Profile cover photo
Profile photo
Voice of Indian
22 followers -
RTI Act Training Institute| RTI Help Centre | RTI Workshops | Help on RTI Act
RTI Act Training Institute| RTI Help Centre | RTI Workshops | Help on RTI Act

22 followers
About
Voice of Indian's posts

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
மதுரை இந்தியன் குரல் உதவி மையத்தின் சாதனை !!!!!!!

2008 இல் நீதிமன்றம் விபத்தினால் பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கு இழப்பீடு வழங்க உத்திரவிட்டிருந்தது.

ஆனால் அந்த இழப்பீட்டினை பெற முடியாமல் 5 ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு நீதிமன்றம் செல்ல பண வசதி இல்லாத காரணத்தினால் இந்தியன் குரல் இலவச உதவி மையத்தினை அணுகியுள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் 5 ஆண்டுகள் கிடைக்காத இழப்பீட்டு தொகையை 5 மாதங்களில் அவருக்கு கிடைத்துள்ளது.

இதுவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் சாதனையாகும். !!!!!!!!

இதற்காகவே இந்தியன் குரல் அமைப்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் முதலில் நீதிமன்றம் செல்ல அறிவுறுத்துவதில்லை(சட்டத்திற்குட்பட்ட பிரச்சனைகளுக்கு)
Photo

Post has attachment
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1) இன் கீழ் விண்னப்பம்
பதிவு தபால் ஒப்புகை அட்டையுடன் தேதி:

விடுநர்,


பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்,
_________ மாவட்டம்,


ஐயா,
பொருள் : புதிய குடும்ப அட்டை கேட்ட எனது விண்ணப்ப தேதி: ______ அதற்கான மனு எண் :__

புதிய குடும்ப அட்டை கேட்டு நான் செய்த விண்ணப்பத்தின் மீது நாளது வரை எனக்கு வழங்கிடவில்லை. இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் தகவல்கள் அளிக்க வேண்டுகிறேன்.

1) மேற்காணும் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மானப் பதிவேட்டின் ; பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ; பதிவு அஞ்சல் பதிவேட்டின் சிறப்புப்பதிவேட்டின் ; சம்பந்தப்பட்ட பக்கத்தின் ஒளிநகல்.
2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் நடைமுறைகளைக் காட்டும் ஆணையின் ஒளிநகல்
3) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் பதவி அலுவலக விலாசம் விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் அவர்களின் நாட்குறிப்பின் அந்த நாட்களின் ஒளிநகல்
4) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அளிக்க வேண்டும் , அளிப்பத்தை எந்த காரணங்களால் நிறுத்தி வைக்கலாம், நிராகரிக்கலாம்; என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
5) மேற்காணும் எனது விண்ணப்பத்தினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளிநகலையும் அலுவலகக் குறிப்புக்கட்டுடன் வருவாய் ஆய்வாளரின் தனிபதிவேட்டில் சிறப்பு பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியப்பட்டுள்ள பக்கத்தின் ஓளிநகல்
6) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, விலாசம், அதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்
7) நான் கோரிய புதிய குடும்ப அட்டை எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள காரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
8) குடும்ப அட்டை விண்ணப்பங்களை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற எத்தனை தினங்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட சுற்றறிக்கையின் ஒளி நகல்
9) 1.5.2013 முதல் 9.6.2014 வரையிலான தங்கள் அலுவலக “புதிய குடும்ப அட்டை வழங்கல் பதிவேட்டின்” ஒளி நகல்
10) மாவட்ட , கோட்ட , வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பிர்க்க வருவாய் அலுவலர்களின் செல்பேசி மற்றும் முகவரிகளை வழங்கவும்

குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 4 இன் படி மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு துறை பொது தகவல் அலுவலர்கள் விவரங்கள் அவர்களின் முகவரிகள், எந்த தகவல்களுக்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படாத காரணத்தால் உரிய பொது தகவல் அலுவலர் முகவரி தெரியாத காரணத்தாலும் தங்களுக்கு இந்த மனுவை அனுப்புவதோடு சட்ட பிரிவு 6(3) இன் படி நடவடிக்கை வேண்டுகிறேன்.

இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணைப்புகள்:
1) எனது புதிய குடும்ப அட்டை மனு
2) புதிய குடும்ப அட்டை கேட்டும் விண்ணப்பித்த மனுவின் ஒப்புகைச் சீட்டு
3) எனது நீக்கல் சான்று நகல்
தங்கள் உண்மையுள்ள,

www.voiceofindian.org
Photo

Post has attachment
http://voiceofindian.org/know-local-body-govt-rti/

பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி செயல்பாடுகளை அறிய இந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்

http://voiceofindian.org/know-local-body-govt-rti/
Photo

Post has attachment
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தனியார் துறையை கேட்க விரும்பினால் அதனை கண்கானிக்கும் அரசு அமைப்பு மூலம் தகவல் கோரலாம்.

தனியார் மருத்துவமனை என்று வருகின்ற பொழுது வருமான, வரி போன்ர தகவல்களை கோருவது என்றால் வருமான வரித்துறை மூலம் கேட்கலாம்.

மருத்துவம், நோயாளி, மருந்து இருப்பு போன்ற மருத்துவம் சார்ந்த தகவல்களுக்கு , மாவாட்ட சுகாதார துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு மனு செய்யலாம்...
Photo

Post has attachment
இலவசமாக வழங்க வேண்டிய குடிநீர் எதற்கு அரசாங்கத்தாலயே விற்கப்படுகிறது ?

ரூ.3 க்கு 2 சப்பாத்தி ஆனால் குடிநீர் மட்டும் ரூ.10 ஏன் ?

உலக வங்கி விதிகளின் படி குடிநீர் மேலாண்மை திட்டங்களுக்கு கடன் பெற வேண்டுமானால் குடிநீரை இலவசமாக வழங்கக்கூடாது. அதனை வர்த்தக பொருளாக கருத வேண்டும் என்ற விதி.

அதன் படி இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் நீர் வளக் கொள்கையில் குடிநீரை வர்த்தக பொருளாக, தங்கம் போல் பங்குச் சந்தையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அந்த கொள்கை வரைவு நிலையிலேயே உள்லது.

அந்த கொள்கையின் படி விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரும் , வவிசாயி பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அந்த மசோதா வரைவு நிலையிலேயெ உள்ளதால் இன்று வரை ஆபத்து ஏதும் வரவில்லை.

ஆனால் மறைமுகமாக அதனை அரசாங்கம் செயல்படுத்த தொடங்கியுள்ளது.

அதன் ஒரு எடுத்துக்காட்டு - அம்மா குடிநீர். குடிநீர் அரசாங்கத்தால் வர்த்தக பொருளாக விற்கப்படுவதின் அடையாளமே அம்மா குடிநீர்.

வீடுகளுக்கு கேன் குடிநீர் திட்டமும் இதே காரணம் தான். விரைவில் குடிநீர் குழாய் காட்சி பொருளாக மாறும் நிலை வந்து கொண்டியுக்கின்றது.

www.voiceofindian.org
Photo

Post has attachment


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை விண்ணப்பத்தின் மீது 30 தினங்களாகியும் கிடைக்காமையால் செய்யப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விண்ணப்பம்

பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன்

தேதி:

விடுநர்,

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
முதன்மை தேர்தல் அலுவலர், செயலாளர்,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009

ஐயா,

பார்வை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கேட்ட எனது மற்றும் எனது குடும்பத்தாரின் ONLINE விண்ணப்ப எண்: E139082827,

(அல்லது)

பதிவு தபாலில் அனுப்பிய தேதி________எண்__________

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கேட்டு நான் செய்த விண்ணப்பத்தின் மீது நாளது வரை எனக்குத் தகவல் ஏதும் வழங்கிடவில்லை. இதைப் பய்யிரும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – இன் கீழ் தகவல்கள் அளிக்க கேட்டுகொள்கின்றேன்.

1) மேற்காணும் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மானப் பதிவேட்டின்; பதிவு செய்யப்பட்ட தன் பதிவேட்டின்; பதிவு அஞ்சல் பதிவேட்டின்; சிறப்புப் பதிவேட்டின்; சம்பந்தப்பட்ட பக்கத்தின் ஒளிநகல்

2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது, எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எனும் நடைமுறைகளைக் காட்டும் ஆணையின் ஒளிநகல்

3) மேற்காணும் விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர், பதவி அலுவலக விலாசம், விசாரணை செய்த தேது ஆகிய தகவல்களையும் அவர்களின் நாட்குறிப்பின் அந்த விசாரணை நாட்களின் ஒளிநகல்

4) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கேட்டு விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்கவேண்டும், எந்த காரணங்களால் நிறுத்தி வைக்கலாம்; நிராகரிக்கலாம்; என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்

5) மேற்காணும் எனது விண்ணபத்தைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் அலுவலகக் குறிப்பு கட்டு ஆகியவற்றின் ஒளி நகலை அளிக்க வேண்டுகிறேன்.

6) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இன்றுவரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, விலாசம், அதற்குப் பதிவு செய்யபட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களைத் தாங்கிய ஆவண நகல்

7) நான் கோரிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தங்கள் அலுவலகத்திற்கு தடையாக உள்ள காரணங்களுக்கு அடிப்படையான அரசு ஆணைகளின் ஒளி நகல்

8) 1.1.2013 முதல் 12.6.2014 தேதி வரையிலான தங்கள் அலுவலக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புப் பதிவேட்டின் ஒளி நகல்

ரூ.10 க்கான நீதிமன்ற வில்லையை இந்த மனுவின் முகப்பு பக்கத்தின் இணைத்துள்ளேன்.

குறிப்பு:- தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 6(3) இன் படி இந்த மனுவை சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலருக்கு அனுப்ப கேட்டிக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,

இணைப்புகள்:
1) எனது விண்ணப்பத்தின் நகல்(பதிவு தபாலில் அனுப்பிருந்தால்)

ஆன்லைனில் விண்ணப்பிக்க -
http://www.elections.tn.gov.in/eregistration/

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய -
http://voiceofindian.org/forms-for-govt-benefits-tamil-nadu/

Join Voice of Indian by giving like:
http://www.facebook.com/myvoiceofindian
Photo

Post has attachment
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பெற்றோர்களே! மாணவர்களே! 

SSDA BOOK BANK
We give text books for college students application issued every year june and augest 
There are hundreds of interested and intelligent students struggling to continue their studies in the soaring cost of education. We can jointly help them in a very small way by lending the books on loan basis until they complete their studies.
We are maintaining the book bank by collecting the books from the kind hearted people like you and keep them in proper order so that we can lend it to the needy economically weaker section students until they complete their education. We are not even giving you the trouble of delivering the books at our book bank.
Once if you decided to hand over the books you can call us by E mail or phone. We will arrange to collect it from your place.
You have the liberty of visiting our place of book bank at all working days from 10.00 AM TO 5.00 pm as per your convenience and extend your valuable suggestion to improve the functioning of our systems. -
Kindly we request you and your friends be support and join our service in future
Thanking you
by
Students Skills Development Association
SSDA BOOK BANK
44/48 sp koil 3rd street
Near Periyar nagar
Thiruvottiyur
Chennai 600 019
9444124519,
8925419434

சென்னை மற்றும் அதன் அருகாமையில் வசிப்பிடம் இருக்க வேண்டும்

மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் கலூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கி வருகின்றது ஒரு பருவம் முடிந்ததும் திரும்ப அளித்து புதிய புத்தகம் பெற்றுக்கொள்ளும் வகையில் ssda புத்தக வங்கியை நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வருகின்றது

2014 -15 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் 01-06-2014 அன்று மாலை 4.00 மணி முதல் முதல் - 6.00 மணி வரை வழங்கப்படுகின்றது
தொடர்புக்கு
SSDA புத்தக வங்கி
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம்
44 சீனிவாசப் பெருமாள் கோயில் 3-வது தெரு
பெரியார் நகர் அருகில் வெள்ளையன் செட்டியார் பள்ளி எதிரில்
திருவொற்றியூர்
சென்னை 6000019
9444305581
Photo
Wait while more posts are being loaded