Profile cover photo
Profile photo
Sankar Venu
1,092 followers -
http://viduthalai.in/e-paper.html
http://viduthalai.in/e-paper.html

1,092 followers
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
காக்கிகளை ஆட்டுவிப்பது காவிகளா?
பாஜக ஆளும் அரியானா  மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் அய்ந்துபேர்மீது பசு மாட்டிறைச்சியை வைத் திருந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில்  பசுப்பாதுகாவலர் கள் என்போர், தாக்குதலை நடத்தினார்கள். அதற்கு அடுத்த நாளிலேயே பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில...
Add a comment...

Post has attachment
திராவிடர் கழகம் நடத்திடும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத்தினர் பேரார்வத்துடன் கலந்து கொள்வீர்!
‘நீட்’ மசோதாக்களுக்கு ஒப்புதல் வேண்டி  திராவிடர் கழகம் நடத்திடும்  ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத்தினர் பேரார்வத்துடன் கலந்து கொள்வீர்! தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை, ஜூலை 7 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி  அவர்களின் அறிவிப்பி...
Add a comment...

Post has attachment
மாயாவதியின் மனமாற்றம் மதவெறிக் கூட்டத்திற்கு ஏமாற்றம்!
- மஞ்சை வசந்தன் உத்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும் அமைத்தது, அத்தனை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களும் ஆணவத்தின் உச்சியில் நின்று ஆர்ப்பறிக்கின்றனர்; அச்சுறுத்துகின்றனர்! ஆனால், உண்மையில் உத்தி...
Add a comment...

Post has attachment
தமிழ் இந்துக்கு மறுப்பு
சமஸ்கிருதமயமான சமஸ் - கவிஞர் கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் "அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?" எனும் தலைப்பில் தோழர் சமஸ் 'தி இந்து' (தமிழ்) ஏட்டில் நேற்று (5.4.2017) கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார். திராவிடர் இ...
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

“சிதம்பர இரகசியம்” என்பதை விளக்க முன்வருமா ‘முரசொலி’?................

‘ஆசிரியர் வீரமணிக்கு ஒரு விளக்கம்’ எனும் தலைப்பில் ‘முரசொலி’யில் கட்டுரை ஒன்று ‘சிலந்தி’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது. (24.2.2017)

பதிலுக்குப் பதில் என்று கூறி பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டு போகும் எண்ணம், உத்வேகம் நமக்கு இல்லை.

‘விடுதலை’ பதில் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கே முக்கிய காரணம் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆசிரியர் பற்றி செய்த ‘விமர்சனத்திற்காகத்’தான்.
ஆனால், நேற்றைய முரசொலியின் பதிலில் எடுத்துக் காட்டியுள்ளபடிதான் தளபதி மு.க.ஸ்டாலின் ஆசிரியர் பற்றி கருத்துக் கூறியுள்ளாரா?

“திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர், அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல; தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுப் பற்றி நான் விமர்சித்து அவருடைய மதிப்பை குறைக்க விரும்பவில்லை”. - இது தளபதி மு.க.ஸ்டாலின் கூறியதாக முரசொலியில் வந்தது. (தேதி 21.2.2017)

நேற்றைய (24.2.2017) ‘முரசொலி’யில் அது எப்படி வந்துள்ளது? “திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல; தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுப் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை”.

இது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதாக நேற்றைய ‘முரசொலி’ யில் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டும் ஒன்றுதானா? இதனை விரிவுப் படுத்தி பதவுரை, பொழிப்புரை செய்ய நாம் தயாராக இல்லை. படிக்கின்றவர்கள் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாகவே உணர்வார்கள். முதலில் கூறப்பட்டதில் எது மறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிகிறது.

இப்படி மாற்றி வெளியிட்டு இருப்பதன் மூலம் தி.மு.க. செயல் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் குறித்து மதிப்புக் குறைவாக முதலில் சொல்லியிருக்கிறார் என்பது
வெளிப்படுத்தப்பட்டதல்லவா!

அப்படி சொல்லவில்லை, அந்தப் பொருளில் சொல்லவில்லை என்று எப்பொழுது சமாதானம் சொல்ல முன் வந்து விட்டார்களோ, அந்த நிலையிலிருந்து தங்களைத் திருத்திக் கொள்ளும் மனநிலையை வெளிப் படுத்தி விட்டார்களோ, அதற்கு மேலாக எழுத்துப் போர் நடத்துவது தேவையில்லை என்பது நமது நிலைப்பாடு. அதுதான் பெருந்தன்மையும் கூட. ‘விடுதலை’ தவறாக எழுதியுள்ளது என்று சொல்லக் கூடாதல்லவா!

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு - ஆளுநர் எப்படியெல்லாம் நடந்து வருகிறார் - அதைப் பற்றி கருத்துகளைக் கூற திமுக ஏன் தயங்க வேண்டும்? என்ற ‘விடுதலை’யின் கேள்விக்கு ‘முரசொலி’ யின் பதில் என்ன தெரியுமா?
“இந்தப் பிரச்சினையின் போது சசிகலா எப்போ தாவது மத்திய அரசையோ, ஆளுநரையோ குற்றம் சாட்டி கருத்துக் கூறியதுண்டா?

அதிமுகவினர் திமுகவை குற்றம்சாட்டினரே தவிர, பாரதிய ஜனதா பற்றி - வாய் திறந்தது உண்டா?” என்கிறார் முரசொலியின் சிலந்தி!
இது ஒரு சமாதானமாகுமா? தேர்வில் நீ ஏன் தோல்வியடைந்தாய் என்று கேட்டால் பக்கத்து வீட்டு பக்கிரிசாமியும் ‘பெயில்’ என்று சொல்லும் பையன் போல் அல்லவா இருக்கிறது இந்தப் பதில்.

இதன் மூலம் திமுக ஆளுநர் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ, பாரதிய ஜனதா பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை என்பதை திமுகவே ஒப்புக் கொண்டு விட்டதே.

அப்படியே பார்த்தாலும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து எல்லா ஏடுகளிலும், இணையத்திலும் (11.2.2017) வெளிவந்ததே.
“ஆளுநர் காலதாமதம் செய்வது அதிமுகவைப் பிளவுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆளுநர் முடிவுக்காக இன்று வரை காத்திருந்தோம். நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதத்தில் இருக்கும்” என்று கூறியதை ‘முரசொலி’ வசதியாக மறைப்பது சரியா?

அதிமுகவின் அன்றைய அவைத் தலைவர் மதுசூதனன் மத்திய பிஜேபி தலையீட்டை ஓங்கி அடித்துக் கூறியதுண்டே!

“வக்காலத்து இன்றி” அதிமுகவிற்காக திராவிடர் கழகத் தலைவர் வலிந்து ஆதரித்துக் கொண்டு இருப் பதாக ஒரு குற்றச்சாட்டையும் ‘முரசொலி’ வைத்துள்ளது!

திராவிடர் கழகம் ஆதரிப்பதாக, இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் இனநலம், பொதுநலம் காரணமாக வக்காலத்து இன்றி ஆஜராகக் கூடிய சமுதாய இயக்கம்தான்!

திமுகவை ஆதரித்த காலத்திலும் சரி, எதிர்த்த காலத்திலும் சரி, ‘வக்காலத்து வாங்கிக் கொண்டுதான்’ அதனைச் செய்ததா?

ஆட்சிகளை ஆதரித்துக் கொண்டு இருந்த போதும், எதிர்க்க வேண்டியவைகளை எதிர்த்து வந்திருக் கிறோம் என்பது தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள். எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூறமுடியும்.

அதிமுகவில் பிளவை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் மத்திய அரசும், பிஜேபியும் செயல்பட்டது பற்றி நாட்டு நடப்புகளை அறிந்தவர்களுக்கு நன்றா கவே தெரியும்.
திராவிடர் கழகம் மட்டுமல்ல - இடதுசாரிகளும் கூட இந்தக் கருத்தினை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., எல் லாம் குற்றஞ்சாட்டியதுண்டு. தொலைக்காட்சி விவாதங்களி லும் சரி கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும் இந்தக் கருத்தினை பதிவு செய்துள்ளார்கள்.

‘துக்ளக்கும்‘, ‘தினமலர்களும்‘, ஆர்எஸ்எஸ் வார ஏடான ‘விஜயபாராதமும்’ ‘ஆர்கனைசர்’ ஏடும் பன்னீர்செல்வம் பக்கம் நின்று அதிமுகவின் மற்றொரு தரப்பினரைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் விமர் சித்தன, செய்திகளை வெளியிட்டு வந்தன என்பதை மனம் திறந்த பார்வையில் கூர்ந்து பார்த்தால் அதன் சூட்சமம் விளங்காமல் போகாது.

அந்த அடிப்படையிலும், ஆட்சிப் பொறுப்புக்கு வர திமுகவுக்கு உடனடியாக வாய்ப்பு இல்லாத நிலையிலும், அது குறுக்கு வழியிலும் செல்லாது என்ற தகைமையிலும், அதிமுகவைப் பிளந்து குளிர்காயும் நிலைக்கு பிஜேபியின் தந்திரங்களை அறிந்த நிலையிலும் "அதிமுகவினரே எச்சரிக்கை!" என்று தமிழர் தலைவர் முக்கியமான ஒரு தருணத்தில் சொன்னது கவனிக்கத்தக்கது. அந்தக் கட்சியின் பெரும்பாலானோர் (ஓ.பி.எஸ். உட் பட) ஆதரித்ததால் சசிகலாவே அந்த கட்சியை - ஆட்சியை வழிநடத்தும் வாய்ப்பினை வரவேற்றதை - கொச்சைப்படுத்தினால் எப்படி?
அந்த இடத்தில் அதிமுகவின் ஓ.பி.எஸ்.சே பெரும்பான்மை ஆதரவை பெற்று இருந்தாலும் அக் கட்சி இந்நேரத்தில் உடைந்து விடக் கூடாது என்கிற கண்ணோட்டத்தில், திராவிடர் கழகம் ஆத ரிக்கத் தான் செய்யும். ஆளைப் பொறுத்ததல்ல தமிழர் தலைவரின் ஆதரவு - இந்தக் கால கட்டத்தில் இந்துத்துவா சக்திகள் மத்திய பிஜேபி ஆட்சியின் துணைக் கொண்டு உள்நோக்கத்தோடு அதிமுகவை உடைப்பதைத் தடுத்தாக வேண்டும் என்ற திராவிட இயக்க உணர்வேதான் காரணம். இந்த இடத்தில் திமுக என்கிற பிரச்சினை எங்கிருந்து வந்தது?

திமுக, அதிமுக என்ற இருகட்சிகள்தான் தமிழ் நாட்டின் ஆட்சி பொறுப்பில் 1967 முதல் இருந்து வந்துள்ளன. இதில் ஒன்றை ஒழித்து மூன்றாவதாக தேசியக் கட்சிகள் குறிப்பாக பிஜேபி சகல வழிகளிலும் அவர்களுக்கே உரித்தான பின் ‘திரை’ செயல்பாடுகள் மூலம் உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை என்று திமுகவால் கூறமுடியுமா?

காலங் கடந்தாவது ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் (1.3.2017) திமுக செயல் தலைவர் ஒப்புக் கொண்டு விட்டாரே!

“அதிமுக என்ற குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க ஆசைப்படுகிறது பா.ஜ.க. என்பது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதிலிருந்தே தெரியத் தொடங்கி விட்டது” என்று திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளாரே! (‘ஆனந்த விகடன்’ 1.3.2017 ‘முரசொலி’ 24.2.2017).

இதைத் தெரிந்த நிலையில்தான் அதனைத் தடுக்க வேண்டும் - அதிமுகவினரே, எச்சரிக்கை என்கிறார் தாய்க் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். பிஜேபி நினைப்பது நடக்க வேண்டும் என்று திமுக கருதுகிறதா? இதுதான் சமுதாய இயக்கத்துக்கும், அரசியல் கட்சிக்கும் சில நேரங்களில் ஏற்படக் கூடிய தவிர்க்கவே முடியாத மாறுபாடு! இதனைப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு அவதூறு சொற்களை அள்ளித் தெளிக்கலாமா? பிஜேபி திட்டமிடுவதைத் தடுக்க வேண்டுமா? வேண்டாமா? சிந்திக்கட்டும், நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள்!

திராவிடர் கழகம் பிரச்சினைமீது கருத்தை முன் வைக்கிறது; திமுகவோ கழகத் தலைவரைத் தனியே பிரித்து தாக்குதலைத் தொடுக்கிறது; அவதூறு செய்கிறது; இது சரியானது தானா?
திமுகவிற்கு ஆட்சியில் அமர வாய்ப்பு இல்லாத நிலையில் அதிமுகவை ஆள விடுவதுதான் தேர்தல் முடிவுகளின் படியும், ஜனநாயகப்படியும், திராவிட இயக்கப் பார்வையிலும் சரியானதாக இருக்க முடியும் என்பதே திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு. தவறு செய்யும் போது தவறாமல் கண்டிப்போம்! அதில் திராவிடர் கழகம் என்றைக்கும் தயங்கியது கிடையாதே!

இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது தான் வேடிக்கை யானது. இப்படி ஆதரவு தெரிவிப்பதற்குக் காரணம் ‘சிதம்பர ரகசியம்’ என்று கூறுவது எந்த வகையில் நாணயம், பண்பாடு?

தங்களிடம் ஆதாரம் இருந்தால் இந்த ரகசியத்தை உடைத்து வெளிப்படையாக சொல்லத் தடுத்தது எது? அதுவும் ஒரு சிதம்பரம் ரகசியம்தானோ என்று எங்களாலும் எழுத முடியாதா?

விவாதம் செய்ய முன் வாருங்கள் - மாறாக அவதூறு செய்ய ஆசைப்படாதீர்கள் - அது தரமானதல்ல!

தனி மனிதத் தன்மையில் கூட ஜாடை பேசுவது என்பது தரக்குறைவானது, கொச்சைத்தனமானது என்கிற போது, திராவிடர் இயக்கத்தின் தாய் கழகத்தைப் பார்த்து 84 வயதில் 74 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராகிய பொதுவாழ்வின் இலக்கணச் சுத்தியான தலைவரை பார்த்து - “அந்த சிதம்பர ரகசியம்” என்ன என்று எழுத முரசொலியாரின் பேனாவுக்கு எப்படி துணிவு வந்தது? மனம்தான் வந்தது? இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
படிப்பவர்கள் பலவகைகளிலும் அவரவர் கற்பனைக்கேற்ப சந்தேகப்பட வேண்டும் - “பொருள் கொள்ள வேண்டும்” என்கிற தரந்தாழ்ந்த உள்நோக்க விமர்சனம் அல்லவா இது?

திமுக ஓபிஎஸ்சை ஆதரித்த ரகசியம் என்ன? ஆளுநரை விமர்சிக்காததன் ரகசியம் என்ன? அதன் சிதம்பர ரகசியம் என்னவென்று எங்களாலும் கேட்க முடியும் என்றாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை.

13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை எதிர்த்து திமுகவை திராவிடர் கழகம் ஆதரித்ததுண்டு. அப்பொழுது இதுபோன்ற தரந்தாழ்ந்த விமர்சனங்களை எம்.ஜி.ஆர். கூட வைத்ததில்லை. ஏன், தமிழ்நாட்டில் கழகத்தை பரம பகைவர்களாகக் கருதுகிறவர்கள் கூட இப்படிச் சொன்னதில்லையே.

நான் விமர்சித்து திராவிடர் கழகத் தலைவருடைய மதிப்பைக் குறைக்கவில்லை என்று சொன்னதை விட இது மிகவும் மோசமான உள்நோக்கம் கொண்ட நிதானமற்ற வார்த்தைப் பிரயோகம்! இது மிகவும் கண்டிக்கத்தக்கது - கண்டிக்கத்தக்கது!

அண்ணா போற்றிய கண்ணியம் இதுதானா? தாய்க் கழகத்தை பற்றியும், அதன் தலைவரையும் மதிக்கும் பாங்கு இதுதானா?

நா காக்க என்பது பேனா முனையின் நாக்கையும் சேர்த்துதான்.

- ஒட்டடைக்குச்சி -
விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper
Add a comment...

Post has attachment
நெஞ்சு பொறுக்குதில்லையே!
சென்னை - எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள கொடுமை நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்கத்தக்க கொடூரமாகும். 3 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, நகைகளையும் பறித்த பயங்கரம் அரங் கேறி இருக்கிறது. ஒரு குடிவெறி ஆண் ஓநாய்க...
Add a comment...

Post has attachment
**
ஊன்றிப் படித்து உண்மையை உணர்க! நிகழ்கால நடப்புகளும் - நமது நிலைப்பாடும்! கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின் (5.12.2016) தமிழ் நாட்டின் அரசியல் அரங்கிலும், ஆட்சி மன்றத்திலும் ...
Add a comment...

Post has attachment
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு
அமைச்சரவையை அமைக்க அழைப்பதில் கால தாமதம் ஏன்? ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டோரே எச்சரிக்கை! எச்சரிக்கை! தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை உச்சநீதிமன்ற...
Add a comment...

Post has attachment
மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் சித்து விளையாட்டுகள் தொடர இடமளிக்கக்கூடாது!

எக்காரணம் கொண்டும் 356-க்கு இடம் இருக்கக்கூடாது

அ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால்

எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும்!


தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட கருத்து
Add a comment...
Wait while more posts are being loaded