ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. திரு - 2737

ஏழாகும் சக்கரத்தில் ஏழாக இறங்கி எழுந்து ஏழினில் ஒன்றாய் இறங்கி அமைந்து ஒன்றாகி ஏழினில் ஆறு வழிகள் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத்தில் இசைவு பெற்றானே. பின்குறிப்பு – சக்கரங்களும் சுரங்களும் ஏழாக இசைந்தது பரஞ்சோதி அருளே.
#திருமந்திரம்
Add a comment...

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.திரு - 2738

சூரியன் சந்திரன் பூமி என்ற மூன்றினில் பஞ்சாங்கமாக ஆகி முந்நூற்று அறுபதாய் ஆகிறது. மூன்றில் ஆறு பருவ காலமாகி முதற்பண்ணீர் மூலதாய் மூன்றின் இலக்கம் முடிவாகி முன்னமே மூன்றிலும் மோகாந்தக் கூத்தை ஆடினான். பின்குறிப்பு – காலமாகி மோகாந்தக் கூத்தை ஆடுகிறான் ஏகன்.
#திருமந்திரம்
Add a comment...

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. திரு - 2737

ஏழாகும் சக்கரத்தில் ஏழாக இறங்கி எழுந்து ஏழினில் ஒன்றாய் இறங்கி அமைந்து ஒன்றாகி ஏழினில் ஆறு வழிகள் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத்தில் இசைவு பெற்றானே. பின்குறிப்பு – சக்கரங்களும் சுரங்களும் ஏழாக இசைந்தது பரஞ்சோதி அருளே.
#திருமந்திரம்
Add a comment...

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. திரு - 2736

ஒன்பதாக உரைத்த வேதங்கள் ஆட இருகலையில் ஒன்றான பதினாறு ஆட அன்பை போதிக்கும் மார்கம் ஆறும் உடன்பட்டு ஆட இன்பம் அடையும் ஏழில் எழும் ஐம்பத்தாறும் ஆட அன்பால் ஆடனான் ஆனந்த கூத்தே. பின்குறிப்பு – அன்பால் அனைத்தும் ஆட ஏகன் ஆடினான்.
#திருமந்திரம்
Add a comment...

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே. திரு - 2735

ஆடுவதற்கு உறுப்பாக உள்ள பதினொன்றும் அடையக்கூடிய பாதச் சிலம்பும் கையில் உள்ள துடியும் நீடிய நாதம் கொண்டு அனைத்தும் ஆதரிக்கும் நேயமுடன் ஆடிய நந்தி புறத்திலும் அகத்திலும் நிகழ்கிறது. பின்குறிப்பு – புறத்தே குரு குறித்த ஆடல் அகத்தில் நிகழ்கிறது.
#திருமந்திரம்
Add a comment...

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.திரு - 2734

வெப்பம், அசைதல், உலா வருதல், உணர்தல், சிக்குதல், பாய்தல், நிலைத்தல் உடன் ஞானம், தங்குவதல் உதவிடும் நீலமுடன் பெண்மையை ஒரு பாகமாக சிறந்த நடம் ஆடுமே. பின்குறிப்பு – எட்டு வகை செயல்பாடுகளுடன் நிலைக்க இடம் நீலம் என்றும் பெண்மையை பாகமாகவும் கொண்டு இறை நடம் இருக்கிறது.
#திருமந்திரம்
Add a comment...

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.திரு - 2733

தாங்கமுடியா தள்ளாட்டம் ஏற்பட்டு திண்டாடி விழ்வது சிவனாந்த அனுபவம். முன்னமே உண்ட உணவை மீண்டும் காண்கையில் உமிழ்நீர் சுரந்து இன்பம் ஏற்படும் அதுபோல் கொண்டாடி மகிழும் இடத்தில் திருக்கூத்தை கண்டார்களுக்கு வரும் குணம் போல் கண்டவர் பேச்சை கேட்பவருக்கும் இது பொருந்துமே. பின்குறிப்பு – சிவானந்தம் அடைந்தவரைக் கண்டால் நாமும் சிவானந்தம் அடையலாம்.
#திருமந்திரம்
Add a comment...

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. திரு-2732.

புளிப்பு சுவை மிகுந்த புளி கண்டால் எச்சில் ஊறுவது போல் மகிழ்ச்சி உண்டாகும் திருக்கூத்தை கண்டவர்களுக்கு எல்லாம், கண்ணீர் துளிர்த்து அருளால் நெஞ்சம் உருகும், பிரகாசமுடன் ஆனந்த அமுதூறும் உள்ளத்தே. பின்குறிப்பு – இறை உணர்ந்தவர் கண்கள் ஈரம் நிறைந்து எழிலுடன் இருக்கும்.
#திருமந்திரம்
Add a comment...

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. திரு - 2731

அறியப்படும் அண்டத்திலும் அதைக் கடந்தும் தேவர்கள் இருக்கிறார்கள், தெரியும் திசை சார்ந்த பூமியிலும் தேவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் சுரக்கும் சுனை பொன்னாக வெளிப்படும் பலவித கூத்தை கண்டு சேவித்து கதி பெறுகிறார்கள். பின்குறிப்பு – பேரண்டத்தில் உள்ள உயர்ந்தவர்கள் உண்மை பொருள் அறிந்து சேவித்து நற்கதி அடைந்தார்கள்.
#திருமந்திரம்
Add a comment...

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே.திரு - 2730

இணைந்த திண், முழவம், குழல் என்ற இசைக்கருவிகள் ஓம் என இசைக்க அதை உணர்ந்து ஆடிய மனிதர் ஆதி நாயகன் என நாடிய நற்கணம் வட்டமிடும் பல பூதங்கள் பாடியவாறு இருப்பது ஒரு பாண்டரங்கமே. பின்குறிப்பு – இந்த பிரபஞ்சம் உடல் என்ற திண், மனம் என்ற முழவம், உயிர் என்ற குழல் கொண்டு இசைக்கப்படும் பாண்டரங்கம் ஆகும்.
#திருமந்திரம்
Add a comment...
Wait while more posts are being loaded