Profile cover photo
Profile photo
Raja sankar
2,530 followers
2,530 followers
About
Communities and Collections
View all
Posts

தடுப்பூசி (வாக்கசின்) எதிர்ப்பும் தீடீர் குபீர் புரச்சியாலர்களும் - எப்படி மக்களை நோயாளிகளாகவே முட்டாள்களாகவே வைத்திருப்பது?

"கடவுள் மனிதனை நோயாளியாக படைத்துவிட்டு நோயில்லாமல் வாழும் படி கட்டளையிடுகிறார்" என மறைந்த கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் சொல்லுவார். இதை இப்போது நம்மூரிலே தீடீர் குபீர் என தடுப்பூசிகளை (வாக்கசின்) எதிர்க்கும் கோஷ்டிகள் கண்டுபிடித்திருக்கின்றன.

உலகிலே போலியோ நோயை ஒழித்த மருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சாலக் தன்னுடைய மருந்துக்கு காப்புரிமை வாங்கவில்லை. "சூரியனை நீங்கள் சொந்தம் கொண்டாடமுடியுமா? " என கேட்டு அந்த மருந்தை இலவசமாகவே வழங்கினார். அவரைப்போன்றவர்கள் இருந்த நாட்டிலே அடிப்படை மருந்தை கொள்ளை விலைக்கு விற்கும் கொடூரர்களும் உண்டு.

அதே போலவே தடுப்பூசியினால் ஏற்படும் இறப்புகள் இன்னபிற எல்லாம் பெரும்பாலும் மனித தவறினால் ஏற்படுவை. தவறான மருந்தை தருவது, அளவு அதிகமாக தருவது, காலாவதியான மருந்தை தருவது, நல்ல முறையிலேபாதுகாக்கப்படாமல் போன மருந்தை தருவது என எல்லாம் மனித தவறுகளால் நிகழ்பவை.

மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் மனிதர்களே. அவர்களிலும் திருடர்கள், கொடூரர்கள் இருப்பது போலீஸிலும் நீதித்துறையிலும் திருடர்கள், கொடூரர்கள் இருப்பது போலவே. எல்லோரும் இந்த சமூகத்திலே இருந்து தானே வருகிறார்கள்?

தடுப்பூசி என்பது சும்மா ஏதோ பணக்கார வியாதிகளுக்கு மட்டும் போடுவது இல்லை. கீழ்க்கண்ட வியாதிகளை கடைசியாக எப்போது கேள்விப்பட்டீர்கள் என சொல்லுங்கள் பார்ப்போம்?

பொன்னுக்கு வீங்கி
அம்மை (சின்னம்மை, பெரியம்மை)
கக்குவான் இருமல்
சொறி/சிரங்கு
சிலந்திகட்டி
குடல்புழு

எப்போது கடைசியாக இதனால் பாதிக்கப்பட்ட யாரையேனும் பார்த்தீர்கள்? அல்லது கேள்விப்பட்டீர்கள்? இவை என்ன என்றாவது எத்துணை பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள்?

சொறி சிரங்கு வராமல் தடுக்க தூர்தர்ஷனிலே போட்ட விளம்பரங்கள் யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா? ஏன் தங்க தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்கள் சொறி சிரங்கை பற்றி பாடியதை கேள்வியாவது பட்டதுண்டா?

தடுப்பூசியை எதிர்க்கிறேன் என்ற பெயரிலே பிரச்சாரம் செய்யும் இந்த கபோதிகளால் இந்த நோய்கள் திரும்பவும் வந்து தமிழ்நாட்டிலே பலகோடிப்பேர் பாதிக்கப்படவேண்டுமா?

இந்த தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் என்பது எப்படி மக்களுக்கு நல்ல கல்வி கொடுத்தால் அவர்கள் படித்துவிட்டு கோஷம் போட, டப்பா குலுக்க வரமாட்டார்கள் என திட்டமிட்டு செயல்படுவது போல. நோய் நொடியின்றி நன்றாக வாழ்ந்தால் எப்படி விடுவது? எப்படி மக்கள் நன்றாக சுகமாக வாழவிடுவது?

இந்தியாவிலே போலியோ நோய் ஒழியாமல் காலம் கடக்க காரணம், ஒரு குறிப்பிட்ட ஊரிலே ஒரு குறீப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தான் (மதச்சார்பற்ற முறையிலே சொல்லியாச்சு. யாராச்சும் என்ன ஏதுன்னு கேக்கப்பிடாது. ). உலக அளவிலே காரணம் முன்றே மூன்று குறிப்பிட்ட நாடுகள் தான். ஆனால் அவற்றிலே இருந்து குறிப்பிட்ட மதத்தை சார்ந்த குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது போலியோவை பரப்பிவிடுகிறார்கள்.

என்ன சொல்லி தடுத்தார்கள்? போலியோ தடுப்பு மருந்து போட்டால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என. ஆமாம். ஆண்மை குறைந்து குழந்தை பிறக்காது என சொல்லியே தடுத்தார்கள். இந்த ஆண்மைக்குறைபாடு, ஆண்மை போய்விடும் என்பதெல்லாம் சொல்லி பரப்பினால் எளிதாக எதையும் செய்விடலாம் இல்லையா? அப்புறம் வீரம் என்றால் சும்மாவா?

இதை விட கொடூரமான விஷயங்களை எல்லாம் சொல்லி பரப்பியது உண்டு. அதிலே ஒரு எடுத்துக்காட்டு. ஆண் உறுப்பை மறைத்துவிடுகிறார்கள் என. இதை நம்பிய பெரும்பாலோனோர் என்ன செய்தார்கள் என பொதுவிலே சொல்ல முடியாது. ( அதை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்பவர்கள் இன்பாக்ஸ் வரவும். )

இந்தியாவிலே பல எளிதில் குணமாக்ககூடிய நோய்களுக்கு கூட வருடத்திற்கு பல லட்சம் பேர் பலியாகிறார்கள். இதை தடுக்கவேண்டும் என்றால் தடுப்பூசி வேண்டுமல்லவா?

சரி தப்பூடுசி தப்பு என்றால் அதை அத்தோடு நிறுத்திவிட முடியுமா? இந்த ஆங்கில மருத்துவமே தப்பு, அதை அப்படியே கொண்டு போய் மருத்துவமே தப்பு கடவுளே காப்பாற்றுவார் என்று தானே போகவேண்டும்.

அப்படி போகும் ஆட்களும் உண்டு. குறிப்பிட்ட மாநிலத்திலே ஒருவர், நான் கடவுளை நம்புகிறேன் என பிரசவம் என்றால் வீட்டிலே தான் பார்க்கவேண்டும் அது தான் கடவுள் சொன்னது என சொல்லி பரப்புரை செய்துவருகிறார். வீட்டிலே பிரசவம் பார்த்தால் என்ன நடக்கும் என சொல்லவேண்டுமா?

மதவாதிகள் தான் இப்படி செய்கிறார்கள் என்று இல்லை. ஆயுர்வேதம் சித்தா போன்ற முறைகள் ஒரே நாளிலே படித்துவிட்டு குபீர் மருத்துவர்கள் ஆன கோஷ்டிகளும் கிருமி என்பது சித்த மருத்துவத்திலே இல்லை எனவே காய்ச்சல் என்பது கிருமியால் வருவது இல்லை. எயிட்ஸ் என்ற நோய் கிடையவே கிடையாது என பொங்கி வழிகிறார்கள். சர்க்கரை நோய் இல்லவே இல்லை, சும்மா நன்றாக மென்று சாப்பிடுங்கள் என சொல்லி சர்க்கரை நோயாளிகளை கோமாவிலே தள்ளி சாகடித்த ஆட்கள் இன்றும் வெளியே பரப்புரை செய்து அதற்கு காசும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே?

இந்த கேப்மாறிகள், மொள்ளமாறீகள் இணையும் புள்ளி எது? அந்நிய சதி, கார்ப்பரேட் சதி, மருத்துவ நிறுவனங்கள் சதி, இப்ப கூட மோடி எனும் சதி.

சரி அந்நிய சதி, கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்கள் சதி அப்படீன்னால், எந்த ஒரு அலோபதி மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இருக்கவேண்டும் அல்லவா? கால், கை உடைந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சினை என்றாலோ ஒரு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ போன்றவை எடுக்காமல் இருக்கவேண்டும் அல்லவா?

ஆனால் தலைவலிக்கு டோலோப்பார் மாத்திரை போட்டாலோ ஒரு பாரசிட்டமால் போட்டாலோ அதிலே எல்லாம் அந்நிய சதி இருக்காது? எந்த வித பக்கவிளைவும் இருக்காது ஆனால் தடுப்பூசி போட்டால் மட்டும் உடனே பக்கமில்லாமலே விளைவு வந்துவிடுகிறதா?

ஏன் கார்ப்பரேட் சதி இல்லாமல் இந்த மொள்ளமாறி முடிச்சவிக்கிகளே குடிசைத்தொழிலாக இயற்கை முறையிலே மருந்து தயாரித்து அதன் மூலம் நோயை குணப்படுத்தி காட்டலாமே?

கால் உடைந்தால் கட்டுப்போட கார்ப்பரேட் ஆங்கில மருத்துவம் வேண்டும், அதுக்கு வலிகுறைப்பு மாத்திரைக்கள் வேண்டும் ஆனால் தடுப்பூசியால் மட்டும் பிரச்சினை என்றால் இந்த கபோதிகள் என்ன கொடூர திட்டத்தோடு இதை நடத்துகிறார்கள்?

இதை விட இப்போது மோடி அரசு தடுப்பூசி போடவேண்டும் என சொல்லிவிட்டது. சும்மா விடமுடியுமா? செத்தாலும் பரவாயில்லை தடுப்பூசி போடக்கூடாது என்றெல்லவா கிளம்பவேண்டும். அப்போது தானே மதச்சார்பின்மைக்கும் பங்கம் வராது, இந்தியாவை காப்பாற்றியது மாதிரியும் ஆகும்?

இறுதியாக,

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. உயிரை காப்பவை.
தடுப்பூசியை அந்தந்த காலகட்டத்திலே மருத்துவகவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் போட்டுக்கொள்ளவும். குழந்தைகளுக்கு மருத்துவர் அறிவுரைப்படி ஊசி போடவும்.
வதந்திகளை நம்பி குழந்தைகளின் உயிரையோ அவர்களின் வளமான எதிர்காலத்தையோ பாழாக்காதீர்கள்.
சந்தேகம் இருப்பின், அரசு மருத்துவமனைகளோ அல்லது மருத்துவர்களையோ அணுகி விளக்கம் பெறவும். பெரும்பாலான மருத்துவர்கள் பொறுமையாக விளக்கம் அளிப்பார்கள்.

குறீப்பு: வேலை அதிகம் இருப்பதால் பதிவு ஏதும் வேண்டாம் என்று தான் இருந்தேன் ஆனால் இந்த பரப்புரையை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை. நண்பர்கள் இஷ்டம் போல பகிரவும்.
Add a comment...

ஆழ்ந்த இரங்கல்கள். இதற்கும் மேல் சொல்ல முடியவில்லை.
Add a comment...

கவர்னர் அறிக்கை ஏதும் வரலைன்னா உடல்நிலை நன்றாக இருக்கிறது என எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

அமைச்சரவையும் அமைச்சரவையின் தலைவராக முதல்வரும் இருக்கும்போது கவர்னருக்கு அதிகாரம் ஏதுமில்லை.

முதல்வரின் உடல்நிலையை பற்றி தகவல்களை வெளியிடலாமா என்பது அமைச்சரவை முடிவு. அதற்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.

ஒருவேளை உடல்நிலை சரியில்லை, சுயநினைவு இல்லை என்றால் கவர்னரால் செய்யமுடிவதும் தற்காலிக முதல்வரை நியமிப்பது தான். அதற்கும் பெரும்பான்மை உள்ள கட்சியில் இருந்து மட்டுமே.

எனவே மத்திய அரசு சொல்லவேண்டும், கவர்னர் சொல்லவேண்டும் என எதிர்பார்க்காமல் தமிழக மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கட்சி ஏன் சொல்லவில்லை என கேளுங்கள்.

கேட்கமுடியாவிடில் ஏஏஏஏஏஏ மோடியே என பொங்குவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
Add a comment...

அது என்னாது அவுஸ் வார்மிங்? (house warming) குளிர்நாடுகளிலே வீட்டுக்குள்ளே போகும் முன்னர் விருந்தாளிகளை மரக்கட்டைகளோடு வரச்சொல்லி எல்லா தீ இடங்களிலும் அதை எரிச்சு வீட்டை சூடுபடுத்திப்பாங்க.

வெப்பநாடான இந்தியாவிலே அது எதுக்கு? வீ்டுநுழைதல் என சொல்ல அசிங்கமா அவமான இருந்தா குறைந்தபட்சம் house entering, shifting to new house அப்படீன்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே?

ஆங்கிலம் பேசவேண்டியது தான் இல்லேங்க. அதுக்கு ஆங்கிலேயனாவே பேசனும் அப்படீன்னா எப்படி? அப்படி பேசினா முட்டாள்தனமா இருக்கும்.
Add a comment...

ஹார்ட் அட்டாக் - பெரும்பாலும் இதயத்திற்கு போகும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பால் வருவது. காப்பாற்றுவது கடினம். உடனடி சிகிச்சை என்பது அடைப்பு நீக்குதல்.

கார்டியாக் அரஸ்ட் - இதயம் துடிப்பது சில நொடிகள் நின்று போவதோ அல்லது வழக்கத்திற்கு மாறாக துடிப்பதோ ஆகும். இதற்கு ஷாக் கொடுப்பார்கள். இந்த சினிமாவிலே எல்லாம் கைய வைச்சு அமுக்கி உயிர் பிழைக்கவைப்பார்கள் இல்லையா அது தான் கார்டியாக் அரெஸ்ட்.

நம்முடைய இதயம் துடிப்பதே மூளையில் இருந்து வரும் மின்சார சிக்னலால் தான். அது நின்றுபோகும் போது உடனடியாக பிலிபிரிரேஷன் செய்தால் போதும்.

இரண்டுக்கும் வித்தியாசம் இது தான். வதந்திகளை நம்புறத விட்டுட்டு போய் வேற வேலை பாருங்க.
Add a comment...

சொன்னா கேளுங்கய்யா, முதல் அமைச்சர் பதவி என்பது அரசியல் அமைப்பு சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசியல் சட்ட பொறுப்புள்ள பதவி.

அதிலே அமர்ந்திருக்கும் நபர் பத்தின விவரம் எல்லாம் சும்மா சொல்லிடமுடியாது.

கவர்னரோட வேலையே முதல் அமைச்சர் நன்றாக இருக்கிறாரா என உறுதி செய்து கொள்வது தான். அதிலே கவர்னர் பொய் எல்லாம் சொல்ல முடியாது.

எனவே அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள். வதந்திகளை நம்பாதீர்.
Add a comment...

ஏன்யா வதந்திய கிளப்புறீங்க. கார்டியாக் அரெஸ்ட்ன்னா சிகிச்சை கொடுத்து சரி பண்ணிடுவாங்க. இது மாரடைப்பு இல்லே. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாம ஏன் வதந்திய கிளப்புறீங்க.

பிஸியோதெரபி பண்ணிட்டு தான் இருந்தாங்க என அதிகாரபூர்வ அறிவிப்பே சொல்லுது. அதுக்குள்ளே ஏன் ரொம்பவும் யோசிக்கறீங்க?

முரசொலிமாறன் பேஸ்மேக்கர் வைச்சிட்டே காலத்தை ஓட்டினதெல்லாம் நினைப்பில்ல போலிருக்கு.
Add a comment...

என்னுடைய பணம் நான் இஷ்டப்படித்தான் செய்வேன், வங்கி கணக்கு வைத்துக்கொள்ள விரும்பினால் செய்வேன் இல்லாவிட்டால் பணமாகவே வைத்துக்கொள்வேன், யாரும் என்னை கார்டு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என பலர் பதிவு இட்டு தனி மனித உரிமைக்காக பொங்கல் வைக்கிறார்கள். கூடவே காவி பயங்கரவாதம், இந்துத்துவா பயங்கரவாதம் என கூவுகிறார்கள்.

அலோ புரட்சி போராளீஸ், உங்க பணத்தை திருடனுக கொள்ளையடிச்சா அதை தடுக்க அரசு வருவதும் அரசின் விருப்பம் என விட்டுடுறீங்களா? அப்படியே வீடு பூந்து கொள்ளையடிச்சா காப்பாத்த வருவது போலீஸின் விருப்பம் எனவும் இருந்துடுவீங்களா?

அதே மாதிரி

என்னுடைய வண்டி, என்னுடைய கார், நான் உழைச்சு கட்டிய வரியிலே போடப்பட்ட சாலை, எனவே இப்படித்தான் ஓட்டவேண்டும் என சொல்லக்கூடாது. நான் விரும்பினால் பிளாட்பாரத்திலே கூட ஓட்டுவேன் என கிளம்பினால் என்னாகும்? சிகப்பு விளக்கிலே நிற்கவேண்டும் என சொல்லக்கூடாது, டிராபிக் விதிகளை மதிக்கவேணிடிய அவசியம் எனக்கில்லை என்றால் பரவாயில்லையா?

எனவே ரொம்பவும் தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் பொங்காமல் பணத்துக்கு தனி மனித உரிமைன்னா

டிராபிக்கில் இருந்து கொலை கொள்ளை வரைக்கும் தனிமனித உரிமையாவே இருங்க.

அதென்னா பணம்னா மட்டும் உரிமை, சுதந்திரம், பாதுகாப்புன்னா போலீஸில் இருந்து அரசு வரைக்கும் பாதுகாப்பு தேவைப்படுது?

அப்படி அரசாங்கத்தை மாத்தனும் அரசு இப்படி செய்யக்கூடாதுன்னா சரி அது உங்க கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை. அப்படி மாத்தனும் அப்படீன்னா

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பதிலே இருக்கும் சோசிலிச கருத்துக்களை, கொள்கைகளை மாற்றி

பணம் வைத்திருப்பவர்களை அரசு ஒன்றும் செய்யக்கூடாது என கொண்டுவாங்க. ஏன்னா சோசிலிச இந்தியாவின் சோசிலிச அரசியல்மைப்பு என்ன சொல்லுதுன்னா

பிரிவு 39 இன் படி, பணம் தனியாரிடம் சேரக்கூடாது. பரவலாக்கப்படவேண்டும் என சொல்கிறது.

இது மட்டுமல்ல, உங்கள் வீட்டை எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய சொல்ல மாவட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. மத்திய அரசுக்கெல்லாம் போகவேண்டியதில்லை.

அதெயெல்லாம் மாற்ற குரல் கூவுதல் எல்லாம் கொடுத்துவிட்டு அப்பாலிக்கா ஏ மோடியே என ஆரம்பியுங்கள். மக்களும் ஏதாச்சும் கேட்பார்கள்.
Add a comment...

Post has shared content
ஒரு flashback.

Abdul Kareem Telgi ன்னு ஒருத்தர் இருந்தாரு. இவர் கர்நாடகாவின் குல்பர்கா பகுதியைச் சேர்ந்தவர். காலாவதியான மெஷின்களை ஏலத்தில் எடுத்து விற்கும் scrap dealer. அவருக்கு நாஷிக்கில் உள்ள India Security Press இல் ஒரு காண்ட்ராக்ட் கிடைக்கிறது. ISP தான் பதிவுப்பத்திரங்கள், முத்திரைத்தாள்கள், அஞ்சலகங்களுக்குத் தேவையான கார்டு, கவர், இன்லேண்ட், ஸ்டாம்ப்புகளை எல்லாவற்றையும் அச்சிட்டு வெளியிடுபவர்கள். Telgi இந்த அச்சகத்தின் காலாவதியான உதிரிப் பாகங்களை scrap அடிப்படையில் வாங்குகிறார். அவருக்கு அந்தக் காலாவதியான பொருட்களுக்கு மத்தியில் முத்திரைத் தாள்களின் negative plateகள் கிடைக்கின்றன. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் இவைகள் scrap செய்யுமுன்னர் சிதைக்கப் பட்டு உருக்குலைந்த பின்னரே ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டியவை என்று தெரியவருகிறது. அதனைக் கொண்டு போலி முத்திரைத் தாள்களை அச்சிட்டு அவற்றை அங்கீகாரம் பெற்ற முத்திரைத் தாள் vendors மூலமாக பாரதமெங்கும் விற்பனைக்கு விடுத்தார். இதன் காரணமாக பல்லாயிரம் கோடி நஷ்டம் மத்திய, மாநில அரசுக்கு ஏற்பட்டது.. டெல்கி இப்போது சிறையில் இருக்கிறார். ஆனால், சிறைக்கு செல்லவேண்டிய அரசு அதிகாரிகள், அவருக்கு உதவிய அரசியல்வாதிகள் அனைவரும் இன்றும் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் அப்போது கான்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.
Add a comment...

கேப்மாரிவால் மீது 200 கோடியை ஆட்டைய போட்டதாகவும் இன்னும் பல நூறு கோடி ரூபாய்களை ஹவாலா மூலமா வெளிநாட்டிலே இருந்து இந்தியா கொண்டு வந்ததாகவும் புகார். சொல்லியிருப்பது ஆப்பு கட்சியின் அமெரிக்க தொடர்பாளர் வீரேந்திர சிங் பரிகார்.

“Kejriwal ji, you talking about eliminating corruption, while your observers are corrupt, I will provide a list of persons cheated and looted by them. Since, I was fund-raising co-ordinator of this zone I know around Rs 2 crores was collected from each constituency some legally with cheques but most illegally. All this money, which comes to approximately Rs 200 crore belong to people of Punjab, you must return it. I also know who transported this money to Delhi and which vehicles were used,” he wrote.

சொன்னது இரண்டு நாளைக்கு முன்னாடி. அதான் கேப்மாரிவால் நாலு நாளா ஆளையே காணோமா?
Add a comment...
Wait while more posts are being loaded