Profile cover photo
Profile photo
aashiq ahamed
1,285 followers
1,285 followers
About
aashiq's posts

இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஊடகத்தில் நேற்று கண்ட செய்தி கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேற்கு உத்திரபிரதேசத்தின் ஜாட் இன மக்கள் குறித்த கட்டுரை அது. வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்ட முசார்பர்நகர் இந்த பகுதியில் தான் வருகிறது. கலவரங்களுக்கு தாங்கள் பகடைக்காயாக பாஜகவால் பயன்படுத்தப்பட்டது குறித்து தங்கள் ஆதங்கத்தை அந்த கட்டுரையில் கொட்டி இருந்தனர் ஜாட் இன மக்கள். கலவரத்திற்காக தங்களை தூண்டிவிட்டு, அது முடிந்த பிறகு தங்களை பாஜக கண்டுக்கொள்ளவே இல்லை என்று கூறும் இவர்கள், தங்கள் பிள்ளைகள் இன்னும் சிறைகளில் அடைப்பட்டுகிடப்பதாக குமுறுகின்றனர்.

மோடி அரசின் நடவடிக்கைகளால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, லோன் கட்டியே தாங்கள் வருமானம் போய்விட்டது, மத்திய அரசால் கொடுக்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று இவர்களின் ஆதங்க பட்டியல் நீளுகின்றது. 2014-ல் பாஜகவிற்கு வாக்களித்த இவர்கள் இனி பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறுவதையும் கட்டுரை பதிவு செய்துள்ளது.

இப்போது வருத்தப்பட்டு என்ன செய்வது என்று நினைப்பதா அல்லது இப்போதாவது புரிந்துக்கொண்டார்களே என்று எண்ணுவதா....

ஆதாரம்: http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/angry-with-bjp-khaps-play-jat-card-in-west-up-4474861/

அறிவியல் எழுத்தாளரான மைக்கல் க்ராஸ் தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் (How life can arise from chemistry, Current biology, Volume 26, Issue 24, pR1247–R1249, 19 December 2016) பின்வருமாறு எழுதுகிறார், "நம் பூமியில் இருப்பது போன்ற சாதகமான சூழல் அமையும்பட்சத்தில், உயிர் உருவாக்கம் என்பது முழுமையான வேதியியல்ரீதியான நிகழ்வே தவிர, தெய்வீக பிறப்பு எனும் காரணிகள் இதற்கு தேவையில்லை".

உயிர் என்பது வேதியியல் ரீதியாக பூமியில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டு அது சரியான விளக்கமல்ல என்று கூறி, பூமிக்கு அப்பால் இருந்து உயிர் (பூமிக்கு) வந்திருக்கலாம் என்ற கோட்பாடு வரை ஆய்வாளர்கள் சென்று விட்டார்கள். இப்ப திரும்ப வந்து உயிர் வேதியியல் முறைப்படி தான் உருவானது என்று சொன்னால் 'மறுபடியும் முதல்ல இருந்தா!!' என்பதை தான் தாண்டி வேறு என்னத்த சொல்ல முடியும் :-)

ஆஹா...இரு தினங்களுக்கு முன்பாக நான் போட்டிருந்த தோராய கணக்கு போஸ்ட் தற்போது அதிகாரபூர்வமாக உண்மையாகிவிட்டது. ஆம். இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய் என்று போட்டுடைத்துள்ளது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். நவம்பர் 27 வரை வங்கியில் மக்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 8.5 இலட்சம் கோடி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளது.

மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்த தகவல் படி, 500 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 இலட்சம் கோடி. அப்படியானால், மேற்கொண்டு வர வேண்டியது 2.5 இலட்சம் கோடி மட்டுமே. காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் கோடியாவது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்துவிட்டால், அரசுக்கு மிஞ்சப்போவது வெறும் 20-50 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா பணமும் வந்துவிட்டால் கறுப்பு பணம் எங்கே போனது? இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் தருணம் வெகு தொலைவில் இல்லை. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஊடகமும், இது தொடர்பில், பெரும் அதிர்ச்சி ஒன்று அரசுக்கு காத்திருப்பதாகவே கூறுகின்றது.

3 முதல் 5 இலட்சம் கோடி வரை திரும்ப வராது, நாம் ஆதாயம் பார்க்கலாம் என்றிருந்த அரசின் எண்ணத்தில் பெரும் இடி இறங்கியிருப்பதின் பிரதிபலிப்பு தான் மத்திய அரசின் சமீபத்திய தடுமாற்றங்கள். நாளைவரை மட்டுமே ஐநூறு ரூபாய் செல்லும் என்று, தாங்கள் முன்னர் அறிவித்ததற்கு முரணாக செயல்படுவதும் இந்த தடுமாற்றத்தின் ஒரு பகுதி தான். என்ன நடக்க போகின்றது என்பது பொறுத்திருந்து பார்ப்போம். எக்ஸ்ப்ரெஸ்சின் செய்தியை முழுமையாக படிக்க: http://indianexpress.com/article/india/what-black-money-government-may-be-in-for-shock-4404514/

Post has attachment
சீனாவின் யுனான் மழைக்காடுகளில் சுற்றித்திரிந்த ஆய்வாளர்களுக்கு மிக அற்புதமான அந்த உயிரினம் கண்ணில் பட்டது. இப்படியான ஒன்றை அவர்கள் இதற்கு முன்பாக பார்த்ததில்லை. பாதி காய்ந்த இலைப் போல் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அது உண்மையில் இலை இல்லை. அது ஒரு சிலந்தி. ஆச்சர்யம் ஆனால் உண்மை. ஒருவித பரவசம் ஆய்வாளர்களை ஆட்கொண்டது.

இந்த சிலந்தி வகையானது, எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க, மிக நேர்த்தியாக தன் உடலை, பாதி காய்ந்த இலைப்போல் உருமாற்றி இருக்கிறது (பார்க்க படம்). எந்த அளவிற்கு நேர்த்தி என்றால், இதைப் போன்ற இன்னொரு சிலந்தியை கண்டுபிடிக்க ஆய்வாளர்களுக்கு இரண்டு வாரங்கள் ஆனது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சிலந்தி வகைக்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்று கூறும் நவம்பர் 17, 2016 தேதியிட்ட 'live science' ஊடக கட்டுரை, இப்படியான சிலந்தி கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளது.

இதுப்போன்ற மேலும் சில சுவாரசியமிக்க தகவல்களுக்கு எதிர்க்குரலின் பிரத்யோக பக்கத்தை காணவும்: http://www.ethirkkural.com/p/interesting.html
Photo

பூச்சி மருந்து அடிக்கும் ரிசர்வ் வங்கி...

வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் திக்கென்று இருக்கிறது. IANS செய்தி நிறுவனம் அப்படியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நூறு ரூபாய் நோட்டுக்கள் பெரும் தட்டுப்பாடாக இருப்பதால், நிலைமையை சமாளிக்க, ரிசர்வ் வங்கி கிடங்கில் அழிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய நூறு ரூபாய் நோட்டுக்களுக்கு புத்துயிர் அளிக்கப்படுகின்றது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இவை மிகவும் அழுக்காகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதால், பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டும், நறுமணங்கள் தெளிக்கப்பட்டும் வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

(சாப்பிடும்) வலது கையில் இரசாயன மை வைப்பதால் உடல் நலத்திற்கு கேடு வர அதிகம் வாய்ப்புள்ளது என்று ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்க, இப்போது இந்த செய்தி இன்னும் அச்சத்தை தருகின்றது. முறையான திட்டமிடல் இல்லையென்றால் நாம் நினைக்காத புறத்திலிருந்து எல்லாம் பிரச்சனைகள் குவியும் என்பதற்கு இந்த ரூபாய் நோட்டு விவகாரம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

இச்செய்தி குறித்து விரிவாக படிக்க: http://www.ianslive.in/index.php?param=news/Banks_disbursing_soiled_notes_sprayed_with_perfume_insecticides-532752/LatestNews/31

Post has attachment
செம...செல்லாத நோட்டு விவகாரம் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற NEWS18 ஊடகத்தின் காணொளியை முழுமையாக கண்டவுடன் எனக்குள் எழுந்த வார்த்தை 'செம' என்பது மட்டும் தான். வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்புலத்தில் இருந்து வரும் பெண்கள் இவ்விவகாரம் குறித்து பதிவு செய்யும் இந்த கலந்துரையாடல் யாரும் மிஸ் செய்யக்கூடாத ஒன்று. கண்டிப்பா பாருங்க..

https://www.youtube.com/watch?v=u6moTvLEgTk

மார்ச் 2016-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அளித்த தகவல் ஒன்றை இன்று காண நேர்ந்தது. இந்தியாவில் 53% சதவித மக்களுக்கு வங்கி கணக்கு (அக்கௌன்ட்) இல்லை என்று தெரிவிக்கின்றது அந்த அறிக்கை. வீட்டில் பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் எல்லாம், தாங்கள் மாற்றிய 2000 போக மீதத்தை வங்கி கணக்கில் போட வேண்டும் என்று நிர்பந்திக்கின்றது மத்திய அரசு. வங்கி கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டால், புது அக்கௌன்ட் தொடங்கி பணத்தை டெபாசிட் செய்யுங்கள் என்று பதில் வருகின்றது. சும்மா நாட்களிலேயே வங்கி கணக்கு துவங்குவது என்பது எளிதில் முடியக்கூடிய விசயம் இல்லை எனும் போது, வங்கிகள் இப்போது இருக்கும் இக்கட்டான நிலையில், இன்னும் நாற்பது நாட்களுக்குள் எப்படி இவ்வளவு மக்களுக்கு கணக்கு துவங்க உதவ முடியும்?

அப்படியானால், மிக அதிகமான பணம் வங்கி கணக்கிற்கு வராமல் செல்லவே வாய்ப்புண்டு. இப்படி வராத பணத்தையும் கருப்பு பணம் என்று மத்திய கூறப்போவதை கேட்கவே அச்சமாக இருக்கிறது. சாமானியனுக்கு கூட எளிதாக புரியும் இந்த விஷயத்தை எப்படி ஆட்சியாளர்கள் மறந்து போனார்கள்?

மறக்காம வோட்ட குத்திவிடுங்க மக்களே.... ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் விவகாரத்தில் மோடி அரசு மீது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் கொண்டுள்ள மதிப்பு உயர்ந்துள்ளதா சரிந்துள்ளதா என்று தி ஹிந்து கருத்துக்கணிப்பு நடத்துகிறது. மறக்காம பின்வரும் லின்க்கை கிளிக்கி வாக்களியுங்கள்.

http://tamil.thehindu.com/india/article9361853.ece?ref=poll

"இந்த அரசாங்கம் மக்களுக்கு சொல்லாத, ஆனால் நம்பிக்கைக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன். அரசின் இந்த நம்பிக்கையில் சிறிதளவு பொருளாதார உண்மையும் உள்ளது. ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக சுமார் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் பணம் இந்நாட்டில் புழுங்குகின்றது. இந்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், இத்தனை கோடி பணமும் வங்கி கணக்கிற்கு வந்தாக வேண்டும். எல்லா பணமும் வந்துவிட்டால் ஓகே, ஆனால் அரசாங்கம் என்ன நம்பிக்கைக்கொண்டிருக்கிறது என்றால் இதில் கணிசமாக அளவு பணம் வங்கிகளுக்கு வராது என்று நினைக்கிறது. இப்படி திரும்ப வராத பணம் கறுப்பு பணம் அல்லது தவறான வழியில் ஈட்டப்பட்ட பணம் என்று முடிவெடுக்கப்படும். இப்படி திரும்ப வராத பணம் அனைத்தும் அரசிற்கு இலாபமே. இதனை திரும்ப அச்சடித்துக்கொண்டு அதனை அரசு செலவழிக்கும்.

எவ்வளவு பணம்திரும்ப வராது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரகுராம் ராஜன் ஒருமுறை இதுக்குறித்து பேசும் போது, பெரும்பான்மையான 500, 1000 ரூபாய்கள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிடும் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால், கறுப்பு பணம் என்று நினைக்கப்படும் பணத்தை வங்கிகளுக்கு கொண்டுவர பல்வேறு வழிகள் உள்ளன. அதனாலேயே அவர் அப்படி கூறினார். நிச்சயமாக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை ரகுராம் ராஜன் அனுமதித்திருக்க மாட்டார். 2015 ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் இக்கேள்வி அவர் முன்பாக வைக்கப்பட்டது. இப்படியான திட்டத்தில் சிறிதளவே பலன் உள்ளது என்றும், அதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையானது மிக அதிகமானது என்பதால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவர் கூறினார்"

ப.சிதம்பரம், இந்தியா டுடே ஊடகத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த நேர்காணலின் ஒரு சிறு பகுதியை தான் நான் மேலே மொழி பெயர்த்திருக்கிறேன். என்னா அறிவுய்யா இந்த மனுஷனுக்கு என்பது தான் என் முதல் எண்ணமாக இருந்தது. மிகப்பெரிய பொருளாதார நுணுக்கங்களை கூட மிக எளியமையான விளக்கும் சிதம்பரத்தின் பாணி வெகுவாகவே கவர்ந்தது. இப்படியான ஒரு அறிவு, ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி பெருமளவு பயன்படாமல் போய்விட்டதே என்று வருத்தமும் மேலோங்கியது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் தொடர்பாக பல்வேறு நுணுக்கமான விசயங்களை அறிந்துக்கொள்ள கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய நேர்க்காணல்: http://indiatoday.intoday.in/story/chidambaram-to-india-today-demonetisation-black-money/1/812531.html

Post has attachment
இன்று மட்டும் இரண்டாவது முறையாக ராகுல் காந்தி காவலில் வைக்கப்பட்டுள்ளார். காரணம்? ராம் கிஷன் என்ற முன்னாள் இராணுவ வீரர், ஒரே ஓய்வூதிய திட்டத்தில் தங்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக கூறி நேற்று டெல்லியில் தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் பேசியவையும், எழுதியவையும் சமூக தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பில் டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடுமையான போராட்டத்தின் விளைவு தான் நீங்கள் முதல் வரியில் படித்த செய்தி.

பலியானவரின் மகனை கூட மத்திய அரசு காவலில் வைத்துள்ளது. "பலியானவரின் மகனை காவலில் வைத்துள்ளீர்களே, உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?" என்று காவல்துறை அதிகாரிகளிடம் ராகுல் காந்தி ஆவேசப்படும் காட்சிகளும் வைரலாகி கொண்டிருக்கின்றன. கொடுமை என்னவென்றால், மத்திய அமைச்சர் வி.கே சிங், பலியான ராணுவ வீரர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியது தான். மிகப் பெரும் மனஉளைச்சலை தங்களுக்கு இந்த கருத்து ஏற்படுத்தியுள்ளதாகவும், இப்படியான கருத்து இராணுவ வீரர்களையும், இந்திய நாட்டையும் அவமானப்படுத்தியுள்ளாகவும் கூறியுள்ளார் பலியான இராணுவ வீரரின் மகன்.

இராணுவ வீரர்களின் சடலங்கள் மீது அரசியல் நடத்தும் மோடி அரசிடம் இருந்து வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்? :-(

படம்: போராட்டத்தின் போது ராகுல்
Photo
Wait while more posts are being loaded