Profile cover photo
Profile photo
Karundhel Rajesh
2,597 followers -
A confident, casual left handed SonOfaGuN, Njoying life ! ! No fears whatsoever ! !
A confident, casual left handed SonOfaGuN, Njoying life ! ! No fears whatsoever ! !

2,597 followers
About
Posts

Post has attachment
Although it resembles every superhero film ever made, the advantage of Wonder Woman is the emotion within the screenplay. Good film. Nicely made. Gonna be the first critically acclaimed superhero film from DC of late.

இதுவரை ஹாலிவுட்டில் எந்தப் பெண் இயக்குநரும் 100 மில்லியன் டாலர் படம் ஒன்றை இயக்கியதே இல்லை. அதேபோல் சூப்பர்ஹீரோ படம் ஒன்றையும் எந்தப் பெண்ணுமே இயக்கியது இல்லை! சூப்பர்ஹீரோ படம் ஒன்றை இயக்கியிருக்கும் முதல் பெண் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் தான்.
Add a comment...

Post has attachment
ஏதோ குறி ஈடு குறி ஈடுன்னு சொல்றாங்களே... அதெல்லாம் இன்னாபா?

அதுவா? தமிழ் சினிமாவுல, ரெண்டு பூ ஒண்ணு சேர்ந்தா என்னா அர்த்தம்?

கிஸ் பண்ணிக்குறாங்கோ.

அதேதான். ரெண்டு காலு சாரைப்பாம்பு போல சேர்ந்து இருப்பதைக் காமிச்சிட்டு, விளக்கை மெதுவா அணைச்சா?

ஹிஹி.. கோழி புடிக்கிறாங்கோ..

அதேதான். அப்பால, விளக்கு மட்டும் மெதுவா அணைஞ்சி, அங்க ஒரு சோககீதம் போட்டாக்கா?

அட இது சிம்பிளு.. ஆரோ மண்டையைப் போட்டுட்டாங்கன்னு அர்த்தம்.

பின்னீட்ட போ.. நீதான் இனி குறியீட்டுக் குவியல். நீ இனி படமே எடுக்கலாம். இதுக்குப் பேருடாண்டா குறி ஈடு.

குறியீடுகளும், குறி ஈடுகளும், நாமும் - ஒரு சிறு பதிவு - http://karundhel.com/2017/05/so-called-symbolism-semiotics-kuriyeedu-farce-in-tamil-films-an-analysis.html
Add a comment...

Post has attachment
அந்திமழை மே இதழில் எழுதிய கட்டுரை. ஹாலிவுட்டின் ஒன் லைனர்களைப் பற்றியது. பிரபலமான சில ஒன் லைனர்கள்.

http://karundhel.com/2017/05/some-popular-hollywood-one-liners.html
Add a comment...

Post has attachment
இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையின் பிரதிபிம்பம் பக்கத்தில், நண்பர் Uma Varatharajan மிஷ்கினைப் பற்றிய கட்டுரை ஒன்று கேட்டிருந்தார். அது இரண்டு பாக விமர்சனமாக வெளியானது. இதோ அதன் முழு வடிவம். படித்துப் பாருங்கள்.

http://karundhel.com/2017/05/mysskin-his-films-a-critique.html
Add a comment...

Post has attachment
பீச்சாங்கை திரைப்படத்தின் முதல் ஐந்து நிமிடங்களை இங்கே பார்க்கலாம். For your viewing pleasure. Cheers Ashok FilmMaker.
Add a comment...

Post has attachment

Baahubali 2

ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள் செய்வார்கள். இதுவரை அப்படித்தான் இருந்துவந்தது.

பாஹுபலியின் முதல் பாகத்தில் இதை ராஜமௌலி உடைத்தார். 'ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் எல்லாம் ஜுஜுபி..அந்தப்பக்கம் போயி விளையாடுங்கடா.. நாங்கல்லாம் டிரெய்னையே விரலை அசைச்சே ரிவர்ஸ்ல ஓட வைக்கும் தெலுங்கு டைரக்டருங்கடா.. இப்பப்பார்டா என் வித்தையை' என்று சூளுரைத்து, ராட்சத மிருகங்களான கிங் காங், காட்ஸில்லா, டைனோசார், காய்ஜு ஆகியவை மனிதவடிவில் வந்தால் என்னாகும் என்று படம் எடுத்தார். அதுதான் பாஹுபலி 1. பின்னே? கிங் காங் சைசில் உள்ள சிலையை குட்டியூண்டு ஹீரோ அசால்ட்டாகத் தாங்குவது, அருவியின் கீழிருந்து சரசர என்று ஏறி அருவியையே தாண்டுவது என்று காட்ஸில்லாவும் கிங்காங்கும் செய்ததையெல்லாம் ஹீரோவை செய்யவைத்து அட்ராசிடி செய்தார். ஹீரோ இப்படி என்றால், வில்லனோ மாமிசமலை சைசில் உள்ள எருமையை அடக்குவது என்றெல்லாம் டபிள் டைனாசாராக மாறினான்.

இதெல்லாமே ட்ரிப்பிள், எட்டு மடங்கு, ஆயிரம் மடங்காக இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் பாஹுபலி 2. ஹீரோ அட்ராசிடீஸ் இதில் உச்சகட்டம். காட்ஸில்லாவை மனிதனாகக் காட்டும் புதுவித சூப்பர்ஹீரோ படம் இது. பக்காவான, அக்மார்க் தெலுங்கு டப்பிங் படம். No doubt.

வானில் பறக்கிறார்கள்.. மரத்தைப் பிடுங்கி அடிக்கிறார்கள்.ஐம்பதடி அறுபதடி பாலத்தை வெறும் குதிரை மேலிருந்து ஹீரோ அசால்ட்டாகத் தாண்டுகிறான்..ஏ யப்பா.. மனுசப்பயலா எதாச்சும் செய்யுங்கடா என்று அலறலாம் போலவே தோன்றியது. அட இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஆனால், மதில் சுவற்றுக்கு வெளியே இருந்து ஹீரோவின் அத்தனை படைகளும் கோட்டைக்குள் ஜிங்ஜிங் என்று குதிப்பதற்கு ஒரு ஐடியா செய்திருக்கிறார் பாருங்கள் ராஜமௌலி.. (ரயில் விரலசைவால் ரிவர்சில் போவதை நினைத்துக்கொள்ளவும்). அசல் தெலுங்கு இயக்குநர் ஒருவர், அசல் தெலுங்கு ஆடியன்சுக்காக எடுத்திருக்கும் அச்சு அசல் தெலுங்குப்படம் என்பதற்கு அதுவே போதும்.

நாளை விரிவாக எழுதுகிறேன்.
Add a comment...

Post has attachment

அப்ப மறுவார்த்தை பேசாதே பாடினது உஷா உதூப் இல்லையா? ஆம்பளையா?
Add a comment...

Post has attachment
My most favorite song. In my voice. Pal pal dil ke paas. கிஷோர்குமாரை என்னோட மிகச்சில இன்ஸ்பிரேஷன்களில் ஒருவரா நினைக்கிறேன். எனக்குப் பிடிச்ச என் குருவின் பாடலைப் பாட முயற்சி பண்ணிருக்கேன். How does it sound?

கவுண்டமணி பாடும் ஃபோட்டோ.

http://www.smule.com/p/1100584972_1115055119
Add a comment...
Wait while more posts are being loaded