Profile cover photo
Profile photo
அரசு பாரி
144 followers
144 followers
About
அரசு's posts

Post has attachment
தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கட்டுரை...

http://timesofindia.indiatimes.com/home/education/news/Kids-fare-better-when-taught-in-mother-tongue/articleshow/49212516.cms

அன்புமணி இராமதாஸ்-க்கு ஆதரவாகச் சிலர் பொங்குவதை நினைத்து மிக வேதனையாக இருக்கிறது. பல்வேறு சமயங்களில் முன்வைத்த கருத்து, "மிக ஆபத்தான அரசியல் தலைமைகளில் முன்னணியில் இருப்பவர் அன்புமணி". 

மருத்துவம் என்பது மிக முக்கியமான சமூக அலகு, அதற்கு அடிப்படையாக இருப்பது மருத்துவக் கல்வி. அன்புமணி-யின் தவறான நடவடிக்கையால் இந்தச் சமூகம் எதிர்க்கொள்ளும் ஆபத்துகள் மிக மோசமானவை. 

1835 - ல் இருந்து 2003 வரை இந்தியாவில் முதல்நிலை ஆய்வு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 225 மட்டுமே. 

2004-லிருந்து 2009 -வரை அன்புமணி அமைச்சராக இருந்தபொழுது ஆய்வு செய்த கல்லூரிகளின் எண்ணிக்கை 73. இதில் 19 மட்டுமே அரசு கல்லூரிகள். 

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை எதிர்த்து தொடர்ந்து போராடிய மருத்துவப் பயிற்சி மாணவர்களை மடை மாற்றிக் கிராம புற சேவை என்று அன்புமணி ஆடிய அரசியல் ஆட்டம்... 

மருத்துவக் கல்லூரி அனுமதி என்கிற வழியில் கொள்ளையடித்த அன்புமணி-ஐ சாதி பாசத்தால் ஆதரிப்பது என்பது... மிகக் கேவலமான சமூக விரோத செயல்!!!.

http://www.mciindia.org/InformationDesk/ForStudents/ListofCollegesTeachingMBBS.aspx

Post has attachment

பேரிடர் சமூக, அரசியல் குறிப்புகள் - 2

வெற்றிடத்தில் எழும் அதிர்வு ஒலியாக அல்ல ஓசையாக கூட கடத்தப்படாமல் அடங்கிவிடும். 
இளையர்களோ (அல்லது) சகாயமோ  சமூக, அரசியல் தீர்வுகளை தர போவதில்லை! உள்ளீடற்ற சமூகம் தனக்கான தீர்வுகளை வலி நிவாரணி மாதிரி "ஊலல்லா...லாலா.." என்று ஒரே பாடலில் தீர்வுகளை தேடி அற்பமாய் அலைகிறது.
இந்த சமூகத்திற்கு  சமூக,அரசியல் உள்ளீடுகளை உருவாக்க முடிந்தால் தான் பேரிடர் ஏற்படுத்தும் அரசியல் அதிர்வுகளை கடத்த முடியும்.

பேரிடர் சமூக, அரசியல் குறிப்புகள் - 1

சமூகம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கும்பலாக இருப்பதில் தான் இன்றைய சமூக,அரசியல் சீரழிவுகளின் முடிச்சு இருக்கிறது. ஆளும் தரப்பின் அரசியலை விமர்சனம் செய்கிற எதிர்தரப்பும் மிக கவனமாக "நிர்வாகம் முடங்கியது" என்று நிர்வாகம் தொடர்பாக மட்டுமே கூச்சலிடுவதில் உள்ள நுட்பமான அரசியல் நீக்கத்தை உணர வேண்டும்.

நண்பர் ஒருவர் சகாயம் முதல்வர் கும்பலில் கும்மியடித்துக்கொண்டிருந்தார்...
ஒருத்தர் முதல்வராக எத்தனை எம்.எல்.ஏ வேணும் அப்படின்னு கேட்டேன்.
ரொம்ப நல்லவரா...! இல்லை! இல்லை!! சுமாரா நல்லவராக மிஞ்சியதுக்கு ஆள் இருக்கா...!? அப்படின்னு கேட்டேன்...
மாற்றத்தை விரும்பாத மாங்கொட்டை அப்படின்னு திட்டிட்டு... மீண்டும் கும்மியடிக்க போயிட்டார்...!

Post has shared content
கடலூர்  வெள்ள நிவாரண பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறோம்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக உதவிகள் போய் சேர வேண்டும் என்பதில் சிங்கை பதிவர்கள் உறுதியுடனும், ஆக்கத்துடனும் செயலாற்றி வருகின்றனர்.
நண்பர்களே,

நண்பர் பாரி அரசுவின் முன்னெடுப்பில் வெள்ளத்தால் பாதிகப்பட்டுள்ள கடலூரைச் சார்ந்தவர்களில் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு உணவு பொருள்கள், உடைமை ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கு  பரிந்துரைகளும் அதற்கு எட்ட வேண்டிய தொகையாக ரூ 5 லட்சம் பரிந்துரைக்கப்பட்டது,

நண்பர் கிஷோர் உதவி தேவைப்படும் பாதிகப்பட்ட கடலூர் வாசிகளை நேரில் கண்டு அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருளுதவி சென்று சேரும் வகையில்  நண்கொடை பயன்படுத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம்மால் இயன்ற உதவியை பணமாக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு அனுப்பி வைத்து பின்னர் பொருளுதவிக்காக கிஷோரிடம் சேர்ப்பிக்கப்படும்


என்னவிதமான பொருளுதவி என்பதையும், அவை எத்தனை பேருக்கு என்பதும்  வரும் வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும்

சிங்கையை சார்ந்த பதிவர் நண்பர்கள் 

பாஸ்கர் (பூன்;லே)
பாரி அரசு
வெற்றிக்கதிரவன 
ஜெகதீசன்
விஜயானந்த்

இதுபற்றி வாட்ஸப்பில் அலாவளவி வருகின்றனர்

நன்கொடை அனுப்ப வேண்டிய விவரம்

Ganesan Anbarasu
A/C 0129186627
Standard Charted Bank

(You could transfer form FAST interbank transfer form DBS/POSB Account)

அன்புடன் 
கோவியார்

Post has attachment
இந்த மழையும், வெள்ளமும் தமிழக அரசியல் கட்சிகளின் கோர மனநிலையை நிகழ்வாய் காட்சிப்படுத்துகிறது.
அலட்சியமும், ஆணவமும் நிறைந்த ஆளும் கட்சி ஒரு புறமும்...
மக்களின் கொடுந்துயரில் ... "செத்தாண்டா சேகர்" என்கிற வக்கிரமான மனநிலையில் எதிர்கட்சிகளும்,.. இருக்கின்றன.
குறிப்பாக திமுகவின் உ.பிகளுக்கு இந்த காட்சி மிகப்பொருத்தமாய் இருக்கிறது!
https://youtu.be/wefukMcQ5Uc

தேசிய பேரிடர் என்று அறிவித்தால் என்ன நன்மை?
பேரிடர் ( disaster ) என்று அறிவிக்கப்பட்டால் குறைந்தபட்சம் சிலருக்கு கிடைக்கும் காப்பீடு கிடைக்காது என்பது நடுத்தர மக்களுக்கு புரிகிறதா ...!?

தோழர் கே. என். சிவராமன்​ "மக்கள் மருத்துவம்" - என்று ஒரு சொல்லாடலை நேற்று பயன்படுத்திருந்தார்.  அது "மக்களுக்கான மருத்துவம்" என்ற பொருளிலா? அல்லது    "மக்கள் அறிந்திருந்த மருத்துவம்" என்கிற பொருளா? என்று ஓரே குழப்பம்.

இடதுசாரிகள் "தரகு-முதலாளித்துவ" அரசியலை எதிர்க்க வேண்டும் என்கிற குறிக்கோளில்... நவீன மருத்துவத்தையும் எதிர்த்து குழப்பியடிப்பது ஏன் என்று விளங்கவில்லை !?

அவர் சொல்லியிருந்த எ.காட்டுகள் வழியாக வீட்டில் செய்கிற சில ரசம், காசாயம் மாதிரியான  மருத்துவம் என்றும் எடுத்துக்கொள்ள இயலவில்லை.

ஒரு சிறிய எ.காட்டை எடுத்துக்கொள்வோம்... சளி உடலின் தட்ப,வெப்ப மாற்றத்தால்  வரலாம், ஆனால் சளி வேறு பல காரணங்களாலும் வரலாம்.

காரண, காரியம் தெரியாமல் சளி வந்தா... மிளகு ரசம், சுக்கு காசாயம், நண்டு ரசம், பெப்பர் வித்து old monk / old cask என்று எடுத்துக்கொண்டால்... உடலின் வெப்பநிலை குறைந்த காரணத்தால் சளி வந்திருந்தால், மேலே சொன்னவை வேலை செய்யும் இல்லையென்றால் ஆபத்தில் முடியும்.

ஏற்கனவே... 24 மணி நேரத்தில் தொடு சிகிச்சை மாதிரியான ஆபத்தான போலி ஏமாற்று விளம்பரங்கள் வருகின்ற வேளையில்...

சொந்தமாக மருத்துவம் என்பது இன்னும் ஆபத்தை வரவழைக்கும் செயலாக இருக்கும்.

"35 வயதில் அரை வைத்தியன்" என்கிற மாதிரியான சொல்லாடல்கள்... உணவு, செரிமானம் பற்றி 6-ஆம் வகுப்பிலிருந்து படித்து விட்டு சைவம் சாப்பிட்டா ஒல்லியாகலாம், மூளை வளரும் என்று பேசிக்கொள்கிற சமூகத்தில்... மருத்துவ அறிவும், உடலை பற்றிய அறிவும் பெற நீண்ட காலமாகும்.

Mariano Anto Bruno Mascarenhas​
Wait while more posts are being loaded