Profile

Cover photo
Tamilnews Vancouver
96 followers|5,133 views
AboutPostsPhotosVideos

Stream

Tamilnews Vancouver

commented on a video on YouTube.
Shared publicly  - 
 
படம் நன்றாக உள்ளது பார்க்கும்போது கண்ணீர் வந்துவிட்து.நீங்கள் மேலும் வளர எம் வாழ்த்துக்கள்
 ·  Translate
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
 
தனியார்துறை சொத்துகளை பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது சிறிலங்கா அரசாங்கம்


சிறிலங்காவில் சொத்துக்களைப் பயன்படுத்துதல் மற்றும் சிறப்பாகச் செயற்படுத்துதல் போன்றவற்றுக்கு அரசாங்கத்திற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

புதிய சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதன் மூலம் சிறிலங்கா அரசு 37 நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமலும், சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு எவ்வித சந்தர்ப்பங்களும் வழங்காமலும், இந்தப் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் முன்னணி வர்த்தக சம்மேளனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

'இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு சொத்துக்களும் தனியார் துறையால் உரிமை கொள்ளப்பட முடியாது' என்று அதிபர் ராஜபக்சவின் இளைய சகோதரர்களில் ஒருவரும், செல்வாக்கு மிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சொத்துக்கள் அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் உரிமை கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைக் கையகப்படுத்தவதன் மூலம் அவற்றில் இருந்து உயர்ந்த பட்ச நலன்களை அடைந்து கொள்ள முடியும்.

இந்தச் சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்“ என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தநட்ட ஈடானது எதனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்பது தொடர்பாகத் தெளிவின்மை காணப்படுகின்றது.

“நாங்கள் ஒருபோதும் தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்த மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவர் என வாக்குறுதி அளிக்கின்றேன்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச்சட்டம் முதலீட்டாளர்களின் மனபலத்தைப் பாதிப்பதுடன், சிறிலங்காவின் போருக்குப் பிந்திய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 50 பில்லியன் டொலர்களை முதலிட்டுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற விவாதத்தின் போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது 'அரசியல் நோக்குக்' கொண்டது எனவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான புதிய சட்டம் 'தேசிய பொருளாதார நலன்களை' முகாமைத்துவம் செய்வதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்குகின்றது.

இது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் வாதிட்டுள்ளனர். அத்துடன் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையிலிருக்கும் போது புதிய சட்டம் தொடர்பாக விவாதிக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியது.

ஆனால் சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரும் சபாநாயகருமான சமல் ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பைத் தனது அதிகாரத்தின் மூலம் நீக்கம் செய்து கொண்டதுடன், புதிய சட்டம் நாட்டின் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் அதிகாரத்திற்குட்பட்டுள்ளது என சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றிற்கு தகவல் வழங்கியதன் பின்னர் விவாதத்திற்கான அனுமதியை வழங்கினார்.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹில்ரன் விடுதியை நடாத்தும் Hotel Developers Lanka Plc மற்றும் Pelwatte Sugar Industries Plc இற்குச் சொந்தமான 6300 ஹெக்ரேயர் நிலம் ஆகியனவும் தற்போது கையகப்படுத்தப்படவுள்ள புதிய சட்ட மூலத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சொத்துக்களைக் கையகப்படுத்துதல் தொடர்பான சட்ட மூலம் ஒக்ரோபர் 01 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பெலவத்தை சீனித் தொழிற்சாலைகள் நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி 15.5 சதவீதத்தாலும், Hotel Developers Lanka Plc இன் பங்குகளின் பெறுமதி 27.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்தச் சட்டம் குறிப்பிட்ட சில சொத்துக்களைக் கையகப்படுவத்துவதற்கான அனுமதியை வழங்குவதாக ராஜபக்ச அறிவித்துள்ள போதிலும், இது வர்த்தகர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என பொருளியலாளர்கள், முதலீட்டாளர்கள், அரச அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'இது பாரிய திட்டங்களைப் பாதிக்கச் செய்வதுடன், பெரியளவில் முதலீடுகளை மேற்கொள்பவர்களையும் கவலை கொள்ள வைக்கும்' என முன்னணி பொருளியல் ஆய்வாளரான அமல் சந்தரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில், சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலர் பெறுமதியான விடுதி உடன்படிக்கை ஒன்று நிலப் பிரச்சினை காரணமாக ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் மீது பல விமர்சன அலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

புதிய சட்டம் முலீட்டாளர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளதாக வங்கித்துறையின் மூத்த பொருளியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பலரிடம் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்திருக்க வேண்டும் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் 2009 இல் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து இறைக் கொள்கை மற்றும் வரிச் சீர்திருத்தம் என்பன அனைத்துலக நாணய நிதியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது உள்ளடங்கலான முதலீடுகளை அதிகரிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 இன் முதல் ஆறு மாதங்களில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் இரு மடங்காகும். அதாவது 413 மில்லியன் டொலராகும்.

இதில் பெருமளவான நிதி ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் Shangri-La Asia என்ற நிறுவனம் கொழும்பில் ஆடம்பர விடுதி ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடாகும்.

Thank you Reuters
 ·  Translate
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
 
Tamil G originally shared:
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
 
தமிழ் தேசிய நாௗ்.

காா்த்திகை 27-2011

இடம் :- ROYAL BANQUET HALL
2122 KINGSWAY, VANCOUVER.BC

அனைவரையும் அன்புடன் அழைக்கிறாா்கௗ்.
 ·  Translate
1
Add a comment...
Have them in circles
96 people
Saravanan Shanmugam's profile photo
dinesh kumar's profile photo
Michael Thornquist's profile photo
Fareed Samsudeen's profile photo
nanthagopan jeyarathnam's profile photo
Leah Bach's profile photo
Selvin kumar Vellayan's profile photo
rabi cool's profile photo
don inr's profile photo

Tamilnews Vancouver

Shared publicly  - 
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
1
1
Tamilnews Vancouver's profile photo
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
 
VANCOUVER TAMIL
1
Add a comment...

Tamilnews Vancouver has a new profile photo.

Shared publicly  - 
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
 
vancouver
1
Add a comment...

Tamilnews Vancouver

Shared publicly  - 
 
"நீலப்புலிகள்" கேணல் ரூபன் - லெப் கேணல் சிரித்திரன் ஆகிய மாவீரர்களின் 2ம் ஆண்டு நினைவு

பதிந்தவர்: ஈழப்பிரியா 20 FEBRUARY 2011

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்.

அவர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் "நீலப்புலிகள்" என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களது வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும்.

பகை வாழும் குகை தேடி - வான்
கருவேங்கை பாய்ந்தது..
காற்றோடு வந்த சேதி உலக
மெங்கும் புது வரலாறெழுதியது..
நமனை அஞ்சிடா வீரம் வெல்ல
தலைவன் அணியின் வீரர் போயினர்..
விண்ணைச்சாடிக் காற்றில் கலந்த
ரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..
உங்கள் தாகம் வெல்லும் நாளில்
எங்கள் தேசம் விடியும் விடியும்!!
 ·  Translate
1
Add a comment...
People
Have them in circles
96 people
Saravanan Shanmugam's profile photo
dinesh kumar's profile photo
Michael Thornquist's profile photo
Fareed Samsudeen's profile photo
nanthagopan jeyarathnam's profile photo
Leah Bach's profile photo
Selvin kumar Vellayan's profile photo
rabi cool's profile photo
don inr's profile photo
Basic Information
Gender
Decline to State