Profile cover photo
Profile photo
Vel Tharma
84 followers
84 followers
About
Posts

Post has attachment
நேப்பாளத்தின் புதிய அரசியலமைப்பு யாப்பின்படி நடந்த முதலாவது தேர்தலில் இரு பொதுவுடமைவாதக் கட்சிகளின் கூட்டமைப்பு வெற்றி பெற்று ள்ளது. நடுவண் இணைப்பாட்சி அரசின் பாராளமன்றத்திற்கும் ஏழு மாகாணசபைகளுக்குமான தேர்தல் நேப்பாளத்தில் நவமபர் 26-ம் திகதி முதல் டிசம்பர் 7-ம் திகதிவரை நடைபெற்றது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாரளமன்றத்திற்கும் மொத்தம் 550 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு மாகாணசபைகளுக்குமான தேர்தல் நேரடித் தேர்வும் விகிதாசாரத் தேர்வும் கலந்த முறைமையில் நடந்தது. கடந்த 28 ஆண்டுகளில் 26 தடவைகள் ஆட்சி மாற்றங்களை கண்ட நேப்பாளியர்கள் தமக்கு ஓர் உறுதியான அரசு தேவை என்பதை பரவலாக உணர்ந்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பொதுவுடமைவாதக் கட்சிகளின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

Post has attachment

Post has attachment
2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. பின்னர் சலி கேற்றை தனது குடிவரவுக் கொள்கைக்கு நீதிமன்றத்தில் ஆதரவு வழங்க மறுத்ததால் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்

Post has attachment
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும். எமது வீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம். இது பாரிய அளவில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.

Post has attachment
அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியினர், யூதர்கள், குர்திஷ்கள் எனப் பலதரப்பட்ட இனங்கள் ஆயிரக்கணக்கான இனக் குழுமங்கள் போன்றவற்றை கொண்ட இயற்கை வளம் மிக்க மேற்காசியாவில் மன்னராட்சி, மக்களாட்சி, மதவாத ஆட்சி, தன்னதிகாரிகளின் ஆட்சி எனப் பலவிதமான ஆட்சிகள் இருப்பதால் அங்கு சிக்கல்களுக்கு குறைவில்லை. பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான போட்டி அந்த சிக்கல்களை மேலும் மோசமாக்குகின்றது.

Post has attachment
உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவின் உக்ரேனுக்கான சிறப்புப் பிரதிநிதி கேர்ட் வொல்கரும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சிறப்பு ஆலோசகர் விலடிஸ்லே சுர்கோவும் 2017 நவம்பர் 13-ம் திகதி நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. சேர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில் நடந்த இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக வெவ்வேறு எண்ணக்கருக்களைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அமைதிக்கான பேச்சு வார்த்தை தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Post has attachment
மூன்று சுற்றுக்களிலும் முற்றுப் பெறாத உக்ரேன் பிரச்சனை
உக்ரேனில் அமைதியை
ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவின் உக்ரேனுக்கான சிறப்புப் பிரதிநிதி கேர்ட்
வொல்கரும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சிறப்பு ஆலோசகர் விலடிஸ்லே
சுர்கோவும் 2017 நவம்பர் 13-ம் திகதி நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு சுமூகமான
உடன்பாடு எட்டப்படவில...

Post has attachment
மாவீரர் நாள்-2017

Post has attachment

Post has attachment
சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் காரணம் சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் அல்ல. அந்தப் போர்வையில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இடையில் உள்ள பிராந்திய ஆதிக்கப் போட்டியே காரணமாகும். லெபனானின் தலைமை அமைச்சர் சாட் ஹரிரீ 2017 நவம்பர் 4-ம் திகதி தன்னைக் கொல்ல ஒரு சதி நடப்பதால தான் பதவி விலகுவதாகச் சொல்லும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தி சவுதி அரேபிய ஊடகங்களில் வெளிவந்தது. அதில் அவர் லெபனானில் தலையிடுவதாக ஈரானையும் லெபனானை ஒரு பணயக் கைதி போல் வைத்திருப்பதகா ஹிஸ்புல்லா அமைப்பையும் குற்றம் சாட்டியிருந்தார். இது சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி லெபனானில் தீவிரமடையப் போவதைக் கட்டியம் கூறியது.
Wait while more posts are being loaded