mango powder (Aamchur)
கரம் மசாலா – Garam Masala
மிளகு, கிராம்பு, கறுவா, சின்னச்சீரகம், கருஞ்சீரகம், பச்சை ஏலக்காய் மற்றும் கறுப்பு ஏலக்காய் ஆகியவற்றின் கலவை வறுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.

ஏனையவை – Others
உப்பு / கறியுப்பு – Salt (Namak)
வெல்லம் / சர்க்கரை (இலங்கை பேச்சுவழக்கில்) / கருப்பட்டி – Jaggery (Gur)
பன்னீர் – Rose water (Gulab Jal)
வினாகிரி – Vineger (Sirka)

மூலிகைகளும் அதன் சத்துக்களும்

18/03/2016 · by Info · in மூலிகைகள்
1. அத்தி – இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து
3. அக்கரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்தரிக்காய் – மக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரதாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பொஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கிலை, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கல்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மந்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கல்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து

சம்பங்கியின் மருத்துவ குணங்கள்
மூலிகைகள்
சம்பங்கியின் பூக்கள் இயற்கையாகவே மணம் நிறைந்தவை. மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லவை. சிகிச்சை முறையில் மணமுள்ள மலர்களையோ அவைகளினின்று பெறப்பட்ட வாசனை மிகுந்த எண்ணெய் களையோ கொண்டு நோய் தீர்க்கும் முறை ஒன்று உண்டு. அதற்கு நறுமணச் சிகிச்சை (அரோமா தெராபி) என்று சொல்லப்பெறும்.

மணமுள்ள ஓர் தாவரத்தின் இலை, பூ, பட்டை, தண்டு, வேர், விதை ஆகியவற்றின்று இயற்கை மணமுடைய எண்ணெய் தயாரித்து அதை மருந்தாகப் பயன்படுத்துவது உண்டு. நறுமணமுள்ள இந்த எண்ணெய்களை முகர்வதாலும் உடலின்மேல் தேய்த்துக் கொள்வதாலும் மனோநிலையில் ஓர் தூண்டுதல் ஏற்படுகின்றது.

நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது. இதனால் மூளையின் அழற்சி தணிகிறது. நல்லதோர் மனோ பாவத்தை (mood) நறுமணம் நல்குகிறது.

சம்பங்கியின் நறுமணம் மனிதனின் மனதுக்கு அமைதியைத் தருகின்றது. மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், பரபரப்பு, நரம்புத் தளர்வு, வலிப்பு, தசைப்பிடிப்பு, குத்திருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் குணப்படுத்த உதவுகின்றது.

சம்பங்கியின் நறுமணம் நரம்புகளுக்கும் சுவாச உறுப்புகளுக்கும் சுகந்தரவல்லது. சுவாசப் பாதை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்பட்ட அழற்சியைத் தணித்து சீராண சுவாசத்துக்குத் துணை செய்கிறது.

சம்பங்கி உடலின் இரத்த ஓட்டத்தைத் தூண்டி உடலுக்கு உஷ்ணத்தைப் பரவச் செய்கிறது. இதனால் பணிக்காலத்திலும் குளிரைத் தாங்கும் தன்மையை உடல் பெறுகிறது.

உடல் வெப்பம் பெறுவதால் சுவாசப் பாதை யிலும் சுவாச அறையிலும் சளி, கோழை ஆகிய துன்பம் தரும் பொருட்கள் சேராத வண்ணம் தடுக்கப்படுகின்றது.

சம்பங்கி எண்ணையை மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால் தொற்றுக் கிருமிகள் தாக்காத வண்ணம் தோல் பாதுகாப்பைப் பெறுவதோடு தோலின்மேல் ஏற்படும் வெடிப்புகள் தவிர்க்கப்படுகின்றது.

சம்பங்கி எண்ணையைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணையோடு சேர்த்துப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வு, தலைமுடியின் முனைகளில் உடைதல், இளை நரை, குமட்டல் போன்ற தொல்லைகள் விலகுகின்றன.

நில சம்பங்கி மருந்தாகும் விதம்

* சம்பங்கிப் பூவை உலர்த்தி வைத்துக் கொண்டு தேவையான போது 5 அல்லது 6 பூக் களை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து பனங் கற்கண்டு அல்லது சீனாக் கற்கண்டு சேர்த்து தினம் இரண்டு வேளைகள் உணவுக்கு முன் பருகி வருவதால் “கொனோரியா” என்னும் பால்வினை நோய் விரைவில் குணமாகி உடலும் மனமும் தேறும்.

* சம்பங்கிப் பூக்களை நன்கு மைய அரைத்துப் பசையாக்கி நீண்ட நாட்களாக உடையாமலும் ஆறாமலும் இருக்கும் கொப்புளங்கள், கட்டிகள் இவற்றின் மேல் பற்றாகப் போட்டு வைக்க இரண்டொரு நாட்களில் கட்டிகள் பழுத்து உடைந்து சீழ்வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும் கொப்புளங்களும் வந்தவடு தெரியாமல் விலகிப் போகும்.

* சம்பங்கிக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் பூசுவதன் மூலம் சீன தேசத்து மக்கள் தீக்காயங்களை குணப்படுத்தவும், தோலினைப் பாதிக்கும் தொற்றுக் கிருமிகளை வெளியேற்றவும், அடிபட்ட காயங்கள், கட்டி ஆகியவற்றின் வீக்கங்களைக் கரைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

* சம்பங்கிப் பூக்கள் ஐந்தாறு எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சிக் சுவைக்காக தேன் அல்லது கற்கண்டு சேர்த்துப் பருகிவருவதால் சிறுநீர் தாராளமாகக் கழியும். இதையே சற்று அதிகமாகக் குடிப்பதால் வாந்தியை வரவழைத்து வயிற்றில் தங்கித் துன்பம் தரும் செரிமானமாகாத நச்சுப் பொருட்களை வெளியேற்றி நன்மை பயக்கும்.

* சம்பங்கிப் பூவை உலர்த்திப் பொடித்து மைய சலித்து வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசுவதால் வேர்க்குரு விரைவில் மறைந்து அது தரும் நமைச்சலில் இருந்தும், தோலுக்குத் தரும் தொல்லையில் இருந்தும் விடிவு தரும்.

* சம்பங்கிச் செடியின் இலையை நன்றாக அரைத்துப் பசையாக்கித் தலைக்குத் தடவி வைத்திருந்து இருபது நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து விடுவதால் தலையில் அரிப்பு தருவதோடு செதில் செதிலாக மாவு போல உதிரச் செய்தல், துர்நாற்றம் வீசுதல் போன்றவற்றுக்குக் காரணமான பொடுகுத் தொல்லையினின்று குணம் ஏற்படும்.

தொடர்ந்து மூன்று அல்லது நான்கு வாரங்கள் இப்படி சம்பங்கி இலையைத் தலைக்குத் தேய்த்து குளித்து விடுவதால் பூரண கேச ஆரோக்கியம் கிடைக்கும்.

* ஐந்தாறு சம்பங்கிப் பூக்களைத் தீநீராக்கிச் சுவைக்காகப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் குடிப்பதால் செரிமானத்தைத் துரிதப்படுத்தி சீரணக் கோளாறுகளைக் கண்டிக்கும். மேலும் வெயிற்காலத்தில் வெயிலில் திரிந்து வந்ததால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும்.

பெண் கின்னஸ் சாதனை படைக்க ஆலோசனை கூறுங்கள்.....

Post has attachment
500 Posts - IDBI Bank Limited Recruitment 2017(All India Can Apply) - Last Date 30 November 2016

IDBI Bank Limited Recruitment 2017

Total No. Posts - 500 Posts


Last Date 30 November 2016


Job Details :

1) Post Name : Executives

No of Vacancy : 500 Posts

Pay Scale : Rs. 17000/-

Qualification : A Graduate from a recognized university with minimum 60% marks (55% for SC/ST/PWD).

Age Limit : 20 to 25 years as on 01.10.2016


Age of Relaxation :

Scheduled Caste/Scheduled Tribe : 05 years

Other Backward Classes : 03 years

Persons With Disability : 10 years


Nationality : Indian


Job Location : All India


Selection process : The selection process will comprise of Online Test followed by personal interview.


Application Fee :

For SC/ST/PWD candidates : Rs. 150/-

For All others candidates : Rs. 700/-


The payment can be made by using only Master/ Visa Debit or Credit Card or through internet banking.


How to Apply : Interested Candidates may apply online through the IDBI website www.idbi.com from 16.11.2016 to 30.11.2016.


Important Dates to Remember :

Starting Date For Submission Of Online Application : 16.11.2016

Last Date For Submission Of Online Application : 30.11.2016

Date of Online Fee Payment : 16.11.2016 to 30.11.2016

Date of Examination (Tentative) : 06.01.2017


Post has attachment
204 Posts - West Central Railway Recruitment 2017 - Last Date 09 December 2016

West Central Railway Recruitment 2017


Total No. Posts - 204 Posts


Last Date 09 December 2016


Job Details :

1) Post Name : Trade Apprentice

No. of Vacancy : 204 Posts

Pay Scale : As per rules

Qualification : Candidates have passed Passed Matriculation Examination with 50% marks or its equivalent or 10th Class Pass under 10 plus 2 system and Must possess ITI (NCTVT certificates only) in any one of the designated trades specified above from a recognised Industrial Training Institute.

Age Limit : 15 to 24 years as on 01.07.2016


Trade wise Vacancies :

Fitter : 37 Posts

Electrician : 89 Posts

Welder : 13 Posts

Pinter : 07 Posts

Mason : 03 Posts

Carpenter : 01 Post

Machinist : 05 Posts

Turner : 05 Posts

Lab Assistant : 01 Post

COPA : 14 Posts

Crane Operator : 02 Posts

Plumber : 05 Posts

Draftsman : 02 Posts


Age Relaxation : 

For OBC Candidates : 3 years

For SC/ST Candidates : 5 years

For PWD Candidates : 10 years


Nationality : Indian


Job Location : Kota (Rajasthan)
Selection Process : Selection will be made on High School Marks & ITI Marks.


Application Fee : Candidates belonging to General /OBC have to pay Rs. 170/- through Online. SC/ ST/ Women/ PWD Candidates are exempted from the payment of application fee.


How to Apply : Interested Candidates may apply Online through website www.mponline.gov.in from 11.11.2016 to 09.12.2016.


Important Dates to Remember :

Starting Date for Submission of Online Application : 11.11.2016

Last Date for Submission of Online Application : 09.12.2016


Wait while more posts are being loaded