Profile cover photo
Profile photo
Ravichandran Somu
1,856 followers
1,856 followers
About
Ravichandran's interests
View all
Ravichandran's posts

Post has attachment
Tour De Singapore - 2017:

111 KM cycling around Singapore island in 5 hours 11 minutes.
PhotoPhotoPhotoPhotoPhoto
24/04/2017
10 Photos - View album

Post has attachment
கல்விப்பணி:

கடந்த மூன்று மாதங்களில் “வெட்டிக்காடு” & “கீதா கஃபே” புத்தகங்கள் விற்பனை மற்றும் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற தொகை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் (INR 2,25,000)

எங்கள் முதல் புத்தகங்களை வெளியிட தீர்மானித்த போது இந்த புத்தகங்கள் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தையும் கல்விப்பணிக்காக செலவிட வேண்டும் என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். இது பற்றிய விபரங்களை தஞ்சாவூர் மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் அறிவித்தோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து நன்கொடை அளித்த நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உண்மையிலேயே நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை எதிர் பார்க்கவில்லை !!!

இந்த நன்கொடை மூலம் செய்யவிருக்கின்ற இரண்டு திட்டங்கள்:


1. வடுவூர் வட்டாரத்திலுள்ள 12 அரசினர் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு பள்ளிக்கு ரூ 10,000 செலவில் புத்தகங்கள் வாங்க்கிக் கொடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூல் நிலையம் அமைத்து கொடுத்தல்.

2. வடுவூர் வட்டார அரசினர் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வார இறுதியில் சிறப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்து ஒவ்வொருவரின் விருப்பம்/திறமைகளை அடையாளம் கண்டு என்ன மாதிரியான மேற்படிப்பு படிக்கலாம் என்று சிறந்த கல்வியாளர்களை கொண்டு ஆலோசனை வழங்குதல் மற்றும் மனிதவள மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல். இந்த பயிற்சி முகாமை ஒவ்வொரு வருடமும் தொடர்து நடத்துதல்.

இந்த இரண்டு திட்டங்களையும் வரும் 2017-2018-ம் கல்வியாண்டில் ஜூன்/ஜூலை மாதங்களில் செயற்படுத்துதல்.


கடந்த 17 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிக்கூட திட்டங்கள், ஏழை/கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்தல் போன்ற சமுதாயப் பணிகளை என்னால் முடிந்த அளவு செய்து வருகிறேன். ”வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது” என்பதை மனதில் கொண்டு இவற்றை நான் பொது வெளியில் பகிர்ந்து கொள்வது கிடையாது.

இந்த திட்டங்கள் பற்றி இங்கு பகிர்ந்து கொள்வதற்க்கு காரணம்... எங்கள் மீது நம்பிக்கை வைத்து நன்கொடை அளித்தவர்களுக்கு அவர்கள் அளித்த நன்கொடையை எப்படி கல்விப்பணிக்கு பயன்படுத்த போகிறோம் என்று அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, இந்த திட்டங்கள் பற்றிய விபரங்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “

- பாரதியார்
Photo

Post has attachment
தமிழ் முரசில் "வெட்டிக்காடு” & “கீதா கஃபே” புத்தகங்கள் அறிமுக விழா பற்றிய செய்தி...

Tamil Murasu news about "Vettikkadu" & "Geetha Cafe" Books release function...
Photo

Post has attachment
”வெட்டிக்காடு” & “கீதா கஃபே” புத்தகங்கள் அறிமுக விழா தினமலர் செய்தி....

தினமலர் செய்தியாளர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கு நன்றி !!!

http://www.dinamalar.com/nri/details.asp?id=10564&lang=ta
சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::
சிங்கப்பூர் : ரவிச்சந்திரன் எழுதிய “ வெட்டிக்காடு “ மற்றும் கீதா ரவிச்சந்திரன் எழுதிய “ கீதா கஃபே ஆகிய இரு நூல்கள் அறிமுக விழா பிப்ரவரி 11 ஆம் தேதி தேசிய நூலக வளாக அரங்கில் நடைபெற்றது. ஸ்வப்னா ஆனந்த் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய இவ்விழாவுக்கு மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் தலைமை வகித்தார். தமிழக மின்வாரிய மேனாள் தலைமைப் பொறியாளர் எஸ்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். தமிழகப் பத்திரிகையாளர் மாலன் சிறப்பு விருந்தினராகக்...
dinamalar.com

Post has attachment
"Vettikkadu" & "Geetha Cafe" Books Release function on 11-02-2017 at The Pod, NLB Central, Singapore.

11-02-2017 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ”The Pod" அரங்கில் நடைபெற்ற ”வெட்டிக்காடு” & “கீதா கஃபே” புத்தகங்கள் அறிமுக விழா

https://goo.gl/photos/AmEMYJueWZB36erR7

Post has attachment
புத்தகங்கள் அறிமுக விழா
-------------------------------------------------
"வெட்டிக்காடு" மற்றும் "கீதா கஃபே" புத்தகங்களின் அறிமுக விழா வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா சாலை தேசிய நூலக வாரியம் 16-ம் தளத்தில் உள்ள The Pod அரங்கில் நடைபெறும்.

நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்,
- ரவிச்சந்திரன் சோமு
- கீதா ரவிச்சந்திரன்
Photo
Photo
04/02/2017
2 Photos - View album

Post has attachment
11-1-2017 அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற “தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்” என்ற கருத்தரங்கில் “தமிழ் இலக்கியங்களில் கல்வி” என்ற தலைப்பில் எனது சிறப்புரை....
PhotoPhotoPhotoPhotoPhoto
03/02/2017
15 Photos - View album

Post has attachment
புத்தகங்கள் அறிமுக விழா
-------------------------------------------------
"வெட்டிக்காடு" மற்றும் "கீதா கஃபே" புத்தகங்களின் அறிமுக விழா வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா சாலை தேசிய நூலக வாரியம் 16-ம் தளத்தில் உள்ள The Pod அரங்கில் நடைபெறும்.

நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்,
- ரவிச்சந்திரன் சோமு
- கீதா ரவிச்சந்திரன்
Photo

Post has attachment
Sruthi's speech at Books release function...



Post has attachment
நணபர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !!!
Photo
Wait while more posts are being loaded