Profile cover photo
Profile photo
Jude Prakash
17 followers
17 followers
About
Jude's interests
View all
Jude's posts

Post has attachment
ஜொனியன்ஸிற்கு தங்கள் கல்லூரியின் மேல் பற்று கொஞ்சம் அதிகம். பரி யோவானின் தண்ணியில் என்ன இருக்கிறதோ தெரியாது, பள்ளிக்கூட வளாகத்தை விட்டு பிரிந்த பின்பும் பரி யோவான் நாட்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பீத்துவது ஜொனியன்ஸின் தனிச் சிறப்பியல்பு. ஜொனியன்ஸின் இந்த பீத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது ஜொனியன்ஸிற்கு வாழ்க்கைப்பட்ட புண்ணியவதிகளும் அவர்தம் பிள்ளைகளும் தான்.

Post has attachment
அறுபதுகளில் இந்தி மொழி திணிப்பிற்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் மொழி காக்க போராடிய தமிழகம், இன்று தனது பண்பாட்டிற்கெதிராக விழுந்த தடையால் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்திருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், முதலமைச்சரின் வீட்டு வேலைக்காரியையும் முதலமைச்சாராக்கி அழகு பார்க்கப் போகும் அசிங்கத்தை எதிர்பார்த்திருந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு, ஜல்லிக்கெட்டிற்கு ஆதரவாக அணிதிரண்ட தமிழக இளையோர் சற்றே ஆறுதலளித்திருக்கிறார்கள்

Post has attachment
977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய தமிழினத்தை பேரினவாதம் திட்டமிட்டு அழித்த வரலாறே 1983 இனக்கலவரம். அன்றிலிருந்து இருபத்தாறு ஆண்டுகள் நாங்கள் யுத்தத்தில் அழிவுகளை சந்தித்தது மட்டுமல்லாமல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் தவறவிட வைக்கப்பட்டோம். ஒரு புறத்தில் எங்கள் பொருளாதாரமும் வாழ்க்கை தரமும் பின்னோக்கி செல்ல, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தங்களை பொருளாதார, கல்வி, சமூக ரீதியாக பலப்படுத்திக் கொண்டு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை தமதாக்கிக் கொண்டார்கள்.


நாங்கள் மீண்டும் ஒரு பலமிக்க இனமாக மீளெழ எங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். யுத்தம் முடிவடைந்து கடந்த ஏழாண்டுகளில் எங்கள் ஒட்டுமொத்த சக்தியும் தேர்தல் களங்களிலும் அவை ஏற்படுத்திய வெற்று நம்பிக்கைகளிலும் சர்வதேசத்தின் பால் வைத்த நம்பிக்கையிலும் கரைந்து விட்டது என்பது கசப்பான உண்மை. 

Post has attachment
கிளிநொச்சி.. பெயரை கேட்டதுமே மனதில் ஒரு ஏக்கம் வரும். விடுதலைப் புலிகள் கோலோச்சிய காலத்தில் கிளிநொச்சிக்கு சென்று வந்தவர்கள், இன்றும் கிளிநொச்சியை கடக்கும் போது, அந்தக் காலத்தில் கண்டி வீதியின் இருமருங்கிலும் இருந்த காவல் துறை அலுவலகத்தையும், தமிழீழ நீதிமன்றத்தையும், சமாதான செயலக ஒழுங்கையையும், பாண்டியன் சுவையகத்தையும் மனக்கண் முன் கொண்டு வராமல் கிளிநொச்சி கடக்க மாட்டார்கள். 

Post has attachment
பாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் முப்பது தீவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி இராஜ்ஜியம் தான் பஹ்ரேய்ன். மன்னராட்சி நடக்கும் ஒரு இஸ்லாமிய நாடு. பெற்றோலியத்தில் தங்கியிருந்த பொருளாதாரத்தை, அதிலிருந்து மீட்டு, நிதிச் சேவைகள் நோக்கி நகர்த்திய முதலாவது வளைகுடா நாடும் பஹ்ரேய்ன் தான். மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு தேடி எம்மவர்கள் கடல் கடக்க வெளிக்கிட்ட போது, பஹ்ரேய்னையும் விட்டு வைக்கவில்லை.


எங்கட SJC92 பிரிவில் முதன்முதலாக மத்திய கிழக்கிற்கு போனவர் சியாமளராஜ். தொண்ணூறுகளின் மத்தியிலேலே மத்திய கிழக்கிற்கு பறந்து விட்டார். "டேய் நீங்க கொப்பி பேனையோடு தூக்கிக்கொண்டு திரிந்த நாட்களிலியே நான் தினாரில் உழைக்க தொடங்கிட்டன்" என்று லெவலடிப்பார். "எங்கட பட்சிலேயே மிடில் ஈஸ்டிற்கு முதல் முதலா வந்தது நான்தான்டா" என்று ஒரு நாள் ஸ்கைப்பில் பீத்தினார். "ஓமடா மச்சான், சந்திரனிற்கும் மனுசன் போக முதல் நாயைத் தான் அனுப்பினவங்கள்" என்று திருப்பி அடிக்க, சிரித்துவிட்டு கட் பண்ணினார்.

Post has attachment
யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணங்கள் எப்பவுமே உணர்வுபூரணமானவை. இந்து மாசமுத்திரத்தின் அலைகள் மோதும் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஒரு அதிகாலை வேளை யாழ்ப்பாணம் செல்லும் கடுகதி ரயிலில், பிதுங்கி வழியும் சூட்கேஸுகளைக் காவிக் கொண்டு, "வெளிநாட்டுக்காரர்" என்று ஊர்ச்சனம் பார்வையால் முத்திரை குத்த, ரயிலில் இருபத்தாறு ஆண்டுகளிற்கு பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியது.


2016ம் ஆண்டு பறந்தோடியே விட்டது. எங்களிற்கு வயது ஏறுவதால் நாட்கள் வேகமாக நகர்கிறதா, இல்லை உலகம் இறக்கை கட்டி பறப்பதால், பொழுதுகளும் வேகமெடுக்கிறதா தெரியவில்லை. இந்தாண்டு உலக அரங்கில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் 2016ஜ மறக்க முடியாத ஒரு ஆண்டாக பதிவு செய்துவிட்டன.

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded