Profile cover photo
Profile photo
Lakshmi Nagappan
3 followers
3 followers
About
Posts

Post has attachment
பூமாலை
மலையத்தேவன் மகளே, மதுரைநகர் அரசியே, மாடவீதிகளில் உலாவரும் மலை மகளே ! நான் தொடுக்கும், ஆயிரம் ஆயிரம் ஆரங்களால் உன்னை அலங்காரம் செய்கின்றனரே , உனது அடியிலே வளர்ந்து நிற்கும் வனிதை என் வீதி நீ அறிவாயோ ? வேண்டும் வரம் தருபவளே, ஒரு பூமாலை தந்திடம்மா - என் உள்ளங்...
Add a comment...

Post has attachment
உழவன்
உழுது உழுது வளைந்த முதுகு , வெய்யிலைக் கண்டு வாடி வியர்த்தாலும் ஒய்வு தேடாது உழைக்கும் கைகள், கல், மண், முள் என எதைக் கண்டும் பணியாத பாதங்கள், வானம்பார்த்த பூமியில் வியர்வை பாய்ச்சி, வாழ்நாள் முழுதும் வயல்வெளியில் வாசம் செய்து, நெல்மணிப் பார்க்கையில் நெஞ்சி...
Add a comment...

Post has attachment
எள்ளல்
கொக்கரித்த சிரிப்பால் காப்பியங்கள் பிறந்துள்ளன எத்தனைக் காலங்கள் உருண்டாலும் , எள்ளி நகையாடிய தருணங்கள் எள்ளளவும் மனதினின்று நகராது. அவையடக்கத்துள் நகைச்சுவைக்கும் அகராதிகள் உண்டு. அளவு மீறுகின்ற போது அணை உடைவது போல, அலட்சியச் சிரிப்பால் அவலட்சணமாகிப் போகும...
Add a comment...

Post has attachment
அத்தை மடி
அதிமதுரப் பூவழகே - நீ அழுததாலே மேற்கே அந்தவானமும் அழுகுதே, அந்திச்சூரியனும் மயங்குதே, அம்மலையரசி தாங்காமல் - கண் அருவி நீர் சொரியுதே, அரும்பு மலரே அழுதது போதுமடி , அத்தைமடி வந்திடடி - உன்னை அரவணைத்துத் தாலாட்ட ஆயிரம் பிறப்புப் போதாதடி .
Add a comment...

Post has attachment
சித்தாந்தம்
சிந்தை முழுதும் சிவமே நினைவாய் , சீவனை மறந்து சிற்றம்பலவானை நினைக்கும்       சிந்தைப் பொழுதெல்லாம் சிறுதுளி தேன் பருகிய   செம்மை உணர்வுப்பிறக்கையில் , சித்தாந்தத் தேனடையாம் சாகரத்தின் சாராம்சத்தை சொல்லிடவும் முடியுமோ ?
சித்தாந்தம்
சித்தாந்தம்
lakshminagappan.blogspot.com
Add a comment...

Post has attachment
ஆருயிர் - நெல்
கன்ம முளை   காரணமாய், ஆணவ   உமியகற்றும் மாயைத் தவிடுடைத்து ஆருயிர் நெல்.   ஆக்கி, அளித்து, அழிப்பவன் அவனன்றோ ! ஆணவம் , கன்மம் , மாயை என்னும் மூன்று தடைகளையும் உவமைப்படுத்தி உரைக்க விழைகின்றேன் . ஓர் நெல் உயிராகக் கருதப்படின் , அந்நெல்லைச் சுற்றி முழுவதும் ம...
ஆருயிர் - நெல்
ஆருயிர் - நெல்
lakshminagappan.blogspot.com
Add a comment...

Post has attachment
இறைமை
ஓங்கராப் பொருளே வினைதீர்க்கும் வித்தகனே , வெற்றிதரும் விநாயகனே போற்றி போற்றி ! இம்மைப் பொருளின்பமும் மறுமை முத்தியின்பமும் தரும் மங்கல இலக்குமியே, மன்னுக நின்புகழ் ! நாவிற்கு உகந்த நற்றுணை யாகும் நற்றாய் சரசுவதியே, நமோ நமக !
Add a comment...

Post has attachment
தகப்பன்சாமி
என் அடையாளம் அவன் . கல்விக் கரை சேர கால்கள் எனும் துடுப்பெய்தியவன் . துடுப்பில்லா படகு தத்தளித்தல்லவா போகும் ? என்னை தளராது தாங்கியவன். உ . வே . சா தாத்தாப் போல் ஓடி ஓடித் தேடினான் உன்னத நூல்களை . தொகுத்து வைத்துள்ளேன் நினைவுகளாய் நூல்களையும், அவனையும், கை ...
தகப்பன்சாமி
தகப்பன்சாமி
lakshminagappan.blogspot.com
Add a comment...

Post has attachment
தாய்மை
உதிரம் பிரித்து உயிர்ப்பால் கொடுத்து, ஒரு கணம் பிரியாது உடற்சூட்டோடு அணைத்து வாஞ்சையாய் வளர்த்த பிள்ளை, வாலிபம் தொட்ட பின் - அமில வார்த்தைகள் கொட்டினாலும் , வெறுத்து ஒதுக்கினாலும் , கடிந்து பேசிடாத - அவள் கருணைக்கு ஈடு உண்டா ? கடைமணித்துளியிலும் அவள் கண்கள்...
தாய்மை
தாய்மை
lakshminagappan.blogspot.com
Add a comment...

Post has attachment
அகவை அறுபது
எனக்கு  எல்லாம் தெரியும். நான்  வாழ்ந்த அனுபவம் உன் வயசு - கேளு  நான் சொல்றதைக் கேளு,      ஆமாம்! ( மற்றவர்களிடத்தில் ) எதுவும் புரியலையே, எல்லாம் மறக்குது . கண்ணும் மங்குது . நாலடி நடந்தா - காலு நாள் முழுதும் வலிக்குது. நாராயணா !
( மனதில் ) 
அகவை அறுபது
அகவை அறுபது
lakshminagappan.blogspot.com
Add a comment...
Wait while more posts are being loaded