Profile cover photo
Profile photo
Nammalvar Organic Farming
40 followers -
இயற்கையை வளர்ப்போம் மனிதம் காப்போம்....
இயற்கையை வளர்ப்போம் மனிதம் காப்போம்....

40 followers
About
Posts

Post has attachment
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
நீ சுவாசிக்க, நேசிக்க, வாசிக்க உனக்கென ஒரு நாடு!!!விடுதலை கொண்டாடு!!!
Photo
Add a comment...

Post has attachment
டாக்டர் கோ.நம்மாழ்வார் ஐயா எழுதிய நூல்கள். இன்றைய தலைமுறையினரிடம் இயற்கை விவசாயம் பற்றிய புரிதலும், ஆர்வமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள புத்தகங்களை வாங்கி படித்தாலே போதும் உங்கள் விறல் நுனியில் இயற்கை விவசாயம் மாறும்.

www.nammalvar.co.in
Nammalvar Organic Farming
#organicfarming #nammalvar #farming #farmersmarket
Photo
Add a comment...

Post has attachment
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

www.nammalvar.co.in
#nammalvarorganicfarming
#farmersmarket
Photo
Add a comment...

Post has attachment
பாரம்பரிய சிறுதானிய வகைகள் மற்றும் பயன்கள்:-

உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சிறுதானியத்தில் செய்த உணவையே உண்டு, பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து வாழ்ந்தனர்.
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
"Be the Solution to the Soil Pollution"
World Soil Day Dec-05
Photo
Add a comment...

Post has attachment
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.... அனைவரும் நம்முடைய பாரம்பரிய அரிசி சிறுதானிய வகைகளை பயன்படுத்தி பலகாரம் செய்து உண்டு பல்லாண்டு நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகிறோம்....

Nammalvar Organic Farming
www.nammalvar.co.in
Photo
Add a comment...

Post has attachment
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி – பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி – நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி – நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி – மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி – இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி – மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி – இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி – ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி – நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி – உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி – வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி – மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி – உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி – கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி – குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி – வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி – தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி – உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி – அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி – காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி – அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி – மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி – மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி – தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி – சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி– உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி – ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி – கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி – பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பொடி – குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி – சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி – குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி – சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி – பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி – ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி – சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி – சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி – நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி – இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி – உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி – சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி – பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி – தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி – குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி – பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி – உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி – கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி – பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
Photo
Add a comment...

Post has attachment
நந்தியாவட்டைப் பூவின் மருத்துவ குணங்கள்:-

கண் சார்ந்த பிரச்சனைகள் நீங்க
******************************************
நந்தியாவட்டப் பூ (50 கிராம்),
களாப் பூ (50 கிராம்) ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு 250 மில்லி நல்லெண்ணெயில் உறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டு வந்தால் கண்ணில் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் போன்றவை நீங்கும்.

பல் வலி குணமாக
*********************
நந்தியாவட்டை ஒரு துண்டு வேரை எடுத்துக் கொண்டு அவற்றை வாயில் வைத்துக்கொண்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம். இவ்வாறு செய்தால் அனைத்து பல் வலிகளும் குணமாகும்.

வயிற்றுப் புழுக்கள் வெளியேற
**************************************
நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு அவற்றை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் முற்றிலுமாக வெளியாகும்.

மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க
**********************************************
நந்தியாவட்டை வேர்த்தோலை எடுத்து நன்னாரி, கடுக்காய், சுக்கு ஆகியவற்றை கஷாயமாக்கி அந்த கஷாயத்தில் இந்த வேர்தோலை ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுதுபோல் அரைத்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

www.nammalvar.co.in
#nammalvar #organicfarming #farmersmarket
Photo
Add a comment...

Post has attachment
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும்
இவை நான்கும்
கலந்து உனக்கு
நான் தருவேன்
கோலம் செய் துங்கக்
கரிமுகத்துத்தூமணியே
நீ எனக்கு சங்கத்
தமிழ் மூன்றும் தா
வினையெல்லாம்
தீர்த்துவைப்பாய் விநாயகா🙏🙏🙏
அனைவருக்கும்
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்!!!

www.nammalvar.co.in
#OraganicFarmingRevolution
#Nammalvar #FarmersMarket
Photo
Add a comment...
Wait while more posts are being loaded