Profile cover photo
Profile photo
அருட்செல்வப்பேரரசன் செ.
65 followers
65 followers
About
Posts

Post has attachment
துச்சாசனன் செய்த தீமைகளைச் சொல்லி அவனை நிந்தித்த துரோணர்; சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; பாஞ்சால இளவரசன் வீரகேதுவைக் கொன்ற துரோணர்; பாஞ்சால இளவரசர்களான மேலும் நால்வரை கொன்ற துரோணர்; துரோணரை மயக்கமடையச் செய்த திருஷ்டத்யும்னன்; தன் தேரில் இருந்து அவரது தேருக்குக் குதித்துத் துரோணரின் தலையை வெட்டி வீழ்த்த எண்ணியது; மயக்கத்தில் இருந்து மீண்ட துரோணர் வைதஸ்திகக் கணைகளால் திருஷ்டத்யும்னனைப் பீடித்தது; திருஷ்டத்யும்னனின் தேரோட்டியைக் கொன்று, திருஷ்டத்யும்னனைக் களத்தைவிட்டே விரட்டிய துரோணர்...

இது துரோண பர்வம் பகுதி 121-ன் சுருக்கமே. இப்பகுதியை விரிவாகப் படிக்க
- http://mahabharatham.arasan.info/2016/08/Mahabharatha-Drona-Parva-Section-121.html க்குச் செல்லவும்

#முழுமஹாபாரதம்

கோபப்பட மாட்டீரா? மன்னா! - வனபர்வம் பகுதி 27
Why doth not thy anger, O king, blaze up | Vana Parva - Section 27 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வம் தொடர்ச்சி)

ஒவ்வொருவருக்கும் நேர்ந்த அநியாயங்களையும், உண்மையில் அவர்களது மதிப்புகளையும் எடுத்துக் கூறி, உமக்கு ஏன் கோபம் வரவில்லை என்று யுதிஷ்டிரனிடம் கேள்வி கேட்கிறாள் திரௌபதி.

வைசம்பாயணர் சொன்னார், "கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பிருதையின் மகன்கள், மாலைப்பொழுதில் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். கற்றறிந்தவளும், பார்ப்பதற்கு அழகானவளும், தனது தலைவர்களுக்கு அன்பானவளும், அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} யுதிஷ்டிரனிடம் "பாவியும், கடுமை நிறைந்தவனும், தீய மனதுடையவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} நிச்சயம் நமக்காக வருந்தமாட்டான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section27.html

‪#‎முழுமஹாபாரதம்‬

Post has attachment

முனிவர் பகன் உபதேசம் - வனபர்வம் பகுதி 26
Sage Vaka's sermon | Vana Parva - Section 26 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வம் தொடர்ச்சி)

பிராமணர்களின் முக்கியத்துவத்தை யுதிஷ்டிரனுக்கு முனிவர் பகன் எடுத்துரைத்தல்...

வைசம்பாயணர் சொன்னார், "பாண்டுவின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து துவைத வனத்தில் வசித்த போது, அந்தப் பெரும் கானகமே பிராமணர்களால் நிரம்பியது. அக்கானகத்தில் இருந்த தடாகமே இரண்டாவது பிரம்மலோகம் போல, அங்கு எப்போதும் வேத ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது. யஜுர், ரிக், சாமத்தின் ஒலிகள் மற்றும் பிராமணர்களின் உச்சரித்த வார்த்தைகள் கேட்பதற்கு காதுக்கினியனவாக இருந்தது. பிராமணர்களின் வேத ஒலியும், பிருதை மைந்தர்களின் {பாண்டவர்களின்} வில்லொலியுடன் சேர்ந்து பிராமண க்ஷத்திரிய முறைகள் கலந்த ஒரு அழகான முறையாக இருந்தது.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section26.html#sthash.yg3IfWn0.dpuf
Wait while more posts are being loaded