Profile cover photo
Profile photo
அருணபாரதி க
625 followers -
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளன்
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளன்

625 followers
About
அருணபாரதி's posts

Post has attachment

Post has attachment
நண்பர் நியாஸ் அவர்களே.. 

அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே அதன் குடிகள் இருப்பார்கள். அதுபோல், ஒரு நாட்டில் - அந்நாட்டை வழி நடத்தும் அரசியல் கட்சிகள் - தலைமைகள் எப்படி இருக்கின்றனவோ, அதைப் போலத்தான் மக்கள் இருப்பார்கள். ஊழலும், இலாபவெறியும் தாண்டவமாடும் முதலாளிய அரசியல் சூழலில், மக்களிடமும் இதே குணங்கள் எதிரொலிக்கத்தான் செய்யும். அதன் விளைவாகவே, அவர்கள் கட்சிகளிடம் பணம் பெறுகின்ற முடிவை தயங்காமல் எடுக்கிறார்கள்.

ஏன் இந்த நிலைமை ஏற்படுகிறது? 

இந்திய விடுதலை, திராவிட நாடு விடுதலை போன்ற இலட்சியங்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்ட காலங்களில், அந்த இலட்சியங்களே சமூகத்தையும் அரசியலையும் வழிநடத்தின. அக்காலகட்டங்களிலேதான் மக்கள் பொறுப்பானர்களாக அந்த இலட்சியங்களைப் பின் தொடர்ந்தனர்.

ஆனால், இந்த இலட்சிய அரசியலை - கொள்கை சார்ந்த அரசியலை முன் வைக்காமல் வெறும் பதவியைப் பிடிப்பதே இலட்சியம் என அரசியல் மாற்றப்பட்ட பிறகு, மக்களும் தங்கள் பொறுப்பை மறந்தார்கள். கட்சிகளும் மக்களின் பொறுப்பை உணர்த்தவில்லை. அவ்வாறு, உணர்த்தினால் தங்கள் பதவிக்கு அது ஆபத்தாக முடியும் என்றும் கருதின.

எனவே, இன்றைக்குத் தேவை பதவியைப் பிடிக்கும் அரசியல் அல்ல! மக்கள் நல்வாழ்வை அடைவதற்கான கொள்கைகளை முன்வைத்து, மக்களையே திரட்டுகின்ற போராட்ட அரசியல்! அது தேர்தலின் மூலம் நடக்காது - போராட்டங்கள் மூலமே அது சாத்தியப்படும்!

தோழமையுடன்
அருணபாரதி,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.  

Post has attachment
அருமை நியாஸ்! உண்மையில், இன்றைக்கு பள்ளிகள் குழந்தைகளுக்குத் தேவைப்படுவதில்லை. பெற்றோர்களுக்கும், அவர்களை சூழ்ந்து நின்று அறிவுரைகள் வாரி வழங்கும் உறவினர்களுக்குத்தான் பள்ளிகள் தேவைப்படுகின்றன! 

Post has attachment

Post has attachment
அமெரிக்காகாரன் கிடக்கட்டும். முதலில், இந்தியா - தமிழர்களின் பெருமைகளை மதிக்குமா? பும்புகாரிலும் ஆதிச்சநல்லூரிலும் சுதந்திரமாக ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசை அனுமதிக்குமா? தமிழர் பெருமைகளை முடக்குவதில் முதல் எதிரி அமெரிக்கா அல்ல. இந்தியா தான். 

Post has attachment
இனியன்..
Photo
Wait while more posts are being loaded