Profile cover photo
Profile photo
karki bava
3,960 followers
3,960 followers
About
karki's posts

தமிழகத்துல பார்ப்பணர்கள மட்டும் கலாய்க்கலாம். மத்தவங்கள கலாய்ச்சா கொலையே விழும்னு சாரு எழுதனதுக்கு டைனோஜீ விழுந்து விழுந்து கொண்டாடி இருக்காரு..

எனக்கு புரியல. எப்ப பார்ப்பணர்கள் தங்களது எதிர்ப்ப கத்தி எடுத்து காமிச்சிருக்காங்க? அவங்க அடக்கமுறை ஸ்டைலே தனிதானே? என்னவோ மத்த விஷயத்துக்கெல்லாம் பூனூல்ல மாஞ்சா போட்டு வச்சு கழுத்து இறுக்கி கொண்ண மாதிரி சொல்றாங்க..

எதிக்குறவன அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒண்ணுமே பண்னலைனாலும் ஏறி மிதிச்சிட்டு போற ஸ்டைல் பாஸ் அவங்களது.. இதையெல்லாம் பெருசா பேசிக்கிட்டு

Post has attachment
//சரி சிம்பிளா சொல்றேன். பிஸ்ஸாதான் ஆஸ்கார் விருது. அது வந்ததால லோக்கல் அவார்ட்லாம் மரியாதை இல்லாம போயிடுச்சு. அந்த குப்பம் தான் தமிழ் சினிமா. இதுல இருக்கிற ஒரே காரணத்தால கமலுக்கு பிஸ்ஸா தர மாட்றாங்க. அதாவது ஆஸ்கர் தர மாட்றாங்க//


https://medium.com/@iamkarki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-c055a4c5d90d

Post has attachment
கோட்டை மிக அருகில்..
Photo

உத்தம்வில்லன்
(விமர்சனமல்ல. படம் பார்த்தவர்களுக்கு மட்டும்)

ஒருவருக்கு ஹீரோவாகும் போதே யாரோ ஒரு ஒருவருக்கு வில்லனும் ஆகிறோம். அவரவர் சுயநலத்திகேற்ப யாருக்கு ஹீரோ ஆவது என்பதையும் முடிவு செய்கிறோம். உடலை கொல்லும் நோயோ,மனதை கொல்லும் சம்பவமோ..எதோ ஒன்று நமக்கு நாமே வாழ்க்கை பற்றிய அப்ரைசல் ஒன்றை செய்ய வைக்கிறது. அதுவரை அணிந்துக் கொண்டிருந்த முகமூடியை கழட்டி எறிந்துவிட்டு நாம் நாமாக இருக்க ஆசைப்படுவோம். அந்த கனமே எல்லோருக்கும் ஹீரோ ஆகிவிடுவோம். வில்லனாக வாழும் நாம் எல்லோருமே உத்தமன்கள் என்கிறார் கமல்.

யாமினிக்கள் பெரும்பாலும் எல்லோர் வாழ்க்கையில் கிடைத்துவிடுகிறார்கள். வரலட்சுமிகள் சமூக கட்டாயம். எனக்கு அர்ப்பணாவைதான் பிடிக்கிறது. நம்மை எந்த கட்டாயமுமின்றி, முழுமையாக உண்ர்ந்து காதலிப்பவர்கள் அர்ப்பணாக்கள் தான் என நம்புகிறேன். படத்தில் எந்த பாசாங்குமின்றி மனோ-அர்ப்பணா உறவை சித்தரித்திருக்கிறார்கள்.

சாகாவரம் பெரும் துயரம் என முடிகிறது படம். தமிழ் சினிமாவில் அதிக துயரப்படப்போவது நீங்கதான் கமல்

Post has attachment
இன்று தல பிறந்தநாள்..

எல்லோரும் அவங்கவங்க செய்ற வேலை தொடர்பா gift கொடுத்தா சந்தோஷப்படுவாங்க. அந்த மாதிரி நான் தலைக்காக எழுதின திரைக்கதையை அவர் பொறந்த நாள் அன்னைக்கு வெளியிடலாம்னு நினைச்சேன்..

படிச்சிட்டு நல்லா இருக்கா இல்லையா, தேறுமா தேறாதா, மொக்கையா மெர்சலான்னு சொன்னா சந்தோஷப்படுவேன்.

தேதி மிஸ் ஆயிட கூடாதுன்றதால 90% முடிச்சிட்டு ரிலீஸ் பண்ணிடறேன். ரொமான்ஸ் பகுதிகளும், காமெடி போர்ஷன்களும் இன்னும் சேர்க்கணும்..

முடிஞ்ச அளவுக்கு ஷேர் பண்ணுங்க.. கமெண்ட்ஸ மறக்காம சொல்லுங்க..

Download link : https://www.dropbox.com/s/ca794wzk2pl5j9c/thala_script.pdf?dl=0

எல்லோருக்கும் நன்றி

Happy birthday Thala

Post has attachment
வாட்சப்பில் உலாவரும் ஒலித்துண்டு ஒன்றை கேட்டேன். முக்கோண காதலான அதை வாட்ஸப் இல்லா பெருமகர்களுக்கு கதையாக சொல்லலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில் இப்பதிவு.

பிரவீன், கல்பணா, ராகவி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) மூவரும் பொறியயல் கல்லூரி மாணவர்கள். பிரவீனை பார்த்தால் ”இவனுக்கா ரெண்டு பொண்ணுங்க” என அதிசயிக்கும் விதமாக இருக்கிறார். பேச்சில் சற்று பான்பூரி வாசனை தூக்கல். ராகவியும் கல்பணாவையும் பார்த்தால்…… இப்படி பார்த்துக்கொண்டே இருக்கலாம். கல்பணா நெகு நெகுவென நல்ல உயரம். ஒல்லியான தேகம். மிரட்சியான கண்கள். வழக்கமாக தமிழ் சினிமாவில் நாயகனை மடக்கும் இரண்டாம் கதாநாயகிக்கு ஏற்ற பெண். ஆங்காங்கே சற்று சதை புஷ்டியாக இருந்தாலும் ராகவி அழகு.. கதைப்படி அவர் கண்ணீர் வடிக்க வேண்டியிருப்பதால் அதற்கு அளவெடுத்து செய்த முகம். கதைக்குள் போவோம்.

https://medium.com/@iamkarki/whatsapp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-ecb3ca74af78

OK கண்மணி... (படம் பாத்தவங்களுக்கு மட்டும்)

Current affairsல படமெடுப்பதுதான் தான் இன்னும் டொக்காகமல் இருக்கோன்றத சொல்றதுக்கான நல்ல move. ஆனா அதை ஒழுங்கா எடுக்காம போனா இன்னும் மோசமான விளைவுகள தான் கொடுக்கும். ரிஸ்க்கான ஆப்ரேஷன ரகுமான் - பிசி மேல பாரத்த போட்டு செஞ்சிருக்காரு மணி சார். 

எனக்கு என்னவோ living together என்பது தமிழ்நாட்டுல சரியான டாப்பிக்கா தெரியல. பெங்களூர்ல எனக்கு தெரிஞ்ச சில பேரு மாசம் 10000 வாடகைல middle class ஆவே ஒண்னா வாழுறாங்க. சென்னைல நேத்துல இருந்து யோசிச்சும் என் சுத்து வட்டாரத்துல (சுமார் 500 பேர் வச்சிப்போம்) ஒருத்தர் கூட இல்லை. கதை மும்பைல நடக்குற மாதிரிதானே வச்சிருக்கார்னு லாஜிக் சொல்லலாம். ஆனா இந்த கதை நம்ம் ஊருக்கு ஆகாத கதை என்பது என் பாயிண்ட்.

வழக்கமான மணியின் ஷார்ப் வசனங்களால ஒரு பொண்ண இம்ப்ரஸ் பண்ற ஹீரோ. அதேtoneல பேசுற ஹீரோயின். அழகான சந்திப்புகளால இந்த ரிலேஷன்ஷிப் வளருது. இந்த பார்ட்ல எல்லாம் இப்போதைய youths பத்தி மிகச்சரியா காமிச்சிருக்காரு மணி சார். ஒரே ரூம்ல நைட்டு தங்க வேண்டி வருது. அப்ப ஒரு ஷாட். ரிஜிஸ்டர்ல தன் முழுப்பேர “ஆதித்யா வரதராஜன்”ன்னு எழுதுறாரு ஹீரொ. “ஓ.உன் ஃபுல் நேம் ஆதித்ய வரதராஜனா”ன்னு கேட்கிறா தாரா. பேரு கூட முழுசா தெரியாதவன் கூட room share பணறதுல எந்த பிரச்சினையும் அவளுக்கு. இது உண்மையும் கூட.இப்படி சின்ன சின்ன சுவாரஸ்யங்களால கட்டி போடுற முதல் பாதி. 
மணி நாயகிகளிலே குள்ளமான, புஷ்டியான நாயகி நித்யா. ஒரேஒரு சீன்லமட்டும் துல்கருக்கும், நித்யாவுக்கும் ஒண்னா லாங் ஷாட் வச்சு உயரத்த காமிச்சிடுறாங்க. மத்தபடி நித்யா நேருக்கு நேர் நின்னாலே “ச்சீ”ன்னு சொல்ற மாதிரியான சீனாகிட கூடிய உயரம் என்பதை தெரியாம frame வச்சிருக்காங்க. துல்கர் ஒல்லியான மாதவன் . பிரகாஷ்ராஜ், அவர் மனைவின்னு வழக்கம் போல casting perfect. depthஆன விஷயம் எதுவும் இல்லாம இந்த நாலு பேர வச்சு இடைவேளை வரை நல்லாவே போகுது படம்.

படம் living together பற்றியது. சரி சேர்ந்து வாழ்தலை சரியா காமிச்சிருக்காங்களான்னா ..புஸ்ஸ்ஸ்ஸ்.. ரெண்டு பேரும் கல்யாணம் வேணாம்ன்றதுக்கு முக்கியமான காரணங்கள் இருக்கணும். தாராவுக்கு பெத்தவங்க வாழ்க்கை காரணமாயிருக்கலாம். ஆனா ஆதிக்கு??? ஒருவேளை அவன் jolly, go-happy guy வகையறான்னா, கடைசில அமெரிக்காவுக்கு ஜாலியா போயிருக்கணும். அதுவரைக்கும் நல்லா போன கேரக்டர் அமெரிக்க வாய்ப்பு வந்த அடுத்த நொடி நண்பனிடம் “எனக்கு தாராவ விட்டு போக மனசில்லை”ன்னு சொல்றப்ப எல் ஐ சி மாடில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணுக்குது. இவன் 2015 ஆதியா, இல்லை 2000 கார்த்திக்கா??? 

ரெண்டு பேருக்கும் பிரியணும்னு தோணல. அத நித்யா ஓப்பனாவே சொல்லிடறா. ஆனா அதுக்கப்புறமும் 10 நாள் ஜாலியா இருப்போம் அது இதுன்னு 30 நிமிஷம் அறுத்து தள்றாங்க. ஆதி அவன் விருப்பப்படி சந்தோஷமா அமெரிக்கா போய், அங்க அவன தனிமை கஷ்டபடுத்தியோ, இல்லைன்னா தாராவுடன் இருந்த நாட்கள்தான் உண்மையா அவன் சந்தோஷமா இருந்த நாட்கள்னோ உணர்ந்திருந்தா அதுதான் சரியான முடிவா இருக்கும்னு நினைக்கிறேன். தாராவ தேடி அவன் பாரீஸ்கு போய், (அல்லது கால் பண்ணி) அங்க அவ இல்லாம, ஆதி மனம் நொந்து மும்பைல இருக்க பிரகாஷ்ராஜ் வீட்டுக்கே வர்றான். அங்க அதே ரூம்ல தாரா தங்கியிருகான்னு முடிச்சிருந்தா க்ளிஷேவா இருந்தாலும் கதை நச்ன்னு செட் ஆகியிருக்கும். அப்படி இல்லைன்னா, பிரகாஷ்ராஜ் மனைவி காணாம போனப்ப பிரகாஷ்ராஜ் தேடி அலையறத காமிச்சு, அத பாத்து ஆதியும் தாராவும் நெக்ழ்றப்ப “நானும் கடைசி வரை கணபதி அங்கிள் மாதிரி பாத்துப்பேன்”ன்னு ஆதி சொல்லி இருந்தாலும் படம் அங்கயே சூப்பரா முடிஞ்சிருக்கும். சம்பந்தமே இல்லாம ஆதியும்,தாராவும் ஆண்ட்டிய கண்டுபுடிக்கிறாங்க. அப்ப ரெண்டும் பேரும் லவ்வ ஃபீல் பண்றாங்க. மரண கடியான சீக்வென்ஸ் அது..டைட்டிலுக்காக கண்மணின்னு கூப்பிடறதெல்லாம்.. ம்ஹூம். 

இளமையான காதல் காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு, நல்ல மேக்கிங். இதுக்காகவா நாயகனையும்,தளபதியையும், இருவரையும் தூக்கி வச்சு கொண்டாடுறோம்? ஒகே கண்மணி இவை மட்டும்தான். எடுத்துக்கொண்ட கதைக்கு எந்த விதத்திலும் நேர்மையாக இல்லாத ஒரு படம். ஆனா பாக்க நல்லா இருக்கிற படம். ஆய்த எழுத்து, ராவணன், கடலுக்கு இது பரவால்ல என்பதெல்லாம் மணி சார்க்கு நாம செய்ற துரோகம்.

Post has attachment
குறும்பட /திரைப்படங்களின் திரைக்கதையை பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை. முக்கிய நிகழ்வுகள் குறித்து கட்டுரை எழுதுவதை விட இப்படி என் பார்வயை வெளியிடுவது எனக்கு உகந்த ஒன்றாக இருக்கிறது. அதன் முதல் முயற்சியை இன்று எழுதியிருக்கிறேன்.

"மலைச்சாமி” - குறும்பட திரைக்கதை

https://medium.com/@iamkarki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3aa3e2603b1c

Post has attachment
Jadeja
virat…

(VIRAT LEFT)

Rohit
Idiot. Dont u know that If virat is tata sky then anushka is the rain.

Jadeja
Haha. Good one Rohit. But ur performance is like a rain in chennai. Once in a year, But all roads will be flooded

(ROHIT LEFT)

https://medium.com/@iamkarki/whatsapp-cricket-458fed9b30a1

Post has attachment
க்யா சாஹீயே?

வந்த எல்லா கோவத்தையும் அடக்கிக்கிட்டு சொன்னேன்

தோ இட்லி ஏக் வடா

பொழக்கிறத விடுங்க. சாப்பிடுறதுக்கே 3 மொழி தெரிஞ்சிக்கணும் போல இந்த நாட்டுல..

https://medium.com/@iamkarki/one-day-at-sub-way-7364a1e42fe
Wait while more posts are being loaded