Profile cover photo
Profile photo
உமா ஜி (ஜீ)
84 followers
84 followers
About
Posts

Post has attachment
வவுனியா ரயில்வே ஸ்டேஷன். பளையிலிருந்து ரயில் வந்து நின்றதும் அவசரமாக ஏறிக் கொண்டேன். உண்மையைச் சொன்னால் சரியான நேரத்திற்கு ரயில் வந்து தொலைத்ததில், ஒரு ஃபேஸ்புக் போராளியாக இந்தச் சமூகத்தின் பொறுப்பின்மையைச் சாடும் ஒரு ஸ்டேட்டஸ் கைநழுவிப்போன சலிப்புடன் ஏறினேன். என்போன்ற போராளிகளுக்கு பார்க்குமிடமெங்கும் சமூக அவலங்களும், ஒழுங்கின்மையுமே நீக்கமற நிறைந்திருக்கவேண்டும். எல்லாமே சரியாக இருந்தால் என்னதான் செய்வது?
Add a comment...

Post has attachment
சந்தர்ப்பம் என்பது சமயங்களில் மோசமான எதிரி. அது சந்தர்ப்பம் காத்திருந்து மிக மோசமாகப் பழிவாங்கிவிடுகிறது. எந்த அளவு மோசமானது என்றால்... உங்களை மெரூன் கலர் ஜட்டி அணியவைத்துவிடும் அளவுக்கு!
Add a comment...

Post has attachment
அமேசன் காட்டில் கண்டெடுத்த அரிய மூலிகையில் செய்த தலைமுடித் தைலத்தை ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்திய அண்ணன் ஒருவர் சொன்னார், 

"நல்லா இருக்கு ஜீ இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது"
எனக்கும் தெரிந்தது பார்க்கும்போதே முடி கிசுகிசுவென வளர்ந்தது, டீ.வி.விளம்பரத்தில்.

சிரித்து வைத்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை?
"வைங்கண்ணே உங்களுக்குத்தான் வயசே தெரியலயே..இன்னும் ரெண்டு செட்டாகும் பாருங்க!"அண்ணி காதில் விழும்படியாக நம்பிக்கை வார்த்தை  சொல்லிவைத்தேன். ஏதோ நம்மால் முடிந்தது.
Add a comment...

Post has attachment
இன்னும் தம் சொந்த மண்ணை ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசபடைகள் வசம் இருக்கின்றன. அங்கு செல்ல வேண்டுமென்று இருபத்துநான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். எல்லாம் பயிர்ச்செய்கை நிலங்கள். பலாலி விமான நிலைய விரிவாக்கம், படையினருக்கான குடியிருப்புகள் என ஒருபகுதி மீளக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்ததுதான். மீதமிருக்கும் பகுதியையும் வழங்கும் உத்தேசம் இருப்பதாகப் தெரியவில்லை. படையினர் வேறு, 'நாங்கள் அனுமதித்த இடங்களிலேயே மக்கள் குடியிருக்கவோ, பராமரிக்கவோ செய்யவில்லையே?' என்று நியாயமாக(?!) கேள்வி கேட்கிறார்களாம்.
Add a comment...

Post has attachment
சமயங்களில் சாவை எதிர்நோக்கியிருப்பவனைவிட அந்தச் சூழ்நிலையில் அருகில் இருப்பவனுக்கே தாமதிக்கும் வினாடிகள் அதீத நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன. 2006ல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச் சிக்கிக் கொண்ட நாட்கள் மறக்கமுடியாதவை. ஒவ்வொருநாளும் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் புலிகளுக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் மாறி மாறி 'போடுவது' என்பது சர்வசாதாரணமான நிகழ்வு. 

ஒரு மதிய நேரம் வீட்டிற்கு அருகாமையில் ஒரு துப்பாக்கி வேட்டு. சிறிய இடைவேளில்யில் இரண்டாவது வேட்டும் தீர்க்கப்பட்டதில், ஒரு நம்பிக்கை 'தப்பி விட்டாரா?' 
Add a comment...

Post has attachment
அகால மரணமடைந்தவனின், தற்கொலை செய்துகொண்டவனின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க நேரிடுவது கொடுமையானது. அது மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதோ என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. இடையிடையே அங்கே சென்று பார்த்துக் கொள்ளும் வழக்கம் எங்களில் யாருக்கேனும் இருக்கலாம். என்றோ ஒருநாள் அவர் அதில் நிலைத்தகவலிடுவார் என விபரீதமாக எமக்கே தெரியாமல் ஒரு மறைமுக எதிர்ப்பார்ப்பு ஆழ்மனதில் இருக்கிறதா?
Add a comment...

Post has attachment
நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் எனக்கும் புத்தகங்களுக்குமான இடைவெளியைச் சுருங்கச் செய்திருக்கின்றன. ஏராளமான புத்தகங்களை நான் வாசித்தது அந்தப் பகற்பொழுதுகளிலும் என் பள்ளிக் காலத்தின் விடுமுறை நாட்களிலும்தான். என் நினைவு தெரிந்து முதல் நோய்வாய்ப்பட பொழுது கிறீம் கிரேக்கர் பிஸ்கெட்டும், நெஸ்டோமோல்டோடும் கரைந்து போன பொழுதுகளில் மாறுதலளிக்க சில புத்தகங்களும். அன்றைய ஒருநாளின் மாலைப் பொழுதில்தான் முதன்முதலாக 'வேங்கையின் மைந்தன்' என்ற புத்தகத்தைப் பார்த்தேன். ஒடுக்கமாக, நீளமாக, தடித்த அந்தப் புத்தகத்தில் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். கோகுலத்தை மட்டுமே எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டிருந்த வயது அது.
Add a comment...

Post has attachment
நீங்க வேற! நாங்க வேற! நீங்க எல்லாம் ஹிந்திப் படம் பார்த்து அதையே ஃபெலோ பண்றவங்க. லைஃப வாழுறவங்க. பதினஞ்சு வயசுலயே கேர்ள் ஃபிரண்ட்! லவ்சு! நாங்கெல்லாம் தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்தவங்க. எங்களுக்கு சமுதாயம்தான் முக்கியம். நாப்பது வயசில சமுதாயத்துக்காக போராடுற ஹீரோவ இருபது வயசு பொண்ணு துரத்தி துரத்தி லவ் பண்ணுவாங்க. அத நம்பியே முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் சும்மாவே சுத்திட்டு திரியுற எத்தின பேரு இருக்காங்க தெரியுமா?
Add a comment...

Post has attachment
என் தனிமையையும் மனதின் வெறுமையையும் போக்கவே பதிவுலகத்திற்கும், ஃபேஸ்புக்கிலும் இணைந்துகொண்டேன்.மற்றபடி இலக்கியம் படைப்பது, சமூகத்திற்கு கருத்து சொல்வது, அநியாயத்தைத் தட்டிக் கேட்பது போன்ற நல்லெண்ணங்கள் எதுவுமில்லை. ஆனால் சமயங்களில் மனநிம்மதியைத் தேடிவந்த சமூக வலைத்தளங்களே தீராத மன உளைச்சலையும் கொடுத்திருக்கின்றன. மொத்தமாக எல்லாவற்றையும் மூடிவிடலாம் எனப் பலதடவைகள் யோசித்திருக்கிறேன்.
Add a comment...

Post has attachment
சரியான நேரத்தில சரியான முடிவை எடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்!

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இலேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. வீட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷ நடைதான். மழை பிடித்துக் கொண்டால் எப்போது விடும் என்று சொல்லமுடியாது. ஒதுங்கி நிற்கவேண்டாம் எனப் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தேன்.

எதிர்பாராமல் தூறல் சற்றுப் பலமானது. வேகத்தைக் கூட்ட, மழையும் இணைய ஓட்டமும் நடையுமாக வீட்டையடைந்தபோது, அரைநிமிடத்துக்கும் குறைவான அடைமழையில் தெப்பலாக நனைந்து விட்டேன்.

படியேறும்போது கவனித்தேன். சுத்தம்! மழை சுத்தமாக நின்றுவிட்டிருந்தது.

அதைவிட சோகம், வீட்டிலிருந்த ஆத்துமா ஒன்று "மழையே பெய்யல எப்பிடிடா நனைஞ்சே?" கையை வேறு பால்கனிக்கு வெளியே நீட்டி, அண்ணாந்து பார்த்தது.
"மழை பெய்யுதான்னு சினிமா ஹீரோயின் மாதிரி மேலே மட்டும்தான் பாப்பீங்களாடா? கீழ பாருங்கடா ரோட் நனைச்சிருக்கு"

நல்லார் ஒருவருக்காக மழை பெய்யுமாம். சமயத்தில், ரொம்ப நல்லவன் ஒருத்தன மட்டும் நனைக்கக்கூட பெய்யுமாம்!
Add a comment...
Wait while more posts are being loaded