Profile cover photo
Profile photo
Jaganathan K
133 followers -
Just chasing the colors to decipher the delight
Just chasing the colors to decipher the delight

133 followers
About
Posts

Post has attachment
கிட்டுவின் வார்த்தை வங்கி
எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்...
Add a comment...

Post has attachment
எட்டாம் எண் செருப்பு
திருமணத்திற்கு முன் மனைவி 'எனக்கு தூசு என்றாலே ஒவ்வாது, டஸ்ட்-அலர்ஜி' என்று அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஆஹா, இவர் வீட்டில் ஒரு மயிரிழை அளவுக்கு ஒட்டடை தெரிந்தாலும் ​பொறுக்காது பாய்ந்து சுத்தம் செய்துவிடுபவர் போல என்று பெருமையாக எண்ணிக்கொள்வேன். தி.பின்தா...
Add a comment...

Post has attachment
மூன்று தர்பூசணிகள்
தேவைகள் குறையுமளவுக்குத் தெய்வத்தன்மை பெறுகிறோம். யார் சாக்ரடீஸ் சொல்லியதா? மறந்துவிட்டது. அலுவலக நண்பர்களில் பலர் இப்படித் தெய்வத்தன்மை பெற்றவர்களாய் தெரிகிறார்கள். மதிய உணவு வேளையின் போது நண்பர் ஒருவர் கொஞ்சம் வயிறு சரியில்லை என்று முறையிட்டார். எல்லே...
Add a comment...

Post has attachment
கூரை ஓவியம்
இங்கிலாந்தில் இருந்த ஒரு பேராரசிரியர், பணி முடித்து வீடு திரும்பும்போது சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் ஒன்றுவிடாமல் குடையால் தட்டிக் கொண்டே செல்வாராம். ஏதாவது ஒரு கம்பம் விடுபட்டுவிட்டால், திரும்பவும் வந்து தட்டிவிட்டுதான் வீடு செல்வராம். இது obsessive c...
Add a comment...

Post has attachment

Post has attachment
நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்
மனைவி அடிக்கடி எனக்கு நினைவூட்டும் வாக்கியம். நடுவில் மின்கம்பம் எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்! அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் அம்பியை அல்லேக்காக இரண்டு ஆட்டோக்களில் வந்து ஹைஜாக் செய்து அப்படியே கொண்டுபோய் ஒரு மின்கம்பத்தில் சாத்துவார்களே நி...
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
அந்தப் பறவை எந்த தேசம்?
பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு குறு ஆச்சரியம் எனக்கு. சதுப்புநிலத்தை இரண்டாக பிரித்துக்கொண்டு ஓடும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை. சாலையின் ஒருபக்கம் உள்ளூர் போட்ட குப்பை மலை. மறுபக்கம் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம். சாலையால் சதுப்புநிலத்தின் மறுப்பக்கம் காப்...
Add a comment...

திருப்பூர் சென்னை சில்க்ஸ்ஸில் வட கிழக்கு இந்திய முகமொன்று துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தது. துணி அளவை ஆங்கிலத்தில் உரைத்தும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மலையின் அமைதியை சூடிய முகமாயிருந்தான். 

எப்படி அவனது நிலத்திலிருந்து பிய்த்துக் கொண்டு இந்த வறண்ட காட்டன் நகரத்தில் அவனால் இயங்க முடிகிறது? அவன் என்று வடகிழக்கு பயணப்படுவான்? 

பொங்கலை ஒட்டிய நாட்கள் அனைத்திலும் திருப்பூர் மொத்தமும் மனிதர்களை வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி வைத்தது போலிருந்தது. பணம் பண்ணும் நகரங்களில் பண்டிகை கொஞ்சம் அனாதரவுதான். 

இங்கு சென்னையில், அலுவலகத்தில், சில பூர்வ குடி நண்பர்கள் அலுத்துக் கொள்வதுண்டு. என்ன பொது விடுமுறை என்றாலும் சென்னையைத் தாண்டத் தேவையில்லை. அத்தனை சொந்தங்களும் நகருக்குள்தான் அடைப்பட்டு கிடக்கின்றன. ரயில் டிக்கெட், தத்கால், டிக்கெட்டுக்காக தனியாக விடுப்பு எடுப்பது போன்ற 'கொடுப்பினைகள்' தங்களுக்கு கிடையாது என்பார்கள். சொந்த ஊருக்கு பயணப்பட தேவையில்லாதவர்களால் பண்டிகை நகர்கிறது அங்கே.

பிழைக்க வந்தவர்களின் காலண்டரில் பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பும் நாள் மட்டுமே இருக்கிறது. அதை மூடியிருக்கும் நாட்கள் வெளிச்சப்புள்ளியை மறைத்திருக்கும் பனிபோல தோன்றுகிறது. 

ஊர் சுலபத்தில் நகரமாகிவிடுகிறது. வேறு நிலங்களிலிருந்து மனிதர்களைப் பிய்த்து எடுத்துக் கொள்கிறது. பிழைக்க வந்தவர்கள் ஊர்திரும்பும் போது நகரத்திலிருந்து பண்டிகைகளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
--
Add a comment...

Post has attachment
குட்டிக​ளை காப்பாற்றுங்கள்
அன்புள்ள புளூகிராஸ், மடிப்பாக்கத்தில் இருந்து இ​தை எழுதுகி​றேன். நான் வசிக்கும் தெரு​வோரமாக சமீபநாட்களாக 6-8 சின்னஞ்சிறு நாய்குட்டிகள் திரிந்து வருகின்றன. சா​லை​யோரம் என்பதால் அக்குட்டிகள் வாகனங்களில் அடிபடுவதற்கான வாய்ப்புகள் நி​றைய. த​யைகூர்ந்து அங்கிரு...
Add a comment...
Wait while more posts are being loaded