Profile cover photo
Profile photo
சுரேஷ் கண்ணன்
3,653 followers
3,653 followers
About
Posts

‘காதல் ஓவியம்’ திரைப்படத்தின் பாடல்களை அவ்வப்போது பார்ப்பதும் கேட்பதும் என் வழக்கம். என் மனதிற்கு மிக நெருக்கமான ஆல்பம் அது. தானொரு சக்தி உபாசகன் என்பதை அத்திரைப்படத்தில் மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பார் பாரதிராஜா. இதில் மட்டுமல்ல, அந்தி மந்தாரை, முதல் மரியாதை என்று அவருடையை சில படங்களில் platonic love-ன் கூறுகள் தொடர்ச்சியாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக ‘காதல் ஓவியம்’ வணிகரீதியாக வெற்றியடையவில்லை. பாரதிராஜா என்கிற உணர்ச்சிப்பிழம்பு நிச்சயம் வலியைத் தாங்காமல் கதறியிருப்பார். அமிர்தத்தைத் தந்தால் இப்படித் துப்புகிறார்களே என்கிற கோபத்தில் அவர் வேறு ஏதோவொன்றை தமிழர்களின் வாயில் திணித்ததுதான் அடுத்த திரைப்படமான. ‘வாலிபமே.. வா.. வா’.. என்றாலும் நமக்கு உறைப்பதேயில்லை.
Add a comment...

அலுவலகத்தில் ஏர்டெல்லும், வீட்டில் தனிப்பட்ட உபயோகத்திற்காக பிஎஸ்என்எல் பிராண்ட்பேண்டும் உபயோகிக்கிறேன். அலாவுதீன் பூதம் போல திரும்பிப் பார்ப்பதற்குள் வேலையை முடித்து விட்டு ‘அடுத்து என்ன செய்யணும் எஜமான்?’ என்பது போல் ஏர்டெல் மின்னலாக இருக்கிறது.

ஆனால், பிஎஸ்என்லோ, ‘ஒரு காப்பி போட்டுத் தாயேன்’ என்று பணிவாக கேட்டாலும்.. ‘ஆமாம். இந்த முகரைக்கட்டைக்கு காப்பி ஒண்ணுதேன் குறைச்சல்’ என்கிற மனைவி போல முகத்தை திருப்பிக் கொண்டு மெளனம் சாதிக்கிறது.

பூதமா? மனைவியா? எந்தப் பக்கம் சாயலாம்? (இரண்டும் ஒன்றுதான் என்கிற பழைய ஜோக்கை அடிக்காதீர்கள்).

ஆனால் அத்தனை சங்கடத்திற்குப் பிறகும் ஏதோவொன்று பிஎஸ்என்எல்லை விட்டு விலக முடியாமல் தடுக்கிறது. வடிவேலு மொழியில் சொன்னால் ‘உறுத்துதே”.
Add a comment...

Post has attachment
#பிக்பாஸ்தமிழ்சீஸன்2 – நாள் 95 – 20.09.2018

வழக்கம் போல் தன் அபத்தமான சிறுபிள்ளைத்தனத்தை நிகழ்த்தினார் ஐஸ்வர்யா. ஜனனியின் டவர் லீவரை அவர் திறக்க முயல, ‘அடிபட்ட ஒருவருக்கு உதவி செய்யும் நேரத்திலும் இதைச் செய்வாயா? வேண்டுமென்றால் எல்லாவற்றையும் நீயே எடுத்துக் கொள்” என்று எரிச்சலானார் ஜனனி. ரித்விகா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இந்தக் கோபம் பரவியது.

இது ஸ்போர்ட்மேன்ஷிப்பே அல்ல. ஐஸ்வர்யா செய்தது அயோக்கியத்தனம் என்று கூட சொல்லலாம். எனவே மற்றவர்களின் கோபத்தில் நியாயம் இருந்தது. மற்றவர்கள் எடுத்துரைத்த நியாயத்தையும் ஐஸ்வர்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘விளையாட்டு என்றால் விளையாட்டு’ என்று பிடிவாதம் பிடித்தார். தனக்கு என்றால் மட்டும் “நீங்க என்னை டார்ச்சர் பண்றீங்க” என்று அழும் ஐஸ்வர்யா மற்றவர்களுக்கு என்றால் கேம்தானே என்று பிடிவாதம் பிடிப்பது மனிதத்தன்மையற்றது. “நீ செஞ்சது சரியில்லை” என்று பிறகு புகையறையில் உபதேசம் செய்தார் யாஷிகா. ‘எனக்கும்தான் கையில் அடிபட்டிருக்கு” என்று அப்போதும் தன் நோக்கிலேயே பேசினார் ஐஸ்வர்யா.


https://cinema.vikatan.com/bigg-boss-tamil/137589-battles-get-intense-and-riythvika-gets-hurt-bigg-boss-episode-96-highlights.html
Add a comment...

Post has attachment
எழுத்தாளரும் இயக்குநருமான அம்ஷன்குமார் இயக்கிய திரைப்படம் ‘மனுஷங்கடா’. அதில் வரும் பாடல் இது. இன்குலாப்பின் பிரபலமான வரிகள் ஆவேசத்தைக் கிளப்புகின்றன. அர்விந்த்- சங்கரின் இசையும் பொருத்தமாக அமைந்துள்ளது.

இந்தியன் பனோரமா திரைவிழாவில் இடம்பெற்ற ஒரே தமிழ் திரைப்படம் என்கிற பெருமையோடு புதுச்சேரி அரசு விருது உள்ளிட்டு பல சர்வதேச விழாக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. – ‘மனுஷங்கடா”. அம்ஷன்குமாருக்கு வாழ்த்துகள்.https://www.youtube.com/watch?v=KNOYYxD34ng&feature=youtu.be
Add a comment...

புதிய தொழில்நுட்பங்களை அதன் அந்திமக்காலத்தில் உபயோகப்படுத்துவதே என் வழக்கம் அல்லது அப்படியாகவே எனக்கு வாய்த்திருக்கிறது. அந்த வகையில் சமீபமாக வாட்ஸ்-அப்பில் நுழைந்திருக்கிறேன். இதில் என்ன எழவு இருக்கிறதென்று மக்கள் இப்படி மாய்ந்து மாய்ந்து மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சில வீடியோத்துண்டுகள். (பெரும்பாலும் காதல் சோகம்), கொடுமையான பொன்மொழிகள், மீம்கள் என்று ஏராளமான அபத்தமான விஷயங்களால் நிறைந்திருக்கின்றன.

கல்யாணத்திற்கு பரிசளிக்கப்படும் கடிகாரம் பல காலத்திற்கு சுற்றி வருவது போல சில துண்டுகள் மறுபடி மறுபடி பகிரப்படுகின்றன. ஒரு செய்தியை பகிர முடியாதபடி பல நுட்பத்தடைகள். அதிலும் நான் வைத்திருக்கும் பழைய மாடல் கைபேசி பல விஷயங்களுக்கு ‘ம்ஹூம்.. மாட்டேன் போ’ என்கிறது. ஏன் உள்ளே வந்தோம் என்று தோன்றுகிறது.

ஃபேஸ்புக்கிற்கு வந்த போது கூட இதே போல்தான் நினைத்தேன்.
Add a comment...

Post has attachment
#பிக்பாஸ்தமிழ்சீஸன்2 – நாள் 93 – 18.09.2018

‘அனைத்து கடினமான விஷயங்களுக்கும் ஓர் எளிமையான தீர்வு உண்டு’ என்றொரு பழமொழி இருக்கிறது. பெண் என்பவள் சக்தியின் வடிவம்; மனவுறுதியின் அடையாளம் என்பதெல்லாம் ஒருபக்கம் உண்மைதான் என்றாலும் அவர்களை விளையாட்டுக்காக அச்சுறுத்த ஓர் எளிமையான வழியுண்டு. ஆம். எத்தனை கெத்தான பெண்மணியாக இருந்தாலும் டெரரான ஆண்களுக்குகூட அஞ்சாதவர்கள் இந்த விஷயத்திற்கு நிச்சயம் அஞ்சுவார்கள். பல்லி, கரப்பான்பூச்சி போன்ற எளிய ஆயுதங்களே அவை. ஒரு கரப்பானைப் பார்த்தவுடன் வாயில் வைத்து வீல் என்று அலறாத பெண்ணை இதுவரையும் நான் பார்த்ததில்லை. சரி, இந்த வர்ணணை மிகைதான் என்றாலும் அடிப்படையில் பெரும்பாலும் உண்மை. அதென்னமோ, கரப்பான் பூச்சிக்கும் பெண் குலத்திற்கும் பூர்வாந்திரமான நூற்றாண்டுக்கால விரோதம் உள்ளது. கரப்பானுக்கு மீசையிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.https://cinema.vikatan.com/bigg-boss-tamil/137360-viji-becomes-super-villain-in-episode-93-of-bigg-boss-season-2.html
Add a comment...

Post has attachment
#பிக்பாஸ்தமிழ்சீஸன்2 – நாள் 92 – 17.09.2018

மென்மையான மனதுடைய பார்வையாளர்கள் இந்தக் கொடூரமான காட்சிகளினால் மனதளவில் பாதிக்கப்படலாம். மிக குறிப்பாக இவற்றை ஒருவேளை பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரிடம் வன்முறை உணர்ச்சியும் பழிவாங்கல் உணர்வும் பெருகக்கூடிய வாய்ப்பும் உண்டு. ஊடகங்களின் மூலமாக பல்வேறு எதிர்மறை செய்திகள் தொடர்ந்து நம் மனதில் படிந்துகொண்டே இருக்கின்றன. ‘வெடிகுண்டு வெடித்து நூறு பேர் கொடூர பலி’ என்ற செய்தியைக் கூட ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம்.

ஒரு வளரிளம் சிறுவன் தன்னிடமிருந்த டேப் வழியாக ஒரு விபத்துக்காட்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மெல்லிய அதிர்ச்சியுடன் அவனிடம் அதைப் பற்றி விசாரித்தபோது ‘ஒரு வண்டி வேகமா வந்து அந்த ஆளை அப்படியே தூக்கிடுச்சு. பார்க்கவே சூப்பரா இருந்துச்சு” என்று மகிழ்ச்சியும் சிரிப்பும் கொப்பளிக்கச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் எனக்குத்தான் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. இது போன்று வன்முறைக் காட்சிகள் இன்று இணையத்தில் ஏராளமாக இருக்கின்றன. திரைப்படங்கள், வீடியோகேம்கள் என்று பெரும்பாலானவற்றில் வன்முறையும் எதிர்மறைத்தன்மையும் பெருகியோடுகிறது.

இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதையே பிரதிபலிப்பது துரதிர்ஷ்டமானது


https://cinema.vikatan.com/bigg-boss-tamil/137240-new-task-has-been-given-in-episode-93-of-bigg-boss-season-tamil-2.html
Add a comment...

Post has attachment
இன்று இப்படி பைத்தியம் பிடிக்க வைத்து விட்டாரே… (குப்புசாமி கணேசன்).


+Abedeen H FYI

https://www.youtube.com/watch?v=vPPSangaJ-4
Add a comment...

Post has attachment
தி இந்து – பெண் இன்று, இணைப்பிதழில் வெளிவந்த புகைப்படங்கள் இவை. நவீன் கெளதம் எடுத்திருக்கிறார். இணையப் பதிவோடு ஒப்பிடும் போது அச்சிதழில் இன்னமும் பெரிய அளவில் வசீகரமாக வந்திருந்தன. நெடுநேரம் அந்தப் புகைப்படங்களையே நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன். அடிப்படை கலையுணர்வு உள்ளவர்களுக்குத்தான் இது போன்ற சித்திரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றும்.

இன்று புகைப்படங்கள் நிறைய எடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் போலியாக சிரிப்பவர்களாக நாம் சுருங்கி விட்டோம். அகம் மலர்ந்து வெள்ளந்தியாக சிரிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அந்தச் சூழலில் இது போன்ற முகங்கள்தான் சிரிப்பின் தரிசனம் அணைந்து போகாமல் காப்பாற்றுகின்றன என்று தோன்றுகிறது.
Photo
Add a comment...

புலனாய்வு ஊடகங்களின் கைங்கர்யத்தினாலோ என்னமோ நாம் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணுடனும் எதிர்மறைத்தன்மையுடனும் பார்க்கத் துவங்கி விட்டோம் என்று தோன்றுகிறது. நேர்மறையான விஷயங்களோ, நபர்ளோ என்று எதுவும் இருப்பதாக நாம் நம்பத் தயாராக இல்லை. ‘எல்லாம் சரிதான்..சார்.. ஆனா.. என்னமோ டவுட்டா இருக்கு” என்று அனைத்திலும் ‘உலகசதி’ இருப்பதாக கற்பனை செய்து கொள்வதும் பீதியடைவதும் உளவறிய முயற்சிப்பதும் வெறுப்பரசியலை பரப்புவதும் மிகுந்து அது சமூகத்தின் மனநோயாக மாறி விட்டதோ என்று தோன்றுகிறது.

‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்று கார்ல்மார்க்ஸ் சொல்லிச் சென்றது உண்மைதான். விழிப்புணர்வுடன் இருப்பது வேறு, அனைத்தையும் எதிர்மறைத்தன்மையுடன் அணுகுவது வேறு. உலகமே முற்றிலும் மனநோய் விடுதியாகி விடுவதற்குள் விழித்துக் கொள்வது நல்லது. நேர்மறையான விஷயங்களை அதிகம் பரப்புரை செய்ய வேண்டிய தருணம் இது.
Add a comment...
Wait while more posts are being loaded