Profile cover photo
Profile photo
E Babu
123 followers
123 followers
About
Posts

ஊழல் குற்றச்சாட்டின்பேரில் சீனா வின் மூத்த அரசியல் தலைவர் களில் ஒருவரான ஜுஹூ யாங்காங் (72) கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.84,000 கோடி மதிப்புள்ள சொத்து கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்ற பிறகு ஊழலை ஒழிக்க முன்னுரிமை அளித்து வரு கிறார். அவரது நடவடிக்கையின் பேரில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சீன கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜுஹூ யாங்காங் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

முன்னாள் அதிபர் ஹூ ஜிந் தோவோ ஆட்சியின்போது உள் நாட்டு பாதுகாப்புத் துறை தலைவ ராக ஜுஹூ யாங்காங் பதவி வகித் தார். போலீஸ் துறை, உளவுத் துறை, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

சீனாவின் மிக உயர்ந்த ஆணையமான 9 பேர் கொண்ட நிலைக்குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். அவர் பொறுப்பில் இருந்தபோது அதிகாரத்தை முறை கேடாக பயன்படுத்தி வருமானத் துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் பல்வேறு பகுதிகளில் அவரும் அவரது குடும்பத்தினரும் பல்லா யிரம் கோடி மதிப்புள்ள சொத்து களை வாங்கியிருப்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜுஹூ யாங்காங் அனைத்து அரசு பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். எனினும் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

பொதுவாக சீன அரசியலில் ஓய்வுபெற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது, கைது நடவடிக்கை மேற்கொள்வது கிடையாது. அந்த மரபை மீறி ஜுஹூ யாங்காங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும் பத்தினரிடம் இருந்து ரூ.84,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது இந்தியாவில் சாத்தியமாவது எப்போது? 
Add a comment...

இந்தியாவின் மாபெரும் அச்சுறுத்தல் எது?

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 14 வீரர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல்கள் நம்மை அதிரவைக்கின்றன. மாவோயிஸ்ட்களை எதிர்கொள்வதற்கு உயிரையே பணயம் வைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களை அரசு எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பது வேதனையளிப்பதாக உள்ளது.

மாவோயிஸ்ட்களின் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுவது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இருக்கும் ஆயுத பலம், ஆள் பலம், தகவல் தொடர்பு வசதி, மருத்துவ வசதி ஏதும் இல்லாமல், காட்டில் மறைந்து திரிந்துதான் செயல்படுகின்றன அந்த இயக்கங்கள். அவர்கள் அனைவரையும் அப்படியே பிடித்துச் சிறையில் அடைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர்களால் கொல்லப்படாமலாவது தற்காத்துக்கொள்ளலாம் அல்லவா?

திங்கள்கிழமை பட்டப்பகல் 10.30 மணிக்கு ரோந்து சென்ற சி.ஆர்.பி.எஃப். போலீஸார் மாவோயிஸ்ட்களால் சுற்றிவளைத்துத் தாக்கப்பட்டபோது, அவர்களால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு உதவியாக வேறு படைப்பிரிவுகளாலும் அங்கே விரைந்து செல்ல முடியவில்லை. தாக்கியவர்கள் அந்த இடத்திலேயே 13 பேரைக் கொன்றதுடன் அவர்களிடமிருந்து 10 ஏ.கே. 47 ரக தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கருவிகளையும் பறித்துச் சென்றுவிட்டார்கள்.

மோதல் நடந்த உடனேயே காயம்பட்டவர்களை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றிருந்தால் சிகிச்சை அளித்துச் சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவசரத்துக்குப் பாதுகாப்பாக ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல அந்தக் காட்டில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. காட்டில் மாவோயிஸ்ட்கள் எந்தப் பக்கமிருந்தும் வந்து தாக்கக்கூடும் என்பதால், இந்திய விமானப்படை தனது ஹெலிகாப்டரை அவசர உதவிக்கு அனுப்ப மறுத்திருக்கிறது. ‘நாட்டை மாவோயிஸ்ட்களிடமிருந்து காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு, உங்களைக் காப்பாற்றுவது எங்கள் பொறுப்பல்ல’ என்று அரசு, மத்திய ரிசர்வ் போலீஸுக்கு உணர்த்துகிறதோ?

மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமின் நிலைமையைக் கேட்டால், மாவோயிஸ்ட்கள் வேண்டாம், மத்திய அரசின் அலட்சியமே அவர்களைக் கொன்றுவிடும் என்பது புரிகிறது. 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதியையே தொடர்ந்து 15 நாட்களாக ரோந்து சுற்றி வந்த அவர்கள், தங்கள் உடல் நிலையைக் கவனித்துக்கொள்வதற்காக விடுமுறை பெற்று ஊருக்குப் போகவே விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், முகாமில் 150 பேருக்கு 5 கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. நல்ல காய்கறிகளும் உணவும் தரப்படுவதில்லை. அங்கு சமைக்கப்படும் உணவு பலருக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. முகாமில் நல்ல குடிநீர், தரமான உணவு, மருத்துவ வசதிகள் செய்துதரப்படாதது வியப்பளிக்கிறது. அவர்களில் பலர் கொசுக்கடியால், மலேரியாவுக்கும் கடுமையான தோல் வியாதிகளுக்கும் ஆளாகியிருந்தனர். அதைக் கவனிக்கக்கூட ஆட்சியாளர்களால் முடியவில்லை. ‘இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்’என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட மாவோயிஸ்ட்களை எந்த லட்சணத்தில் அரசு எதிர்கொள்கிறது பாருங்கள்!

நம்முடைய முதல் எதிரி மாவோயிஸ்ட் இயக்கம் அல்ல, நமது அலட்சியம்தான். அலட்சியத்தை வெல்லாமல் மாவோயிஸ்ட்களை வெல்வது சாத்தியமே இல்லை.

Keywords: மாவோயிஸ்டு, மாவோயிஸ்டு தாக்குதல், சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி
Add a comment...

Post has attachment
த்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 14 வீரர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல்கள் நம்மை அதிரவைக்கின்றன. மாவோயிஸ்ட்களை எதிர்கொள்வதற்கு உயிரையே பணயம் வைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களை அரசு எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பது வேதனையளிப்பதாக உள்ளது.

மாவோயிஸ்ட்களின் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுவது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இருக்கும் ஆயுத பலம், ஆள் பலம், தகவல் தொடர்பு வசதி, மருத்துவ வசதி ஏதும் இல்லாமல், காட்டில் மறைந்து திரிந்துதான் செயல்படுகின்றன அந்த இயக்கங்கள். அவர்கள் அனைவரையும் அப்படியே பிடித்துச் சிறையில் அடைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர்களால் கொல்லப்படாமலாவது தற்காத்துக்கொள்ளலாம் அல்லவா?

திங்கள்கிழமை பட்டப்பகல் 10.30 மணிக்கு ரோந்து சென்ற சி.ஆர்.பி.எஃப். போலீஸார் மாவோயிஸ்ட்களால் சுற்றிவளைத்துத் தாக்கப்பட்டபோது, அவர்களால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு உதவியாக வேறு படைப்பிரிவுகளாலும் அங்கே விரைந்து செல்ல முடியவில்லை. தாக்கியவர்கள் அந்த இடத்திலேயே 13 பேரைக் கொன்றதுடன் அவர்களிடமிருந்து 10 ஏ.கே. 47 ரக தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கருவிகளையும் பறித்துச் சென்றுவிட்டார்கள்.

மோதல் நடந்த உடனேயே காயம்பட்டவர்களை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றிருந்தால் சிகிச்சை அளித்துச் சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவசரத்துக்குப் பாதுகாப்பாக ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல அந்தக் காட்டில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. காட்டில் மாவோயிஸ்ட்கள் எந்தப் பக்கமிருந்தும் வந்து தாக்கக்கூடும் என்பதால், இந்திய விமானப்படை தனது ஹெலிகாப்டரை அவசர உதவிக்கு அனுப்ப மறுத்திருக்கிறது. ‘நாட்டை மாவோயிஸ்ட்களிடமிருந்து காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு, உங்களைக் காப்பாற்றுவது எங்கள் பொறுப்பல்ல’ என்று அரசு, மத்திய ரிசர்வ் போலீஸுக்கு உணர்த்துகிறதோ?

மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமின் நிலைமையைக் கேட்டால், மாவோயிஸ்ட்கள் வேண்டாம், மத்திய அரசின் அலட்சியமே அவர்களைக் கொன்றுவிடும் என்பது புரிகிறது. 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதியையே தொடர்ந்து 15 நாட்களாக ரோந்து சுற்றி வந்த அவர்கள், தங்கள் உடல் நிலையைக் கவனித்துக்கொள்வதற்காக விடுமுறை பெற்று ஊருக்குப் போகவே விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், முகாமில் 150 பேருக்கு 5 கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. நல்ல காய்கறிகளும் உணவும் தரப்படுவதில்லை. அங்கு சமைக்கப்படும் உணவு பலருக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. முகாமில் நல்ல குடிநீர், தரமான உணவு, மருத்துவ வசதிகள் செய்துதரப்படாதது வியப்பளிக்கிறது. அவர்களில் பலர் கொசுக்கடியால், மலேரியாவுக்கும் கடுமையான தோல் வியாதிகளுக்கும் ஆளாகியிருந்தனர். அதைக் கவனிக்கக்கூட ஆட்சியாளர்களால் முடியவில்லை. ‘இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்’என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட மாவோயிஸ்ட்களை எந்த லட்சணத்தில் அரசு எதிர்கொள்கிறது பாருங்கள்!

நம்முடைய முதல் எதிரி மாவோயிஸ்ட் இயக்கம் அல்ல, நமது அலட்சியம்தான். அலட்சியத்தை வெல்லாமல் மாவோயிஸ்ட்களை வெல்வது சாத்தியமே இல்லை.
Add a comment...

Post has attachment
சரியான தீர்ப்பு. அவ்வாறு ஒரு கட்சி ஆட்சி அமைக்க ஒரு புரட்சி தேவைபடுகிறது
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...
Wait while more posts are being loaded