Profile cover photo
Profile photo
E.R.Eswaran
369 followers
369 followers
About
Posts

மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

கர்நாடகாவில் பெய்துவரும் தொடர் மழையினால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவையும் எட்டியதால் அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை படிப்படியாக அதிகரித்து தற்போது 1 இலட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேலாக காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கர்நாடகாவிலிருந்து காவிரியில் அதிகப்படியான தண்ணீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்ட போகிறது. அதேபோல் தமிழகத்தில் நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையினால் பவானி சாகர் அணையும் நிரம்ப போகிறது. மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகள் நிரம்பும் பட்சத்தில் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். தமிழக அணைகளிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படும் போது காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி தமிழக அணைகளிலிருந்து ஒரே சமயத்தில் அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்படும் போது காவிரி படுக்கைகளில் நிலத்தடிநீர் செறிவூட்டப்படாமல் நேராக கடலில் கலக்கும் நிலைதான் உருவாகும். எனவே மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளில் தற்போதிருந்தே தண்ணீர் திறந்துவிடப்பட்டால் காவிரி படுக்கைகளில் அகலப்பாதாளத்திற்கு சென்றிருக்கும் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த முடியும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் 1000 அடிக்கும் மேலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் வருவது கிடையாது. தமிழகத்தின் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கு ஆற்றிலிருந்து குளம், குட்டைகளை நிரப்புவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்ற காலங்களில் தமிழக அரசு செயல்படுத்தினால் மட்டுமே அகலப்பாதாளத்திற்கு சென்ற நிலத்தடிநீரை மேலே கொண்டு வர முடியும். கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகப்படுத்தும் சூழல் இருப்பதால் தமிழக முதலமைச்சர் அவர்கள் மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
Add a comment...

Post has attachment
தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாக கடலில் கலக்குமானால் இனி தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி காவிரியில் 50,000 கன அடிக்கு மேலான நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டிருப்பதால் வேகமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் சில நாட்களுக்குள் மேட்டூர் அணை நிரம்ப போகிறது. அதேபோல் தமிழகத்தில் நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையும் ஓரிரு நாட்களில் நிரம்ப போகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பி வழியும் போது திறந்துவிடப்படும் உபரிநீர் கடலில் கலக்காமல் தேக்குவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது. தமிழகத்திற்கு வருடத்திற்குவருடம் அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றும் அளவிற்கு அதிகப்படியான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் கிடைக்கும் தண்ணீரை ஆக்கப்பூர்வமான கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையை வறட்சி காலங்களில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இதுபோன்ற காலங்களில் தான் அகலப்பாதாளத்திற்கு சென்றிருக்கும் நிலத்தடிநீரை உயர்த்த முடியும். அவினாசி – அத்திக்கடவு திட்டம் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மூலம் குளம், குட்டைகளை நிரப்பி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திருக்க முடியும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய உடன் திறக்கப்படும் தண்ணீரும் வீணாக கடலில் தான் கலக்க போகிறது. கிடப்பில் போடப்பட்ட திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டங்கள் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் நிரப்பி நிலத்தடிநீரை செறிவூட்டிருக்க முடியும். காவிரி தண்ணீரை கர்நாடக அரசு நினைத்தாலும் தடுக்க முடியாது என்ற நிலையில்தான் நாளுக்குநாள் வெளியேற்றப்படும் உபரிநீரை அதிகப்படுத்தி வருகிறது. வறட்சி காலங்களில் தண்ணீருக்காக தமிழக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கிறோம். ஆனால் அதிகமான தண்ணீர் கிடைக்கும் சமயங்களில் அதை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் கிடப்பில் போடப்பட்டுள்ள அவினாசி – அத்திக்கடவு, திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தமிழக அரசு எடுப்பதாக தெரியவில்லை. தண்ணீருக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மற்றும் பொதுமக்களும் தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாக கடலில் கலந்தால் இனி போராட்டம் நடத்த முன்வர வேண்டும்.
Photo
Photo
7/13/18
2 Photos - View album
Add a comment...

லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை சட்டசபையில் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது.

லஞ்சம், ஊழலை முற்றிலுமாக ஒழிக்க கூடிய ஆணையமான லோக் ஆயுக்தா தமிழகத்தில் அமைப்பதற்கான முயற்சியை தமிழக அரசு எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. நேற்றைய தினம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியாதா என்று இத்தனை ஆண்டுகாலம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு புதுவிடியல் பிறந்திருக்கிறது. லஞ்சம், ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்க கூடிய ஆணையமாக லோக் ஆயுக்தா அமைய வேண்டும். தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் முழுமையான வலுவான ஆணையத்தை அமைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
Add a comment...

லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை சட்டசபையில் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது.

லஞ்சம், ஊழலை முற்றிலுமாக ஒழிக்க கூடிய ஆணையமான லோக் ஆயுக்தா தமிழகத்தில் அமைப்பதற்கான முயற்சியை தமிழக அரசு எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. நேற்றைய தினம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியாதா என்று இத்தனை ஆண்டுகாலம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு புதுவிடியல் பிறந்திருக்கிறது. லஞ்சம், ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்க கூடிய ஆணையமாக லோக் ஆயுக்தா அமைய வேண்டும். தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் முழுமையான வலுவான ஆணையத்தை அமைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
Add a comment...

வருகின்ற 14 -ஆம் தேதி பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 14 டிஎம்சி வரையிலான தண்ணீரை குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு தமிழகம் பயன்படுத்த முடியும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் உள்ள தேவாலா, பந்தலூர் மற்றும் ஒவேலி பகுதிகளில் உற்பத்தியாகும் பாண்டியாறு மற்றும் இன்னும் சில சிறுசிறு ஆறுகள் இணைந்து கேரள எல்லைக்குள் நுழைந்தவுடன் புன்னம்புழா என்ற பெயரில் பாய்ந்து கடலில் கலக்கிறது. பாண்டியாறு குறுக்கே அணைக்கட்டி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்புவதே பாண்டியாறு – புன்னம்புழா திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து சாத்திய கூறுகள் இருந்தும் இத்தனை ஆண்டு காலமாக நிறைவேற்றபடாமல் கிடப்பில் போடப்பட்டதால் அதிக அளவிலான தண்ணீரை வீணடித்துவிட்டு தண்ணீருக்காக நாம் போராடி கொண்டிருக்கிறோம். இது ஏதோ புதிதாக பேசப்படும் திட்டமல்ல. 1968 - ஆம் ஆண்டு தமிழக அரசால் பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு வரைவு அறிக்கையும், திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சில காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உருவாகியிருக்கின்ற கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காகவும், எதிர்கால சந்ததிகளுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறும்.

தமிழகமே தண்ணீருக்காக ஏங்கி நிற்கும் நிலையில் தமிழகத்தில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து மக்களின் தேவைக்கு வழங்க தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உடனடியாக பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகின்ற 14 -ஆம் தேதி சனிக்கிழமை அன்று என்னுடைய தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற இருக்கிறது. நம் கொங்கு மண்டல வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக நடைபெறவிருக்கின்ற ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Add a comment...

Post has attachment
வருகின்ற 14 -ஆம் தேதி பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Photo
Add a comment...

சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்களை ராஜஸ்தானில் தாக்கிய கொள்ளை கூட்டத்தை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகள் நிறைந்த மாநிலமா ராஜஸ்தான் ?

இதுதான் பிஜேபி ஆளும் லட்சணமா ?.

சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சுப்பிரமணியம், பழனிசாமி மற்றும் நடராஜ் ஆகிய மூன்று பேரிடமும் கோடிக்கணக்கில் துணியை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை தராமல் மூன்று ஆண்டுகளாக ஏமாற்றிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரோத்ரா கெளதமை அவருடைய சொந்த ஊரில் சந்திக்க கடந்த 22 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்றிருந்தனர். வீட்டில் வீரோத்ரா கெளதம் இருந்து கொண்டே அவரது தாயார் மூலமாக இல்லை என்று சொல்ல வைத்து சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்களை திருப்பி அனுப்பினார்கள். அதன் பின்னர் ஊருக்கு திரும்பி வருவதற்காக அகமதாபாத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேரையும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீரோத்ரா கெளதம் மற்றும் அவரது அடியாட்கள் தூப்பாக்கி முனையில் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர். மூன்று பேரும் பயந்து கொண்டு கைகால்கள் உடைப்பட்டு ஊருக்கு திரும்பி இருக்கிறார்கள். திரும்பி வந்து கொண்டிருந்தவர்களை தாக்கியது ராஜஸ்தான் மாநிலத்தோடு வியாபாரம் தொடர்புள்ள அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்ததாகவே பார்க்கப்படுகிறது. எந்தவொரு தமிழனுக்கும் வேறு மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதே ராஜஸ்தான் மாநிலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருடனை விரட்டிச்சென்ற போது சுடப்பட்ட நிகழ்வும் நடந்ததென்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடக்கின்ற திருட்டு, கொள்ளை மற்றும் வியாபார ஏமாற்று உள்ளிட்ட அத்தனைக்கும் ராஜஸ்தான்காரர்கள்தான் அதிக காரணமாக இருக்கிறார்கள். ராஜஸ்தான் குற்றவாளிகளின் பிறப்பிடமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது. தமிழகத்தில் இருக்கின்ற ராஜஸ்தான்காரர்களிடம் வியாபாரம் செய்யும்போது கவனத்தோடு தமிழக வியாபாரிகள் செய்ய வேண்டும். திருடிவிட்டோ, ஏமாற்றிவிட்டோ ராஜஸ்தானுக்கு ஓடிவிட்டால் நம்மால் இழந்த பணத்தை திரும்ப பெறவே முடியாத நிலை உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை ராஜஸ்தான்காரர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது.

சோமனூர் ஜவுளி வியாபாரிகளை தாக்கிய ராஜஸ்தான் மாநில வீரோத்ரா கெளதமையும், அவரது அடியாட்களையும் தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் இருக்கின்ற ராஜஸ்தான் மாநில மக்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் இதுபோன்ற சமயங்களில் தமிழக வியாபாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும்.
Add a comment...

கெய்ல் எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியே கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

விவசாயிகளின் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் கொங்கு மண்டலம் போராட்டக்களமாக மாறும்.

விளைநிலங்கள் வழியாக கெய்ல் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதியை வழங்கி விடக்கூடாது. தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும் மூன்று ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படுமென்று கெய்ல் தென்மண்டல செயல் இயக்குனர் அறிவித்திருப்பது கொங்குமண்டல விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாயின் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிட்டு தமிழகத்தில் எரிவாயு குழாயை விவசாய விளைநிலங்கள் வழியாக பதிக்க ஆரம்பிக்கப்பட்டபோது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில ஆண்டுகாலமாகவே விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், எரிவாயு குழாயை விளைநிலங்களின் வழியே கொண்டு சென்றால் இந்த 7 மாவட்டங்களிலும் விவசாயம் அழிந்து போகும் நிலை உருவாகும். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று வார்த்தைகளால் மட்டும் சொல்லி கொண்டிருந்தால் போதாது. இந்த திட்டம் விளைநிலங்கள் வழியே செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் புதியபுதிய வளர்ச்சி திட்டங்கள் தேவை. ஆனால் அந்த வளர்ச்சி திட்டங்கள் விவசாயத்தை பாதிக்காதவாறு செயல்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததிகள் இங்கு வாழ முடியும்.

எந்தவொரு திட்டத்தையும் ஆரம்பத்தில் செயல்படுத்தும் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி நம்பிக்கை தரும் மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்காமல் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மட்டும்தான் நாங்கள் என்றும், செயல்படுத்தியது அவர்கள் தான் என்றும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுக்கொன்று மாறிமாறி குற்றச்சாட்டி கொள்வதை ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட விவகாரத்தில் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் நாளை நமக்கும் இதேநிலை உருவாகும் என்பதால்தான் ஆரம்பத்திலே எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல. எனவே தமிழக அரசு எரிவாயு குழாயை தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் பதிக்க மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல் மீண்டும் விளைநிலங்கள் வழியே கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயை பதிக்க முற்படுமானால் விவசாயிகளின் நலனுக்காக கொங்கு மண்டலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்.
Add a comment...

நலிவடையும் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு தொழில்துறையினரை அழைத்து தொழில் கருத்தரங்கம் நடத்தி விவாதிக்க முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டில் மட்டும் 5 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும், 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் சட்டசபையில் தாக்கல் செய்த தொழில் வளர்ச்சி குறித்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பால் முடங்கிப்போன சிறு, குறு தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிக வேலைவாய்ப்பை தருகின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தமிழகத்தின் தொழில்துறை படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இப்போதாவது தமிழக அரசு சிறு, குறு தொழில்துறையின் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். பல ஆண்டுகாலம் தொழில்துறையில் அனுபவமிக்கவர்கள் நஷ்டம் ஏற்படுவதால் தங்களது தொழில்களை விரிவுப்படுத்த ஆர்வம் காட்டாததும், ஆயிரக்கணக்கானோர் தொழிலை விட்டு வெளியேறியதும் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே இருந்த வேலைவாய்ப்பை தக்க வைக்க தவறிய தமிழக அரசு, பட்டப்படிப்பை முடித்து ஆண்டுதோறும் வெளிவரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எப்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர போகிறது என்று தெரியவில்லை. இனியும் தமிழக ஆட்சியாளர்கள் விழிப்புடன் செயல்படவில்லை என்றால் இருக்கின்ற வேலைவாய்ப்பும் இல்லாமல் போகும். கடந்த முறை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2015 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தான் மற்ற நாடுகளில் உள்ள தொழில்துறையினர் யாரையும் தமிழக அரசு சார்பில் சந்தித்து அழைக்கவில்லை. இந்தமுறையாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு மற்ற மாநிலங்களில் நடத்தப்படுவதை போல தமிழக அரசும் ஆக்கப்பூர்வமாக நடத்த முயற்சி எடுக்க வேண்டும். தமிழக அரசு தற்போதிருந்தே மற்ற நாடுகளில் உள்ள தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளை முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வெளிப்படைத்தன்மையுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மற்ற நாடுகளை சார்ந்தவர்கள் யார்யார் கலந்துக்கொள்ள போகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நலிந்து வரும் தொழில்களை பாதுகாக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணவும் அந்தந்த தொழில்துறையினரை உடனடியாக அழைத்து தமிழக முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிதாக தொழில் துவங்க முன் வருபவர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.
Add a comment...

கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தது காவிரிக்காகவா ?, விஸ்வரூபம் 2 படத்திற்காகவா ?.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில், இன்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அவர்களை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சினையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடத்தில் காவிரி பிரச்சினையை இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லிவிட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார். காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதேபோல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சினைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சினையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது. எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.
Add a comment...
Wait while more posts are being loaded