Profile cover photo
Profile photo
arvind k
194 followers
194 followers
About
arvind's posts

Post has shared content
வாழ்த்துகள் பதாகை நண்பர்களே. மிக அற்புதமான சிறப்பிதழா வந்திருக்கு. இந்த இதழுக்குப் பின்னாடி இருக்கிற உழைப்பு நன்றாகத் தெரிகிறது. தொடர்ந்து கலக்குங்கள்.

+பதா கை



A new website for collating and facilitating translations of modern Tamil literature into English is launched today.

If you wish to contribute new translations or reviews of Tamil works in English, please write to tamil.madhuram@gmail.com

http://madhuram.org/

*
மதுரம் இணையதளத்தின் நோக்கங்கள் என பொதுவாக இவற்றைச் சொல்லலாம்:

(1) இதுவரை ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் முக்கியமான தமிழிலக்கிய படைப்புகளை ஒரே இடத்தில் தொகுப்பது. மேலும் புதிய ஆங்கில மொழியாக்கங்களை முன்னெடுப்பது.

(2) தமிழ் இலக்கியவாதிகள் ஒவ்வொருவர் பற்றியும் அறிமுகக் கட்டுரையொன்றை ஆங்கிலத்தில் எழுதுவது; அவர்களது ஆக்கங்கள் பற்றிய திறனாய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளும் வரவேற்க்கப்படுகின்றன.

(3) தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய ஆர்வமாக இருப்பவர்கள் உரையாட, சேர்ந்து பணி புரிய ஒரு களத்தை அமைத்துக் கொடுப்பது. மொழியாக்க பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது.

கண்டிப்பாக இது ஒருசிலரால் மட்டுமே முன்னெடுக்க கூடிய முயற்சி அல்ல. உங்களின் தொடர்ந்த பங்களிப்பு கட்டாயம் தேவை. உங்களுக்கு பிடித்த சிறுகதை, குறுநாவல், கவிதை, அல்லது கட்டுரை மொழியாக்கங்களை tamil.madhuram@gmail.comஎன்ற முகவரிக்கு அனுப்புங்கள். தமிழ் படைப்புகளை பற்றி ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதியும் அனுப்பலாம். அல்லது தமிழ் எழுத்தாளர் பற்றிய விரிவான அறிமுகக் குறிப்பை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பலாம். [Sign-up sheet கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அறிமுகக் குறிப்பை அதிலேயே நீங்கள் சேர்க்கலாம். அல்லது மின்னஞ்சலாகவும் அனுப்பலாம்]. தளத்திற்கு வேறெந்த வகையில் பங்களிப்பாற்ற விரும்பினாலும் எங்களுக்குச் சொல்லுங்கள்.

Sign-up sheet: https://docs.google.com/…/1JlRYXjw1YY9EksvaVPOdMh8wlm…/edit…

நண்பர்களே, உங்கள் தொடர்ந்த பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். தமிழ்/இந்திய செவ்வியல் ஆக்கங்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் மொழியாக்க பணிகள் (பார்க்க: http://www.murtylibrary.com/) சமகால ஆக்கங்களுக்கும் பரவ வேண்டும். அதற்கு இந்தத் தளம் ஒரு எளிய தொடக்கமாக அமையட்டும்.

அன்புடன்,
மதுரம் ஆசிரியர் குழு

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
Stolen Moments (33 photos)
33 Photos - View album

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
Space, Negative Space
37 Photos - View album
Wait while more posts are being loaded