Profile cover photo
Profile photo
Arunmozhi Devan
3,124 followers
3,124 followers
About
Arunmozhi's posts

Post has attachment
KISMATH - MALAYALAM

காதலனுக்கும் காதலிக்கும் வயதில் வித்தியாசம். காதலன் முஸ்லிம் காதலி இந்து அதுவும் தாழ்த்தபட்டவர்.

இருவீட்டாரும் காதலை எதிர்க்க ஒருநாள் காலையில் இருவரும் அடைகலம் தேடி போலிஸ் நிலையம் வருகிறார்கள். அந்த ஒருநாளில் போலிஸ் நிலையத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

மிக பெரிய சப்ரைஸ் எஸ்.ஐயாக நடித்து இருக்கும் நம்ம மாவா சார் வினை.. மிரட்டுவதில் தான் என்னா மிடுக்கு.. ஆளே மாறிவிட்டார். ஷேன் நிகம், ஸ்ருதி மேனனின் நடிப்பு அட்டகாசம்...

படத்தின் இயக்குனருக்கு இது முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு கட்சிதமாக படைப்பு. மனதை அள்ளும் கதை திரைகதை ஒளிப்பதிவு நடிப்பு இசை..

வாவ் வாவ் வாவ்... லவ்யூ மல்லுஸ் :)
Photo

Post has attachment
THE CLASSIFIED

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட படம்.

1978 வருடம் ஒரு பெண் குழந்தை காணாமல் போகிறாள். இரண்டு வாரங்களாக குழந்தை பற்றிய தகவல் கிடைக்காமல் போக குழந்தை இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்க, குழந்தையின் அம்மா ஒரு ஜோசியகாரரிடம் செல்ல அவர் குழந்தை கண்டிப்பாக கிடைப்பாள் என்று நம்பிக்கையாக சொல்கிறார். இவரும் போலிஸ் அதிகாரியும் ஒன்றாக செயல்பட்டு அந்த குழந்தையை கண்டுபிடித்தார்களா !!
Photo

Post has attachment
THREE

ஒரு மருத்துவமனையில் தலையில் குண்டடிப்பட்ட குற்றவாளியை அழைத்து வருகிறார்கள். அவனுக்கு கண்டிப்பாக ஆப்ரேஷன் செய்தாக வேண்டிய கட்டாயம் ஆப்ரேஷன் தியேட்டரில் அவனுக்கு முழிப்பு வர ஆப்ரேஷன் செய்ய வேண்டாம் என்று கூறிவிடுகிறான் குற்றவாளி.

அங்கே அவனை போட்டுதள்ள நினைக்கும் போலிஸ் அதிகாரி, அவனை காப்பாற துடிக்கும் டாக்டர். இவர்களிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளி. யார் ஜெயித்தார்கள் !!!

படத்தின் கிளைமெக்ஸ் தான் மாஸ்... மொத்த சண்டை காட்சிகளையும் ஸ்லோமோஷனில் எடுத்து இருப்பார்கள். திரில்லர் மற்றும் ஆக்க்ஷன் பிரியர்களுக்கு ஏற்ற படம்..

பிகு:- DRUGWAR படம் பார்த்து இருக்கீங்களா அந்த படத்தில் வேலை செய்த இரண்டு டைரக்டர்களில் ஒருவரான Johnnie To படம் இது...
Photo

Post has attachment
Train to Busan...

கொரியாவில் செம ஹிட் அடித்த படம்.. சாம்பிகள் பற்றிய கதை தான். ஆனால் இதுவரை நீங்கள் பார்த்திடாத விருவிருப்பான படம் . படத்தின் வேகத்துக்கு திரைகதை முக்கிய பங்குவகிக்கிறது. திரில்லர் பிரியர்களுக்கு செம தீனி.
Photo

என்னை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை 3000 மேல் என்று காட்டுகிறது.. இது என்ன விதமான தொடர் ??? நான் எழுதுவதே இல்லை நான் எழுதுவதை படிக்கவும் ஆள் இல்லை பின் ஏன் என்னை தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் ???

உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது. பல சுவையான கதைகள் ....

நான் எழுதுவது முற்றிலும் குறைந்துவிட்டது போல ஒரு பிரம்மை. கடந்த இரண்டு வருடங்களாக இரண்டு பத்தி எழுதுவதற்கே மிகவும் யோசிக்க வேண்டி இருக்கிறது. எனது கற்பனைகள் எல்லாம் வற்றிவிட்டது போல ஒரு பிரம்மை. படிக்க மட்டும் முடிகிறது நியாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஏதோ ஒரு சிக்கல். ஐந்து நிமிடத்துக்கு முன் கேட்ட பாடலை கூட நியாபகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. நான் நானாவே கரைந்துக் கொண்டு இருக்கிறேன்.

Post has attachment

THE HANDMAIDEN – 2016 KOREAN MOVIE

PARK CHAN-WOOK இந்த இயக்குனரை பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா.. தெரியலையா சரி OLD BOY படம் பார்த்து இருக்கீங்களா என்ன பார்க்கலையா அப்போ இனிமேல் படிக்காம விட்டுட்டு SYMPATHY OF VENGEANCE TRIOLOGY படத்தை பார்த்துட்டு வாங்க அப்படியே STOKER படமும்.

பார்க் படங்களில் இருக்கும் முக்கியமான ஒற்றுமை பார்வையாளர்க:ளிடம் படத்தை ஒப்படைத்துவிடுவார்.. உங்கள் பார்வையில் படத்தின் முடிவுவை நீங்களே யுகித்துக்கொள்ள வேண்டும்.
OLD BOY அல்லது STOKER படங்களின் முடிவுகள் இப்படி தான். THE HANDMAIDEN ஒரு திருடன் பணகார ஜப்பானிய பெண்ணை கவர்ந்து அவளிடம் இருக்கும் பணத்தை அடைய நினைக்கிறான். அந்த பெண்ணுக்கு வேலைகாரியாக இருக்க இவன் ஒரு பெண்ணை அனுப்புகிறான். அந்த பெண்ணோ தனது மாமாவின் அடிமையாக இருக்கிறாள். இருவர் திட்டமும் சரியாக நடந்து மூவரும் அந்த வீட்டை விட்டு வெளியே வர இவனின் ரகசிய திட்டம் வெளிப்படுகிறது. இதன் பின் கதை பின்னோக்கி நகர்ந்து அந்த ஜப்பானிய பெண்ணின் வாயிலாக முதலில் இருந்து படம் தொடங்குகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் பார்த்ததெல்லாம் உல்டாவாக செல்லும். யாரை முன்வைத்து படம் ஆரமித்ததோ அவனை பின்னுக்கு தள்ளிவிட்டு படம் இரண்டு பெண்களை மையமாக நகரும். முற்பகுதியின் பல இடங்களில் காட்சிகள் ஒன்றொடு ஒன்று தொடர்பு இல்லாமல் இருக்கும் பின்பகுதியில் இதற்கான விடையை விரிவாக சொல்லும். ஓரினசேர்க்கையை மையமாக வைத்து திரைக்கதை பின்னபட்டு இருக்கிறது.

நேர்த்தியான திரைகதை, அருமையான ஒளிப்பதிவு, மனதை அள்ளும் இசை... படம் மெதுவாக செல்வது போல இருக்கும் ஆனால் நல்ல திரில்லர், அடுத்து அடுத்து நடக்கும் சம்பவங்களை நம்மால் அவ்வளவு எளிதில் யூகிக்க முடியாது.

வயது வந்தவர்களுக்கு மட்டும் :)

#பையாஸ்கோப் 
Photo

செல்வத்துக்கு ஏற்பட்ட விபத்தை அறிந்து மனம் பதபதைத்தது.. மேலாதிக்க தகவல் ஒன்றும் பேஸ்புக்கில் கிடைக்காத காரணத்தால் இங்கே வந்தேன். ஆசிப் அண்ணாச்சி பதிவை படித்ததில் இருந்து உடைந்து அழுதுவிட்டேன். இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவியவர் திருப்பி கொடுக்கும் திறணியில்லாமல் இருக்கிறேன். உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை செல்வம். மிக பெரிய பாரத்தை சுமந்துக் கொண்டு இருப்பது போன்ற அழுத்தத்தை உணர்கிறேன்..

மீண்டு வாருங்கள் செல்வம் :(

Wait while more posts are being loaded