Profile cover photo
Profile photo
Ayyanar Viswanath
3,644 followers
3,644 followers
About
Ayyanar Viswanath's posts

ஓரிதழ்ப்பூ நாவல் நிறைவு பெற்றது. இன்று மதியம் கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்த போது எழுந்த உணர்வு மகிழ்ச்சியா துக்கமா என்பது சரியாகத் தெரியவில்லை. இரண்டும் கலந்தப் புது உணர்வாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் மேலாய் இக்கதாபாத்திரங்கள் என்னோடு இருந்தனர். இனி இவர்கள் இல்லை. உறக்கம் வரா இரவுகள், அதிகாலை விழிப்புகள், மிக மெதுவாய் நகரும் நெரிசல் கார் காலைகள் என இனி எந்தப் பொழுதிலும் இவர்களைக் குறித்து சிந்திக்க வேண்டியதில்லை. என்னோடிருந்தவர்களுக்கு விடை தருவது என்பது எப்போதுமே எளிதாக இருந்தது இல்லை. இனி வரும் நாட்களில் இந்த இன்மையை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்பதும் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் மிகுந்த அலைக்கழிப்புகளையும் இக்கதாபாத்திரங்கள் உருவாக்கின. என்னால் இதை எழுதி முடிக்கவே முடியாது எனவும் நம்பினேன். எல்லாமும் ஓர் முடிவிற்கு வந்திருக்கிறது. ஆரம்பகால அத்தியாயங்களில் இப்பாத்திரங்கள் என்னைப் போலவே தரையில் கால் பாவாது அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. காலம் என் கால்களைத் தரைக்கிழுத்ததைப் போலவே இவர்களையும் இழுத்து நிகழில் பொருத்தினேன். கனிவு என்னிடம் மட்டுமல்ல இவர்களிடமும் வந்து சேர்ந்தது. என்னுடைய வெவ்வேறு நான்கள் தாம் இவர்கள் என்றே ஆழமாய் நம்புகிறேன்.

இந் நாவலை இன்னும் மெருகேற்ற வேண்டும். இன்னும் கச்சிதமாக்க வேண்டும். எல்லாம் முடித்து தொகுப்பாக்கி அச்சிற்கு செல்லும் முன் சில நண்பர்களுக்கு அனுப்பி வைக்க நினைக்கிறேன். அவர்களின் பார்வையையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். பிறகுதான் அச்சிற்கு செல்லும். ஒருவேளை யாராவது இந்நாவலை வாசிக்க விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அத்தியாயங்களாக வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருநூறு பேர் வரை பார்த்திருக்கிறார்கள். எப்படியும் நூறு பேராவது முழுமையாய் வாசித்திருப்பார்கள். ஆரம்பகாலம் தொட்டு இந்தப் பக்கத்தை வாசிப்பவர்கள் அவ்வப்போது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு என் நன்றி. ஒரு வகையில் இந்தப் பார்வையாளர் எண்ணிக்கை எனக்குத் தனிப்பட்ட வகையில் ஊக்கமாகவும் இருந்தது. அந்த முகமறியாதவர்களுக்கும் நன்றி.

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று
"தீதிலிருந்து நன்மைக்கு  இருளிலிருந்து ஒளிக்கு  இறப்பிலிருந்து பெருநிலைக்கு” வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கை வலிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும...

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது
”அசதோமா ஸத் கமய தமஸோமா ஜ்யோதிர்கமய மிருத்யோர்மா அமிர்தம் கமய  ”  ”நீ சாப்ட்டு கெளம்பிடு” நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். ஈரக் கூந்தல் ஜாக்கெட்ட...

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது
சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என முனகிக் கொண்டான். வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என நடக்...

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு
காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா, " அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு என்னால முடில" எனப் படுத்துவிட்டாள். நானும் நிறைப் போதையில் இருந்தேன். சாமி அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார்...

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு
" ஐயோ என்ன விட்டுடு" என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. செத்தோம் என நினைத்ததுதான் அவ...

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு
’எழுந்து வூட்டுக்கு போம்மா’ அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார். மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது. எங்கும் இருள். திக்பிரம்மைப் பிடித்தவளாய் மானிற்கு சமீப...

முஸ்தபா பகிர்ந்திருந்த மருத மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மரத்தை கடைசியாக எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை. இம் மரம் என் பால்யத்தோடு பிணைந்தது. பாலாற்றின் கிளையாறு ஓடும் சின்னஞ் சிறு கிராமத்தின் செழிப்பான காலங்கள் அவை. ஆற்றில் எப்போதும் நீரோடும். கரைகள் முழுக்க அரச மரங்களும் மருத மரங்களும் நிழல் காக்கும். அரச மர நிழலில் பிள்ளையாரும் மருத மர நிழலில் நாகமும் நிரந்தரமாய் ஓய்வெடுப்பார்கள். உச்சி வெயிலுக்கு மட்டும் நாங்களும் கால்நடைகளும் அக்குளிர் நிழலில் தஞ்சமடைவோம். எதிர் திசையிலிருக்கும் ஏரிக்கரைக்குப் போகும் வழியெங்கும் இலுப்பை மரங்களும் புளிய மரங்களும் ஆலமரங்களும் அடர்ந்திருக்கும். இலுப்பைப் பூவின் வாசத்தைப் போல கிறங்கடிக்கும் ஓர் வாசத்தை இதுவரை என் நாசி உணர்ந்ததில்லை. அப்படி ஒரு மயக்கும் வாசனையைக் கொண்ட மரமது. தொடர்ச்சியான இலுப்பை மரங்களை உச்சி வெயிலில் கடக்கும்போதெல்லாம் உள்ளே மிக மெல்லிய நடுக்கத்தை உணர்வேன். இலுப்பை முனி பற்றிய கதைகள் எங்கள் பகுதியில் ஏராளம். மேலும் அம்முனிகள் உச்சி வெயிலுக்குத்தான் இலுப்பை மரங்களுக்கு வருமாம். மாமரம் போற்றுதும். விருட்சம் எனும் சொல்தான் எத்தனை பிரம்மாண்டமானது! 

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தைந்து
”த வந்திரு த, என்ன வுட்டன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வா த” மாமுனியின் கால்களில் விழுந்து ஒரு பெண் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ’யார் மா நீ?  ஏன் என் கால்ல வந்து விழுற? எழுந்திரு எழுந்திரு’ மாமுனி எவ்வளவு விலக்கியும் அந்தப் பெண் அவரி...

Post has attachment
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து நான்கு
நினைவு திரும்பியபோது காலம் இடம் யாவும் குழப்பமாக இருந்தன. மூத்திரமும் மருந்தும் டெட்டாலும் கலந்த சகிக்க முடியாத நெடிதான் நாசியை முதலில் அறைந்தது. எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்து. உடலை அசைக்க முடிந்தாலும் இடது கையை அசைக்க முடியாத அளவிற்குக் கட்டுப் போட்டி...
Wait while more posts are being loaded