Profile cover photo
Profile photo
vethathiri maharishi
174 followers -
vethathiri maharishi
vethathiri maharishi

174 followers
About
vethathiri maharishi's posts

Post has attachment

Post has attachment
ஓங்காரம் :

சப்தத்தின் மூலநிலையை 'ஓம்' என்ற சொல்லால் உணர்த்துகிறார்கள் 'ம்' என்னும் எழுத்தின் மூலம் தான் ஓங்காரத்தின் ஓர் இயல்பை பிறருக்கு உணர்த்த முடியும் என்று நினைத்தவர்கள் ' ம் ' என்ற சப்தம் எழாமல் இருக்க அதை ஞாபக அளவில் உணர்ந்து கொள்ளும்படி விளக்கம் செய்தார்கள்.

ஓசையின் விரிந்துயர்ந்த உச்ச நிலையை உணர்த்த உயிரெழுத்தாகிய ' ஓ ' வின் மூலம் சப்தத்தை எழுப்பி உயர்த்திக் காண்பித்தார்கள். ஓசையின் ஒடுக்க நிலையை ' ம் ' என்ற ஒளியை அளவில் படிப்படியாகக் குறைத்துக் குறைத்து இசைத்துப் பின் மௌன நிலையில் நினைப்பாகக் காட்டினார்கள். இவ்வாறு சப்தத்தின் விரிவு நிலை ஒடுக்க நிலை இரண்டையும் மூற் காலத்தவர்கள் விளக்கி வைத்தார்கள்.

புலனுணர்ச்சிகளிலே அறிவைச் செலுத்தி, நாத தத்துவத்தை அறிவிலே விரிவும், தெளிவும் பெறாத பக்தனுக்கு ஒருவாறு விளக்க அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஓசையின் உச்ச நிலையை உணர்த்தும் ' ஓ ' என்ற ஒலியையும் எழுத்தையும் ஓசையின் ஒடுக்க நிலையை உணர்த்தும் ' ம் ' என்ற ஒலியையும் எழுத்தையும் ஓ-ம் [ஓ ஓ ஓ ஓ ம்] என்று ஒலித்துக் காட்டினார்கள். அவைகளை ஏடுகளில் ' ஓம் ' என்ற எழுத்துக்களாக எழுதிக் காண்பித்தனர். அந்த இரண்டு ஓசையும் சேர்ந்து 'ஓம்' என்ற தனி ஓசையாயிற்று. அந்த இரண்டு எழுத்தும் சேர்ந்து ஒரு புதிய ' ஓம் ' என்ற ஒரு கூட்டு எழுத்தாயிற்று. ஆகையால் ' ஓம் ' என்பது ஒரு சங்கேதம் - குறிப்பு (Symbol) ஆகும். ஆகவே ' ஓம் ' என்ற ஓசைக்கோ, சொல்லிற்கோ எந்தத் தனிச் சிறப்போ மதிப்போ கிடையாது. புத்தகத்திலுள்ள கருத்தை அறிந்த பின், புத்தகம் மற்றவர்களுக்குத் தேவையாகும் என்று அதைப் பத்திரப்படுத்தி வருகிறோம். அதுபோல் தான் 'ஓம்' என்ற சொல்லும் நிலைத்து வருகிறது; தொடர்ந்து வருகிறது. 

அந்த ஓங்கார நிலையை உணர்த்துவதற்கும் ' ம் ' கூட தேவையில்லை. இது போன்ற [ . ] புள்ளியே போதுமானது. தனிப் புள்ளியில் உச்சரிப்பு ஓசையானது எப்படி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று கூர்ந்து உணர்ந்து உணர்ந்து ஓங்காரத்தின் இயல்பை நன்றாய் அறிந்து கொள்ளலாம். 
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Photo

Post has attachment
ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம்.

வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே.

எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Photo

Post has attachment
எந்த இடத்திலே, எந்த காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்தச் செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே உனக்கு விளைவும் வரும், வெற்றியும் வரும்.
Photo

Post has attachment
Photo

Post has attachment
எண்ணம் தானாக எழுந்து அலையாமல்
எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்.
-  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Photo

Post has attachment
பொருளும், மதிப்பும் :
நம்மிடம் 10 ரூபாய் நோட்டு ஒன்றும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இரண்டுமே காகிதம் தான். ஆனால் அதற்கு ஒரு மதிப்பு என்று ஒன்று உள்ளது. அதே போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அந்தப் பொருள் நமக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்தே அந்த மதிப்பும் அமையும். அந்தப் பொருள் யாரால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் போது எண்ணிறந்த மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது என்கிற போது அதற்கு மேலும் மதிப்பு உயருகிறது. பொருளினால் மதிப்பே தவிர எனது என்னுடையது என்பதினாலே மதிப்பு உயருவதில்லை.
ஆகவே இந்தப் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் தவம், தற்சோதனை இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான் நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதைப் பெறவேண்டும், அடைய வேண்டும், முழுமுதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்தச் சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Photo

Post has shared content
JEEVA Vazhga Valamudan!
We thought my Mother was suffering from Jaundice, but doctors saying that LIVER CANCER.
This photo was taken two months before, now she become very lean with yellowish eyes.
Please Pray for my mother; Please bless my mother after group meditation;
also inform our senior professors, their thoughts are more powerful and heal anything.
Guruve thunai /\ Forever with love and gratitude.
Vinothkumar Vethathiri, Chennai Tambaram.
vinothvethathiri@gmail.com
JEEVA Vazhga Valamudan!
We thought my Mother was suffering from Jaundice, but doctors saying that LIVER CANCER.
This photo was taken two months before, now she become very lean with yellowish eyes.
Please Pray for my mother; Please bless my mother after group meditation;
also inform our senior professors, their thoughts are more powerful and heal anything.
Guruve thunai /\ Forever with love and gratitude.
Vinothkumar Vethathiri, Chennai Tambaram.
vinothvethathiri@gmail.com
Photo

Post has attachment
We should retain good thoughts. Get rid of bad ones. Thought analysis exercise will enable tone to achieve this. The training gives you the capability to select and retain good thoughts. This leads you towards a prosperous life. The same mind creates ‘thoughts’ and brings them to action. We enjoy the benefits of our actions. In the course of time we lose balance. Sometimes accidentally we change the route. Imbalance is due to innocence. Diversion is more dangerous because it won’t take you to the destination you want to reach.
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded