Profile cover photo
Profile photo
Rajendran Tamilarasu
47 followers
47 followers
About
Rajendran's posts

Post has attachment

Post has attachment

Post has attachment
Pongaloo pongal
Photo
Photo
2 Photos - View album

Post has attachment
LOL!

தவிப்பு!

கண்ணிழந்த இருளுக்கு
கறைபடிந்த விளக்கே வெண்ணிலவே
பலம் இழந்த மனதிற்கு
உயிர்க்கொடுத்த அன்பே ஆருயிரே

நட்ட நடு நிசியினிலே
தரை விழுந்த தாரகையோ
காளிதாசன் ஓலையிலே
கதை சொன்ன தூரிகையோ

இலேசான மழையானாலும்
குடைபிடித்து போகயிலே
ஏதோ ஒரு மூலையிலே
மழை நீர் உடல் பட்டது போல

நானாக என் பாதையிலே
வெறுமனே போகயிலே
ஏனோ என் சிந்தையிலே
நிலையாக நின்றவளே

தூரப்போகும் படகானாலும்
துடுப்பிழந்து போகயிலே
திசை தொலைந்து போகுமே
அதுபோல் திசையறியா போவேனோ?

அரும்பெய்திய வயதினிலே
மாதவன் கனவோ
மாதரின் நினைவுகளே
இதில் என் பிழை என்ன?

நாளை என்றொரு வாய்ப்பிழந்த
சந்தர்ப்ப குற்றவாளி, என் இதயம்
வானில் பறக்கும் பறவைக் கண்டு
அதன் சிறகைக் கேட்டு சிரிக்கிறதே

சித்திரையில் வெயிலும்
மார்கழியில் குளிரும்
விதிக்கப்பட்டதுவே
அவனன்றி ஒருபோதும் மாறாது

வழக்கம் போல இதற்கும்
காலம் தான் பதில் சொல்லும்!!

உடலோடு உயிர் போல

வானோடு நீர் சேர்த்து யாரோ
மண்ணுக்கு மனைவார்த்துக் கொடுத்தார் போல
எங்கோ உயிர்த்து நேற்றே அறிந்தோம்
இன்று இணைந்தோம் நாளை தொடர்வோமா?

வானும் மண்ணும் நாம் இருக்கையில் பகையே
ஆனாலும் தூரம் இணைத்தது போல
உனக்கும் எனக்கும் உயிர் சேர்ந்தும் கூட
நாணம் தட்டித் தூரமாக்கியதே

மழை பொழிந்து மண்ணை இடித்து
திவலைத் தெரித்தது போல
உன்னோடு நான் இணைந்து
இருவுயிர் வேறுயிர்த் தரித்ததே

உடலோடு உயிர்க் கென்ன உறவோ
உன்னோடு எனக்கந்த உறவே

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded