Profile cover photo
Profile photo
Puvanendran Indran
25 followers
25 followers
About
Posts

Post has attachment
தொலைத்தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக உருவாக்கப்பட்டுள்ள உலகக்கிராமத்தில்  பாறைகளில்  முட்டிக் கொள்ளக் கூடிய, தீயுக்குள் பாயக்கூடிய பிள்ளைகள் உருவாக்கப்படுவது  தடுக்கப்படுகிறது. தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
Add a comment...

Post has attachment
தேசியமும் தேர்தலின் விலையும்
20 ஆகஸ்ட் 2015 நடந்து  முடிந்த  தேர்தல் ஊழல்களற்றுச் சுதந்திரமாக நடைபெற்றதென்பது மிக முக்கியமானதொரு அம்சம். ஒரு புள்ளடியை இடுவதன் மூலம்  மக்கள் சொல்லும் செய்திகள் பன்முகமானவை. அது மட்டுமல்ல மக்கள் எனப்படுபவர்கள் ஒருமைத்தன்மையான கூட்டமுமல்ல. எனவே வாக்களிப்பு...
Add a comment...

Post has attachment
இரவு வனம்
——————————-

இலையுதிர்காலத்தின் ஈரித்த நகரம்
கைவிடப்பட்ட புகையிரதநிலையம்.

நாசிகள் யூதர்களை ஏற்றிச்சென்ற, இரயிற் தண்டவாளங்கள்
இறுக அடித்துப் பூட்டிட்ட பெட்டிகளின் அதிர்வில் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

வெறுமனே திரும்பி,
கிடந்து துருப்பிடித்த புகையிரதப்பெட்டிகளுள்
மூச்சுக்காற்றுகள் இன்னமும் விலக விரும்பாது மிக மிக நெருங்கி
உழன்றுகொண்டிருக்கின்றன.

இப்பெட்டிகள் இன்று,
மனதில் உறைந்தநிலமிசை வாழா
நியமங்கள் ஒழுகா மனிதர்களின் கிராமமாயின.

கஞ்சாப்புகை வளையங்களில் தொங்கி மிதக்கும் குர்திஸ்காரனின் சொற்களை
ஆர்மெனியக்காரன் தன் கிளாரினெற்றுக்குள் இழுத்துக்கொள்கிறான்.

நான்கு அரக்கர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பழம் பெரும்
நாகரீகத்தின் செருக்குக் கொண்ட சொற்கள்
உருச்சுருங்காதுள்ளம் விரிந்து நடனமிட
பல்கெரியன் தனது வயலின் நரம்புகளால் அவற்றை வருடுகிறான்.

அவன் காதலி கைகள்விரித்து இடுப்பை நெளித்து மோகம் செய்கிறாள்
கள்ளுண்டதென நிலவு நிமிர்கிறது.

வைன் கிண்ணங்கள் சிணுங்காத
வாசனைத்திரவியங்கள் மணக்காத
நகரக் கோடியிற்
கேசத்தைக் கோதியும்
காது மடல்களை நீவியும்
மலைகளைக் கட்டியணக்கும்
காற்றும் காதலும் பெருகும் இரவு
ஆழங்களின் வனமாகிறது.

நான் அள்ளி வந்த நதியோ இதயத்தில் இருந்து பல்கிப் பெருகி
வெந்த புனத்து வாசமடக்கும் விழிநீரானது.மாசி 2014
http://eathuvarai.net/?p=4354
Add a comment...

சுடும் காடு

குமுறி வரும் வார்த்தைகளால் எகிறி விழ முடியவில்லை 
மூளையும் இதயமும் மூடிய இரும்புக்கலசங்கள்
மோதி விழுகின்றன.
யாரை நோக? 
இருளின் புலத்தில் 
அடர்காற்றிற் பிடரிமயிர் பரத்தும் பெண்போல் மரங்கள்.
சுடலையில் எரியும் பிணத்தின் தணல்கள்.
ஆலமர அடியிற் இடுகாட்டுக் காவலன் 
உறங்குமவனைக் கடந்து செல்கிறது கோடையின் இடி முழக்கம்.
கனவுகளுக்குப் பயந்தவர்கள்
திருநீறு பூசிப்படுக்கிறார்கள்
காலத்திற்குப்பயந்தவர்கள் கவிதைகளை ஒளித்துவைக்கிறார்கள்.

1992

தேவ அபிரா 

இலங்கை அரசின் இராணுவ மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைகளும் போராளிகளின் சனநாயக மறுப்புச் சிந்தனைகளும் ஒன்றாகக்கோலொச்சிய காலத்தில்(1992) எழுதப்பட்ட கவிதை இது. இக்கவிதையை  இலங்கையை விட்டு நீங்கும் போது  கைவிட்டு வந்த எனது நாட்குறிப்புகளுக்குள் மீண்டும் கண்டெடுத்தேன்.

எனது நாட்குறிப்புக்களைக்  கவனமாகப் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் என்னிடம் கையளித்த நண்பர் திரு எஸ். கே விக்னேஸ்வரனுக்கு எனது நன்றிகள்.

நன்றி : உரையாடல் இதழ்
Add a comment...

அம்மாவின் கடிதம்
பகல்
நின்று தவிக்கும் நீல ஆழி 
தீ எரியும் மே மலர்கள்
இலைகள் ஆடாக் காற்று
சொற்கள் சிதறாது
மேசையின் மேற் கிடக்கிறது  அம்மாவுன் கடிதம்.
காலமழை பொய்த்து ஓலமிடும் கூடல்களின் மேலாக
இரவுன் கடிதத்தை விரித்து வைக்கிறது.
உள்ளேரியும் விறகடுப்பின் ஒளியில்
எஞ்சியிருக்கும் கனவுகள் உருக் கொண்டெழுதிய வரிகள்
திங்கள் அற்றுத் திசையும் திரிந்த விசும்பில் விரிகின்றன
இறவாது வாழவல்லவாயிரம் கவிதைகளின் ஆத்மாவை
எப்படி நீ ஒரு கடிதமாக்கினாய்?
அம்மா!

1996
தேவ அபிரா
போரில் வாழ்க்கை சிதைந்து கொண்டிருந்த போது படிப்பதற்காக நான் குடும்பத்தை விட்டு நீங்கி கொழும்பு சென்றேன். அக்காலத்தில் என் அம்மா எழுதியவொரு கடிதம் பற்றிய கவிதை இது. 

நன்றி: உரையாடல் இதழ்
Add a comment...

Post has attachment
காலக்குகை

உயிர் வாழ்தலின் சரசரப்புக் கேட்காத பகல்.
இரவு நிசப்தத்தில் உறைகிறது.
இறுக மூடுண்ட சாளரங்களை மோதித் திரும்புகிறது சோளகம்.
நிச்சயமற்ற நாட்களின் மீது நகர்கின்றன
பற்றற்ற வாழ்வின் பொழுதுகள்.
துயரங்களை வெல்லாத மனிதர்.
சொற்களும் தூரிகைகளும் வாழ்வும் வண்ணங்களும் அடைபட்டிருக்கும்
காலக்குகையின் வாசலைப் பெரும்பாறை மூடியிருக்கிறது.
மந்திரச் சொலுக்காக காத்திருக்கின்றனர் மக்கள்.

-1992

மழையிரவு

இரவு.
ஈரித்த காற்று
கூரையில் இருந்து வழியும் மழை நீர்
நம்பிக்கை தரமுடியாத நண்பர்களையும்
துயரம் தந்த காதல்களையும் கழுவிச் செல்கிறது.
பயணங்களின் சுவடுகளும்
ஊடிச் செறிந்த அனுபவங்களும் துலங்குகின்றன.
சிம்னி ஒளியில் சுடருகிறது
மழையிரவு  வரைந்த ஒவியம்.

-1992

உணராக்காதல்

என் இதயத்துள் இருப்பது
மோகத்தில் பிதற்றுவதற்கான சொற்கள் அல்ல;
இதழ்களைச் சுவைக்கும் வெறியல்ல;
இறுகிய முலைகளுக்கான ஏக்கமுமல்ல.
கன்னங்களுக்கு ஆதுரமளிக்கும் காற்று
கள்ளின் வெறியோடு  அலைவதில்லை.
மரத்தில் வெட்டிப் பொறித்த காதல்
பட்டைகளுக்குள் புதைந்திருக்கும்  மணத்தை எடுத்து வந்திருக்கிறது.
பேசாத என் மௌனத்திலிருந்து
இறுதிக்கணத்தின் அவசர அணைப்பிலிருந்து
என் காதலை உணர்.

-1993
நன்றி : எனில் இணையத்தளம்
http://www.eanil.com/?p=508
Add a comment...

Post has attachment
**
இலங்கையும் சனநாயகமும் படம் : நன்றி அவந்த ஆர்டிகல விடுதலைப்புலிகளின் காலத்தில்
செய்ய முடியாதிருந்தவைகளை இப்போது செய்ய முடிவதாகக்  கூறப்படுகிறது. இதுவே சனநாயகம் எனவும்
பெருப்பித்துக்காட்டப்படுகிறது.  சட்ட
பூர்வமான ஒரு அரசு தனது குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய ச...
பிரபஞ்சநதி
பிரபஞ்சநதி
thevaabira.blogspot.com
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded