Profile cover photo
Profile photo
Iyappan Krishnan
5,232 followers
5,232 followers
About
Iyappan Krishnan's posts

Post has attachment
அப்பத்தில இருந்தே இருக்கே என்பவர்கள் இதைப் படிக்கவும். பாதிக்கப்பட்டவர்கள் நாமில்லை என்பதால்,.....

Post has attachment

Post has shared content
I agree
UK –ல் நிகழ்ந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பாடல்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இசைக்கப்பட்டதால் வடஇந்திய பார்வையாளர்கள் அதிருப்தியுடன் வெளியேறினதாக ஒரு செய்தியை வாசித்தேன். வருத்தம்.

இசைக்கு மொழி, கலாசாரம் போன்ற கற்பிதங்கள் தடையாக இருக்க முடியாது என்கிற ஆதாரமான விஷயத்தையெல்லாம் கூட விட்டு விடுவோம். இந்திதான் இந்தியாவின் முகம் என்று வலுவாக நம்புவதை வடஇந்திய சமூகம் எப்போது கைவிடும்? இந்தியாவின் அடித்தளம் பன்மைத்தன்மையும் அதை சகித்துக் கொள்வதும் ஏற்பதும் என்கிற உணர்வு எப்போதுதான் உருவாகும்?

ரஹ்மான் உலக அளவில் பிரபலமானவராக இருந்தாலும் அவருடைய பின்புலம் தமிழ்நாடு. இதனாலேயே அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் பலர் தமிழர்களாக, தென்னிந்தியர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அந்த சதவீத ரசிகர்களையும் திருப்தி செய்வதற்காக அங்கு தமிழ் பாடல்களை இசைப்பதற்காக தேர்வு செய்திருக்க அதிக வாய்ப்புண்டு.

இந்த ஜனநாயகம் கூட புரியாதவர்கள் எப்படி இசை ரசிகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ள முடியும்?

இன்னொன்று, ரஹ்மானின் இசையை ஆழ்ந்து கவனிப்பவர்களால் உணர முடியும். அவருடைய இசையை மொழி போன்ற கலாசார எல்லையைக் கடந்தும் அதனுடன் இணக்கமாக உணர முடியும். அவர் உருவாக்கும் இசையின் தன்மை அப்படி. தென்னிந்திய பாரம்பரிய இசை வகைமைகளைத் தாண்டி உலக இசையின் கூறுகளையும் உள்வாங்கி தன்னுடைய இசையில் அவர் பிரதிபலிப்பதால் சர்வதேச இசை ரசிகர்களைக் கூட அவரால் கவர முடிகிறது. ரஹ்மானின் இந்திப்பாடல்களைக் கூட இந்தி மொழி அறியாதோர் அதிகம் ரசிப்பதிலிருந்து இதை உணர முடியும்.

எனில் அங்கு ஒலித்த தமிழ் சினமா பாடல்களையும் மொழி கடந்து பொதுவான இசை ரசிகர்களால் நிச்சயம் ரசித்திருக்க முடியும். அதைச் செய்ய விடாதவாறு தடுத்தது எது?

இது மட்டுமல்ல, ஒரு காலத்தில் அதாவது இளையராஜாவின் வருகைக்கு முன்பு இருந்து வெற்றிடத்தில் இந்திப் பாடல்களின் இசைக்கு அதிக வரவேற்பு கொடுத்த மாநிலங்களுள் ஒன்று தமிழ்நாடு. இன்றும் கூட இந்தி சினிமா இசைக்கு இங்கு கணிசமான வரவேற்பு உண்டு.

இது போன்ற விஷயங்கள்தான் ஆத்மார்த்தமான இசை ரசிகனின் அடையாளமாக இருக்க முடியும்.

பொதுவாகவே இன்னொன்றையும் கவனிக்கிறேன். தம்முடைய குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு தம்மைத் தளர்த்தி பரந்த மனப்பான்மை உள்ளவர்களாகவும் அதன் எல்லைகளைத் தாண்டி பரந்த அளவிற்கான தேடலை நோக்கிச் செல்வதற்கும் பயன்படும் விஷயங்களில் கலை, இலக்கியம் போன்றவை பிரதானமானவை.

ஆனால் இசை ரசிகர்களின் குறிப்பிட்ட ரசிக சமூகம் கிணற்றுத்தவளைகளாக, தன் ரசனை குறித்த மூர்க்கமான விசுவாசமும் அதற்காக கடுமையாக விவாதம் செய்யும் முட்டாள்தனமும் கொண்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம். தமிழிலும் இதற்கு உதாரணம் சொல்ல முடியும்?

எனில் இசை ரசனை இவர்களுக்கு என்னதான் தந்து தொலைக்கிறது?

http://www.thenewsminute.com/article/breaking-news-hindi-speakers-who-walked-out-rahman-s-uk-concert-man-tamil-65142


நல்ல காஃபி எப்படி போடறது ?? என் டேஸ்ட்டுக்க்கு

வெள்ளைச் சர்க்கரை தவிர்த்து நாட்டுச் சக்கரை உபயோகிங்க. டேஸ்ட் அள்ளும்

அப்புறம் முடிஞ்ச அளவுக்கு சிக்கரி இல்லாத காஃபித்தூள் 3 -4 ஸ்பூன் ஃபில்டர்ல கொட்டி டேபிள் மேல ஃபில்டரை நாலஞ்சு முறை தட்டினா செட்டில் ஆகிடும். அப்புறம் ஃபில்டருல கொதிக்கற தண்ணிய் கொஞ்சமா ஊத்தி விட்டீங்கன்னா சொட்டு சொட்டா டிகாக்‌ஷன் இறங்கும்

கொதிக்காத பாலை எடுத்துக்கோங்க. ஏற்கனவே கொதிச்சு ஆறவச்சு மறுபடியிம் கொதிச்சா டேஸ்ட் வேற மாதிரி ஆகிடும். கொதிக்காத பசும்பாலை ஒரே முறை மட்டும் கொதிக்க விட்டு இறக்கி தண்ணி சேக்க்காம டிகாக்‌ஷன்ல கொஞ்சமா சேத்துக்கோங்க.

தேவையான அளவு நாட்டுச்சக்கரை சேர்த்து இப்படி ஒரு ஆத்து அப்படி ஒரு ஆத்து.

செம்ம டேஸ்ட் 

Post has attachment
+Vasu Balaji​ அண்ணே. இதான இன்னைக்கு நடந்தது உங்க ஆஃபீஸ்ல :)))

Post has attachment
+Vasu Balaji​ அண்ணே :)) 
Photo

பிக்பாஸ் படு கேவலமா இருக்கு கமலஹாசன் இயல்பா இருக்க மாதிரி நடிக்கிறது. 

/// Hours after resigning as India coach, Anil Kumble has said he was "informed for the first time yesterday [Monday] by the BCCI that the captain had reservations with my style and about my continuing as head coach". While stating that the cricket advisory committee (CAC) charged with deciding on who will be coach had backed him for the job, Kumble said "it was apparent the partnership [with Virat Kohli] was untenable, and I therefore believe it is best for me to move on". //

mm

Post has attachment
+Santhosh Kumar From bangalore and from Madhurai. 
Photo
Photo
6/16/17
2 Photos - View album

டானு இபொநாவா +Muthukumaran Devadass​
Wait while more posts are being loaded