Profile cover photo
Profile photo
Chandramowleeswaran. V
1,993 followers -
என் கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டவருக்கெல்லாம் நன்றி. அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னை வலிமையாக்கியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு
என் கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டவருக்கெல்லாம் நன்றி. அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னை வலிமையாக்கியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு

1,993 followers
About
Chandramowleeswaran. V's interests
View all
Chandramowleeswaran. V's posts

Post has attachment
மக்களாட்சியின் பிரதான நோக்கமான transparency ம் மக்களின் பிரதிநிதித்துவமும் எப்போதெல்லாம் நீர்த்துப் போகிறது

Democracy ன் cardinal theme மக்கள் பங்களிப்பு என்பதிலிருந்து நம் நம்பிக்கைகள் வெகுதூரம் விலகி வந்து, தனி மனித அபிமானங்களாக உருவெடுத்து, தலைவன் / தலைவி சார்ந்த விருப்பங்களாக வலுப்பெறும் போது

அதுவும் அப்படி விருப்பங்கள் வலுவடையும் போது, சிலர் மீதான வெறுப்பின் காரணமாக வேறு சிலர் மீது உருவாகும் பரிவுகள் அதிகமாகும் போது

இப்படியான பரிவுகளின் காரணமாக, transparency , confidential, secrecy இவை மூன்றும் எப்படி ஜனநாயக அரசில் கையாளப்பட வேண்டும் என்பது மறந்தே போகும் போது அல்லது சொந்த லாப நஷ்ட கணக்குகளின் அடிப்படை மட்டுமே இதிலே முன்னிறுத்தப்படும் போது

முசோலி்னி மாதிரி ஆசாமிகள், ஜனநாயகத்தை கேலி செய்வதற்கு இது மாதிரி, சில inconsistencies நாமே தயாரித்து வைத்துக் கொள்கிறோம்

முசோலினியின் கோப மொத்தமும் இரண்டு சின்ன para விலே படிக்கலாம்

political decisions are not made by legislators at all , but made behind the scenes by powerful and sinister interest of various kinds so that legislatures are a faced and representative democracy a sham

The Democratic regime may be defined as from time to time giving the people the illusion of sovereignty while the real effective sovereignty lies in the hands of other concealed and irresponsible forces

மதராஸ் பட்டிணத்து ஆசாமிகளுக்கு தாமஸ் மன்றோ நல்ல பரிச்சயம் இருக்கும்ம். குதிரை வீரன் சிலை.. இவர் East India Company காலத்திலே மதராசிலே கவர்னராக இருந்தவர். இவர் ஜுலை 1827ல் உத்தியோக ரீதியாக பயணத்தில் இருக்கும் போது, காலரா நோய் வந்து இறந்தார்.

அடுத்த கவர்னரை நியமிப்பதற்கு அவகாசம் வேண்டுமென்பதால் கம்பெனி நிர்வாகம் அப்போதைக்கு மதராஸ் மாஹாணதில் உசந்த பொறுப்பில் இருந்த Henry Sullivan Graeme என்ற அதிகாரியை Acting Governor ஆக போட்டது . இவர் கவர்னர் ஜோலிக்கு பொறுப்புக்கு வந்தவுடன், செத்துப் போன கவர்னர் மன்றோவின் நினைவாக ஒரு சொற்பொழிவு செய்தார்..

அது ரொம்ப பிரசித்தமாக Minute of the Acting Governor of Madras, Henry Sulivan Graeme, paying tribute to the merits of his predecessor, Sir Thomas Munro என்பதாக சரித்திரத்தில் பதிவாகிவிட்டது

என்னதான் கம்பெனி ராஜ்ஜியமாக இருந்தாலும் கவர்னர் மன்றொ எப்படியாக ஜனங்களின் கவர்னராக இருந்தார் என்பதை Henry Sulivan Graeme ரொம்பவும் சிலாகித்துப் பேசியதும் இல்லாமல், மன்றோ ஒரு ஜனநாயக கவர்னர் என முத்தாய்ப்பாக முடித்திருப்பார்.

முசோலினி கிடக்கிறார், ஜனநாயகம் பத்தி அவருக்கென்ன தெரியும்

Henry Sulivan Graeme மாதிரி ஆசாமிகளை உதாரணம் எடுத்துப் பழக்கிக் கொள்வோம்

உபரியான தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்

மதராசின் Acting Governor ஆக இருந்த Henry Sulivan Graeme ஞாபகமாகத்தான், மதராசில் ஒரு முக்கியமான சாலைக்கு Graems சாலை என பெயர்..

அவர் மதராசிலே வசித்த போது இந்த ரோடு கடையில் தான் அவருடைய பங்களா இருந்தது
Photo

என் மகளின் கல்லூரிப் படிப்பில் Visual Sociology எனும் ஒரு பாடத்தில் assignment அதன் அங்கங்கள்,

1) ஒரு குறிப்பிட்ட topic ல் முன்பு செய்யப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சிலவற்றை தேர்வு செய்து, அதில் சொலப்பட்ட விபரங்களை நாம் எப்படி புரிந்து கொண்டோம் என summarise செய்வது

2) அந்த topic ல் குறிப்பிட்ட அளவில் கருத்து சேகரிப்பு (survey with questionnaire )

3) அந்த topic தொடர்பாக ஒரு குறும்படம் (short film ) எடுப்பது, photo feature தொகுப்புகள் செய்வது

என் மகள் இந்த assignment க்குதேர்வு செய்த topic " Fuel Scarcity"

இந்த தலைப்பில் Fuel Consumption in India, Impact on Economy, , Public Transport System, Fuel Scarcity, Carpooling எனும் உப தலைப்புகளை இணைத்து, இந்த தலைப்புகளில் 20 ஆராய்ச்சி கட்டுரைகளைத் தேடி, வாசித்து அதன் விபரங்களைத் தொகுத்து முதல் கட்டம் நல்லபடி முடிந்தது

assignment முதல் கட்டம் தாண்டி இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது

அதாவது topic ல் குறிப்பிட்ட அளவில் கருத்து சேகரிப்பு (survey with questionnaire)

இதற்கான கேள்விகள் Google Forms ல் உருவாக்கி , circulate செய்து, பதில் வாங்கி தொகுக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது

கேள்விகள் இந்த link ல் :
https://goo.gl/forms/LYlwV65sf4HzwVFG3

விபரமாக வாசித்து பதில் சொல்ல இரண்டு நிமிஷம் ஆகலாம்

நண்பர்களை இந்த survey ல் பங்கு பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். This will help her a lot

Post has attachment
வாசிக்கின்றவர்களின் கருத்துகள் எப்படி என்ன என்பதற்காக FaceBook Survey, Google Forms வழியாக survey என்பதில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு நன்றி.

கதை போலவே நிஜங்கள் 99 % participant க்குப் பிடித்திருக்கிறது


எல்லோருக்கும் என் ஸ்கூல், என் காலேஜ், நான் விளையாடிய தெரு என் பால்ய ஸ்நேகிதர்கள், என் adolescence பருவத்து, romantic actions, என Nostalgia வசீகரம் இருக்கிறது. இன்னொருவர் அப்படியான நினைவுகளைச் சொல்லும் போதோ , எழுதும் போதோ அதைக் கவனிக்கும் தருணங்களில் நிகழும் ஒருவிதமான time travel பரவசம்

அமெரிக்காவின் University of Kansas ன் Social Psychology பேராசிரியர்கள் Matthew Baldwin , Mark J. Landau என்பவர்கள் அவனுடைய பழைய நினைவுகள் எப்படி அவனுக்குள் psychological மாற்றங்களை கொண்டு வருகின்றன என அதி தீவிரமாக ஆராய்ச்சி செய்து , ஒரு நல்ல கட்டுரை தந்திருக்கிறார்கள்


இந்த கட்டுரை + survey output + தஞ்சாவூர் போய் வந்த memoir impact இரண்டும் சேர்த்துக் கொண்டு "கதை போலவே நிஜங்கள் - part 2 ஐ தொடரப் போகின்றேன்..

ஏற்கனவே இந்த தொடரில் ஒரு post மட்டும் செய்து நிறுத்தி வைத்திருந்தேன் ( https://www.facebook.com/kathaipolavenijangal2/)

இந்த தொடரின் இரண்டாம் கதை இப்படி தொடங்குகிறது

ராமநாதன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் இறங்கி, ரோட்டின் எதிர்பக்கம் போய், வல்லம் பஸ் வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன்

அஸ்பெட்டாஸ் கூரைக்கு கீழே குணங்குடி தாஸன் சர்பத் கடையில் நல்ல கூட்டம்

வல்லம் போகிற பஸ்ஸில் இரண்டு ரகம்.. மெடிக்கல் காலேஜ் உள்ளே போகாமல் நேரே போகும் பஸ்கள். மெடிக்கல் காலேஜ் உள்ளே போய், மூன்றாவது gate வாசலில் டீக்கு இளைப்பாறும் பஸ்கள்.

எனக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.. straight பஸ்க்கு காத்திருந்தேன். இதோ வந்துவிட்டது

பி ஏ பாஸ்கர் ஆஸ்பத்திரி இருக்கும் பஸ் ஸ்டாப்பில் வந்த சோதனை, என்னை மெடிக்கல் காலேஜுக்குள்ளே கட்டிப் போடப் போகிறது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை

மணி காலை ஒன்பதரை !!!

இந்தக் கதையின் தொடர்ச்சியை வரும் சனிக்கிழமை வரைக்கும் ஒத்தி வைக்கிறேன்
இன்னிக்கு மௌளீ சாருக்கு card பேசுது.. அவர் இப்ப 182 point தான்.. மிச்ச எல்லாரும் compulsory யா ஆடியாகணும்.. முன்னூறு பாய்ண்ட் தாண்டியாச்சு.. சாருக்கு தான் இப்ப open card .. இப்ப gate அடிச்சாருன்னா அவ்வளவு அவருக்குத்தான்"

நிஜம் தான்.. சீட்டு பேசியது.. Rummy and shoot. சோதனையாக open joker .. ஜோக்கர் சீட்டை எடுப்பது வீண் உள்ளே போகலாம் என சில விநாடிகள் யோசிக்கும் போது யாரோ அறைக் கதவைத் தட்டினார்கள்

"உள்ளே யாருங்க .. கதவைத் திறங்க.. போலிஸ் வந்திருக்கம்"

" சொல்லுங்க என்ன வேணும்"

"இங்கே சந்திரமௌளீ சார் யாருனு ...."

"நான் தான் சொல்லுங்க.. "

"சார் வணக்கம் நான் Head constable ஷண்முகம்.. லஞ்ச ஒழிப்புத் துறை.. டி எஸ் பி க்ருஷ்ணமூர்த்தி சார் .. அங்கே தெரு முனையில் நிக்கிறாங்க.. உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னாங்க

க்ருஷ்ணமூர்த்தி நல்ல உசரம்,, முன் தலை வழுக்கை, வலது இடது பக்கத்தில் கேசம் அடர்த்தியாக முன் தலை வழுக்கைக்கு அழகாக இருந்தது.

வெள்ளை சட்டை, காக்கி pant.. இப்படியாக உத்தியோக ரீதியில் உடுப்பு போடவில்லை என்றாலும் அவரை போலிஸ் அதிகாரி என சுலபமாக யூகிக்கலாம்.

"என்ன யோசனை.. போகலாமா"

ஆற்றுப் பாலத்தில் சிகரெட் குடித்தபடி நடந்து போய்க் கொண்டிருந்த கான்ஸ்டபிள், அவசரமாக சிகரெட்டை போட்டு பூட்ஸ் காலில் தேய்த்து, இடது கையில் வாய்ப் புகையினை துரத்தி, வலது கை சல்யூட்.. இத்தனையும் ஏக காலத்தில்.

"நம்ம ஆபிஸ் தான் போறோம்.. மெடிக்கல் காலேஜ் ரோடு சுந்தரம் நகர் "

"இடம் தெரியும் சார்.. இன்னமும் எதுக்கு என்னை கூட்டிட்டுப் போறீங்கன்னு சொல்லலை"

"சொல்றேன்.. பயப்படாதீங்க.. யாரும் தப்பா நினைப்பாங்கனு தான் மஃப்டில வந்தேன்.. "

"நீங்க மஃப்டில இருந்தீங்க.. ஆனாலும் நீங்க போலிஸ்னு பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும்.. உங்க பின்னாலே பைக்ல உட்கார்ந்து வர்ரது.. பயமாத்தான் சார் இருக்கு"

வாசலில் சிவப்பு கலரில் ஒரு போர்டு எதிர்பார்த்துப் போய் ஏமாந்தேன்..

"என்ன அங்கேயே நின்னுட்டீங்க.. உள்ளே வாங்க.. "

எத்தனை சின்ன தெருவில் அரசாங்க ஆபிஸ் இருந்தாலும்
அதெற்கென டீக்கடைகள் இருக்கின்றன

"என்ன டீ சூடா இருக்கா"

"என்ன சந்திரமௌளீ சார்.. சொல்றேன் கேளுங்க. ஒரு அரசாங்க அதிகாரி மேலே பிராது வந்திருக்கு.. அவர் துறையில் வேலை செய்ற ஒருத்தரோ transfer மனுவை recommend செய்றதுக்கு லஞ்சம் கேட்டார்னு.. அவரை லஞ்சம் வாங்கும் போது பிடிக்கணும்னு இந்த ஏற்பாடு .. இதோ இவர் தான் புகார் கொடுத்தவரு.. இவரு கையிலே phenolphthalein பௌடர் தடவி ரூபாய் நோட்டு தருவோம்..

இவரு போய் அந்த ஆபிசர் கிட்ட அந்த நோட்டுகளைக் கொடுப்பார்.. அடுத்த இரண்டு நிமிஷத்தில் நாம் அங்கே உள்ளே போய் அரெஸ்ட் பண்றோம்.. .. அவரு அந்த ரூபாய் நோட்டு தொட்டு வாங்கினதாலே அவர் கையிலே அந்த பௌடர் ஒட்டியிருக்கும்"

"அதெல்லாம் சரி இதிலே நான் எங்கே நடுவிலே வந்தேன்.."

"இது மாதிரி ரெய்டு அரெஸ்ட் போகும் போது, யார் மேலே புகாரோ அவருக்கு சமமான அந்தஸ்த்தில் இருக்கும் இன்னொரு அதிகாரியை சாட்சிக்குப் பக்கத்தில் வச்சுக்கிறது எங்க procedure

எல்லோரும் மஃப்டியில் இருந்தார்கள்.. தெரு முனையிலேயே டாக்சி நிறுத்தி இறங்கிக் கொண்டோம்..

"தைரியமா போங்க.. கவனம்.. அவருக்கு சந்தேகம் வராத மாதிரி பேசுங்க.. நாங்க வரோமா இல்லையானு திரும்பி பார்க்காதீங்க.. சகஜமா பேசிட்டு, கொடுத்திட்டு நிக்காதீங்க வந்திருங்க"

சின்ன சந்து போல தெரு.. அந்த ஒல்லி பிராது ஆசாமி.. திரும்பி பார்த்துக் கொண்டே நடந்து போனார்

திரும்பிப் பார்க்காமல் நடந்து போங்க.

சரியாக 20 நிமிஷம் கழித்து, வெளியே தலையாட்டிக் கொண்டே வந்தார்.

"கமான்.. நாம போகலாம்.. கையிலே தானே தந்தீங்க.. மேஜை, ஸ்டூல் இப்படி மேலே வைக்கலியே"

காலை தினத்தந்தி இரண்டாம் பக்கத்தில் அதிகாரி கைது . லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.. சாட்சியாக என என் பெயர் கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் வந்திருந்தது

" க்ருஷ்ணமூர்த்தி சார்.. நான் சந்திரமௌளீ பேசறேன் "

"எந்த சந்திரமௌளீ.... "

"சார் 1990 ல், ஒரு சனிக்கிழமை., முனிசிபல் காலனிக்கு ரெய்டு போனமே"

" ஓ ..ஓ இப்ப ஞாபகம் வந்திருச்சு.. ஆமாம் எப்படி என் நம்பர் கண்டுபிடிச்சீங்க.. what a surprise what a surprise .. கடைசியா உங்க கல்யாணத்துக்கு அழைப்பு அனுப்பிருந்தீங்க..ம்ம் அதுக்கு பின்னாலே இரண்டு தரம் போன பண்ணிருந்தீங்க.. அப்ப நீங்க செங்கல்பட்டில் இருந்தீங்க.. இப்ப நான் retire ஆய்ட்டேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. எத்தனை பசங்க... எப்படி இருக்கீங்க"

" நான் நல்லாருக்கேன் சார்.. நம்பர் உங்க போலிஸ் டிபார்ட்மென்ட்லே இங்கே சில நண்பர்கள் இருக்காங்க அவங்க தேடிக் கொடுத்தாங்க.. சென்னையில் இருக்கேன்... ஒரு Multi National company ல் இருக்கேன்.. நான் சர்க்கார் உத்தியோகம் விட்டது.. அப்புறம் private கம்பெனிகளுக்கு வேலைக்கு வந்தது ஒரு பெரிய கதை.. நேரிலே விபரமா சொல்றேன்.. நான் ஜூலை 9 , 10 தேதி தஞ்சாவூர் வரேன் . என் கூட வேலை செய்றவருக்கு Marriage அதுக்கு வரேன்.. ஊரிலே தானே இருக்கீங்க.. வந்துட்டு phone பண்றேன்"

"ரொம்ப சந்தோஷம்,, ரொம்ப சந்தோஷம்.. உங்களுக்கு நான் ஒரு தொகை தரணும்னு சொல்லிட்டிருந்தீங்க அது ஞாபகம் இருக்கா"

"ஏன் இல்லாம.. அன்னிக்கு உங்க ஆளுங்க என்னை அழைச்சுட்டு வராம இருந்தால் அந்த ஆட்டத்தில் ஜெயிச்சிருப்பேன்.. பந்தயத் தொகை, தலைக்கு பத்து ரூபா கணக்கு போட்டா மொத்தம் என்னைத் தவிர ஆறு பேர் ஆட்டத்தில் ஆக 60 ரூபா.. இப்ப 26 வருஷம் ஆச்சு , Interest , penalty எல்லாம் போட்டு கணக்கு எடுத்துட்டு வரேன்"

" ஹா ஹா.. ஹா... வாங்க வாங்க.. கொடுத்துட்டாப் போச்சு.. அன்னிக்கு உங்களுக்கு open joker னு சொல்லிட்டு அதை எடுக்கிறதை விட, உள்ளே ஒரு சீட்டு எடுக்கிறது நல்லதுனு சொல்லி, ஒரு probability sequence சொன்னீங்க.. அது நல்லா நினைவு இருக்கு"

60 ரூபாய்க்கு 5 % சாதா வட்டி போட்டாலும் வட்டி மட்டுமே இந்த இருபத்தியாறு வருஷத்துக்கு 78 ரூபாய் வருதோ.. 138 ரூபாய் அந்த retired police office கிட்ட வாங்க முடியுமா என்பதற்கு என்ன probability


கடந்த சனிக்கிழமை Mamallapuram resort ல் அங்கே வேலை செய்பவர்களின் workflow , material management , கொஞ்சம் அதட்டல் கலந்த supervision இதையெல்லாம் இரண்டு மணி நேரம் கவனித்தேன்

கேளிக்கை, பொழுது போக்கு என்பதற்காக தங்கள் resort க்கு வரும் customer களின் satisfaction க்கு பின்னே இருக்கும் அத்தனை உழைப்பைத் தெரிந்து கொள்வதில் அதிக சுவாரசியம் இருந்தது

"என்ன சார் வேணும்.. டாய்லட் அந்த பக்கம் போகணும்.. இப்படி வழியில்லை"

"நான் toilet போக இந்தப் பக்கம் வரவில்லை.. நீங்கல்லாம் என்ன வேலை பார்க்கிறீங்கனு சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"

"பாத்திரம் கழுவறதைப் பார்க்கிறதுல என்ன இருக்கு"

அவர்கள் பத்து பேர்.. எல்லோர் கைக்குப் பக்கமாய் ஒரு பெரிய டப்பாவில் cleaning powder .. அந்த சின்ன space ல் லாவகமாக U shape ல் அவர்களை வரிசைப்படுத்தி உட்கார வைத்த supervisor யார்

Listen carefully , this Layout is called Lean Manufacturing Layout.. there are four major layout patterns , U-shaped, I-Shaped, L-Shaped, Comb and Spine shaped

மனசு சுமார் இரண்டு நிமிஷம் 1987 க்கும் college ல் Industrial Management வகுப்புக்கும் போய் வந்தது. அந்த Professor இப்போது எங்கே இருப்பார்

"சார் அப்பாலே போங்க.. தண்ணி பீய்ச்சி அடிப்பாங்க.. மேலே எல்லாம் ஈரமாயிரும்.. "

பாத்திரம் தேய்க்கும் cleaning powder கொண்டு தேய்க்கப்பட்ட plate களில் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள்

கொஞ்சம் சொற்ப வெளிச்சத்திலும் நீர்த்திவலைகளின் மீது light refraction ல் சின்ன வானவில் காற்றில் ஆடியது

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும், உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும், கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே

உருவுடை வண்ணங்கள்.. என்ற phrase க்கு நம்மாழ்வாரை வியந்த என் கவனத்தை அந்த காக்கி ட்ராயர் பையன் கலைத்தான்

"சார் தள்ளி நில்லுங்க காலி சிலிண்டர் வெளில எடுத்துட்டுப் போகணும்.."

ஒவ்வொரு சிலிண்டரும் empty தான் என்பதை உறுதிப்படுத்தி அனுப்பிய இளைஞனுக்கு அந்த இடத்தில் நான் கொஞ்சம் அந்நியமாகத் தெரிந்திருக்க வேணும்

"சார் யாருனு"

"ஒன்னுமில்லை.. எங்க Office ல் எல்லாரும் நம்ம resort க்கு outing வந்தோம்.. நீங்க எல்லாம் எங்களை மாதிரி customer களைக் கவனிச்சுக்க வேண்டி back end ல் எப்படியெல்லாம் கவனமா வேலை பார்க்க்கறீங்கனு பார்க்க ஆசையா இருந்தது அதான் வந்தேன்"

" thank you sir,, சார் நிக்கிறீங்களே.. இருங்க chair எடுத்துட்டு வரச் சொல்றேன்.. டேய் தம்பி.... "

"இருக்கட்டும் இருக்கட்டும் பரவாயில்லை.. நீங்க இங்கே supervisor ங்களா"

"ஆமாம் சார்.. இரண்டு வருஷமா இங்கே இருக்கேன்.. சார் எந்த company லேர்ந்து வரீங்கனு தெரிஞ்சுக்கலாமா.. "

"இந்தாங்க என்னோட card "

"எப்படி சார் எங்க service உங்களுக்கு திருப்தியா இருக்கா

" எங்கள் திருப்திக்காக நீங்கள் செய்யும் இத்தனை உழைப்பைக் கவனிக்கும் போது என் satisfaction இன்னமும் அதிகமாகிறது"

" அப்பா resort க்குப் போய் உனகக்கு வேலை நினைப்புதானா"

" Look dear,, when you admire or appreciate something be it a melody, painting, photo, delicious dish etc etc .. you recognise the effort அதை நான் நேராகவே செய்தேன் அவ்வளவு தான் "
பதிமூன்று வருஷங்கள் கழித்து தஞ்சாவூர் செல்கிறேன்

9 ஜூலை & 10 ஜூலை அங்கே 

Post has attachment
எழுதலாம்னு எடுத்து வச்சிருக்கேன்
Photo

நான் பொதுவில் TV Channel விவாத நிகழ்ச்சிகளை ஈடுபாட்டுடன் பார்ப்பதில்லை. இரண்டு காரணங்கள்

1. By and Large விவாதத்தில் பங்கேற்பவர்கள், போதுமான data, reference களுடன் பேச வருவதில்லை, பெரும்பாலும் உளறல் வகை தான்

2. Surprising காக யாராவது ஒருவர் சரியான data , reference களுடன் பேசி எதிர்தரப்பை மடக்கிவிட்டால் எதிர் தரப்பின் பாய்ச்சல் ரொம்ப அபத்தமாக இருக்கிறது

TV Remote ல் Channel தாவ முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, தற்செயலாக ஒரு விவாத நிகழ்ச்சியில் இரண்டு நிமிஷம் தங்கும்படி ஆகிவிட்டது . அதில் ஒரு participant ன் கேள்வி / ஆதங்கம்

பள்ளி கல்லூரி பாடங்களில் அறிவியல் கல்வி தகவல்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு சட்டம் சார்ந்த கல்வி தகவல்களுக்கு Importance கொடுக்கப்படவில்லையே ஏன் ????

இந்தக் கேள்விக்கு ஒருவர் பதில் சொல்ல ஆரம்பித்தபோது, ரொம்ப ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தேன்.. இரண்டாவது வரியிலேயே சுவாரசியம் போனது. Animal Planet க்கு தாவினேன்.

"Appa the topic was a subject of your interest .. ஏன் channel மாத்தினாய்"

" I have a common question for those anguish .. "

"ம்ம் சொல்லு "

"நீயும் தினம் Facebook லிருந்து அரசியல்வாதிகளின் அறியாமை, ஊழல் எண்ணங்கள், மந்திரிகள் அடிமைகள் போல பணிந்து நிற்பது, நிலையில்லாத கூட்டணி calculation, மாற்றி மாற்றிப் பேசுவது இது மாதிரி சங்கதிகளில் Politicians ஐ கேலி செய்து வரும் நிறைய post களை காண்பிக்கிறாய் தானே ? "

"ஆமாம் அதுக்கென்ன இப்போ"

"இந்த கேலி vs Awareness என்பதை நினைத்துப் பார்த்தேன்.. I got some basic questions அதை sum-up பண்ண யோசிச்சேன்.. thought of making them as questions .. அதாவது கேலி செய்வது நிச்சயம் ஓர் உரிமை , சுதந்திரம் part of our anguish towards those people .. ஆனால் அதே சமயம் நமக்கு அதிலே எவ்வளவு awareness இருக்கு. . சில முக்கியமான அம்சங்களை நாம் தெரிந்து வைத்திருப்பது நம் கடமை தானே அப்படினு ஒரு stock taking கேள்விகளை வரிசையாக யோசித்தேன்.. May I list them

"சரி சொல்லு "

1. இந்திய அரசியல் சட்டத்தினை (Constitution of India ) முழுமையாக வாசித்திருக்கின்றீர்களா ?. மிகக் குறிப்பாக part III of the constitution ?

2. இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் (lok sabha, rajya sabha ) வலைத் தளங்களுக்கு ( website ) க்கு அடிக்கடி சென்று update களை கவனிக்கும் வழக்கம் உண்டா ?

3. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என நாடாளுமன்ற வலைத் தளத்தில் இருக்கும் special page ல் அவர்களது விபரங்களை browse செய்யும் பழக்கம் உண்டா ?

4. நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கும் விபரங்களை நாடாளுமன்ற வலைத் தளத்தில் browse செய்யும் வழக்கம் உண்டா ?. அவர்கள் பங்குபெற்ற விவாதங்கள், கேட்ட கேள்விகள், மசோதா தாக்கல் இது போன்ற விபரங்களை வாசித்தது உண்டா ?

5. நாடாளுமன்றத்தில்/ மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றும் முறைகள், சட்டம் / மசோதா நிறைவேற்றும் முறைகள் குறித்து தெளிவாகத் தெரியுமா ?

6. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில், கவர்னர், முதல் அமைச்சர், அமைச்சர்கள், துறை செயலாளர்கள், ஏனைய அதிகாரிகள் அலுவலர்கள் இவர்களின் role , responsibility , routine official procedure(DEPARTMENTAL DISPOSAL OF BUSINESS) கள் குறித்த போதுமான reference , தகவல்கள் தெரியுமா ?

7. மத்திய அரசு நிர்வாகத்தில் இது போல குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் துறை செயலாளர்கள், ஏனைய அதிகாரிகள் அலுவலர்கள் இவர்களின் role , responsibility , routine official procedure(DEPARTMENTAL DISPOSAL OF BUSINESS) கள் குறித்த போதுமான reference , தகவல்கள் தெரியுமா ?

8. சமூக முக்கியம் வாய்ந்த subject களில் அரசு அறிவிப்பு ( Notification, government order ) , நீதி மன்றத் தீர்ப்பு அல்லது court observation பரவலாக ஊடகங்களில் பேசப்படும் போது, அதற்கான authentic website ல் ( court website ல் அல்லது தொடர்பான அரசு துறை website ல்) அந்த அறிவிப்பு , தீர்ப்பு, observation களை "முழுமையாக" வாசிக்கின்றீர்களா.. அல்லது Media report ல் சொல்வதை நம்பி விவாதம் செய்வது, அல்லது opinion construct செய்கின்றீர்களா

9. உங்களின் சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் எவ்வளவு எந்த எந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்கிறார். அந்த நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதை authentic website ல் தகவல் அறிந்து கொள்ள முயற்சிக்கின்றீர்களா

10. மாநில மத்திய அரசுகளின் துறைவாரியான (Department-wise ) கொள்கைக் குறிப்புகளை (Policy Notes ) வாசித்தது உண்டா ?.. ஒவ்வொரு துறைக்கான financial projections வாசித்தது உண்டா ?

ம்ம்ம் I think இது போதும்னு நினைக்கிறேன்..

இன்னும் மூன்று அம்சங்கள் இருக்குனு சொன்னேள்.. அதான் gentle reminder

'ஞாபகம் இருக்கு. ஆனாலும் reminder க்கு thanks வரிசையாக சொல்றேன்

இந்த மாதிரி தங்களின் standards குறித்து பள்ளிகள் கல்லூரிகளின் approach எப்படியாகிறது என்றால், எந்த ஒரு task / goal / target / assignment ம் எல்லா மாணவர்களாலும் ஒரே மாதிரி, ஒரே time-frame ல், ஒரே தரத்தில் முடிக்க முடியும்னு நம்பும் approach.. இந்த approach ஐ கூர்ந்து கவனித்தால் இதில் ஒருவிதமான Implicit assumption அவர்களுக்கு இருப்பதைக் கவனிக்கலாம்.

இந்த implicit assumption காரணமாக , அவர்களிடம் Skills Require Drills எனும் விரட்டும் மனோபாவம் வருகிறது. இந்த drill ல் ஒவ்வொரு student ம் அவர்களை அவர்களின் வகுப்பு தோழர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் "முதல் ஆபத்து" ஆரம்பம் ஆகிறது

இந்த பாதிப்பில், student தனக்கான inherent talent , efficiency நிச்சயம் இருக்கிறது எனும் அடிப்படை உண்மை மறந்து போகும் "இரண்டாம் ஆபத்து" உருவாகிறது. இதனால் அப்படியான talent , efficiency ஐ பயன்படுத்தாமலே result ஐ நோக்கி தங்களை தாங்களே உந்தித் தள்ளிக் கொண்டு போகிறார்கள்"

"இந்த exercise ல் result வரவே வராதா"

" ம்ம்ம் வரும் வரும்.. those institutions get the "result " they wanted and the one they are claiming to be results .. ஆனால் இந்த drill ல் சிக்கும் மாணவனுக்கு to get the right answer எனும் rut ஆழமாக பதிந்து, அந்த Rut வழியாகவே அவனைச் செலுத்திக் கொள்ளும் " மூன்றாவது ஆபத்து" நிகழ்கிறது .. இந்த ஆபத்தினால் when a student enters the pure adult world அங்கே பரவிக் கிடக்கும் Diversity ஐ எதிர் கொள்ள, அவன் இதுவரை பழகிய வழி உதவி செய்யமால போவதை அதிர்ச்சியுடன் ஜீரணிக்கும் உண்மை நிகழ்கிறது.

"Diversity ???

"ஆமாம்.. நிஜமான adult உலகத்தில் எத்தனை ரகங்களில் ஆட்கள் இருப்பார்கள்

1. இந்த மாதிரி standard educational process ல் கல்வி அறிவுடன் வந்தவர்கள்

2. சாராசரி educational process ல் கல்வி அறிவுடன் வந்தவர்கள்

3. சுமாரான கல்வி அறிவு / அல்லது கல்லூரி / பள்ளி கல்லூரி process ல் உட்படாமல் வந்தவர்கள்

எனும் மாறுபட்ட தரங்களில் இருக்கும் adult கூட்டத்தில் வேலை பார்க்க வேண்டும், வேலை வாங்க வேண்டும்.

இந்த diversity ஐ சுவாசிக்கும் போது, மூன்று சங்கதிகள் படிப்படியாக புரியத் தொடங்கும்.. சில சமயங்களில் unfortunately புரியாமலே போய் ஏக்கம் , anxiety, disappointment என குழப்பம் வரவும் chance இருக்கு"

"மறுபடியும் மூன்று சங்கதியா .. அது என்ன?"

1. நாம் செய்த drill இல்லாமலே இந்த வேலை இன்னொருத்தன் சிறப்பாக செய்கிறான்

2. நாம் பெருமையாக நினைத்த standard / brand நம்முடன் வெகுதூரம் கூடவே வராது

3. உலகத்தில் average skilled / average ability தான் ரொம்ப அதிகம் இருக்கிறது.. அந்த சமாச்சாரம் தான், real time practice ல், அதை passion கொண்டு செய்பவர்களால், கொஞ்சம் கொஞ்சமாக mature ஆகி, excellence எனும் நிலைக்கு வருகிறது

"ம்ம்ம் ஓகே.. leave the teachers or college , schools ..குழந்தைகளின் parents என்ன செய்தால் இதை ஓரளவுக்காவது சரி பண்ணிக்க முடியும்"

"Parents னு இல்லை.. teachers னு இல்லை.. in common சொல்றேன்.. ஆனால் என்ன செய்யணும்னு சொல்லலை, எதுக்கு கவலைப்பட வேண்டாம்னு சொல்றேன்"

"அப்பா.. wait wait .. let me take notebook and pen.. "

" அவசரப்படாதே.. எந்த விஷயமும் நானாக என் self conception மட்டுமே வச்சு சொல்லவில்லை.. இது எல்லாமே refer செய்து, வாசித்து, கொஞ்சம் simplify செய்து சொல்லப்பட்டவை தான். என்ன reference அப்படினு நாளைக்கு சொல்றேன்.. நீ அங்கிருந்தே இன்னும் detail லாக notes எடுத்துக்கலாம்"

" Bad boy ப்பா நீ.. சரி எதுக்கு கவலைப்பட வேண்டாம்னு சொல்றேன்னு சொன்னியே அது சொல்லு"

" அன்பு மகளே அதுவும் நாளைக்கு தான்.. Appa shall stay as bad boy for a day more"

"அப்பா you are bad boy for ever "

"சார் Good Morning ... நேற்று மூன்று முறை phone பண்ணேன்.. நீங்க எடுக்கவில்லை"

" I am sorry.. back to back meeting.. ரொம்ப அவசரமான சங்கதியா.. நீங்க என் Official Mobile ல் அழைத்திருக்கலாமே .. உங்க call நான் Miss பண்ணிருக்கேன்னு பார்க்கும் போது,, evening ரொம்ப நாழியாய்டுத்து.. I am extremely sorry .. "

" Sorry எல்லாம் சொல்ல வேண்டாம் சார்.. என் daughter க்கு ____ college ல் seat confirm ஆய்டுத்து.. பெரிய relief "

"அப்படியா ரொம்ப சந்தோஷம்.. ஆனால் நீங்க in and around chennai தான் பார்க்கிறதாகவும், hostel ல் தங்கி படிக்க வைக்கப் போவதில்லைனு சொல்லிட்டிருந்தீங்க.. இந்த காலேஜ் ரொம்ப தூரம்.. உங்க பெண் போறேன்னு சொல்றாங்களா"

"என்ன சார் .. அந்த காலேஜின் standard எத்தனை popular னு உங்களுக்குத் தெரியாதா.. அங்கே இடம் கிடைப்பது எத்தனை சிரமம்"

"ம்ம் நல்லாத் தெரியும்.. அப்படின்ன்னா you and your wife are getting prepared for this situation .. அதாவது பெண்ணை ஹாஸ்டலுக்கு அனுப்பவும், அவள் மாசம் ஒரு தரம் ஊருக்கு வந்து போறது, நீங்க ஒவ்வொரு தபா அவள் திரும்பிப் போகும் போது பட்சணம் செஞ்சு கொடுத்தனுப்பறது, தினம் ஒரு பத்து தபா phone ல் பேசிக் கொள்வது etc etc இதுக்கெல்லாம் நீங்க prepare ஆகிட்டீங்க"

"ஆமாம் சார்.. அந்த காலேஜ் அந்த standard கிடைக்குதுன்னா நாம அதுக்கு prepare ஆகித்தானே ஆகணூம்"

"ஆமாம்.. as a parent நீங்க எப்பவுமே prepared டா இருந்து தான் ஆகணும்.. Please convey my best wishes to your daughter .. வெளியூரில் நீங்க இரண்டு பேரும் பக்கத்தில் இல்லாமல் இருக்கணும்.. let she focus first on her health , mainly food , I mean to say quality food .. time க்கு சாப்பிடணும் தூங்கணும் etc etc இதை insist பண்ணிட்டே இருங்க.. again all the best Bye"

"யார்கிட்ட phone ல் நேரத்துக்கு சாப்பிடணும் தூங்கணும்னு சொல்ல்லிண்டிருக்கேள்"

" நம்ம கணேஷ் இல்லை.. அவர் தான்.. அவர் பெண்ணுக்கு ___ காலேஜில் இடம் கிடைச்சிருக்காம்.. she has to adjust to hostel life .. பெத்தவங்களும் நிறைய adjust பண்ணிக்க வேண்டியிருக்கும்.. அதான் சொல்லிட்டிருந்தேன்.. "

" But you have something undisclosed .. கரெக்டா"

" என் மனசில் என்ன இருக்குனு நீ சரியா சொல்லிவிடுகிறாய்.. எப்படியெனில் நீ மட்டுமே என் இதயத்தில் ஆக்கிரமிப்பதால்.... "

"Chandroo .. cut this .. ஒழுங்கா விஷயத்தை சொல்லுங்கோ"

" பல பெற்றோரின் sentiments ஐ தொடும் சமாச்சாரம்.. அதான் சொல்ல யோசிக்கிறேன்.. இருந்தாலும் சொல்றேன்.. I go point by point நடுவிலே interrupt பண்ணினால் மறந்துடுவேன்

" சொல்லுங்கோ"

அவங்க பசங்க நல்லா படிக்கணும்னு, standard ஐ த் தேடி school , college ல் சேர்ப்பதில் தவறில்லை.. ஆனால் அது கூடவே சில சங்கதிகளுக்கு பெற்றவர்களும் குழந்தைகளும் prepare ஆக முடியுமானு பார்க்கணும்.. நான் சொல்றது hidden but powerful impacts

முதலில் இது மாதிரி tough standard க்கு ஈடுபடுத்திக்கும் போது, நம்மை அறியாமல் உருவாகும் பிழையான Motivation

அதாவது performance / result என்பது ஒரு Number / Mark / grade எனும் simplistic approach .. இரு இரு.. சொல்றேன் இந்த Number / Mark / grade ரொம்ப முக்கியம்தான்.. competitive world தான்.. ஆனால் இந்த approach ல் interest in learning, quality of learning, and a desire to be challenged அப்படிங்கற மூன்று முக்கியமான சங்கதி பாதிக்கப்பட அதிகம் வாய்ப்பு உண்டு.. அப்படி ஆகாம இருக்க prepare ஆகணும். ரொம்ப முக்கியமா வெற்றி தோல்வி என்கிற மாதிரியா binary race க்கு மட்டும் தயாராவது நல்லதில்லை.. அதிலும் தோல்வி என்பது எள்ளி நகையாடப்படும் இடமாக ஒரு school இல்லேன்னா காலேஜ் environment அல்லது அவர்களின் approach இருப்பது அத்தனை நல்லது இல்லை.

அடுத்தது pedagogy.. அதாவது சொல்லிக் கொடுக்கும் முறை.. இந்த standard பைத்தியம் இருக்கும் இடத்தில், சில குறிப்பிட்ட skills ஐ மட்டும் அவசியம்னு நினைத்துக் கொண்டு அதை திணிக்கப் படாதபாடு படும் முறை.. இதிலே அவங்களுக்கு standard கிடைக்காது test result தான் கிடைக்கும்னு தெளிவாக புரிஞ்சுக்க prepare ஆகணும்

ரொம்ப முக்கியனானது, student evaluation.. அங்கே extraordinary மாணாக்கனை உருவாக்கியே தீருவது எனும் template method .. கொஞ்சம் மண், தண்ணீர் தெளித்து , குழைத்து சகதியாக மாற்றி,, ஒரே மாதிரி பானை செய்ய முயற்சிக்கும் வழி.. இதில் என்ன ஆகும் அந்த student அங்கே கவனிப்பது தான் வாழ்க்கையிலேயே சிறந்த evaluation method என தீர்மானத்துக்கு கொண்டு வரும் approach .. இதுக்கும் prepare ஆகணும்.. அதைவிட முக்கியம் காலேஜ் வாழ்க்கை முடிந்து, academic evaluation method லிருந்து வித்தியாசப்படும் industrial evaluation / domain evaluation / common sense evaluation க்கு அவசியம் வரும் சூழல்களுக்கு எப்படி prepare ஆவது என்பதற்கு எத்தனை அவகாசம் இருக்கும் என்பதனை யோசிக்க வேண்டும்"

"அப்ப இப்படி tough standard இருக்கிறது தப்பா "

"தப்பு சரினு நான் binary யாக சொல்ல வரலை.. ஆனால் இன்னமும் வேற விதமா ஒரு binary approach ஐ கவனிக்க சொல்றேன்.. அதாவது confusing harder with Better.. அதாவது சரியாக செய்யப் பழக்கறேன்னு சொல்லிக் கொண்டே காரியத்தின் accountability ஐ அவர்களுக்குப் புரிய வைக்காமல் போவது"

"அப்படின்னா என்ன"

"சிறப்பாக செய், சூப்பரா செய், அதிகமா செய் என்பது வேற பொறுப்பெடுத்துண்டு செய் அப்படினு பழக்கப்படுத்தறது வேற.. இந்த வித்தியாசத்துக்கு prepare ஆகணும்னு சொல்ல வந்தேன்"

"இதை அவர்கிட்டியே சொல்லிருக்கலாமே phone ல்"

"ம்ம் சொல்லிருக்கலாம்.. but இது இது மட்டுமில்லை இன்னமும் மூன்று முக்கியமான point இருக்கு.. Office க்கு நேரமாச்சு.. நாளைக்கு சொல்றேன்"


Wait while more posts are being loaded