Profile cover photo
Profile photo
Kathir Erode
5,437 followers
5,437 followers
About
Kathir's posts

கை பற்றிக்கொள்ளுதல் அல்லது கோர்த்துக் கொள்ளுதல் என்பது உறவு நிலைகளுக்கிடையேயான ஒரு கலை. கோர்த்துக்கொள்வதில் விதவிதமான அழுத்தம், இறுக்கம் உண்டு. ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றை தனித்து உணர்த்தும். மெல்லப் பற்றிக்கொள்தல் ஒன்றைச் சொல்கிறதென்றால், சட்டென இறுக்கிப் பிடித்தல் இன்னொன்றைச் சொல்லும்.

இறுக்கத்தின் கனத்திற்கேற்ப அந்தக் கணத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய, வாரி வழங்கவேண்டிய நம்பிக்கை, அன்பு, பரிவு, ஆதரவு பரிமாறப்படும். கவனத்தில்கொள்ள வேண்டியது பற்றிக்கொள்தல், பிணைத்துக் கொள்தல் வேறு நசுக்குதல் வேறு; இது கைகளுக்கு மட்டுமல்ல, உறவுகளுக்கும் பொருந்தும்.

கடலில் தாமரை முளைத்திருக்கிறதா என கப்பலில் போய்தான் தேட வேண்டுமா!? :)

போற போக்கைப் பார்த்தா, அந்தம்மா ஆன்மாவுக்கு சக்தி இருக்குனு நம்ப வேண்டி வந்துடுமோ!?

உண்மையில் 'பொட்டைத்தனம்’ என்பது பெண் தன்மையை, பெண் இயல்பை ஒற்றி குறிப்பதாக நான் கருதுவதில்லை. போலீஸ் உடை உடம்பில் இருக்கும் ஒரே தகுதியில், போராடும் ஒரு பெண்ணை நடுரோட்டில் அறையும் வெக்கங்கெட்ட வீரத்திற்கு பேர் தான் பொட்டைத்தனம். அந்தக் காட்சியை அவருக்கு ஒரு மகள் இருந்து, அதை அவர் பார்த்து... ”அடச்சீ...” என தன் அப்பாவைப் பார்த்துச் சொல்வதே சரியான தண்டனையாக இருக்கும்! :(

’நடு ரோட்டில் பெண்ணை அடித்த அதிகாரி மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போறீங்க!?’ என நேரடியாகச் சென்று டிஜிபி-யிடம் கேட்காமல், உண்மையை உடனுக்குடன் சொல்லும் எல்லா டிவிக்களிலும் விவாத மேடைனு ஒன்னை வச்சு அதில் 'ஆவடிக் குமார்’ அல்லது 'தீரன்’கிட்ட ’இதுக்கு உங்க பதில் என்ன!?’னு மொக்கையா வெளக்கம் கேட்பாங்க பாருங்களேன்!

அடேய்ய்ய்ய்ய்... அடடேய்ய்ய்ய்களா!

நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாக, அக்கம் பக்கம் திறக்கப்படும் கடைகளுக்கு நிலம் வாடகைக்குக் கொடுப்போரை எப்படி அணுகுகிறீர்கள். அவர்களிடம் மிக எளிதாக ”கொஞ்சூண்டு எடத்துக்கு 30-45 ஆயிரம் வாடகை வருதே!” என கமுக்கமான சமாதானம் கையில் இருக்கிறது. நிலம் கொடுக்க சக மனிதன் தயாராக இருக்கும்போது, அரசாங்கம் தன் வழியே ‘முறைப்படி’ கடை திறக்க முனைவதை எதிர்ப்பதில் தளர்வு ஏற்படுகிறது. அந்த சக மனிதன் போராடுபவர்களின் நட்பாகவும், உறவாகவும் இருப்பதும் இங்கிருக்கும் நகை முரண்!

ஏதோ ஒரு வண்ணம் மனதிற்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. அடிக்கும் அலையில் அதன் அடர்த்தி நீர்த்துப்போகிறது. எட்டி கை நீட்டி தொட்டெடுக்க முனையும் போதெல்லாம் விரல் நுனியில் ஒட்டி வருவதென்னவோ வெறும் காற்று மட்டும் தான். அலையடிக்கும் கானல் நீரில் ஒட்டிக்கொள்ள என்னவிருக்கப்போகிறது. அலை ஓய்ந்த பாடில்லை. ஆனால் அதன் உக்கிரம் தணிவதாய்த் தோன்றுகிறது.

இதை எதன் நோக்கில் எழுதுகிறேன் எனத் தெரியவில்லை. இப்போது ஒன்று வேண்டுமானால் செய்யலாம், முதல் வரியில் இருக்கும் மூன்றாம் சொல்லை ‘வன்மம்’ என மாற்றினால் விளையாட்டு வேறு மாதிரியாகிறதுதானே!

Post has attachment
வாழ்க்கை என்பதே மாற்றம் தான்...

இரண்டு நாட்கள்...
இரண்டு குழுக்கள்...

நிறைவாய் சென்னையிலிருந்து திரும்பியிருக்கிறேன்.

One day Training workshop on "Change Management" for Two batches on 4th,5th April 2017 for HPI, Chennai
Photo
Photo
06/04/2017
2 Photos - View album

நாளை 30.03.2017 காலை... கொங்கு பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையிலும், மதியம்... பாரதியார் பல்கலைக் கழகத்திலும் பேசுகிறேன்.

பொதுவாக வீடுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களாக காண்கிறேன் அல்லது கருதுகிறேன். அப்படி இருக்கையில் சாலையோரம் நின்றபடி டீ குடிக்க வேண்டிய மாதிரியான டீக்கடைகளில் எப்போதும் ஆண்கள் மட்டுமே டீ குடிக்கின்றனர். ஒருபோதும் தனியாக ஒரு பெண் டீக் கடைக்கு வந்து... ”ஒரு டீ... காபி ஒன்னு” என ஆர்டர் செய்து வாங்கிக் குடிப்பதைக் கண்டதேயில்லை. இதில் இருக்கும் காரணம், சிக்கல் அல்லது மனத்தடை என்ன?
Wait while more posts are being loaded