Profile cover photo
Profile photo
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
192 followers
192 followers
About
தேன்மதுரத்தமிழ்'s interests
View all
தேன்மதுரத்தமிழ்'s posts

Post has attachment
மாறுவதும் மாறாததும்
எழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன் அரசும் ஆட்சியும் மாறுவதுதான், கொஞ்சம் ஊற்றிடு மாறாததை என்றது; அன்பே! மருவுதல் அன்றி மாறுவதும் மாறாததும் நான் என்ன கண்டேன்!

Post has attachment
பெண்களே! ஒன்று சேருங்கள்!
பெண்ணாகப் பிறப்பது படுக்கைக்கா? படிப்பித்தல் என்பது இன்று இருக்கா? கருவாகப்பிறப்பதும் வளர்வதும்  கயவரின் கரத்தில் உயிரிழக்கவா? என்ன செய்யப் போகிறோம்? எண்ணற்றப் பெண்கள் பலியான வரிசையில் இப்பொழுது நந்தினியும் ஹாசினியும் இன்னுமெத்தனை வெளிவரவில்லையோ ஐயோ! பதறுதே...

Post has attachment
அமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை
ஜனவரி இருபதாம் தேதி பள்ளியில் விழுந்துவிட்டேன் என்று சொன்ன மகனின் காலைப் பார்த்தால் முழங்காலுக்குக் கீழே இன்னொரு முழங்கால் போல வீக்கம். ஒரு புண், இரத்தக் கட்டு. பதறி உடனே மருத்துவருக்கு அழைத்தேன். மூன்றே முக்கால் மணியாகி விட்டிருந்தது. இங்கு அந்த நேரத்தில் ...

Post has attachment
தமிழ் இளைஞர்காள், வெற்றிவாகை சூடுங்கள்!
இளநீர் மோர் குடிப்போம் வெளிநாட்டுப் பானம் தவிர்ப்போம்  என்று எட்டுத்திக்கும் கேட்குது கருவேலம் அழிப்போம்  நாட்டு மரம், செடி , விலங்கு வளர்ப்போம் என்று எட்டுத்திக்கும் கேட்குது மண் காப்போம் நீர்நிலை காப்போம் மீனவர் காப்போம் விவசாயி காப்போம் என்று எட்டுத்திக்...

Post has attachment
ஏறு தழுவல் - கலித்தொகை
"சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு அவ் வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் முறை உளி பராஅய்ப் ப...

Post has attachment
ஏக்கத்துடன்
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க விளைக வயலே வருக இரவலர் பால்பல ஊறுக பகடுபல சிறக்க பசி இல்ஆகுக பிணீகேன் நீங்குக அறநனி சிறக்க அல்லது கெடுக அரசு முறைசெய்க களவு  இல்ஆகுக நன்றுபெரிது சிறக்க தீது இல்ஆகுக மாரி வாய்க்க வளநனி சிறக்க விவசாயி வாழ விளைநிலம் காக்க என விழை...

Post has attachment
வரட்டியை...
படம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும் இறக்குமதி செய்வோம் தொட்டியில் பூவளர்க்க வரட்டியைக் காசுகொடுத்து வாங்குவோம் 'cow dung cake '!!??!! புதியமாதவி அவர்களின் 'பொங்கல் ஆன்லைனில்' பதிவின் தூண்டல். ...

Post has attachment
அறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி! -- நா.முத்துநிலவன்
வலைத்தள நண்பர்களுக்கு மகிழ்வுடன் பகிர்வது என்னவென்றால், என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாட்டன் காட்டைத் தேடி' தற்பொழுது சென்னைப் புத்தகத் திருவிழாவில் (கடை எண் 622 மற்றும் 623) கிடைக்கிறது.  என்னை எப்பொழுதும் ஊக்குவித்து இந்நூலிற்கு முன்னுரையும் வழங்கி...

Post has attachment
என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன்
மந்தையோட்டிச் சென்றிருக்கிறான் கணவன். பிள்ளைகளுடன் காட்டில் தனித்தொரு வீட்டில் வாழ்கிறாள் அவன் மனைவி. வறுமையுடன் அவள் சந்திக்கவேண்டியிருந்தப் பிரச்சனைகள் அதிகம். அப்படியிருக்க, வீட்டில் நுழைந்த கருநாகம் ஒன்றிடமிருந்துப் பிள்ளைகளைக் காக்க இரவெல்லாம் விழித்து...

Post has attachment
ஆஅஓஒ
முட்டுவேனா தாக்குவேனா அறியேன் துன்பம் பெருக ஆஅஓஒ எனக் கூவுவேனா உண்மை உணராது பிதற்றும் ஊரை நினைத்து ஒரு பெண் இரவுப்பணி முடிந்து வரும்பொழுது பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டாள். இரவில் எதற்குப் போக வேண்டும்? தனியாக எதற்குப் போகவேண்டும்? இன்னொரு பெண் பகலி...
Wait while more posts are being loaded